என் மலர்
நீங்கள் தேடியது "vacuum cleaner"
- நம்முடைய தேவையும், வீட்டின் கட்டமைப்புதான், வாக்குவம் கிளீனரை தீர்மானிக்கின்றன.
- சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளாக இருந்தால், சத்தமில்லாத வாக்குவம் கிளீனர்களை தேர்ந்தெடுப்பது நல்லது.
வீடுகளை சுத்தப்படுத்தும் வாக்குவம் கிளீனர்களை வாங்குவதாக இருந்தால், ஒருசில விஷயங்களை கவனத்தில் கொண்டு வாங்க வேண்டும். குறிப்பாக உங்கள் வீட்டுத் தேவைகளை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். குப்பையை உறிஞ்சும் திறன், உங்கள் வீட்டின் தளம் (டைல்ஸ், தரைவிரிப்புகள், மரம்) போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கிளீனரின் வகையை (கம்பியில்லா, தரைவிரிப்புக்கான, ரோபோடிக்) தீர்மானிக்க வேண்டும். கூடுதலாக, சக்கரங்கள், நீளமான வயர், குறைந்த சத்தம் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையுடன் கூடிய சக்கரங்கள் போன்ற வசதிகளையும் கவனிக்க வேண்டும். அப்படி நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியவை:
* தரை வகைகள்
உங்கள் வீட்டின் தரைப்பகுதியானது, எப்படி கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்துதான், வாக்குவம் கிளீனரை தேர்வு செய்யமுடியும். தரைவிரிப்புகள், டைல்ஸ், மரம் சார்ந்த தரை வேலைப்பாடுகள் என மாறக்கூடிய கட்டமைப்புகளுக்கு ஏற்ப, அவற்றை சுத்தமாக்கக்கூடிய வாக்குவம் கிளீனரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
* பயன்பாட்டு வகைகள்
வயர் இணைப்பு கொண்ட வாக்குவம் கிளீனர், வயர் இல்லாத கையடக்க கிளீனர், தூசியை மட்டும் சுத்தம் செய்யும் கிளீனர், தூசியுடன் சேர்த்து அசுத்த நீரையும் உறிஞ்சி எடுக்கும் கிளீனர் என பல வகைகள் இருக்கின்றன. சமீபகாலமாக ரோபோட்டிக் வகையிலான, தானாக நகரும் வாக்குவம் கிளீனர்களும் உள்ளன. நம்முடைய தேவையும், வீட்டின் கட்டமைப்புதான், வாக்குவம் கிளீனரை தீர்மானிக்கின்றன.
* உறிஞ்சி திறன்
750 வாட்ஸ், 1000 வாட்ஸ், 1250 வாட்ஸ் என தூசியையும், அசுத்த தண்ணீரையும் உறிஞ்சக்கூடிய மோட்டார்களும், ஒவ்வொரு வாக்குவம் கிளீனருக்கு ஏற்ப மாறுபடும். அதனால், நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய வாக்குவம் கிளீனர்கள், அதிகமாக உறிஞ்சும் திறனை பெற்றிருக்க வேண்டும்.
* சுலபமான பயன்பாடு
வாக்குவம் கிளீனர்களை கொண்டு, வீட்டின் எல்லா அறைகளையும் சுத்தம் செய்ய இருந்தால் சில விஷயங்களை கவனித்து வாங்க வேண்டும். அதாவது, சக்கரங்கள் இருக்கக்கூடியதாக, நீளமான மற்றும் பல்வேறு வடிவங்களை கொண்ட உறிஞ்சு குழாய் இருக்கக்கூடிய வாக்கும் கிளீனரை தேர்வு செய்வதன் மூலம் விரும்பிய இடங்களில் சுலபமாக நகர்த்தலாம், சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளலாம். மேலும் சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளாக இருந்தால், சத்தமில்லாத வாக்குவம் கிளீனர்களை தேர்ந்தெடுப்பது நல்லது.
- சாம்சங் பி-ஸ்போக் ஜெட் மாடல் ஸ்டிக் போன்ற டிசைன் கொண்ட கார்ட்லெஸ் வாக்யூம் கிளீனர் ஆகும்.
- இதில் உள்ள புதுமைமிக்க நேவிகேஷன் தொழில்நுட்பம் LiDAR சென்சார்களை கொண்டிருக்கிறது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது டாப் எண்ட் வாக்யூம் கிளீனர் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் பி-ஸ்போக் ஜெட், ரோபோடிக் ஜெட் பாட் பிளஸ் ஆகிய மாடல்கள் அடங்கும். இவற்றில் பிஸ்போக் ஜெட் மாடல் ஸ்டிக் போன்ற டிசைன் கொண்ட கார்ட்லெஸ் வாக்யூம் கிளீனர் ஆகும். ஜெட் பாட் பிளஸ் மாடல் அதீத திறன் கொண்டிருக்கிறது. இரு மாடல்களும் அதிநவீன வீடுகளுக்கு ஏற்ற வகையில், முக நுட்பமாக இயங்கும் வகையிலும் சிறப்பாக சுத்தம் செய்யும் திறன் கொண்டுள்ளன.
இவற்றில் உள்ள மல்டி-லேயர் ஃபில்ட்ரேஷன் சிஸ்டம் அதிகபட்சம் 99.999 சதவீதம் தூசியில்லா சூழலை உருவாக்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது. பி-ஸ்போக் ஜெட் வாக்யூம் கிளீனர் சீரிசில் ஏராளமான மாடல்கள் உள்ளன. பி-ஸ்போக் ஜெட் ப்ரோ எக்ஸ்டிரா (வாக்யூம் + மாப்) விலை ரூ. 89 ஆயிரத்து 900 என்றும் பி-ஸ்போக் ஜெட் பெட் (வாக்யூம்) விலை ரூ. 79 ஆயிரத்து 900 என்றும் ஜெட் பாட் பிளஸ் விலை ரூ. 65 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய வாக்யூம் கிளீனர் மாடல்களை சாம்சங் அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளம், சாம்சங் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோர், சாம்சங் ஷாப் ஆப் உள்ளிட்டவைகளில் வாங்கிட முடியும். இதுதவிர அமேசான் ஆன்லைன் தளத்திலும் விற்பனைக்கு கிடைக்கிறது.
பி-ஸ்போக் ஜெட் ரேஞ்ச்- ஆல்-இன்-ஒன் கிளீன் ஸ்டேஷன் (வாக்யூம் கிளீனரை சார்ஜ் செய்து தானாக குப்பை தொட்டியை சுத்தம் செய்து கொள்ளும்) மற்றும் அதிநவீன டிஜிட்டல் இன்வெர்டர் மோட்டார் கொண்டிருக்கிறது. இது பி-ஸ்போக் ஜெட் மாடலில் 210 வாட் வரையிலான இழுவை திறனும், ஜெட் பாட் பிளஸ் மாடலில் 2500pa வரையிலான இழுவை திறனை வெளிப்படுத்துகிறது.
இந்த அதிநவீன ரோபோட் பிக்ஸ்பி, அலெக்சா மற்றும் கூகுள் ஹோம் போன்ற வாய்ஸ் ரெகாக்னிஷன் திறன் கொண்டுள்ளன. இதை கொண்டு பயனர்கள் வாய்ஸ் கமாண்ட் மூலம் சுத்தம் செய்வது, மோட்களை மாற்றுவது, செய்திகள் மற்றும் வானிலை அப்டேட்களை கேட்க முடியும். இத்துடன் லைவ் கிளீனிங் ரிபோர்ட் மூலம் ரோபோடிக் ஜெட் பாட் பிளஸ் எங்கு சுத்தம் செய்கிறது என்பதை ரியல்டைமில் டிராக் செய்ய முடியும்.
இதில் உள்ள புது-மைமிக்க நேவிகேஷன் தொழில்நுட்பம் LiDAR சென்சார்களை கொண்டிருக்கிறது. இது ரோபோட் லொகேஷனை எந்நேரமும் டிராக் செய்து கொண்டே இருக்கும். இதன் பயன்பாட்டை மேலும் எளிமையாக்க ஸ்மார்ட்திங்ஸ் ஆப் மூலம் ரிமோட் கண்ட்ரோல் மற்றும் மாணிட்டரிங் வசதி வழங்கப்படுகிறது.






