search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹிமந்த பிஸ்வா சர்மா"

    • இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது நடைப்பயணம் மணிப்பூரில் தொடங்கியது.
    • அசாம் முதலமைச்சரின் உத்தரவின் பேரில், ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் தலைமையில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது நடைபயணம் 'பாரத் நீதி யாத்திரை' என்ற பெயரில் மணிப்பூரில் தொடங்கியது. மும்பை வரை இந்த யாத்திரையை மேற்கொண்டு மார்ச் 20 ஆம் தேதி வரை நடத்தவுள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பாஜக அரசு ராகுல் காந்தியின் நடைப்பயணத்திற்கு பல்வேறு இடையூறுகளை கொடுப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், ஜோராபட்டில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியை அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து கவுகாத்திக்குள் ராகுல் காந்தி நுழைய முற்பட்டபோது போலீசார் தடுப்புகள் அமைத்து அவரை நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இந்த நிலையில் ராகுல் காந்தி மீது அசாம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கவ்ஹாத்தியில் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதால் மக்களை போராட்டம் நடத்த ராகுல் காந்தி தூண்டியதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவின் பேரில், ராகுல் காந்தி மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜக அரசைக் கண்டித்தும், முதல்வரை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • பா.ஜ.க.வாலும், மோடியாலும்தான் ராமர் கோவில் என்ற கனவு நிறைவேறி இருக்கிறது.
    • மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும், பல நகரங்களின் முந்தைய பெயர்கள் மீண்டும் சூட்டப்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானாவில் பா.ஜ.க.வைச் சேர்ந்த அசாம் மாநில முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

    தெலுங்கானாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 30 நிமிடங்களில் ஐதராபாத்தின் பெயர் பாக்யாநகர் என மாற்றப்படும். இப்படி மாற்றினால் யாரும் எதுவும் செய்துவிட முடியாது.

    பாலஸ்தீனத்தை ஆதரிக்கிற இவர்கள் எல்லாம் (ஒவைசி கட்சி) அங்கேயே போய்விடட்டும். அவர்களுக்காக சண்டையிடட்டும். 

    ராமர் கோவில் கட்டப்பட்டு விடும் என்று யாரேனும் நினைத்தது உண்டா? ஜவகர்லால் நேருவுக்கோ, இந்திராவுக்கோ அந்தத் துணிச்சல் இருந்ததா?

    பா.ஜ.க.வாலும், மோடியாலும்தான் இப்போது ராமர் கோவில் என்ற கனவு நிறைவேறி இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும், பல நகரங்களின் முந்தைய பெயர்கள் மீண்டும் சூட்டப்பட்டது. அது தெலுங்கானா மாநிலத்திலும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வாக்குறுதி எல்லோரையும் அதிர வைத்துள்ளது.

    • அதிக குழந்தைகளை பெற்றெடுப்பது ஒரு பெண்ணுக்கு உடல் ரீதியாக பாதிக்கும்.
    • பெண் ஒன்றும் குழந்தை பெற்று தரும் தொழிற்சாலை கிடையாது.

    கவுகாத்தி:

    மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கை பற்றி அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பத்ருதீன் அஜ்மல் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.

    இந்துக்களும், முஸ்லீம்களின் பார்முலாவை பின்பற்றி தங்களது பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்க வேண்டும். ஆண்களுக்கு 20-22 வயதில், பெண்களுக்கு 18-20 வயதில் திருமணம் செய்து வைத்தால் நிறைய குழந்தைகள் பிறக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா பதில் அளித்துள்ளார். பொங்காய்காவன் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியுள்ளதாவது: பத்ருதீன் பேச்சில் கவனம் செலுத்த வேண்டாம். 2 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ள வேண்டாம் என்று எனது முஸ்லிம் சகோதரிகளிடம் கூறி கொள்ள விரும்புகிறேன்.

    ஒரு பெண் அதிக குழந்தைகளை பெற்றெடுத்தால், அது அந்த பெண்ணை உடல்ரீதியாக பாதிக்கும். நம்முடைய சமூகத்திற்கும் அது பாதிப்பு ஏற்படுத்தும். பெண் ஒன்றும் குழந்தை பெற்று தரும் தொழிற்சாலை அல்ல. வாக்கு வங்கி அரசியலுக்காக ஒரு குறிப்பிட்ட சமூக பிரிவை திருப்திப் படுத்துவதற்காக இதுபோன்ற சில பேச்சுகளை பத்ருதீன் வெளியிடுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 1947 ஆண்டு சுதந்திரம் பெற்றபோது இந்தியா பிளவுபட்டது. அதனால் பலன் இல்லை.
    • தற்போது இந்தியா இணைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒன்று பட்டுள்ளது.

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை பயணத்தை நேற்று தொடங்கிய ராகுல்காந்தி முதல் நாளே, மத்தியில் ஆளும் பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் இந்திய ஒற்றுமை பயணத்தை காங்கிரஸ் நடத்த விரும்பினால் பாகிஸ்தானில் நடத்த வேண்டும் என்று தாம் பரிந்துரைப்பதாக பாஜக மூத்த தலைவரும், அசாம் முதல்வருமான ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1947 ஆண்டு சுதந்திரம் பெற்றபோது இந்தியா பிளவுபட்டது. அதனால் எந்த பலனும் இல்லை. தற்போது இந்தியா இணைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒன்றுபட்டுள்ளது. இதனால் (இந்தியாவுடன் பாகிஸ்தானை இணைக்கும் வகையில்) இந்திய ஒற்றுமை பயணத்தை பாகிஸ்தானில் நடத்துங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். 


    ராகுல் காந்தியின் பாத யாத்திரை குடும்பத்தைக் காப்பாற்றும் பிரச்சாரம் என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் போது குடும்பம் மற்றும் கட்சியின் நிலை ஆட்டம் காண்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

    பாகிஸ்தானுக்குள் புகுந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய போது ஆதாரங்களை கேட்டு, நாட்டின் ஒற்றுமையை பலவீனப்படுத்திய ராகுல்காந்தி, தற்போது நாட்டை ஒற்றுமைப் படுத்த பயணம் தொடங்குவது எவ்வளவு போலித்தனமானது என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    ×