search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமான சேவை ரத்து"

    • விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.
    • விமான நிலையத்திற்கு வந்து சேரும் சாலைகளும் நீரில் மூழ்கி இருந்தன.

    ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்று பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சாலைகளில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் வாகன போக்குவரத்தும் முடங்கியது.

    கனமழை மற்றும் வெள்ளம் எதிரொலியாக, விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துபாயில் சர்வதேச பயணிகள் அதிகம் வரக்கூடிய, உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.

    விமான ஓடுபாதையில் வெள்ளம் புகுந்ததில், விமானங்கள் மற்றும் கார்கள், நீரில் பாதியளவு மூழ்கின. விமானங்கள் நிறுத்தும் பகுதியில் வெள்ளநீர் புகுந்தது. விமான நிலையத்திற்கு வந்து சேரும் சாலைகளும் நீரில் மூழ்கி இருந்தன.

    கனமழை எதிரொலியால் சென்னையில் இருந்து துபாய் செல்லக்கூடிய 5 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. இதேபோல், மறு மார்க்கத்தில் இருந்து சென்னை வரும் 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் இன்று இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானம் ரத்து தொடர்பாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

    துபாய் செல்ல வந்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிறுவன கவுன்டரில் வாக்குவாதம் நடைபெற்றது. விமான நிறுவன அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    • சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தினமும் 3 விமானங்கள் புறப்பட்டு சென்றுவிட்டு திரும்பி வரும்.
    • கனமழை தொடர்ந்து பெய்து வந்ததால் 2-வது நாளாக நேற்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    தூத்துக்குடி:

    வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

    சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தினமும் 3 விமானங்கள் புறப்பட்டு சென்றுவிட்டு திரும்பி வரும். ஆனால் தூத்துக்குடியில் பெய்துவரும் கனமழையால் நேற்று முன்தினம் விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

    நேற்றும் கனமழை தொடர்ந்து பெய்து வந்ததால் 2-வது நாளாக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    இந்நிலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இன்று 3வது நாளாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் வானிலை சீரானதும் மீண்டும் விமான சேவை தொடங்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    • சுமார் 70 விமானங்களின் பயணம் ரத்தானது
    • 25,000 மின்னல்களை வானிலை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்

    மேற்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடு ஜெர்மனி.

    அந்நாட்டின் மாநிலமான ஹெஸ்ஸில் உள்ள ஃப்ராங்க்ஃபர்ட் (Frankfurt) நகரில் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமான ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையம் உள்ளது. ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளுக்கு முக்கியமான ஒரு போக்குவரத்து மையமாக செயல்படுவதால் இந்த விமான நிலையம், எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    ஃப்ராங்க்ஃபர்ட் நகரில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் விமானம் நிறுத்தப்படும் இடங்களிலும், ஓடுதளங்களிலும் அளவுக்கு அதிகமாக தண்ணீர் நிரம்பியுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக அங்கு வந்து தரையிறங்கிய விமானங்களிலிருந்து பயணிகள் இறங்கி, நிலையத்தை அடைந்து, தங்களின் அடுத்த பயண இலக்குகளை அடைய முடியாமல் தவித்தனர்.

    கிட்டத்தட்ட 2 மணி நேரம் விமான நிலைய தரை கட்டுப்பாட்டு சேவைகள் முடக்கப்பட்டது. சுமார் 70 விமானங்களின் பயணம் ரத்தானது. வழக்கமாக இரவு 11:00 மணியளவில் நிறுத்தப்படும் அன்றாட சேவை பணிகள், விமானங்கள் ரத்தானதால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்கும் விதமாக நீண்டு கொண்டே சென்றது.

    இதனால் தரையிறங்க வேண்டிய 23 விமானங்களின் வருகை மாற்றியமைக்கப்பட்டது. நிலையத்தை நெருங்கும் முன்பே பல விமானங்களுக்கு வானிலேயே இது குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

    சுமார் 1000 பயணிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை ஹெஸ் மாநிலம் முழுவதும் ஜெர்மன் வானிலை அமைப்பால் விடுக்கப்பட்டுள்தால், இயல்பு நிலை திரும்புவதற்கு சில நாட்களாகும் என தெரிகிறது.

    வானிலை அதிகாரிகள் ஒரு மணி நேர இடைவெளியில் அம்மாநிலம் முழுவதும் 25,000 மின்னல்களை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மேற்கு வடமேற்கு திசையில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    வங்கக் கடலில் நிலவிய மாண்டஸ் தீவிர புயல், வலுவிழந்து புயலாக மாறியுள்ளது. இந்நிலையில், மேற்கு வடமேற்கு திசையில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் எதிரொலியால், சென்னை விமானநிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மைசூர், கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூரு, திருச்சி, மதுரை, ஹைதராபாத், ஹூப்ளி, கண்ணூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • மதுரை, ஐதராபாத், கர்னூல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமான சேவைகள் ரத்துசெய்யப்பட்டு உள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக சென்னையில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததை அடுத்து, தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லக்கூடிய 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, ஐதராபாத், கர்னூல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமான சேவைகள் ரத்துசெய்யப்பட்டு உள்ளது.

    ×