search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெயர் பலகை"

    • 4 மணியளவில் லேசான காற்று வீசியது.
    • அவரது கையில் படுகாயம் ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகத்தில் இடம் வாங்கி விற்பதை பத்திர பதிவு சம்பந்தமாகவும், கடன் பைசல், அடமானம் உள்ளிட்ட பத்திரப்பதிவு சம்பந்தமாகவும் நாள்தோறும் நூற்றுக்க ணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் லேசான காற்று வீசியது. இதில் சார் பதிவாளர் அலுவலக பெயர் பலகை அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மீது விழுந்தது.

    இதில் அவரது கையில் படுகாயம் ஏற்பட்டது. மேலும், மோட்டார் சைக்கிளின் கண்ணாடி உடைந்தது. காயமடைந்த செல்வராஜ், இது குறித்து சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களிடம் கூறினார். இதற்கு பணியில் இருந்த ஊழியர்கள். போலீஸ் நிலையம் சென்று புகார் அளியுங்கள், எங்களிடம் ஏன் சொல்கிறீர்கள் என்று அலட்சியமாக செல்வராஜி டம் பதில் கூறியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் செல்வராஜை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது தொடர்பாக திட்டக்குடி போலீசாரிடம் செல்வராஜ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் விசாரணை நடத்தி வருகின்றார். அரசு அலுவலகத்தின் பெயர் பலகையை முறையாக அமைக்காததால் கீழே விழுந்து ஒருவருக்கு காயம் ஏற்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மேயர்-ஆணையாளர் பேச்சுவார்த்தை
    • மாநகராட்சி குறைதீர்க்கும் நாள் கூட்டம்

    நாகர்கோவில், ஆக.24-நாகர்கோவில் மாநகராட்சி மக்களின் குறைகளை தீர்த்து வைக்கும் வகையில் வாரந்தோறும் வியாழக்கிழமை குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

    மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். ஆணையர் ஆனந்த் மோகன் முன்னிலை வகித்தார். இதில் வீட்டு வரி, குடிநீர் வரி, நில அளவு, சொத்து வரி, ஆக்கிரமிப்பு அகற்றுவது உள்பட மொத்தம் 34 மனுக்கள் பெறப்பட்டன.

    வைராவிளை ஊர் தலைவர் செந்தில்குமார் தலைமையில் ஏராள மானோர் இன்று மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தனர். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் சற்று பரபரப்பு நிலவியது.

    பின்னர் அவர்கள் மேயர் மகேசை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சி 50-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக தர்மபுரம் ஊராட்சி மூலம் மாநகராட்சி பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்கில் ஒரு பெயர் பலகையை வைத்துள்ளனர். இது தொடர்பாக நாங்கள் ஆணையர் உள்பட பல்வேறு துறை அதிகாரி களுக்கு புகார் மனு அளித்திருந்தோம்.

    புகார் மனுவை விசாரித்த ஆணையர், தர்மபுரம் ஊராட்சி செயல் அலுவலரிடம், வைராவிளை ஊரில் அமைக்கப்பட்டிருக்கும் பெயர் பலகையை அகற்றுவதற்கு கடிதம் அனுப்பியும், பெயர் பலகை இதுவரை அகற்றப்படவில்லை. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து பெயர் பலகையை அகற்ற வேண்டும். இதே இடத்தில் மாநகராட்சி சார்பில் புதிய பெயர் பலகை அமைக்க இருப்பதாக தகவல் தெரிய வருகிறது.

    ஊர் பெயரிட்டு புதிய பலகை அமைக்கும் பட்சத்தில் இரு ஊர்களுக்கு இடையே கலவரம் ஏற்பட்டு சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த இடத்தில் ஏற்கனவே இரு ஊர்களின் திருவிழாவின் போது மின்விளக்குகள் அமைப்பதில் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பிரச்சினைக்குரிய இடத்தில் எந்த பெயர் பலகையும் இடம் பெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து மேயர் மகேஷ் மற்றும் ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோர் வைராவிளை ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு ஊர் மக்களையும் அழைத்து சமரசம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து ஊர் மக்கள் அனைவரும் அங்கிருந்து சென்றனர்.

    • விளையாட்டு மைதானத்தில் புதிய பெயர் பலகையை திறந்து வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
    • பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விளையாட்டு மைதானம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காமராஜ் காலனியில், ஆர்.வி.அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது.

    இந்த மைதானத்தில் மாணவர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொள்வதுடன், நாள்தோறும் ஏராளமான பொதுமக்களும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மைதானத்திற்கு" முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி விளையாட்டு திடல்" என்று பெயர் சூட்ட, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா, மன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவந்து, அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதையடுத்து, நேற்று விளையாட்டு மைதானத்தில் புதிய பெயர் பலகையை திறந்து வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்நிலையில், அந்த விளையாட்டு மைதானத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விளையாட்டு மைதானம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், திடீரென பெயர் பலகையில் கருணாநிதி பெயரை, கறுப்பு மை பூசி அழிக்கும் பணியில் பா.ஜ.க.வை சேர்ந்த இருவர் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, மை குப்பியை பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு மோதல் ஏற்பட்டது. பின்னர், பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்நிலையில், பெயர் பலகையில் கருணாநிதி பெயர் அழிக்கப்பட்ட தகவல் அறிந்து, மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, மேயர் சத்யா ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர். மேலும் விளையாட்டு மைதானம் முன்பு தரையில் அமர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த், எம்.எல்.ஏ. மற்றும் மேயரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இது தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து பெயர் பலகையில் கறுப்பு மை பூசி சேதப்படுத்தியதாக ஓசூர் தெற்கு மண்டல பா.ஜ.க.தலைவர் கே.நாகு என்ற நாகேந்திரா (வயது40) மற்றும் அலசநத்தம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (40) ஆகிய இருவரை கைது செய்தனர். கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பஸ்களில் பெயர் பலகை பழைய பஸ் நிலையம் என்றே உள்ளது.
    • வார்டு ஒன்றுக்கு ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் 4-வது மண்டல தலைவர் இல. பத்மநாபன் பேசியதாவது:- திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் முத்தமிழ் டாக்டர் கலைஞர் பெயரை வைத்துள்ளோம். ஆனால் பஸ்களில் பெயர் பலகை பழைய பஸ் நிலையம் என்றே உள்ளது. அதனைமாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மண்டல தலைவர் நிதி தற்போது வழங்குவது போதுமானதாக இல்லை. எனவே வார்டு ஒன்றுக்கு ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் காலனியில் உள்ள கான்கிரீட் சாலை பழுதடைந்து உள்ளது .அதனை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும்.

    அதேபோல் நான்காவது மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் 11,459 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது .எனவே அந்த வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வழிவகை செய்ய வேண்டும். நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட 38, 39, 41, 51, 53 ஆகிய வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் செயல்படுத்தப்படாமல் உள்ளது .எனவே விடுபட்டுள்ள அந்த பகுதிகளிலும் உடனடியாக பாதாள சாக்கடை பணியை தொடங்க வேண்டும் என்றார்.

    • ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சிகள் உள்ளன.
    • திட்ட பணிகள் திட்ட பயனாளர்கள் முழு விவரங்களையும் பதிவிட வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சி நிர்வாக த்தின் முழு விவரங்கள் அடங்கிய பெயர் பலகைகள் பொது மக்கள் பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும் என கூடுதல் கலெக்டர் உத்தரவிட்டு ள்ளார்.

    ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி களில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள், மத்திய அரசின் திட்டங்கள் என தனித்தனியாக செயல்படு த்தப்பட்டு வருகிறது.

    ஒரு சில திட்டங்கள் மாநில, மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே ஒவ்வொரு ஊராட்சிகளும் கடந்த நிதியாண்டில் என்னென்ன திட்டங்கள், எத்தனை மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    என்னெ ன்ன திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஊராட்சியின் மக்கள் தொகை எவ்வளவு. எத்தனை குடிநீர் இணைப்பு கள் உள்ளன.

    குடியிருப்புகள் எத்தனை என ஊராட்சி குறித்த முழு தகவல்கள் அடங்கிய விபர ங்களை ஊராட்சி அலுவ லகத்திற்கு முன்பாக பொது மக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும்படியும் ஊராட்சி நிர்வாகம் வெளித்தன்மையோடு செயல்படுவதை உறுதிப்படுத்தும் வகையிலும் பெயர் பலகை வைக்க மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலரும், கூடுதல் கலெக்டருமான மணீஷ் உத்தரவிட்டுள்ளார்.

    மாவட்டத்திலுள்ள 225 ஊராட்சிகளிலும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகங்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு நாளும் திட்ட பணிகள் திட்ட பயனாளர்கள் முழு விவரங்களையும் பதிவிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

    • அங்காடிகளில் பெயர் பலகையை தமிழில் அமைக்கும் பணியை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தொடங்கி வைத்தார்.
    • பின்னர் பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்.

    தருமபுரி,

    தமிழ்நாட்டில் தமிழைக் காக்க வேண்டும் என்பதற்காக தமிழைத்தேடி என்ற தலைப்பில் விழிப்புணர்வு பயணத்தையும், அதன் தொடர்ச்சியாக தமிழைக் காப்பதற்காக அரசுக்கும், வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாட்டிலுள்ள நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழை முதன்மைப்படுத்தி அமைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

    தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையின் படி, தமிழை முதன்மைப்படுத்தி பெயர்ப் பலகைகளை அமைக்க வேண்டும் என்று தருமபுரி வணிக நிறுவனங்களிடம் வலியுறுத்திய நிலையில், தருமபுரி நகர பேருந்து நிலையத்திலுள்ள மலர் அங்காடிகளில் பெயர் பலகையை தமிழில் அமைக்கும் பணியை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் இனிப்புகள் வழங்கினார். அப்போது பேசிய அவர், தருமபுரி நகரத்தில் முதல் பெயர் பலகை தமிழில் முதன்மைப்படுத்தி வைக்கும் நிகழ்வு தொடங்கப்பட்டது.

    அடுத்தகட்டமாக மாவட்டத்திலுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, வணிக நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழில் வைக்க தொடர்ச்சியாக வலியுறுத்தப்படும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிமோகன், பா.ம.க மாநில துணைத்தலைவர் சாந்த மூர்த்தி, மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் பால கிருஷ்ணன், உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

    • பெயர் பலகைகளில் தமிழில் எழுதக்கோரி கால வரையற்ற பட்டினி அறப்போர் புதிய பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது.
    • தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி புதிய பஸ் நிலையம், பாளை பஸ் நிலையம், வ.உ.சி. விளையாட்டு திடல் பெயர் பலகைகளில் தமிழ் ஆட்சிமொழி சட்ட அரசாணைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி தமிழில் எழுதக்கோரி கால வரையற்ற பட்டினி அறப்போர் தமிழ் தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு தலைமையில் புதிய பஸ் நிலையம் முன்பு இன்று நடைபெற்றது.

    பட்டினி போராட்டம்

    போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அப்புகுட்டி மற்றும் தமிழ் ஆர்வலர்கள் சேரன்துரை, ராஜசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.அப்போது வியனரசு கூறியதாவது:-

    பொது இடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பெயர் அறிவிப்பு பலகைகளில் தமிழில் பெயர் எழுதப்பட வேண்டும் என்று 1956-ம் ஆண்டு தமிழ் ஆட்சி மொழிச் சட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் பாளை பஸ் நிலையம், புதிய பஸ் நிலைய அறிவுசார் பூங்கா, பாளை வ.உ.சி.விளையாட்டு திடல் பெயர்ப் பலகைகளில் தமிழுக்கு முதல் இடம் அளிக்கப்படவில்லை.

    இதனை வலியுறுத்தி கடந்த ஆண்டு மட்டும் 7 முறை மாநகர போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ளோம்.

    இதற்கு முன்பு 2 முறை போராட்டங்களை அறிவித்தும், தேவையான கால அவகாசங்களை வழங்கியும் தொடர்ந்து எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனை கண்டித்து இன்று முதல் காலவரையற்ற பட்டினி போராட்டத்தை நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைது

    போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் தடையை மீறி பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை மேலப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

    • நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • தேடி அலையும் அவல நிலை உள்ளது.

    குனியமுத்தூர்

    1862-ம் ஆண்டு கோவை மாவட்டத்திலேயே முதன்முதலாக தொடங்கப்பட்ட ெரயில் நிலையம் போத்தனூர் ெரயில் நிலையம் ஆகும். தென்னிந்தியாவின் பழமை வாய்ந்த ெரயில் நிலையங்களில் 3-வது இடத்தில் உள்ளது.

    அத்தகைய பழமையும் பெருமையும் வாய்ந்த ெரயில் நிலையத்தை, தற்போது பொதுமக்கள் எங்கே இருக்கிறது? என்று தேடி அலையும் அவல நிலை உள்ளது.

    ெரயில் நிலையத்தின் நுழைவு பகுதியில் உள்ள பெயர் பலகை மரக்கி ளைகளால் மூடப்பட்டு காணப்படுகிறது. இதனால் போத்தனூர் ெரயில் நிலையம் என்ற எழுத்து யார் கண்ணிலும் தெரிய வாய்ப்பில்லை.

    போத்தனூர் ெரயில் நிலையத்தில் நுழைவுப் பகுதி பக்கத்தில் சென்றால் கூட கண்ணில் தெரியாத சூழ்நிலை உள்ளது.

    இதனால் பயணிகள் விசாரித்து, விசாரித்து வர வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே போத்தனூர் ெரயில் நிலையத்தின் முகப்பு பகுதியை புதுமைப்படுத்தி, மரக்கிளைகளை வெட்டி புதுப்பொலிவு பெற செய்ய வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விநாயகர் கோவில் வீதி மற்றும் கோகுல் கார்டன் பகுதிகளில் கிளை மன்றம் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.
    • கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

     திருப்பூர் :

    திருப்பூர் தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை சார்பாக தெற்கு மாவட்ட தலைவர் ஜி.கே.சங்கர் தலைமையில் பல்லடம் தொகுதி பூமலூர் பகுதியில் விநாயகர் கோவில் வீதி மற்றும் கோகுல் கார்டன் பகுதிகளில் கிளை மன்றம் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.தொடர்ந்து கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

     விழாவில் தெற்கு மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன், தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்குமார், தெற்கு மாவட்ட ஆலோசகர் முருகானந்தம், தெற்கு மாவட்ட துணை அமைப்பாளர் போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     இவ்விழாவில் மங்கலம் பகுதி தலைவர் பாலசுப்பிரமணியன், பகுதிச் செயலாளர் சம்சுதீன், துணை தலைவர் விக்னேஷ், பொருளாளர் நவீன், இளைஞரணி தலைவர் மணிகண்டன், இளைஞரணி செயலாளர் விஜய் மற்றும் திருப்பூர் மேற்கு பகுதி தலைவர் விஜய், பல்லடம் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் பகவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    டெல்லி அக்பர் சாலை பெயர் பலகை மீது ஒட்டப்பட்டிருந்த 'மகாரானா பிரதாப் மார்ஜ்' என்ற புதிய பெயரை போலீசார் இன்று நீக்கினர். #delhiakbarroad
    புதுடெல்லி:

    புதுடெல்லியில் உள்ள அக்பர் சாலையில் பல மத்திய மந்திரிகள், பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த சாலையின் பெயர் பலகையில் மர்ம நபர்கள் 'மகாரானா பிரதாப் மார்ஜ்' என்ற புதிய பெயரை ஒட்டியிருந்தனர்.

    அதனை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து புதிய பெயரை நீக்கினர். இதுகுறித்து டெல்லி முனிசிபல் கவுன்சில் புகார் அளித்த பின் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜெனரல் விகே சிங் அக்பர் சாலையின் பெயரை, 'மகாராஜனா பிரதாப் மார்ஜ்' என்று மாற்ற வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருத்திருந்தார். ஆனால் கோரிக்கை மறுக்கப்பட்டது. இருப்பினும் சாலை பெயரை மாற்றி பல முறை போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மகாரானா பிரதாப் பேரரசர் அக்பர் காலத்தில் அவருடன் போரிட்ட அரசர் என்பது குறிப்பிடத்தக்கது. #delhiakbarroad


    ×