search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நெல்லை மாநகர பகுதிகளில்  தமிழில் பெயர் பலகை எழுதக்கோரி பட்டினி போராட்டம்
    X

    தமிழ் தேச தன்னுரிமைக் கட்சி தலைவர் வியனரசு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.

    நெல்லை மாநகர பகுதிகளில் தமிழில் பெயர் பலகை எழுதக்கோரி பட்டினி போராட்டம்

    • பெயர் பலகைகளில் தமிழில் எழுதக்கோரி கால வரையற்ற பட்டினி அறப்போர் புதிய பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது.
    • தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி புதிய பஸ் நிலையம், பாளை பஸ் நிலையம், வ.உ.சி. விளையாட்டு திடல் பெயர் பலகைகளில் தமிழ் ஆட்சிமொழி சட்ட அரசாணைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி தமிழில் எழுதக்கோரி கால வரையற்ற பட்டினி அறப்போர் தமிழ் தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு தலைமையில் புதிய பஸ் நிலையம் முன்பு இன்று நடைபெற்றது.

    பட்டினி போராட்டம்

    போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அப்புகுட்டி மற்றும் தமிழ் ஆர்வலர்கள் சேரன்துரை, ராஜசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.அப்போது வியனரசு கூறியதாவது:-

    பொது இடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பெயர் அறிவிப்பு பலகைகளில் தமிழில் பெயர் எழுதப்பட வேண்டும் என்று 1956-ம் ஆண்டு தமிழ் ஆட்சி மொழிச் சட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் பாளை பஸ் நிலையம், புதிய பஸ் நிலைய அறிவுசார் பூங்கா, பாளை வ.உ.சி.விளையாட்டு திடல் பெயர்ப் பலகைகளில் தமிழுக்கு முதல் இடம் அளிக்கப்படவில்லை.

    இதனை வலியுறுத்தி கடந்த ஆண்டு மட்டும் 7 முறை மாநகர போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ளோம்.

    இதற்கு முன்பு 2 முறை போராட்டங்களை அறிவித்தும், தேவையான கால அவகாசங்களை வழங்கியும் தொடர்ந்து எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனை கண்டித்து இன்று முதல் காலவரையற்ற பட்டினி போராட்டத்தை நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைது

    போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் தடையை மீறி பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை மேலப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×