search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி வேன் விபத்து"

    • குழந்தை ரக்சின் வேனின் முன் சக்கரத்தில் சிக்கிக்கொண்டான்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் இருந்து தனியார் பள்ளி வேன் ஒன்று இன்று காலை மாம்பட்டு கிராமத்துக்கு சென்றது. வேனை மாம்பட்டு மேற்கு தெருவை சேர்ந்த கயலங்குமார் (வயது 35) என்பவர் ஒட்டி வந்தார்.

    மேல் மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் என்ற சவுந்தர்ராஜன். முந்திரி வியாபாரி. இவர் வீட்டின் முன்பு வேன் நின்றது. முந்திரி வியாபாரியின் மனைவி வசந்தி யு.கே.ஜி. படிக்கும் தனது மூத்த மகன் ரவிக்குமாரை வேனில் பத்திரமாக ஏற்றினார். ரவிக்குமார் ஏறியவுடன் பள்ளி வேன் அங்கிருந்து புறப்பட்டது.

    அப்போது எதிர்பாராத விதமாக தாயாரோடு அங்கு நின்று கொண்டிருந்த 2-வது மகன் ஒன்றரை வயது குழந்தை ரக்சின் வேனின் முன் சக்கரத்தில் சிக்கிக்கொண்டான். இதில் படுகாயமடைந்த சிறுவன் ரக்க்ஷினை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தன் கண்முன்னே உடல் நசுங்கி பலியான குழந்தையை பார்த்து தாய் கதறி அழுத காட்சி அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மினி வேன் தாறுமாறாக ஓடி முட்புதரின் மீது சாய்ந்து
    • பாதுகாப்பாக அதிகாரி வாகனத்தில் அனுப்பி வைத்தார்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பொன்ன ப்பன்தாங்கல் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு மா ணவ ர்களை ஏற்றி க்கொண்டு மினி வேன் சென்று கொண்டிருந்தது.

    புதுப்பட்டு காலனி பகுதி அருகே வரும்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் உள்ள முட்புதரின் மீது சாய்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மாணவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.

    அப்போது அந்த வழியாக வந்த கலெக்டர் வளர்மதி விபத்து நடந்த இடத்தில் இறங்கினார்.

    மேலும் பள்ளி மாணவர்களை மீட்டு கலெக்டர் வளர்மதி பாதுகாப்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரி வாகனத்தில் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.

    • மதனபுரம் அருகில் ஏற்கனவே எரிவாயு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாததால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.
    • தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ரேவதி உயிரிழந்தார்.

    தாம்பரம்:

    தாம்பத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர், பார்வதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 50). இவர் படப்பையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதற்காக தனது மகள் தீபிகா (வயது 21) உடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.

    மதனபுரம் அருகில் ஏற்கனவே எரிவாயு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாததால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. அந்தப் பகுதியை கடக்க முயற்சி செய்த போது வேகத்தை கட்டுப்படுத்த பிரேக் பிடித்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்த ரேவதி மீது பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி வாகனத்தின் பின் டயர் ஏறி இறங்கிதில் படுகாயம் அடை ந்தார். தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ரேவதி உயிரிழந்தார்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை பலியானது.
    • பள்ளி வேன் மோதி குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள மேற்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் சீனுவாசன். நெடுஞ்சாலை துறை ஊழியர். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு தேஜஸ்வரன் (வயது 3) என்ற குழந்தை இருந்தது.

    இன்று காலை கிழக்கு ராமாபுரத்தில் உள்ள அவரது தாத்தா வீட்டில் இருந்த தேஜஸ்வரன், சாலையில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வேன் திடீரென தேஜஸ்வரன் மீது மோதியது.

    குழந்தையின் தலையில் பள்ளி வேன் சக்கரம் ஏறியதால் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதனை பார்த்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுது துடித்தனர்.

    விபத்து குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து குழந்தை தேஜஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பள்ளி வேன் மோதி குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×