பள்ளி வேன் மோதி ஆசிரியை பலி

மதனபுரம் அருகில் ஏற்கனவே எரிவாயு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாததால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ரேவதி உயிரிழந்தார்.
பள்ளி வேன் மோதி ஆசிரியை பலி
Published on

தாம்பரம்:

தாம்பத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர், பார்வதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 50). இவர் படப்பையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதற்காக தனது மகள் தீபிகா (வயது 21) உடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.

மதனபுரம் அருகில் ஏற்கனவே எரிவாயு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாததால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. அந்தப் பகுதியை கடக்க முயற்சி செய்த போது வேகத்தை கட்டுப்படுத்த பிரேக் பிடித்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்த ரேவதி மீது பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி வாகனத்தின் பின் டயர் ஏறி இறங்கிதில் படுகாயம் அடை ந்தார். தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ரேவதி உயிரிழந்தார்.

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com