search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூல் வெளியீட்டு விழா"

    • வாதவூர் அடிகள் வரலாற்று முறை திருவாசக நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
    • திருச்சிற்றம்பலமுடையார் வழிபாட்டு குழுவின் 1500-வது திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது

    நாகர்கோவில் :

    பாபநாசத்தில் தவத்திரு திருக்கயிலாய ஸ்ரீ கந்த பரம்பரை சூரியனார் கோவில் ஆதீனம் ஸ்ரீமத் வாமதேவ சிவாக்கர தேசிய சுவாமிகள் தொகுத்து வழங்கிய வாதவூர் அடிகள் வரலாற்று முறை திருவாசக நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    நாகை திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் நூலினை வெளியிட, மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா பெற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து சிவந்திபுரம் சைவநெறிக்காவலர் சிவகாமி அம்மாள் நடத்தும் திருச்சிற்றம்பலமுடையார் வழிபாட்டு குழுவின் 1500-வது திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. விழாவில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான சிவத்தொண்டர்கள், சிவனடியார்கள் கலந்துகொண்டனர். மேலும் பரதநாட்டியம் நிகழ்ச்சிகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

    • ஜம்புத்தீவு பிரகடனம் குறித்த நூல் வெளியீட்டு விழா-பொதுக்கூட்டம் நடந்தது.
    • பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அரண்மனை வாசலில் மாமன்னர் மருதுபாண்டி யர்கள் அறிவித்த ஜம்புத்தீவு பிரகடனத்தை இந்திய சுதந்திரப் போராட்ட மாக மத்திய, மாநில அரசுகள் அறிவுப்புச்செய்ய வலியுறுத்தி சிவகங்கையின் அனைத்துசமூக மக்கள், அனைத்து சமூக அமைப்பு களின் சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது.

    இதில் பங்கேற்றவர்கள் 1801-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் நாள் திருச்சியில் மாமன்னர்கள் மருது சகோதரர்கள் ஜம்பு தீவு பிரகடனத்தை அறிவித்தனர். இதனை மத்திய, மாநில அரசுகளின் பார்வைக்கு கொண்டு சென்று முதல் சுதந்திர போராட்டமாக அறிவிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசினர் மேலும் ஜம்பு தீவு பிரகடனம் சம்பந்தப்பட்ட நூல் வெளியீட்டு விழா வும் நடைபெற்றது

    இவ்விழாவில் இளைய மன்னர் மகேஷ் துரை, முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சி யப்பன், கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணி முத்து முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் குண சேகரன், நாகராஜன், மற்றும் நகர்மன்ற உறுப்பி னர்கள், இஸ்லாமிய தலை வர்கள், மூத்த கல்வியாளர்கள், பல்வேறு சமூக அமைப்பின் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பொன்னேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழா நடைபெற்றது.
    • சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி நகர தலைவர் பரிமளம் விஸ்வநாதன் பங்கேற்பு

    பொன்னேரி:

    தமிழாலயா இலக்கிய அமைப்பு மற்றும் பொன்னேரி இலக்கியப் பேரவை இணைந்து நடத்தும் இரு நூல்கள் வெளியீட்டு விழா இலக்கியப் பேரவை தலைவர் ராதாகிருஷ்ணன் தமிழாலயா இலக்கிய அமைப்பு செயலாளர் கவிஞர் சிவலிங்கம் தலைவர் தாமோதரன் நூலகர் சம்பத் ஆகியோர் ஏற்பாட்டில் பொன்னேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி நகர தலைவர் பரிமளம் விஸ்வநாதன், துணை தலைவர் விஜயகுமார், திமுக நகரத் தலைவர் ரவிக்குமார், வழக்கறிஞர்கள் காளமேகம், பொன்செல்வன், ஜி.வி. என், ஹோம்ஸ் குமார், டாக்டர் ராதாகிருஷ்ணன், பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் முனைவர் காத்தவராயன், முன்னாள் தலைவர் சுரேஷ்குமார், ஆசிரியர் அர்ஜுனன் ஆகியோர் கலந்து கொண்டு முனைவர் ரதிகுமாரி எழுதிய மனிதன் முழு நிலை பெற என்ற நூல், முனைவர் சிதம்பரம் எழுதிய பெண் அடிமை தீரு மட்டும் பேசுவோம் ஆகிய நூல்களை வெளியிட்டனர். இதில் வார்டு உறுப்பினர்கள் நல்ல சிவம், உமாபதி, ஆசிரியர்கள் இலக்கிய பேரவை இலக்கிய அமைப்பு உறுப்பினர்கள், வாசகர்கள் கலந்துகொண்டனர்.

    • நூல்களின் முதல் பிரதியை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்
    • சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காக, பாடுபடுவது தான் திராவிட மாடல் என முதல்வர் பேச்சு

    சென்னை:

    மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் எழுதிய "கலைஞர் மு.கருணாநிதி வரலாறு" மற்றும் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் எழுதிய "திராவிடமும் சமூக மாற்றமும்" ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு புத்தகங்களை வெளியிட்டார்.

    "கலைஞர் மு. கருணாநிதி வரலாறு" தமிழ்ப் பதிப்பு நூலின் முதல் பிரதியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார். "திராவிடமும் சமூக மாற்றமும்" தமிழ்ப் பதிப்பு நூலின் முதல் பிரதியை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார்.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    மூத்த ஊடகவியலாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்களும் பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்களும் அறிவியக்கமாம் திராவிட இயக்கத்திற்குக் காலம் அளித்த கொடை. ஊடகங்களில் கட்டுரைகளாக - பேச்சுகளாக இவர்கள் திராவிட இயக்கத்தின் மீதான அவதூறுகளை உண்மைகளால் எதிர்கொண்டு, நேர்மையான விமர்சனங்களை முன்வைத்து நம் சிந்தனைகளுக்குப் புதிய பரிமாணத்தை ஊட்டியவர்கள். இவர்களது எழுத்துகள் புதிய பரிணாமத்தை அடைந்து புத்தகங்களாக உங்கள் கைகளுக்கு வந்திருக்கிறது. அவற்றைப் படித்து பலரும் பயனுற வேண்டும்; இன்னும் பல சிந்தனையாளர்கள் முளைக்க விதைகளாக இந்நூல்கள் விளங்க வேண்டும்.

    சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காக, பாடுபடுவது தான் திராவிட மாடல். மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழ கூடியது அல்ல. சுய மரியாதை, சமதர்ம அரசியலை எந்நாளும் உயர்த்திப் பிடிப்போம். இத்தகைய சிந்தனைகளை விதைக்கவும் உரவாக்கவும் ஏ.எஸ்.பன்னீர்செல்வம், ஜெயரஞ்சன் போன்று ஏராளமான சிந்தனையாளர்கள் தேவை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 12 வயது மாணவன் ஆங்கில புத்தகம் எழுதினார்
    • பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் டவுன் விஸ்வநாதன் தெருவை சேர்ந்தவர் எம்.பி. இளங்கோ இவரது மகன் இ. அமிர்தசாய் (, வயது12), 7-ம் வகுப்பு, பெல்ஜியம் நாட்டில் படித்து வருகிறார்.

    இவர் சிறு வயது முதலே எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் இவர் மார்வெல் லேட்டஸ்ட்அசெம்பிள்ட் என்ற நூலை எழுதி இருந்தார். நூல் வெளியீட்டு விழா திருப்பத்தூர் அமிர்தா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வந்தே மாதரம் டிரஸட் ஏ.குஷால்சந்த் சந்த் ஜெயின் தலைமை வகித்தார் பள்ளி தலைமை ஆசிரியர் வி சரவணன் அனைவரையும் வரவேற்றார், புத்தகம் எழுதிய எழுத்தாளர் அமிர்த சாய் பற்றி எம். பி.இளங்கோ அறிமுக உரையாற்றினார்.

    மார்வெல்ஸ் லேட்டஸ்ட் அசெம்பிள்ட் என்ற நூலை தமிழ்ச்செம்மல் ரத்தினநடராஜன் வெளியிட தமிழ்ச்செம்மல் என்.கருணாநிதி, பி. ஆர் தேவராஜன் பெற்றுக் கொண்டனர் நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் டாக்டர் மாதவபாரதி, பேராசிரியரியர்கள் வசந்தகுமார், எம், நாராயணன், பி. பாண்டியன், ஆர். கிருபாகரன். உட்பட பலர் பேசினார்கள்.

    நிகழ்ச்சியில் இ. அமிர்த சாய் புத்தகம் எழுதியது குறித்து பேசினார் இறுதியில் கே சதீஷ்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தஞ்சையில் 25-ந்தேதி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி எழுதிய நூல் வெளியீட்டு விழா நடக்கிறது. இதில் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு நூலை வெளியிடுகிறார். #thirunavukkarasar

    பேராவூரணி:

    தஞ்சை மற்றும் டெல்டா மாவட்டங்களில் போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் க.மாணிக்கவாசகம். 1979-ம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்த இவர், 2012-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.

    காவல் துறையில் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ள இவர், கடந்த 2010-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சரின் வீர, தீர செயலுக்காக பதக்கம் பெற்றவர். காவல் துறையில் பணிபுரிந்த காலத்தில் தான் சந்திந்த பல நிகழ்வுகளை தொகுத்து 55 சிறு கதைகளாக ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா 25-ந் தேதி(சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு தஞ்சையில் உள்ள தீர்க்க சுமங்கலி மகாலில் நடைபெற உள்ளது.

    விழாவுக்கு அழகப்பா பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் பெ.சுபாஷ்சந்திரபோஸ் தலைமை தாங்குகிறார். ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு அரு.உலகநாதன் வரவேற்கிறார். விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் கலந்து கொண்டு நூலை வெளியிடுகிறார். அதை சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.நாகமுத்து பெற்றுக்கொண்டு பேசுகிறார். நூல் ஆசிரியர் க.மாணிக்கவாசகம் ஏற்புரையாற்றுகிறார்.

    இதில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி க.கணேசன், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் அ.கலியமூர்த்தி, வீ.சித்தண்ணன், சி.ராஜமாணிக்கம், பெ.மாடசாமி மற்றும் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். விழா ஏற்பாடுகளை ஆவணம் க.அடைக்கலம் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். #thirunavukkarasar

    ×