என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Book release ceremony"

    • இந்திய சமூகச் சூழலில் சாதிய வேறுபாட்டை முதலில் ஒழிக்க வேண்டும்.
    • நானும் கம்யூனிஸ்ட்டாகியிருப்பேன் என்று முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னது இதனால்தான்!

    காலம்தோறும் கம்யூனிஸ்டுகள் நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    'எல்லார்க்கும் எல்லாம்' என்ற சமத்துவச் சிந்தனையின் தோற்றமே பொதுவுடைமைக் கருத்தியல்!

    வர்க்க வேறுபாடுகளைக் களைந்திட உலகளவில் கம்யூனிஸ்டுகள் போராடுகையில், இந்திய சமூகச் சூழலில் சாதிய வேறுபாட்டை முதலில் ஒழிக்க வேண்டும் என்ற சிந்தனையின் தோற்றம்தான் திராவிட இயக்கம்! தந்தை பெரியாரையும் - பேரறிஞர் அண்ணாவையும் சந்தித்திருக்காவிட்டால் நானும் கம்யூனிஸ்ட்டாகியிருப்பேன் என்று முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னது இதனால்தான்!

    தமிழ்நாட்டில் இடதுசாரி இயக்கங்கள் வலுவாகக் காலூன்ற - உழைப்பாளர்களின் உரிமைகள் நிலைபெற்றிடச் செந்நீர் சிந்தி உழைத்த - பொதுவுடைமைக் கருத்தியலை விதைத்த 100 போராளிகளை இளம்தலைமுறையினர் அறிந்துகொள்ளக் "#காலம்தோறும்_கம்யூனிஸ்டுகள்" நூலைப் படைத்திருக்கிறார் கவிஞர் ஜீவபாரதி!

    ஆதிக்கமும் - சுரண்டலும் ஒழியப் போராடிய தியாக வரலாற்றை நீங்கள் அனைவரும் உள்வாங்கிட இந்த நூல் துணையாக இருக்கும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கலைஞரால் பட்டை தீட்டப்பட்டவர் பொன்முடி. அதனால்தான் தனது செயல்பாடுகளால் மின்னுகிறார்.
    • திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு அச்சமாக உள்ளது.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் பொன்முடி எழுதியுள்ள 'திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்' நூல் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட்டார்.

    பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    கலைஞரால் பட்டை தீட்டப்பட்டவர் பொன்முடி. அதனால்தான் தனது செயல்பாடுகளால் மின்னுகிறார்.

    ஆழ்கடலில் கண்டெடுத்த நன்முத்து பென்முடி. அறிவுமுடிதான் பொன்முடி.

    திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு அச்சமாக உள்ளது. திராவிடம் என்பது ஆரியத்தை பதம் பார்க்கும் சொல்.

    அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காகவே, திராவிட இனமும், கருப்பர் இனமும் தோன்றியது.

    திராவிட நல் திருநாடு-ன்னு சொன்னா உங்க நாக்கு தீட்டாகிடுமா? இப்படி பாடினா சிலருக்கு வாயும், வயிரும் எரியும்னா திரும்பத் திரும்ப பாடுவோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனன் உரையாற்றினார்.

    சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.

    இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனன் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நூல் வெளியீட்டு விழா மேடையில் திருமாவளவன் இல்லை. ஆனால் அவரது மனசாட்சி இங்குதான் உள்ளது.

    தமிழகத்தின் வெற்றிக்கு பெரியார் கொள்கைகளே காரணம். அப்பேத்கரின் கனவை தமிழகத்தில் நிறைவேற்றியவர் திருமாவளவன்.

    அம்பேத்கர் பற்றி தலித் தலைவர்கள் மட்டும் பேசிக்கொண்டிருந்தது போய், தற்போது தலித் அல்லாத விஜய்யும் பேசுகிறார்.

    புதிய கருத்தியல் தலைவராக விஜய் உருவெடுத்து வருகிறார். தமிழக அரசியலில் புதிய வரலாறு உருவாகக்கூடிய மேடையாக இது இருக்கும்.

    இந்தியாவில் காங்கிரஸ் வலிமையாக இருந்தபோது முதல்முறையாக தமிழகம் வென்று காட்டியது.

    மன்னர் பரம்பரை போன்ற ஆதிக்கத்திற்கு தமிழகத்தில் இனி இடமில்லை.

    2026ம் ஆண்டு தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும். பிறப்பால் ஒரு முதலமைச்சர் தமிழகத்தில் உருவாக்கப்பட கூடாது.

    கருத்தியல் உள்ளவர் தான் தமிழகத்தில் முதல்வராக வேண்டும். தமிழகத்தில் மதம், ஜாதியை போல ஊழல் எதிர்ப்பை ஏன் யாரும் முன்னெடுக்கவில்லை.

    ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று ஏன் நாம் கேட்க கூடாது. பங்கு கேட்பதை இனி முதுகுக்கு பின்னால் இல்லை, நெஞ்சுக்கு நேராகவே கேட்போம்.

    சாதியை அடிப்படையாக கொண்ட தேர்தல் அரசியல் தான் இங்கு பெரிய பிரச்சினை.

    தமிழகத்தில் பாஜகவுக்கு 2 சதவீதம் தான் ஓட்டு, இங்கு மத பெரும்பான்மைக்கு ஆதரவு கிடையாது. மத பெரும்பாபன்மை என்று பாஜகவை விமர்சிக்கும் நாம், அதை தான் ஜாதியை வைத்து இங்கு செய்கிறோம்.

    மலம் கலந்த தண்ணீர் தொட்டி விவகாரத்தில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

    25 சதவீதம் மட்டுமே வாக்குகளை வைத்துக்கொண்டு எப்படி பெரிய கட்சி என்று சொல்ல முடியும். கூட்டணி இல்லாமல் ஆட்சியை பிடிக்க முடியுமா ? இதை கேட்டால் சங்கி என்று கூறுவார்கள்.

    சாதியை ஒழிப்பதற்காக தான் திருமாவளவனோடு நான் கைகோர்த்தேன்.

    பெரியால் கொள்கையும், அம்பேத்கர் கொள்கையும் இணைந்து பயணித்தால் புதிய மாற்றம் ஏற்படும்.

    ஏழைகள் ஒன்று சேர்ந்தால் புதிய மாற்றத்தை நோக்கி தமிழக அரசியல் நகரும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 12 வயது மாணவன் ஆங்கில புத்தகம் எழுதினார்
    • பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் டவுன் விஸ்வநாதன் தெருவை சேர்ந்தவர் எம்.பி. இளங்கோ இவரது மகன் இ. அமிர்தசாய் (, வயது12), 7-ம் வகுப்பு, பெல்ஜியம் நாட்டில் படித்து வருகிறார்.

    இவர் சிறு வயது முதலே எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் இவர் மார்வெல் லேட்டஸ்ட்அசெம்பிள்ட் என்ற நூலை எழுதி இருந்தார். நூல் வெளியீட்டு விழா திருப்பத்தூர் அமிர்தா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வந்தே மாதரம் டிரஸட் ஏ.குஷால்சந்த் சந்த் ஜெயின் தலைமை வகித்தார் பள்ளி தலைமை ஆசிரியர் வி சரவணன் அனைவரையும் வரவேற்றார், புத்தகம் எழுதிய எழுத்தாளர் அமிர்த சாய் பற்றி எம். பி.இளங்கோ அறிமுக உரையாற்றினார்.

    மார்வெல்ஸ் லேட்டஸ்ட் அசெம்பிள்ட் என்ற நூலை தமிழ்ச்செம்மல் ரத்தினநடராஜன் வெளியிட தமிழ்ச்செம்மல் என்.கருணாநிதி, பி. ஆர் தேவராஜன் பெற்றுக் கொண்டனர் நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் டாக்டர் மாதவபாரதி, பேராசிரியரியர்கள் வசந்தகுமார், எம், நாராயணன், பி. பாண்டியன், ஆர். கிருபாகரன். உட்பட பலர் பேசினார்கள்.

    நிகழ்ச்சியில் இ. அமிர்த சாய் புத்தகம் எழுதியது குறித்து பேசினார் இறுதியில் கே சதீஷ்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×