திராவிடம் என்பது ஆரியத்தை பதம் பார்க்கும் சொல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கலைஞரால் பட்டை தீட்டப்பட்டவர் பொன்முடி. அதனால்தான் தனது செயல்பாடுகளால் மின்னுகிறார்.திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு அச்சமாக உள்ளது.
திராவிடம் என்பது ஆரியத்தை பதம் பார்க்கும் சொல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் பொன்முடி எழுதியுள்ள 'திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்' நூல் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

கலைஞரால் பட்டை தீட்டப்பட்டவர் பொன்முடி. அதனால்தான் தனது செயல்பாடுகளால் மின்னுகிறார்.

ஆழ்கடலில் கண்டெடுத்த நன்முத்து பென்முடி. அறிவுமுடிதான் பொன்முடி.

திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு அச்சமாக உள்ளது. திராவிடம் என்பது ஆரியத்தை பதம் பார்க்கும் சொல்.

அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காகவே, திராவிட இனமும், கருப்பர் இனமும் தோன்றியது.

திராவிட நல் திருநாடு-ன்னு சொன்னா உங்க நாக்கு தீட்டாகிடுமா? இப்படி பாடினா சிலருக்கு வாயும், வயிரும் எரியும்னா திரும்பத் திரும்ப பாடுவோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com