பொன்னேரியில் நூல்கள் வெளியிட்டு விழா

பொன்னேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழா நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி நகர தலைவர் பரிமளம் விஸ்வநாதன் பங்கேற்பு
பொன்னேரியில் நூல்கள் வெளியிட்டு விழா
Published on

பொன்னேரி:

தமிழாலயா இலக்கிய அமைப்பு மற்றும் பொன்னேரி இலக்கியப் பேரவை இணைந்து நடத்தும் இரு நூல்கள் வெளியீட்டு விழா இலக்கியப் பேரவை தலைவர் ராதாகிருஷ்ணன் தமிழாலயா இலக்கிய அமைப்பு செயலாளர் கவிஞர் சிவலிங்கம் தலைவர் தாமோதரன் நூலகர் சம்பத் ஆகியோர் ஏற்பாட்டில் பொன்னேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி நகர தலைவர் பரிமளம் விஸ்வநாதன், துணை தலைவர் விஜயகுமார், திமுக நகரத் தலைவர் ரவிக்குமார், வழக்கறிஞர்கள் காளமேகம், பொன்செல்வன், ஜி.வி. என், ஹோம்ஸ் குமார், டாக்டர் ராதாகிருஷ்ணன், பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் முனைவர் காத்தவராயன், முன்னாள் தலைவர் சுரேஷ்குமார், ஆசிரியர் அர்ஜுனன் ஆகியோர் கலந்து கொண்டு முனைவர் ரதிகுமாரி எழுதிய மனிதன் முழு நிலை பெற என்ற நூல், முனைவர் சிதம்பரம் எழுதிய பெண் அடிமை தீரு மட்டும் பேசுவோம் ஆகிய நூல்களை வெளியிட்டனர். இதில் வார்டு உறுப்பினர்கள் நல்ல சிவம், உமாபதி, ஆசிரியர்கள் இலக்கிய பேரவை இலக்கிய அமைப்பு உறுப்பினர்கள், வாசகர்கள் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com