திருவாசக நூல் வெளியீட்டு விழா

வாதவூர் அடிகள் வரலாற்று முறை திருவாசக நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.திருச்சிற்றம்பலமுடையார் வழிபாட்டு குழுவின் 1500-வது திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது
திருவாசக நூல் வெளியீட்டு விழா
Published on

நாகர்கோவில் :

பாபநாசத்தில் தவத்திரு திருக்கயிலாய ஸ்ரீ கந்த பரம்பரை சூரியனார் கோவில் ஆதீனம் ஸ்ரீமத் வாமதேவ சிவாக்கர தேசிய சுவாமிகள் தொகுத்து வழங்கிய வாதவூர் அடிகள் வரலாற்று முறை திருவாசக நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

நாகை திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் நூலினை வெளியிட, மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து சிவந்திபுரம் சைவநெறிக்காவலர் சிவகாமி அம்மாள் நடத்தும் திருச்சிற்றம்பலமுடையார் வழிபாட்டு குழுவின் 1500-வது திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. விழாவில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான சிவத்தொண்டர்கள், சிவனடியார்கள் கலந்துகொண்டனர். மேலும் பரதநாட்டியம் நிகழ்ச்சிகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com