search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவறி விழுந்து"

    • அமைச்சர் மனோ தங்கராஜ்-ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வழங்கினர்
    • மீனவர் லெரின்ஷோ குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    மார்த்தாண்டம்:

    கிள்ளியூர் அருகே உள்ள தூத்தூர் ஊராட்சிக் குட்பட்ட கே.ஆர்.புரம், சின்னத்து றையை சேர்ந்த மீனவர் லெரின்ஷோ (வயது 26), ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் பகுதியில் ஆழ்கட லில் மீன்பிடித்து கொண்டிருந்த போது கடந்த மாதம் 9-ந் தேதி தவறி கடலில் விழுந்து இறந்தார். அவரது குடும்பத்தின் வறுமை சூழலை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்க வேண்டும் என்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் தமிழ்நாடு கோரிக்கை வைத்தார்.

    இதனை ஏற்று, மீனவர் லெரின்ஷோ குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனையடுத்து அவரது வீட்டிற்கு அமைச்சர் மனோ தங்கராஜ், ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் சென்று லெரின்ஷோ குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ரூ. 2 லட்சத்தை வழங்கினர். பத்மனாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், மீன்வள துறை துணை இயக்குநர் சின்னகுப்பன், ஆய்வாளர் லிபின் மேரி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சண்முகம் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து விட்டார்.
    • சிகிச்சை பெற்று வந்த சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஈரோடு, அக். 19-

    ஈரோடு மாவட்டம் சூர ம்பட்டி பாரதிதாசன் தெரு வை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45). இவ ரது மனைவி சிந்தாமணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    சண்முகம் கட்டிட வேலை செய்து வந்தார். இவர் கடந்த ஒரு மாதமாக முத்தம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று சண்முகம் 2-வது மாடியில் வெளிப்பக்கம் சுவரை பூசுவதற்காக சாரத்தின் சவுக்கு கட்டை மீது நின்று கொண்டிருந்தார்.

    அப்போது சண்முகம் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து விட்டார். இதையடுத்து அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவரது மனைவி சிந்தாமணி ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குலசேகரம் அருகே விலவூர்கோணம் பகுதியை சேர்ந்தவர்
    • இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை

    நாகர்கோவில் : குலசேகரம் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவுநாகர்கோவில்: குலசேகரம் அருகே விலவூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் குமார் (வயது 39), தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தினமும் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

    சம்பவத்தன்று வீட்டின் அருகில் தோட்டத்தில் உள்ள மரத்தில் பாக்கு பறிப்பதற்காக ஏறினார். அப்போது மரம் முறிந்து கீழே விழுந்தது. இதில் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் குமார் பரிதாபமாக இறந்தார். அவரது அண்ணன் அய்யப்பன் புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 10 அடி உயரத்தில் இருந்து முருகன் தவறி கீழே விழுந்தார்.
    • இதில் இடுப்பு பகுதியில் காயம் அடைந்தவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கெஞ்சனூர் தண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன் (50). கட்டிட தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மரத்துக்காடு பகுதியில் புதிய கட்டிட பணிக்கு சென்றார். இரவு கட்டிடத்தின் முதல் தளத்தில் ஜன்னல் பகுதியில் படுத்திருந்தார்.

    அப்போது 10 அடி உயரத்தில் இருந்து முருகன் தவறி கீழே விழுந்தார். இதில் இடுப்பு பகுதியில் காயம் அடைந்தவரை சக தொழிலாளிகள் மீட்டு சத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார்.

    இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • நீரில் முழ்கி கிடந்தது கொமரன் என்பது தெரிய வந்தது.
    • சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், நடுப்பாளை யம் காலனியைச் சேர்ந்தவர் கொமரன் (73). இவரது மனைவி கருப்பம்மாள் (50). இருவரும் கூலித் தொழி லாளிகள். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமண மாகி தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவத்த ன்று மாலை 6 மணியளவில், பவானி ஆற்றில் குளித்து விட்டு வருவதாக கூறி சென்ற கொமரன் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை.

    இதையடுத்து, கருப்ப ம்மாள், அருகில் வசித்து வரும் தனது மகள்களுடன் சேர்ந்து தேடிப் பார்த்துள்ளனர். நள்ளிரவு ஆகிவிட்ட தால் இருவரும் வீடு திரும்பி விட்டனர்.

    இந்த நிலையில், நேற்று காலை 6.30 மணியளவில் பவானி ஆற்றில் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் கிடப்பதாக கருப்பம்மாளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

    உடனடியாக அவர் அங்கு சென்று பார்த்தபோது, நீரில் முழ்கிக் கிடந்தது கொமரன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை மீட்டு சத்திய மங்கலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர்.

    அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர், ஏற்கனவே கொமரன் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

    இதுகுறித்து, சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மேனகா திடீரென கட்டிலில் இருந்து கீழே விழுந்து மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார்.
    • பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மேனகா இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்துள்ள சித்தோடு ஆதிபில்டர்ஸ், அண்ணாமலை வீதியை சேர்ந்தவர் மேனகா (44). இவரது கணவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

    இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மேனகா உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்றும் வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் 2 மணியளவில் கட்டிலில் படுத்திருந்த மேனகா திடீரென கட்டிலில் இருந்து கீழே விழுந்து மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார்.

    அதைக்கண்ட அவரது மகன் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் மேனகாவை மீட்டு பெருதுறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மேனகா இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • புளிய மரத்தில் இருந்து பெரியசாமி தவறி கீழே விழுந்தார்.
    • இதில் பெரியசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை தாலுகா ஈங்கூர் அடுத்த நல்லகவுண்ட ன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (59). இவரது மனைவி பூங்கொடி. தமிழ்நாடு மின்சார வாரிய த்தில் உதவி மின் பொறி யாளர் அலுவ லகத்தில் போர்மேனாக பெரியசாமி வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று பெரியசாமி வீட்டின் முன்புறமுள்ள புளிய மரத்தில் ஏறி வீட்டிற்கு வரும் மின்சார லைனை ஒதுக்கி கொண்டி ருந்தார்.

    அப்போது அவரது மனைவி பூங்கொடி மற்றும் கொழு ந்தனார் சுப்பிரமணியம் அதனை நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத வகையில் திடீரென 15 அடி உயரம் உள்ள புளிய மரத்தில் இருந்து பெரியசாமி தவறி கீழே விழுந்தார். இதில் பெரியசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூங்கொடி மற்றும் சுப்பிரமணி இருவரும் ஓடி வந்து பெரியசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்து வமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனையில் பெரிய சாமியை சேர்த்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெரியசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    • மாதவன் (57). சம்வத்தன்றுபரக்களூர் சின்ன மாரியம்மன் கோவில் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • ஒரு வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கிய போது எதிர் பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதவன் (57). சம்வத்தன்றுபரக்களூர் சின்ன மாரியம்மன் கோவில் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கிய போது எதிர் பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பின் தலையில் பலத்த அடி பட்டதால் ரத்தம் கொட்டிய நிலையில் உயிருக்கு போராடினார். தகவல் அறிந்த தனியார் ஆம்புலனஸ் குழுவினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்து விட்டார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். இது குறித்து அவரது மனைவி முருகேஸ்வரி தாரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நீர் தேங்கிய பகுதியில் காலை வைத்தவர் நீருக்குள் தவறி விழுந்து விட்டார்.
    • கிராம‌மக்கள் சுக்காம்பார் சாலையில் அமர்ந்து மறியல் செய்ய முயன்றனர்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி - கல்லணை சாலையில் அமைந்துள்ள கல்லணை அருகே சுக்காம்பார் கிராமம் கீழ்த் தெரு கோவிந்தராஜ் என்ற விவசாய கூலி தொழிலாளி மகன் சஞ்சு (வயது 11) இவர் கோவிலடி கிராமத்தில் உள்ள அரசுபள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர் நேற்று மாலை தனது வீட்டின் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றிற்கு தனது நண்பர் ரிஷிக்குமரனுடன் சென்றுள்ளார்.

    கொள்ளிடத்தில் நீர் தேங்கிய பகுதியில் காலை வைத்தவர் நீருக்குள் தவறி விழுந்து விட்டார்.

    உடனே அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் காப்பாற்ற முயற்சி செய்வதற்குள் நீரில் மூழ்கிவிட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அருகில் உள்ள இளைஞர்கள் கொள்ளிடம் ஆற்றில் குதித்து தேடி சிறுவனின் உயிரற்ற உடலை மீட்டனர்.

    மணல் அள்ளியதால் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட பள்ளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரால் சிறுவன் இறந்தாக கூறி கிராமமக்கள் சுக்காம்பார் சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்ய முயன்றனர்.

    உடனடியாக அங்கு வந்த தோகூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அய்யா பிள்ளை சாலை மறியல் செய்யக்கூடாது என வலியுறுத்தி தகுந்த நட வடிக்கை மேற்கொள்வதாக கூறினார்.

    இதை அடுத்து தோகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சிறுவன் பிரேதத்தைப் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணிகண்டன் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கோபி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி பகுதியை சேர்ந்தவர் தேசிங்கு. இவரது மகன் மணிகண்டன் (வயது 29). எலக்ட்ரீசியன். இவர் கோபிசெட்டிபாளையம் பகுதியில் தங்கி அந்த பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் மணிகண்டன் அந்த மில்லில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.

    இதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பழனிசாமி தோட்டத்து கிணற்றில் கால் தவறி விழுந்தார்.
    • தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி மீட்டனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஓட்டக்குட்டை ரோடு கோழிக்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி (43). விவசாயி. இவரது தோட்டத்தில் 50 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது.

    இந்நிலையில் பழனிசாமி தோட்டத்து கிணற்றில் மோட்டார் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது கால் தவறி அவர் கிணற்றில் விழுந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் இது குறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 4 மணி நேரமாக போராடி கயிறு கட்டி பழனிசாமியை பிணமாக மீட்டனர்.

    இறந்த பழனிசாமிக்கு ரேவதி என்ற மனைவியும், 7 வயதில் மகனும் உள்ளனர். இதனையடுத்து சத்தியமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரெயிலில் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

    சேலம்:

    சேலம் ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சுர்ஜா என்ற பெண் அவரது கணவருடன் சன்ஜெய்யுடன் அசாம் செல்வதற்காக ஐந்தாவது நடைமேடைக்கு வந்துள்ளார்.

    ரயிலுக்காக காத்திருந்த நிலையில் ரயில் வந்தவுடன் முன்பதிவு பெட்டியில் ஏற முயன்றபோது சுர்ஜா தவறி ெரயில் பாதைக்கும் விழுந்தார். இதனை அறிந்த ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் ரயிலை நிறுத்தினர். இதையடுத்து ரயில் பாதையில் விழுந்து கிடந்த சுர்ஜாவை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

    அப்போது முதுகு பகுதியில் சுர்ஜாவிற்கு படுகாயம் ஏற்பட்டிருந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ×