கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

ராமசாமி நிலைதடுமாறி கட்டிடத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
Published on

பு.புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி கே.வி.கே. தெருவை சேர்ந்தவர் ராமசாமி (62). கட்டிட தொழிலாளி. இவர் அந்த பகுதியில் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

அப்போது அவர் நிலைதடுமாறி கட்டிடத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் அவரது மனைவி நாகமணி சம்பவ இடத்து வந்தார்.

இதை தொடர்ந்து அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராமசாமியை மீட்டு ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com