search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவம்"

    • திருவண்ணாமலையில் கவுரி வனம் என்றொரு வனம் உள்ளது.
    • அந்த இடத்துக்கு செல்பவர்கள் நினைவிழந்து விடுவார்கள்.

    திருவண்ணாமலையில் கவுரி வனம் என்றொரு வனம் உள்ளது.

    அந்த இடம் பார்வதி தேவி தவம் இருந்த இடமாகும்.

    அந்த இடத்துக்கு செல்பவர்கள் நினைவிழந்து விடுவார்கள்.

    வந்த வழி தெரியாமல் மலையில் தவிக்க நேரிடும் என்று தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    ரமணரின் பக்தர்களில் ஒருவரான ஹம்பரீஸ் என்பவருக்கு அந்த அனுபவம் ஏற்பட்டது.

    கடைசியில் அவர் ஒரு விறகு வெட்டி மூலம் மலையில் இருந்து கீழே இறங்கினார்.

    தமிழ்நாட்டில் சித்தர்கள் வாழும் எந்த மலையிலும் இப்படி அதிசய வனம் இல்லை.

    திருவண்ணாமலையில் மட்டுமே அந்த அதிசய வனம் உள்ளது.

    • தாமதமாக வந்த ஆஞ்சநேயர் சாளக்ராமத்தை எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.
    • அதை ஆஞ்சநேயர் பூஜைக்காக எடுத்துக் கொண்டு வான்வழியே பறந்து வந்தார்.

    பங்குனி உத்திரம் தினத்தன்று காதில் பூ வைத்து காட்சி தருகிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்.

    இத்தலத்தில் பங்குனி உத்திர விழா விசேஷமாக நடக்கிறது.

    அன்று ஒரு நாள் மட்டும் நரசிம்மர், தாயாருடன் சேர்ந்து காட்சி தருகிறார்.

    ஒரு சமயம் நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் ஆஞ்சநேயர் நீராடிய போது ஒரு சாளக்ராமம் கிடைத்தது.

    அதை ஆஞ்சநேயர் பூஜைக்காக எடுத்துக் கொண்டு வான்வழியே பறந்து வந்தார்.

    நாமக்கல் தலத்தில் நீராடுவதற்காக அவர் இறங்கினார்.

    சாளக்ராமத்தை கீழே வைக்க முடியது என்பதால் என்ன செய்வது என யோசித்த வேளையில் தீர்த்தக்கரையில் மகாலட்சுமி தாயார், தவம் இருப்பதைக் கண்டார்.

    அவளை வணங்கிய ஆஞ்சநேயர், அவளது தவத்திற்கான காரணத்தைக் கேட்டார்.

    திருமாலை, நரசிம்ம வடிவில் தான் பார்த்ததில்லை என்றும் அந்த வடிவத்தைக் காணதான் தவம் இருப்பதாகவும் கூறினாள்.

    ஆஞ்சநேயர் அவளது கையில் சாளக்ராமத்தைக் கொடுத்து, நீராடி விட்டு, வந்து வாங்கிக் கொள்வதாக சொன்னார்.

    குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து வாங்கிக் கொள்ளா விட்டால், சாளக்ராமத்தை தரையில் வைத்து விடுவேன் என லட்சுமி நிபந்தனை விதித்தாள்.

    ஆஞ்சநேயருக்கு சில காரணங்களால் தாமதமாகி விட்டது.

    தாயார், சாளக்ராமத்தை கீழே வைத்து விட்டார்.

    தாமதமாக வந்த ஆஞ்சநேயர் சாளக்ராமத்தை எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.

    அது பெரியமலையாக உருவெடுத்தது.

    அம்மலையில் நரசிம்மர் தோன்றி தாயாருக்கு அருள் செய்தார்.

    இவர் லட்சுமி நரசிம்மர் எனப்பட்டார். ஆஞ்சநேயரும் இங்கேயே தங்கி விட்டார்.

    நரசிம்மரின் மடியில் லட்சுமி இருந்ததால், லட்சுமி நரசிம்மர் என்றழைக்கப்படுகிறார்.

    ஆனால் லட்சுமி இவரது மடியில் இல்லாமல் மார்பில் இருக்கிறாள்.

    இவளை வணங்கிட கணிதத்தில் புலமை பெறலாம் என்பது நம்பிக்கை.

    சாளக்ராமத்தைக் கொண்டு வந்த ஆஞ்சநேயருக்கு நரசிம்மர் கோவில் எதிரே தனிக்கோவில் இருக்கிறது.

    18 அடி உயரமுள்ள இவர் கையில் ஜெபமாலையும், இடுப்பில் கத்தியும் வைத்திருக்கிறார்.

    பங்குனியில் இங்கு 15 நாள் விழா நடக்கிறது.

    பங்குனி உத்திரத்தன்று காலையில் மூலஸ்தானத்திலுள்ள நரசிம்மர் தாயார் சன்னதிக்கு எழுந்தருளி சேர்த்தியாக காட்சி தருகிறார்.

    அப்போது விசேஷ அபிஷேகம் நடக்கிறது. அதன் பின் இருவரும் முன்மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளுகின்றனர்.

    அன்று ஒரு நாள் மட்டுமே இங்கு சுவாமி தாயார் இவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.

    • ஒவ்வொரு மலரின் மகத்துவ குணம் என்ன என்பதை புதுவை அன்னை வெளியிட்டுள்ளார்.
    • ஆரஞ்சு ரோஜா-ஆர்வமுள்ள பக்தி

    மலர்களின் மகத்துவம்

    ஒருவரது மனதை நிலைப்படுத்தும் சக்தி மலருக்கு உண்டு. 'கொடிரோஸ்' மலரை அன்னை, 'சுமுகமான மலர்' என்றழைத்தார். இம்மலர் வீட்டில் இருந்தால் சண்டை சச்சரவுகள் நீங்கிவிடும். சுமுகமாக வாழ்க்கை கிடைக்கும் என்கிறார். 

    ஒவ்வொரு மலரின் மகத்துவ குணம் என்ன என்பதை புதுவை அன்னை வெளியிட்டுள்ளார்


    அசோக மலர்   - கவலையின்மை

    அரளி (வெள்ளை) - தெய்வ சிந்தனை

    அல்லி (சிவப்பு)  - திருமகளின் அருள்

    அலரி (வெண்மை)  - இறைநினைவு

    ஆவாரம்பூ - கூர்த்தமதி

    இரங்கூன் மல்லி - விசுவாசம்

    ஊமத்தை  - தவம்

    எள்ளுப்பூ - சமரசம்

    எருக்கம்பூ- தைரியம்

    எலுமிச்சைப்பூ- கற்புத்திறன்

    கத்திரிப்பூ- பயமின்மை

    கருவேலம்பூ- ஞானம்

    காகிதப்பூ- பாதுகாப்பு

    சண்பகம்- உள்ளம் பக்குவப்படுதல்

    சம்பங்கி- படைப்புத்திறன்

    சாமந்தி- வீரியசக்தி

    சாமந்தி  - முழு அமைதி

    செம்பருத்தி- விரைந்து செயல்பாடு

    சிவப்பு செம்பருத்தி- நிறைந்த சக்தி

    செங்காந்தள்- சச்சரவின்மை

    சூரியகாந்தி- கலை நுண்ணறிவு

    கொத்தமல்லிப்பூ- மென்மை

    கொடிரோஸ்- சுமுகம்

    கொய்யாப்பூ- நிதானம்

    டிசம்பர்பூ- விழிப்புணர்வு

    (வெண்) தாமரை- இறையருள்

    தாழம்பூ- ஆன்மீகமனம்

    தும்பைப்பூ- உண்மைவழிபாடு

    தூங்குமூஞ்சிப்பூ- விவேகம்

    நந்தியாவட்டை- தூயமனம்

    நாகலிங்கப்பூ (சிவப்பு)- செல்வவளம்

    நித்யகல்யாணி (சிவப்பு)- சுயநலமின்மை

    நித்யகல்யாணி (வெண்மை)- நல்ல முன்னேற்றம்

    பருத்தி ரோஜா- தெய்வீக அருள்

    பன்னீர்ப்பூ- சாந்தமான உணர்வு

    பவளமல்லி- தெய்வீக ஆர்வம்

    பாதாம்பூ- ஆன்மீக உணர்வு

    பாரிஜாதம்- தூய ஆர்வம்

    பாகல்பூ- இனிமை

    பாக்குமரப்பூ- தெம்பு

    பீர்க்கம்பூ- அன்புமனம்

    புன்னைப்பூ- உடலில் அமைதி

    புகையிலைப்பூ- பகுத்தறிவு

    பூசணிப்பூ- தாராளம்

    பூவரசம்பூ- ஆரோக்கியம்

    பெருக்கொன்றை- சேவைமனப்பான்மை

    பெட்டுனியா- உற்சாகம்

    மகிழம்பூ- பொறுமை

    மனோரஞ்சிதம்- தெளிவான சிந்தனை

    மல்லிகை- தூய்மை

    மரமல்லிகை- உருவமாற்றம்

    (பவழ) மல்லிகை- இறைவேட்கை

    மாதுளம்பூ- தெய்வபக்தி

    விருட்சிப்பூ- மன அமைதி

    வேப்பம்பூ- ஆன்மீக இன்பம்

    வாடாமல்லி- மரணமிலா வாழ்வு

    வேலம்பூ- தெய்வீக ஞானம்

    ஆரஞ்சு ரோஜா- ஆர்வமுள்ள பக்தி

    சிவப்பு ரோஜா- ஆழ்ந்த உணர்வு

    வெள்ளை ரோஜா- பூர்ண தெய்வபக்தி

    இளஞ்சிவப்பு ரோஜா- சரணாகதி

    • ஏராளமான முனிவர்கள் திருமழிசை வந்து தவம் இருந்தனர்.
    • பெருமாளை வழிபட்டால் முக்தி கிடைக்கும்.

    ஒரு தடவை அத்ரி, பிருகு, வசிஷ்டர், பார்க்கவ ஆகிய ரிஷிகள் பிரம்மாவை சந்தித்து, ''நாங்கள் தவம் செய்ய உயர்வான ஒரு இடத்தை காட்டுங்கள்'' என்றனர்.

    உடனே பிரம்மா, தராசின் ஒரு தட்டில் திருமழிசை தலத்தையும் மற்றொரு தட்டில் உலகின் மற்ற எல்லா புனித தலங்களையும் வைத்தார். திருமழிசை இருந்த தட்டு தாழ்ந்து இருந்தது.

    இதையடுத்து உலகில் உள்ள எல்லாப் புண்ணியத் தலங்களையும் விட மகிமையும், பெருமையும் கொண்டது திருமழிசையே என்பதை ரிஷிகள் உணர்ந்தனர். இதனால் ஏராளமான முனிவர்கள் திருமழிசை வந்து தவம் இருந்தனர்.

    எனவே இத்தல பெருமாளை வழிபட்டால் முக்தி கிடைக்கும். மறுபிறவி இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். 

    • காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும், தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது.
    • மூலவர் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் அம்பாள் சந்நிதிக்கு மேற்க்குப் பக்கத்தில் குருபகவானின் தனி சந்நிதி தனி விமானத்துடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

    சனிபகவான் திட்டை தலத்திற்கு எழுந்தருளி வேதாகம முறைப்படி வேதமுதல்வனைப் பூஜித்து ஆயிரம் ஆண்டுகாலம் கடும் தவம் புரிந்தார் என்பது சிறப்பு. இத்தலத்தில் உள்ள ஈசனைத் தவமிருந்து பாவ விமோசனம் பெற்றார் சந்திரன். பசு, குதிரை, மான் தாகம் தீருவான் வேண்டி பசு தீர்த்தத்தைச் சிருஷ்டித்துக் கொடுத்தார் ஈசன். விஷ்ணு அரசமரமாகவும, லக்ஷ்மி வில்வமரமாகவும் இருந்து இறைவனுக்கும், இறைவிக்கும் திருத்தொண்டு செய்தனர். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம்.. கௌதமர், ஆதிசேடன், காமதேனு பூசித்த திருவூர்.

    சுமாலி என்பவர் தேர் அழுந்திய இடமாதலின் 'ரதபுரி' என்றும் காமதேனு வழிபட்டதால் 'தேனுபுரி' என்றும் ரேணுகை வழிபட்டதால் 'ரேணுகாபுரி' என்றும் இத்தலம் வழங்கப்படுகிறது.

    காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும், தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது. புராண காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது, பூலேகமே நீரில் அமிழ்ந்திருந்தபோது திட்டை என்ற இவ்விடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்தது. இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புவாக ஒரு லிங்க உருவில் எழுந்தருளினார். இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவது லிங்கமாக சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார். இவ்வாறு ஐந்து லிங்கங்கள் இருப்பதால் இத்தலத்தை 'பஞ்சலிங்கஷேத்திரம்' என்று கூறுவர். இந்த ஒரு தலத்தை வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பஞ்சபூத திருத்தலங்களுக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மூலவர் கருவறையின் மேல் விதானத்தில் ஒரு 'சந்திரகாந்தக்கல்' பொருத்தப்பட்டிருக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி சுமார் ஒரு நாழிகைக்கு ஒருமுறை மூலவர் சிவலிங்கத்திருமேனியில் ஒரு சொட்டு நீர் விழும்படி இக்கல் பொருத்தப்பட்டுள்ளது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது. ராஜகோபுரம் வழியாக சிலபடிகள் ஏறிச் சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவர் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் அம்பாள் சந்நிதிக்கு மேற்க்குப் பக்கத்தில் குருபகவானின் தனி சந்நிதி தனி விமானத்துடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

    இத்திருக்கோவிலில் குருபகவான் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் புதல்வர் ஆவார். ஒரு காலத்தில் தென்குடித்திட்டை என்ற பெயரால் விளங்கிய இவ்வூர் தற்போது திட்டை என்று அழைக்கப்படுகிறது. இத்திருத்தலத்தில் கொடிமரம், கோபுரகலசம், சுவாமிபுஷ்கரணி, கருங்கற்களால் அமைந்தகோவில் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். பிரகாரத்தில் விநாயகர், முருகன், அண்ணாமலையார், சண்டிகேசுவரர், பைரவர், குருபகவான் முதலிய சந்நிதிகள் உள்ளன.

    அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

    ரயில் நிலையம் : திட்டை

    பஸ் வசதி : உண்டு

    தங்கும் வசதி : இல்லை

    உணவு வசதி : இல்லை

    ×