என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

முனிவர்கள் தவம் செய்த இடம்
- ஏராளமான முனிவர்கள் திருமழிசை வந்து தவம் இருந்தனர்.
- பெருமாளை வழிபட்டால் முக்தி கிடைக்கும்.
ஒரு தடவை அத்ரி, பிருகு, வசிஷ்டர், பார்க்கவ ஆகிய ரிஷிகள் பிரம்மாவை சந்தித்து, ''நாங்கள் தவம் செய்ய உயர்வான ஒரு இடத்தை காட்டுங்கள்'' என்றனர்.
உடனே பிரம்மா, தராசின் ஒரு தட்டில் திருமழிசை தலத்தையும் மற்றொரு தட்டில் உலகின் மற்ற எல்லா புனித தலங்களையும் வைத்தார். திருமழிசை இருந்த தட்டு தாழ்ந்து இருந்தது.
இதையடுத்து உலகில் உள்ள எல்லாப் புண்ணியத் தலங்களையும் விட மகிமையும், பெருமையும் கொண்டது திருமழிசையே என்பதை ரிஷிகள் உணர்ந்தனர். இதனால் ஏராளமான முனிவர்கள் திருமழிசை வந்து தவம் இருந்தனர்.
எனவே இத்தல பெருமாளை வழிபட்டால் முக்தி கிடைக்கும். மறுபிறவி இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
Next Story






