search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டோக்கன்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 10-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது.
    • இதுவரை 95 சதவீதம் பேர் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்புடன் கொண்டாடுவதற்காக தமிழக அரசு சார்பில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 பணமும் ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இந்த துரித தொகுப்பை 10-ந் தேதி தொடங்கி வைத்த அதே நாளில் மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது.

    2 கோடியே 19 லட்சம் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதில் டோக்கன் பெறாத 40லட்சம் பேர் 14-ந் தேதி ரேசன் கடைகளுக்கு வந்து பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை முதல் டோக்கன் இல்லாதவர்களுக்கும் ரேசன் கடைகளில் ரூ.1000 ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்பட்டது

    இதுவரை 95 சதவீதம் பேர் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
    • டோக்கனில் நாள், நேரம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.

    சென்னை:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஏழை-எளிய மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, ஏலக்காய், கரும்பு ஆகியவை இந்த தொகுப்பில் இடம்பெற்றன. ரேசன் கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் தொகுப்புடன் ரொக்கப்பணம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பான பச்சரிசி, சர்க்கரை, முழுக் கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கம் ரூ.1000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

    பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் ரொக்கப்பணம் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகள் மூலம் பொங்கலுக்கு முன்னதாக ரூ.1000 ரொக்கமும், பொங்கல் தொகுப்பும் வழங்கிட அனைத்து மாவட்டங்களிலும் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    உணவு வழங்கல் பாதுகாப்பு துறையின் மூலம் இதற்காக கரும்பு, பச்சரிசி, சர்க்கரை ஆகியவை கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2 கோடியே 20 லட்சம் பேர் இத்திட்டத்தின் மூலம் பயன் அடைகிறார்கள்.

    பொங்கல் தொகுப்பு மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்துவோர், பொதுத்துறை பணியாளர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள், எந்த பொருளும் பெறாத அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு கிடைக்காது. பொங்கல் பண்டிகை 15-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுவதால் 13-ந்தேதி (சனிக்கிழமைக்குள்) பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    பொங்கல் தொகுப்புடன் இலவச வேட்டி-சேலையும் வழங்கப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. அதனால் ரேசன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படக் கூடும் என்பதால் வழக்கம்போல டோக்கன் முறை பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு ரேசன் கடைகளுக்கும் உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்த தேதியில், எந்த நேரத்தில் பொங்கல் தொகுப்புடன் பணம் வழங்கப்படும் என்பதை குறிப்பிட்டு டோக்கன் வினியோகிக்கப்படுகிறது.

    ரேசன் கடை ஊழியர்கள் மூலம் அந்தந்த பகுதியில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை (7-ந்தேதி) முதல் டோக்கன் வழங்கப்படுகிறது. 3 நாட்களுக்குள் டோக்கன் வினியோகிக்கப்படும். ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் 1000 முதல் 1500 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு எந்த நாளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்பதை டோக்கன் மூலம் உறுதி செய்யப்படும்.

    அதனால் தேவையில்லாமல் ரேசன் கடைகளுக்கு மக்கள் செல்ல தேவையில்லை. குறிப்பிட்ட நாளில் சென்று நெரிசல் இல்லாமல் கைவிரல் பதிவு செய்து பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் பெறலாம்.

    டோக்கன் வினியோகம் வழங்கும் பணி ஓரிரு நாட்களில் முடிக்கப்படும். அதனை தொடர்ந்து 10-ந்தேதி (புதன்கிழமை) முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

    அதனை தொடர்ந்து எல்லா இடங்களிலும் ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வினியோகிக்கப்படும். 4 நாட்களுக்குள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு கிடைக்கும் வகையில் உணவு வழங்கல் துறை விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    குடும்பத் தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் ஒருவர் சென்று பொங்கல் தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம். பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் நாளில் ரேசன் கடைகளில் நீண்ட வரிசை எதுவும் இல்லாமல் மக்கள் எளிதாக பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தினமும் 300 குடும்ப அட்டைதாரர்கள் அழைக்கப்படுகிறார்கள். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொங்கல் தொகுப்பு வினியோகிக்கப்படும்.

    சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சில பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் தள்ளுமுள்ளு ஏற்படாமல் இருப்பதற்காக பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

    பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது. 1967, 1800425 5901 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். பரிசு தொகுப்பு முறையாக வினியோகிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்படுகிறது. எவ்வித புகாருக்கும் இடமின்றி பொங்கல் தொகுப்பினை வழங்கிட வேண்டும் என ரேசன் கடை ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • முத்துமங்களம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு விசாரணை நடத்தினர்.
    • அவரிடம் இருந்து லாட்டரி டிக்கெட்டுகளுக்கான எண்கள் கொண்ட 3 துண்டு சீட்டு டோக்கன்களை பறிமுதல் செய்தனர்.

    முத்தூர்:

    முத்தூர் அருகே முத்துமங்களம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து முத்துமங்களம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு விசாரணை நடத்தினர். இதில் முத்தூர் ந.கரையூர் பகுதியை சேர்ந்த ரவிசந்திரன்(வயது 55) என்பவர் லாட்டரி சீட்டுகளின் நம்பர்கள் கொண்ட 3 துண்டு சீட்டு டோக்கன்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து லாட்டரி டிக்கெட்டுகளுக்கான எண்கள் கொண்ட 3 துண்டு சீட்டு டோக்கன்களை பறிமுதல் செய்தனர்.

    • செப்டம்பர் 15 முதல் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும்
    • சிறப்பு முகாம் 5.8.2023 முதல் 16.08.2023 வரை நடைபெறவுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியம், பெரும்பாக்கம் ஊராட்சியில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின்கீழ், 2ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் பழனி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ், செப்டம்பர் 15 முதல் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்து, இவ்வாண்டிற்கு ரூ.7,000/- கோடி நிதிஒதுக்கீடு செய்துள்ளார். அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ், தகுதியான பயனாளிகளை தேர்வு செய்திடும் பொருட்டு விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்திட முடிவு செய்யப்பட்டது.

    முதல் கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24.7.2023 முதல் 4.8.2023 வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவு சிறப்பு முகாம் 5.8.2023 முதல் 16.08.2023 வரை நடைபெறவுள்ளது. இதில் 690 விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும். இம்முகாமில், 2,77,236 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும். எனவே, குடும்பத் அட்டைதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன் எண்ணில் குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட விவரம் மற்றும் ஆவணங்களோடு சிறப்பு முகாமில் கலந்துகொண்டு, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்திற்கான விண்ணப்பத்தினை பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார். இந்நிகழ்வில், விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர்வேல்முருகன், இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழழகன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • மண்டபத்தில் மகளிர் உரிமைத்தொகை டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.
    • ரேசன் கடைபொறுப்பாளர் சந்திரசேகர் குடும்ப தலைவிகளின் பெயர்களை பதிவு செய்தார்.

    மண்டபம்

    தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட உள்ளது.அதனையொட்டி கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் அனைத்து மாவட்டங்களுக்கும் கூடுதல் பதிவாளர் அளவில் கண்காணிப்பாளர்களை நியமித்துள்ளார். இதன் மூலம் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள், டோக்கன் வழங்குதல், சேமிப்பு கணக்கு இல்லாத குடும்ப தலைவிகளுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் புதிய கணக்குகள் தொடங்குதல் உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி 11-வது வார்டு சேது நகரில் 150 ரேசன் அட்டை தாரர்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள், டோக்கன் கவுன்சிலர்கள் முபாரக், முகமது மீரா சாகிப், சாதிக் பாட்சா ஆகியோர் முன்னிலையில் விநியோகம் செய்யப்பட்டது. ரேசன் கடைபொறுப்பாளர் சந்திரசேகர் குடும்ப தலைவிகளின் பெயர்களை பதிவு செய்தார். இந்த விண்ணப்ப படிவங்களை நிறைவு செய்து குடும்ப தலைவிகள் வார்டுகளில் நடக்கும் சிறப்பு முகாமின் போது அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    • டோக்கன் வழங்கும் பணி, முகாம் நடைபெறும் நாளுக்கு 4 நாட்கள் முன்பு தொடங்கும்.
    • காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி வரையும், 2-ம் கட்ட முகாம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது. நியாயவிலை கடை பணியாளர் ஒவ்வொரு நியாய விலை கடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வீட்டில் நேரடியாக வழங்குவர்.

    டோக்கன் வழங்கும் பணி, முகாம் நடைபெறும் நாளுக்கு 4 நாட்கள் முன்பு தொடங்கும். பொதுமக்கள் இந்த விண்ணப்பங்களை பெறுவதற்காக நியாயவிலை கடைக்கு வரத்தேவையில்லை. குடும்ப அட்டை இருக்கும் நியாய விலை கடைப்பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். முதல் மற்றும் 2-ம் கட்டத்தில் விண்ணப்பங்கள் பெறப்படும் கிராமங்கள் மற்றும் நகர பகுதிகளின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டவுடன், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும். விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறும். முகாம் நடைபெறும் குடியிருப்புகள், தெருக்கள், வார்டு மற்றும் அவற்றுக்கான நாட்கள் குறித்த விவரங்கள் நியாயவிலை கடைகளில் தகவல் பலகையாக வைக்கப்படும்.

    முதல்கட்டமாக மயிலாடுதுறை வருவாய் வட்டத்தில் ஆனந்ததாண்டவபுரம், அருவாப்பாடி, ஆத்தூர், பூதங்குடி உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலை கடை பகுதிகளிலும், சீர்காழி வருவாய் வட்டத்தில் ஆச்சாள்புரம், அகரபெருந்தோட்டம், அகரவட்டாரம், அளக்குடி உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலைக் கடை பகுதிகளிலும்,

    குத்தாலம் வருவாய் வட்டத்தில் ஆலங்குடி, அனந்தநல்லூர், அரிவேளூர், அசிக்காடு உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலை கடை பகுதிகளிலும், தரங்கம்பாடி வருவாய் வட்டத்தில் ஆக்கூர், ஆக்கூர் முக்கூட்டு, ஆனைக்கோயில், அனந்தமங்கலம் உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலைக்கடை பகுதிகளில் விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெற உள்ளது.

    2-ம் கட்டமாக மயிலாடுதுறை வருவாய் வட்டத்தில் அகரகீரங்குடி, ஆனைமேலகரம், அருண்மொழித்தேவன், சோழம்பேட்டை உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலை கடை பகுதிகளிலும், சீர்காழி வருவாய் வட்டத்தில் ஆச்சாள்புரம், ஆதமங்கலம், அகணி, அகரஎலத்தூர், ஆலங்காடு உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலை கடை பகுதிகளிலும், குத்தாலம் வருவாய் வட்டத்தில் கீழையூர், குத்தாலம், மாதிரிமங்கலம், மேக்கிரிமங்கலம், மேலையூர் உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலை கடை பகுதிகளிலும், தரங்கம்பாடி வருவாய் வட்டத்தில் அகராதனூர், அகரவல்லம், அரசூர், அரும்பாக்கம் உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலை கடை பகுதிகளிலும் 2-ம் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெற உள்ளது.

    மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட அனைத்து நியாய விலைக்கடை பகுதிகளிலும் 2-ம் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும். இது குறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் மாவட்ட கலெக்டரின் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண். 04364-

    222588. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த கோவில் அருகே இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
    • பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வாகன வரி வசூல் செய்யும் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவில் புகழ்பெற்றது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த கோவில் அருகே இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க குத்தகைக்கு விடப்பட்டு இருந்தது. இந்த குத்தகை காலம் முடிந்தும் சிலர் போலியாக டோக்கன் அச்சடித்து வாகனங்களை நிறுத்த பணம் வசூலித்து வந்தனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இந்நிலையில் பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வாகன வரி வசூல் செய்யும் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது போலி ரசீது மூலம் பணம் வாகனங்களை நிறுத்த வந்த பக்தர்களிடம் பணம் வசூலித்துக் கொண்டிருந்த தாராட்சி கிராமம் புதிய காலனியைச் சேர்ந்த சூர்யா(28), தாராட்சி கிராமம், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த நாகராஜ்(19) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ஏராளமான போலி வாகன வரி வசூல் செய்யும் டோக்கன் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அவர்களுடன் இருந்த சிலர் தப்பி ஓடி விட்டனர். மேலும் பிடிப்பட்ட இருவரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்தனர்.

    இது தொடர்பாக தப்பி ஓடியவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டோக்கன்கள் வினியோகிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது.
    • வருகிற 8-ம் தேதி வரை அந்தந்த ரேசன் கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகின்ற தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்திற்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சரக்கரை மற்றும் ரூ.1000 ரொக்கத்துடன் முழுக் கரும்பு ஒன்றினையும் சேர்த்து வழங்க தமிழக அரசால் ஆணையிட்டு உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 1-12-2022 தேதியில் புழக்கத்தில் உள்ள 7,00,505 குடும்ப அட்டைதரர்களுக்கும் 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை அந்தந்த ரேசன் கடைகள் மூலம் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ரூ.1000 ரொக்கத்துடன் முழு கரும்பு ஒன்றும் வழங்கப்பட உள்ளது.

    இதற்கான டோக்கன்கள் வினியோகிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. வருகிற 8-ம் தேதி வரை அந்தந்த ரேசன் கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் , தஞ்சாவூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 04362-245442 மற்றும் 04362-231336 ஆகிய தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தங்களது புகாரினை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×