search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைக்கிள் பேரணி"

    • வத்தலக்குண்டு போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
    • பேரணியில் 200 மாணவர்கள் பங்கேற்றனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு ரோட்டரி சங்கம் புதிய தலைமுறை, இந்திய மருத்துவ சங்கம் வத்தலக்குண்டு கிளை, வத்தலக்குண்டு போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

    ரோட்டரி சங்கத் தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் முருகேஷ் பாண்டியன், பொருளாளர் பிரகாஷ்ராஜ், ரோட்டரி நிர்வாகிகள் நஜ்முதீன், கிருஷ்ணமூர்த்தி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெய் சிங்ஆகியோர் முன்னிலை வகித்தனர். வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர்சிதம்பரம் பேரணியை ெதாடங்கி வைத்தார்.

    பேரணியில் 200 மாணவர்கள் பங்கேற்றனர். பேரணியில் செங்குளத்துப் பட்டியை சேர்ந்த 5 வயதுபள்ளி மாணவன் தங்கப்பாண்டி குட்டிசைக்கிளில் 10 கி.மீ. பயணித்தது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.

    • ‘லிட்டர் பிரி சென்னை’ என்ற தோற்றத்தில் மேயர் பிரியா கலந்து கொண்டார்.
    • வீ ஆர் தி சென்னை சைக்கிளிஸ்ட் குரூப் என்ற குழுவின் தலைவர் பெலிக்ஸ் ஜானுக்கும் இந்து குழும பிரதிநிதிகளுக்கும் பதக்கங்களை வழங்கினார்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டிட வளாகத்தில் ஆகஸ்ட் 22-ம் நாளன்று சென்னை தினக் கொண்டாட்டத்தின் ஆரம்பமாக முதலமைச்சர் புகைப்படக் கண்காட்சியினைத் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புகைப்பட கண்காட்சி, இசைக்கச்சேரி, கடற்கரையில் திரைப்படங்கள் காட்சி படுத்துதல், மாரத்தான், உணவுத் திருவிழா, பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், குதிரை வண்டி சவாரி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    அதன் ஒரு பகுதியாக, தூய்மையான சென்னை என்பதை வலியுறுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இன்று சென்னையின் நான்கு இடங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த மிதிவண்டிப் பயணம் நடந்தது. ஈ.சி.ஆர்.வி.ஜி.பி., கத்திப்பாரா அர் பன்ஸ்கொயர், அண்ணா நகர் டவர் பூங்கா, தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் ஆகிய இடங்களில் தொடங்கி, ரிப்பன் கட்டிட வளாகத்தில் நிறைவு பெற்றது.

    மிதிவண்டிப் பயணத்தில் கலந்து கொண்டவர்கள் இன்று உருவாக்கிய 'லிட்டர் பிரி சென்னை' என்ற தோற்றத்தில் மேயர் பிரியா கலந்து கொண்டார்.

    மிதிவண்டிப் பயணத்தில் அதிக நபர்களை பங்குபெற செய்த வீ ஆர் தி சென்னை சைக்கிளிஸ்ட் குரூப் என்ற குழுவின் தலைவர் பெலிக்ஸ் ஜானுக்கும் இந்து குழும பிரதிநிதிகளுக்கும் பதக்கங்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியினை முன்னிட்டு சிறப்பான இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    தூய்மையான சென்னை என்பதை வலியுறுத்தி நடை பெற்ற மிதிவண்டி பயணத்தில் பங்கேற்றவர்களையும், சென்னைதினக் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவரையும் மேயர் பாராட்டி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் இணை ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இந்து குழும நிர்வாகிகள், மிதி வண்டி பயணத்தில் பங்கேற்றவர்கள் கலந்து கொண்டனர்.

    • இயற்கை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் கொடைக்கானல் ரோட்டரி சங்கம் சார்பில் ஏரிச்சாலையில் நடைபெற்றது.
    • இயற்கை பாதுகாப்புக்கான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சைக்கிளில் ஏந்தியவாறு ஏரிச்சாலையில் உற்சாகமாக வலம் வந்தனர்.

    கொடைக்கானல்:

    உலக இயற்கை பாதுகாப்பு நாளையொட்டி இயற்கை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் கொடைக்கானல் ரோட்டரி சங்கம் சார்பில் ஏரிச்சாலையில் நடைபெற்றது.

    பேரணியை பல்கலைக்கழக திவாளர் ஷீலா, தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் கிளாரா தேன்மொழி, ரோட்டரி சங்க தலைவர் மதன்குமார், செயலாளர் அக்பர் ஷேட், முதன்மை விருந்தினர் டி.எஸ்.பி. மதுமதி ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இயற்கை பாதுகாப்புக்கான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சைக்கிளில் ஏந்தியவாறு ஏரிச்சாலையில் உற்சாகமாக வலம் வந்தனர்.

    • சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் மாரத்தான் நடத்தப்பட்டது.
    • சைக்கிள் மாரத்தான் முடிவில் அனைவருக்கும் பத க்கங்கள் வழங்கப்பட்டது.

    கடலூர்:

    என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுற்றுச்சூழல் துறை மற்றும் பீப்புள் சர்வீஸ் குரூப் தொண்டு மையம் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் விளைவுகளை எடுத்துகூறும் வகையிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தியும் விழிப்பு ணர்வு சைக்கிள் மாரத்தான் நடத்தப்பட்டது.

    இதனை என்.எல்.சி.இந்தியா நிறுவன செயல் இயக்குனர் கார்த்தி தொடங்கி வைத்தார். முதன்மை பொது மேலாளர் அன்பு செல்வன் பொது மேலாளர்கள் ராமலிங்கம் ,செந்தில்குமார் ,சுப்பி ரமணியம் மற்றும் துணை பொது மேலாளர் சீராள ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணியை பீப்பிள் சர்வீஸ் குரூப் நிறுவனர் தாமரைச்செல்வன் ஏற்பாடு செய்திருந்தார். விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. சுமார் 8 கிலோமீட்டர் இந்த விழிப்புணர்வு சைக்கிள் மாரத்தான் நடைபெற்றது. முடிவில் அனைவருக்கும் பத க்கங்கள் வழங்கப்பட்டது.

    • உலக சுகாதார தின சைக்கிள் பேரணி நடந்தது.
    • இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நேரு யுவகேந்திரா,இந்தியன் ரெட்கிராஸ் மற்றும் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பில் உலக சுகாதார தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. ஆரோக்கியத்தை வலியுறுத்தி சிலம்ப பயிற்சி மாணவர்கள் 50 பேர் சைக்கிள் பேரணியாக ஆயுதப்படை விளையாட்டு மைதானத்தில் இருந்து டி.பிளாக், அம்மா பூங்கா வழியாக வள்ளல் சீதக்காதி ஸ்டேடியம் வரை சென்றனர்.

    டாக்டர்.அருண்ராஜ், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சேர்மன் சுந்தரம், செயலாளர் ரமேஷ், பாலமுருகன், சிலம்ப மாஸ்டர் மேத்யு இம்மானுவேல், பயிற்சியாளர் திருமுருகன் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தனர். இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    சித்தம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார் .

    பல்லடம்:

    பல்லடம் ரெயின்போ ரோட்டரி சங்கம், சித்தம்பலம் ஊராட்சி நிர்வாகம் ஆகியவைசார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுகுறித்து வலியுறுத்தி திருச்செந்தூர் வரை சைக்கிள் பயணம் நிகழ்ச்சி துவக்க விழா நடைபெற்றது. சித்தம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார் .திமுக மேற்கு ஒன்றிய செய லாளர் கிருஷ்ணமூர்த்தி, ரெயின்போ ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ரோட்டரி செயலாளர் சுந்தர்ராஜன், அனைவரையும் வரவேற்றார். இந்த சைக்கிள் பயணத்தில், ராமஜெயம்(70) ,ரங்கசாமி (63) ,மகேஷ்(30) ,தரணி(19) ,ஆகிய 4 பேர் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் கிராமத்தில் இருந்து, திருச்செந்தூர் நோக்கி நேற்று புறப்பட்ட னர்.

    இவர்களில் ராமஜெயம் ஒரு சைக்கிளை ஓட்டிக் கொண்டு மற்றொரு சைக்கிளை பிடித்தபடி 2 சைக்கிள்களில் செல்கிறார். இவர்கள் சுமார் 350 கி.மீ. தூரம் பயணம் செய்து, நாளை 5ந்தேதி மாலை திருச்செந்தூர் சென்று அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பான வரவேற்பு
    • இந்த சைக்கிள் பயண குழுவினர் மொத்தம் 730 கிலோ மீட்டர் தூரத்தை 10 நாட்களில் கடந்து வந்து உள்ளனர்.

    கன்னியாகுமரி :

    தமிழ்நாடு காவல்துறை யில் பெண்கள் நியமிக்கப் பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி பொன் விழா கொண்டாட்டம் தொடங்கி உள்ளது.

    இதன் ஒரு பகுதியாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பெண் போலீசாரின் சைக்கிள் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 17-ந்தேதி சென்னையில் இருந்து பெண்போலீசாரின் சைக்கிள் பேரணி புறப்பட் டது.

    இந்த பேரணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஜி.பி. சைலேந்திரபாபு முன்னிலையில் தொடங்கி வைத்தார். இந்த சைக்கிள் பேரணியில் பெண் போலீ ஸ் சப்-இன்ஸ்பெக்டர் 110 பெண் போலீசார் இடம் பெற்றிருந்தனர்.

    விழுப்புரம், செங்கல் பட்டு, திருச்சி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், காவல்கிணறு, அஞ்சு கிராமம், விவேகானந்தபுரம் வழியாக நேற்று மாலை கன்னியாகுமரி கடற்கரை சாலையை பேரணி வந்த டைந்தது. இந்த சைக்கிள் பயண குழுவினர் மொத்தம் 730 கிலோ மீட்டர் தூரத்தை 10 நாட்களில் கடந்து வந்து உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை சாலையில் உள்ள காட்சி கோபுரம் அருகே சைக்கிள் பேரணியின் நிறைவு விழா நடந்தது. குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பூங்கொத்து கொடுத்து சங்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தார். அதைத்தொடர்ந்து சைக்கிள் பயணம் நிறைவு விழா கூட்டம் நடந்தது.

    போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி. ராஜா வரவேற்று பேசினார். இதில் சென்னைஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி. ராதிகா, சென்னை பெருநகர போலீஸ் இணை கமிஷனர் சாமுண்டீஸ்வரி, தமிழ்நாடு காவல்துறை 10-வது அணி கமாண்டர் மணிவண்ணன், 12-வது அணி கமாண்டர் கார்மேகனன், 9-வது அணி கமாண்டர் ஜேசு சந்திர போஸ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்..

    • அரசு மாதிரி ஆண்கள் மேல்நி லைப்பள்ளி போதைப் பொருள் தடுப்பு மன்றத்தின் சார்பில், சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரசார சைக்கிள் பேரணி மற்றும் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.
    • முன்னதாக, சாலை விதி மீறுதல், போதை பொருள்கள் உபயோகித்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மாணவர்களின் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில், அரசு மாதிரி ஆண்கள் மேல்நி லைப்பள்ளி போதைப் பொருள் தடுப்பு மன்றத்தின் சார்பில், சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரசார சைக்கிள் பேரணி மற்றும் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் ரவிசங்கர் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலைஞர்புகழ் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் குணாளன், கோபிநாத், தில்லையம்பலம், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வாழப்பாடி டி.எஸ்.பி ஹரிசங்கரி பேரணியை தொடங்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேருந்து நிலையம், தபால் நிலையம், அரசு மருத்துவமனை வரை சைக்கிளில் பேரணி

    யாக சென்று பொதுமக்களி டையே விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

    முன்னதாக, சாலை விதி மீறுதல், போதை பொருள்கள் உபயோகித்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மாணவர்களின் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில், வாழப்பாடி உதவி காவல் ஆய்வாளர்கள் கார்த்திக், சேட்டு, வீராங்கண்ணு, முகிலரசன், தலைமைக் காவலர் முருகன் மற்றும் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு

    களை, பள்ளி போதைப்பொ

    ருள் தடுப்பு மன்ற பொறுப்பா சிரியர் முனிரத்தினம், சாலை பாதுகாப்பு மன்ற

    பொறுப்பாசிரியர் சீனிவாசன், உடற்கல்வி இயக்குனர் குமார், ஆசிரியர்கள் பழனி முருகன், ராமமூர்த்தி, முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • 200 கிலோமீட்டர் தூரம் சென்றனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டில், குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. செங்கல்பட்டு பாலாறு லயன் சங்கம் சார்பில் சென்னையில் இருந்து திருவண்ணாமலை வரை 200 கிலோமீட்டர் தூரம் சென்னையில் இருந்து வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர், வழியாக திருவண்ணாமலை, வரை குழந்தைகள் புற்றுநோய் குறித்து சைக்கிள் பேரணி வந்தது.

    சேத்துப்பட்டு 4 முனை சந்திப்பில் சேத்துப்பட்டு எவர்கிரீன் லயன் சங்கம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் சேத்துப்பட்டு அரிமா சங்கத் தலைவர் ஜவகர், செயலாளர் நாசர்தீன், பொருளாளர் விஜயராகவன், உறுப்பினர்கள் வினோத், கிரிராஜன், கார்த்திகேயன், தங்கராஜ், வெங்கடேசன், பாபு, ஆரணி எவர்கிரீன் டயட் சங்க செங்கல்பட்டு பாலாறு அரிமா சங்க தலைவர் பாண்டியன், செயலாளர் வீரராகவன், பொருளாளர் தாமரைச்செல்வன், பொறுப்பாளர்கள், அம்சவல்லி, கௌதம், பெருமாள், உள்பட கலந்து கொண்டனர்.

    முன்னதாக குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். பின்னர் சைக்கிள் பேரணி தேவிகாபுரம் வழியாக போளூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்றது.

    • போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்/
    • பெண்களுக்கு எதிராக நடைபெறும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    கோவை,

    பெண்களுக்கு எதிராக நடைபெறும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கோவையில் இருந்து காத்மாண்டு வரை 7000 கிலோமீட்டர் தூரம் மோட்டார் சைக்கிள் பேரணியை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை மாநகரை பொறுத்தவரை சைபர் குற்றங்கள் நடப்பதற்கு முன்னதாகவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சைபர் குற்றங்கள் நடைபெற்றதற்கு பின்பு பண இழப்புகள் ஏற்பட்டாலும் அதனை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

    பல ஆயிரம் கிலோமீட்டர் அப்பாலுக்கு உள்ள நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றனர். சைபர் கிரைம் குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து வருகிறோம். பெண்களுக்கு எதிராக நடைபெறும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 6 இளைஞர்கள் இங்கிருந்து காத்மாண்டு வரை 7 ஆயிரம் கிலோமீட்டர் மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கி உள்ளனர். கல்லூரி மாணவ, மாணவிகள் எப்படி சமூக வலைதளங்களில் கவனமாக கையாள வேண்டும், எந்த மாதிரியான தகவல்களை பரிமாறக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    கடந்த சில நாட்களாக கிரைண்டர் மொபைல் ஆப்பை ஒரு சில நபர்கள் பதிவு செய்து அதனை பயன்படுத்தி அதன் மூலமாக பணம் பறித்து வருகிறார்கள். இது சம்பந்தமாக கோவை மாநகரில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவரை கைது செய்துள்ளோம்.

    இரண்டு வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்திற்கு 500 சைபர் கிரைம் புகார்கள் பதிவாகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு நெருங்குவதால் கோவை மாநகரில் 500 மீட்டருக்கு ஒரு தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். கோவை - அவிநாசி சாலையில் அதிவேக பயணத்தை தடுப்பதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 60-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்றும், நாளையும் நடக்கிறது
    • கார்த்திகேயன் எம்.எல்.ஏ.பேரணியை தொடங்கி வைத்தார்

    வேலூர்:

    உலக மண் தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகத்தின் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் டிசம்பர் மாதம் இன்றும், நாளையும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக வேலூரில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி வேலூர் கோட்டையிலிருந்து நேற்று தொடங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு வேலூர் ஈஷா மைய ஒருங்கிணைப்பாளர் வெங்கடசுப்பு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

    தன்னார்வலர்கள் மணிவண்ணன், சிவசங்கரன், உமா சந்திரன், சதீஷ், குணசீலன், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர் . சைக்கிள் பேரணி வேலூர் கோட்டையில் இருந்து கிரீன் சர்க்கிள் சென்று அங்கிருந்து அண்ணா சாலை வழியாக அண்ணா நகரில் உள்ள ஈஷா மையத்தை அடைந்தது.

    மண் வள பாதுகாப்பு குறித்து சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மண் காப்போம் என்ற சர்வதேச சுற்றுச்சூழல் இயக்கத்தை தொடங்கி உள்ளார்.

    மார்ச் மாதம் 21-ம் தேதி லண்டனில் இருந்து தனது மோட்டார்சைக்கிள் பயணத்தை தொடங்கிய சத்குரு இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், உள்ளிட்ட பல ஐரோப்ப நாடுகளுக்கு பயணித்துள்ளார்.

    சிவகங்கை அருகே உலக சைக்கிள் தின பேரணியை போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    சிவகங்கை

    சிவகங்கை அருகே இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் நேரு யுவ கேந்திரா சார்பில் இன்று 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா உலக சைக்கிள் தின பேரணி நடந்தது.

    கல்லல் ஒன்றியத்தில் உள்ள செவரக்கோட்டை விலக்கில் இந்த பேரணி தொடங்கியது.இதில்  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இளையோர் மன்றங்களை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.   

    ராஜேஸ்வரி வரவேற்றார். மாவட்ட இளையோர் அலுவலர் பிரவீன் குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்ததுடன் அதில் பங்கேற்றவர்களுக்கு   சான்றிதழ்களை வழங்கினார். 

    இதில் கல்லல் ஒன்றியகுழு தலைவர் சொர்ணம் அசோகன், காவல் ஆய்வாளர் பாஸ்கரன், மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் (ஒய்வு) ஜவகர், மாவட்ட சிறப்பு அலுவலர் (திறன் வளர்ச்சி அலகு) சுதர்சன், காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரி முனைவர் சித்ரா, ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

    இந்த பேரணி 7.50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மருதுபாண்டியர் கோட்டை அரண்மனை சிறுவயலில் நிறைவடைந்தது.
    ×