search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
    X

    குழந்தைகள் புற்றுநோய் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கிய போது எடுத்த படம்.

    புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

    • 200 கிலோமீட்டர் தூரம் சென்றனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டில், குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. செங்கல்பட்டு பாலாறு லயன் சங்கம் சார்பில் சென்னையில் இருந்து திருவண்ணாமலை வரை 200 கிலோமீட்டர் தூரம் சென்னையில் இருந்து வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர், வழியாக திருவண்ணாமலை, வரை குழந்தைகள் புற்றுநோய் குறித்து சைக்கிள் பேரணி வந்தது.

    சேத்துப்பட்டு 4 முனை சந்திப்பில் சேத்துப்பட்டு எவர்கிரீன் லயன் சங்கம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் சேத்துப்பட்டு அரிமா சங்கத் தலைவர் ஜவகர், செயலாளர் நாசர்தீன், பொருளாளர் விஜயராகவன், உறுப்பினர்கள் வினோத், கிரிராஜன், கார்த்திகேயன், தங்கராஜ், வெங்கடேசன், பாபு, ஆரணி எவர்கிரீன் டயட் சங்க செங்கல்பட்டு பாலாறு அரிமா சங்க தலைவர் பாண்டியன், செயலாளர் வீரராகவன், பொருளாளர் தாமரைச்செல்வன், பொறுப்பாளர்கள், அம்சவல்லி, கௌதம், பெருமாள், உள்பட கலந்து கொண்டனர்.

    முன்னதாக குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். பின்னர் சைக்கிள் பேரணி தேவிகாபுரம் வழியாக போளூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்றது.

    Next Story
    ×