வத்தலக்குண்டுவில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

வத்தலக்குண்டு போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. பேரணியில் 200 மாணவர்கள் பங்கேற்றனர்.
பேரணியை பேரூராட்சி தலைவர் சிதம்பரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியை பேரூராட்சி தலைவர் சிதம்பரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Published on

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு ரோட்டரி சங்கம் புதிய தலைமுறை, இந்திய மருத்துவ சங்கம் வத்தலக்குண்டு கிளை, வத்தலக்குண்டு போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

ரோட்டரி சங்கத் தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் முருகேஷ் பாண்டியன், பொருளாளர் பிரகாஷ்ராஜ், ரோட்டரி நிர்வாகிகள் நஜ்முதீன், கிருஷ்ணமூர்த்தி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெய் சிங்ஆகியோர் முன்னிலை வகித்தனர். வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர்சிதம்பரம் பேரணியை ெதாடங்கி வைத்தார்.

பேரணியில் 200 மாணவர்கள் பங்கேற்றனர். பேரணியில் செங்குளத்துப் பட்டியை சேர்ந்த 5 வயதுபள்ளி மாணவன் தங்கப்பாண்டி குட்டிசைக்கிளில் 10 கி.மீ. பயணித்தது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com