search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்பேத்கர் நினைவு தினம்"

    • இந்திய மண்ணில் மக்களைப் பிறப்பால் பிளவுபடுத்தி, சாதிப் பிரிவினையால் ஒடுக்கும் கொடுமைகளுக்கான மூல காரணங்களை எதிர்த்து புரட்சி செய்தவர்.
    • உண்மையான பிரிவினை எது என்பதை எடுத்துச்சொல்லி, சட்டத்தின் வழியாக மக்களைச் சமமாக்கப் போராடிய புத்துலக புத்தர்.

    சென்னை:

    அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    இந்திய மண்ணில் மக்களைப் பிறப்பால் பிளவுபடுத்தி, சாதிப் பிரிவினையால் ஒடுக்கும் கொடுமைகளுக்கான மூல காரணங்களை எதிர்த்து புரட்சி செய்தவர்.

    உண்மையான பிரிவினை எது என்பதை எடுத்துச்சொல்லி, சட்டத்தின் வழியாக மக்களைச் சமமாக்கப் போராடிய புத்துலக புத்தர்.

    அறிவுப் பேரொளி அம்பேத்கரைப் போற்றுவோம். எத்தகைய இடர்களும் சூழ்ச்சிகளும் வந்தாலும், சமத்துவத்தை நோக்கிச் சளைக்காமல் உழைக்கப் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் உறுதியேற்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை மக்கள் மிகவும் துயரத்தில் உள்ளனர்.
    • அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அனைத்திலும் தண்ணீர் நிற்கிறது.

    திண்டிவனம்:

    அம்பேத்கரின் நினைவுதினத்தை முன்னிட்டு பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ், திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட செயலாளர் ஜெயராஜ். நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:-

    சென்னையில் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னுடைய அனுதாபங்கள். இன்னும் ஒரு நாள் சென்னையில் மழை பெய்தால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு சென்னை பாதிக்கப்பட்டிருக்கும். சென்னை மக்கள் மிகவும் துயரத்தில் உள்ளனர். இது சம்பந்தமாக விரிவான அறிக்கை ஒன்றை நான் கொடுத்திருக்கிறேன்.

    அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அனைத்திலும் தண்ணீர் நிற்கிறது. செலவு செய்யப்பட்ட பணம் அனைத்தும் பாதாளத்தில் விடப்பட்டுள்ளதா? ஒன்றுமே தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×