search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MP vijay vasanth"

    • ஹோலி கிராஸ் கல்லூரியில் நடைபெற்ற இந்த முகாமில் தமிழகத்தை சேர்ந்த 34 நிறுவனங்கள் பங்கேற்றது.
    • 1500-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து கொண்ட இந்த முகாமில் 220 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

    கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் வசந்த் & கோ சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமை குமரி மாவட்ட தொகுதி எம்.பி விஜய் வசந்த் தொடங்கி வைத்து, பணிக்கு தேர்வானவர்களுக்கு உத்தரவு கடிதத்தை வழங்கினார்.

    இன்று காலை நடந்த முகாம் துவக்க நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. பிரின்ஸ், திரு. ராஜேஷ் குமார், கல்லூரி முதல்வர் அருட் சகோதரி மேரி ஹில்டா, துணை முதல்வர் அருட் சகோதரி லீமா ரோஸ், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் திரு. கே. டி. உதயம், திரு. பினுலால் சிங், திரு. நவீன் குமார் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

     இந்நிலையில், இதுகுறித்து விஜய் வசந்த் எம்.பி தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்வி பயின்று வேலை வாய்ப்பை எதிர்பார்த்து இருக்கும் இளைஞர்களுக்காக இன்று நாகர்கோவிலில் வசந்த் & கோ சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

    ஹோலி கிராஸ் கல்லூரியில் நடைபெற்ற இந்த முகாமில் தமிழகத்தை சேர்ந்த 34 நிறுவனங்கள் பங்கேற்றது. 1500-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து கொண்ட இந்த முகாமில் 220 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

    இதில் சிலருக்கு அந்த நிறுவனங்கள் சார்பாக இன்றே எனது கையால் வேலைக்கான உத்தரவை வழங்கினேன். மேலும் 520 பேர் இரண்டாவது கட்ட நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் குமரி மாவட்ட பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முயற்சிகள் பலன் அடைவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இது போல் இனியும் முகாம்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ×