என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம்: விஜய் வசந்த் எம். பி கலந்து கொண்டு பேச்சு
    X

    தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம்: விஜய் வசந்த் எம். பி கலந்து கொண்டு பேச்சு

    • இந்திய நாடு ஜனநாயக நாடு நமது ஓட்டு உரிமைக்காக போராடுகிறோம்.
    • பெங்களூரில் பாராளுமன்ற தொகுதியில் பல லட்சம் பேர் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்காந்தி எம்பி அவர்கள் வெளிகொண்டு வந்த பாஜக அரசின் வாக்கு திருட்டை கண்டித்து காங்கிரஸ் பேரியக்கம் நாடு முழுவதும் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தலின்படி வாக்காளர்களின் பெயர்கள் சேர்த்தல் மற்றும் நீக்கல் ஆகியவற்றில் இந்திய தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டு வாக்குத்திருட்டில் ஈடுபடுவதாக கூறி குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடம் சந்திப்பில் தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய பாஜக அரசையும் கண்டித்து கையெழுத்து இயக்கப் போராட்டம் நடைபெற்றது.


    போராட்டத்திற்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் டாக்டர். பினுலால் சிங் தலைமை தாங்கினார். போராட்டத்தில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கையெழுத்து இயக்க போராட்டத்தை தொடங்கி வைத்தார்.


    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்திய நாடு ஜனநாயக நாடு நமது ஓட்டு உரிமைக்காக போராடுகிறோம். மத்திய அரசை கண்டித்து இந்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்" மத்திய அரசு அவர்களது ஆட்சியை கொண்டு வருவதற்காக சூழ்ச்சிகள் மூலம் ஓட்டு திருத்தத்தை கொண்டு வந்து பல இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். யார் வெற்றி பெற வேண்டும் யார் தலைவராக வேண்டும் என மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும், ஆனால் முடிவை இந்த அரசு மாற்றுகிறது. இன்று இதனை தட்டிக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மட்டும் தான், இது குறித்து யாரும் பேசுவதில்லை, ராகுல் காந்தி அவர்கள் தான் பீகாரில் பல லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டது குறித்து குரல் கொடுத்தார்.

    பெங்களூரில் பாராளுமன்ற தொகுதியில் பல லட்சம் பேர் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளனர்.அதில் அப்பா, அம்மா பெயர்கள் போலியான பெயர்கள் மூலம் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய அறையில் 50, 60 பேர் வாக்களர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலை தமிழகத்திற்கு வந்து விடக்கூடாது, நாம் தமிழகத்தில் வலிமையாக இருப்பதால் அவர்களது வேலையினை இங்கே செய்ய முடியவில்லை, நாம் ஒவ்வொரு வாக்குகளையும் வாக்காளர் பட்டியல்களையும் சரி பார்க்க வேண்டும்.

    நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டுமென நினைக்கிறார்கள் நாம் விழிப்புணர்வுடன் இருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும், தமிழகத்தை காப்பாற்ற வேண்டும், நாம் எல்லா இடங்களிலும், எல்லா நகரங்களிலும் எல்லா கிராமங்களிலும் விழிப்புணர்வுடன் இருந்து இந்த வாக்கு திருட்டை பொது மக்களிடம் எடுத்துக் கூறவேண்டும், எங்கோ வெளியூரில் தான் வாக்கு திருட்டு நடந்துள்ளது.

    நமது ஊரில் நடக்கவில்லை என நினைக்கக் கூடாது. ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியினரும் நமது பூத்துகளை வலிமைப்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியல்களை சரி பார்க்க வேண்டும், வருகிற தேர்தல் முக்கியமான தேர்தல் நாம் வெற்றிபெற விழிப்புடன் செயல்பட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

    கையெழுத்து இயக்க போராட்டத்தில் அப்பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் பொது மக்களிடம் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டது.

    போராட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. போராட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    மேலும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்சம் செலவில் கொட்டாரத்தில் சமுதாய நலக் கூடம் திறக்கப்பட்டது.


    கொட்டாரம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக் கூடத்தை விஜய் வசந்த் எம்.பி. இன்று திறந்து வைத்தார்.


    இந்நிகழ்ச்சிக்கு கொட்டாரம் பேரூராட்சி தலைவர் செல்வகனி தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு, அகஸ்தீஸ்வரம் வட்டார காங்கிரஸ் தலைவர் சாம் சுரேஷ்குமார், கொட்டாரம் பேரூர் காங்கிரஸ் தலைவர் எஸ்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமுதாய நலக்கூட கட்டடத்தை விஜய் வசந்த் எம்.பி., ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    Next Story
    ×