search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "railway bridge"

    • செல்வ விநாயகர் புரத்திலிருந்து மேலப்பாவூர் செல்லும் பிரதான சாலையை அடைய மக்கள் ரெயில்வே தரை பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.
    • மழை நீர் முழுமையாக வடியாத வரையில் அந்த ரெயில்வே தரை பாலத்தை பயன்படுத்த வேண்டாம்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்வ விநாயகர் புரத்திலிருந்து மேலப்பாவூர் செல்லும் பிரதான சாலையை அடைய அப்பகுதி மக்கள் அருகில் இருக்கும் ரெயில்வே தரை பாலத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக ரெயில்வே தரைப்பாலம் முழுமையாக மழை நீரால் நிரம்பி காணப்படுகிறது.

    எனவே அச்சாலையை பயன்படுத்தி வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் யாரும் மழை நீர் முழுமையாக வடியாத வரையில் அந்த ரெயில்வே தரை பால வழியினை பயன்படுத்த வேண்டாம் என போலீசார் தரப்பில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    • தூத்துக்குடி மாநகராட்சியின் கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.
    • ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மாநகராட்சி இடங்களை கண்டறிந்து பாதுகாக்கவும் தொழில்நுட்ப அலுவலர்கள் நியமனம் செய்தல், போல்பேட்டை 60 அடி சாலையில் 49 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியின் கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.

    ஆணையாளர் சாருஸ்ரீ, துணை மேயர்ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:-

    தூத்துக்குடி சிவந்தாகுளத்தில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வருவதற்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி இரண்டு வேன்களை வழங்கியுள்ளது. அதனை இயக்குவதற்கு 2 ஓட்டுநர்களை நகர்புற வாழ்வாதார மையம் மூலம் பணியமர்த்துதல். அதே திட்டத்தில் தேவைப்படும் பிளம்பர் பணியிடத்தை நிரப்புதல் ஆகிய பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.

    புதிய கட்டுமானப் பணி இடங்களுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு செய்தல், மாநகராட்சி வழக்கறிஞர் நியமனம் செய்தல், மாநகர பகுதிகளில் குடிநீர் திட்ட பணி மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை மற்றும் சேதமடைந்த சாலைகளை தமிழ்நாடு சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம் 2022-2023கீழ் ரூ.14 கோடியே 15 லட்சத்தில் மேற்கொள்ள ரூ. 13 கோடியே 29 லட்சத்தில் தொழில்நுட்ப அனுமதி அளித்தல். மாநகராட்சி கடைகளுக்கு ஒப்பந்ததாரர் தேர்வு செய்தல்,

    தூத்துக்குடி நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக 5-8-2008 அன்று தரம் உயர்த்தப்பட்ட போது அருகில் இருந்த ரூரல், சங்கரபேரி,மீளவிட்டான், முத்தையாபுரம் மற்றும் அத்திமரப்பட்டி ஆகிய 5 பஞ்சாயத்துகள் சேர்த்து 60 வார்டுகள் உள்ளடக்கியதாகும். மாநகரட்சிக்கான அடிப்படை பணிகளுக்குத் தேவையான பணியாளர்கள் அரசிடம் இருந்து அனுமதி அளிக்கப்படவில்லை.

    எனவே நிர்வாக அனுமதியின்படி நகர்புற வாழ்வாதார மையம மூலம் தினக்கூலி அடிப்படையில்,துப்புரவு பணியாளர்கள் பள்ளி கழிவறை பராமரிப்பு,தூய்மைப் பணியாளர்கள்,வாகன ஓட்டுனர்கள்,டெங்கு ஒழிப்பு பணியாளர்கள்,சூப்பர்வைசர்கள்,கணினி இயக்குபவர்கள் என 1100 தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். தூத்துக்குடி மீளவிட்டான் ெரயில் நிலையத்திற்கு இடையே சுரங்கப்பாதை அமைப்பதற்கு பதிலாக ெரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளஅமைச்சர் கீதாஜீவன் வழங்கிய கடித அறிவுறுத்தலின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மாநகராட்சி இடங்களை கண்டறிந்து பாதுகாக்கவும் தொழில்நுட்ப அலுவலர்கள் நியமனம் செய்தல், போல்பேட்டை 60 அடி சாலையில் 49 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும்.

    மாநகராட்சி மைய அலுவலகம், மண்டலங்கள் மற்றும் பூங்காக்களில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றுப வர்களுக்கு ஊதியம் வழங்க ஒப்புதல் அளித்தல் மற்றும் நிர்வாக பணிகளுக்கான அனுமதி அளித்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரெங்கச்சாமி, விஜயகுமார், சுயம்பு, பச்சி ராஜ், ராஜதுரை, சந்தி ரபோஸ் உட்பட அனைத்து கவுன்சிலர்களும், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் ரூபன் சுரேஷ், பொன்னையா, டாக்டர் அருண்குமார், சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன் உட்பட அதிகாரிகள் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமி சுடலைமணி, மந்திரமூர்த்தி, பத்மாவதி, ஜெயராணி, ஜெயக்குமார் ஆகிய 5 அ.தி.மு.க. உறுப்பினர்களும் மின்கட்டண உயர்வுக்கு வெளிநடப்பு செய்தனர்.

    • கரூர் சேலம் இடையே, புதிய ெரயில்வே பாதை அமைக்கும் போது, மண்மங்கலம் - வாங்கல் இடையே வாகனங்கள் செல்ல வசதியாக, மாரிக்கவுண்டன் பாளையத்தில் பாலம் கட்டப்பட்டது.
    • ெரயில்வே பாலம் அமைக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆகியும், மின் விளக்குகள் அமைக்கப் படவில்லை.

    கரூர் :

    கரூர் சேலம் இடையே, புதிய ெரயில்வே பாதை அமைக்கும் போது, மண்மங்கலம் - வாங்கல் இடையே வாகனங்கள் செல்ல வசதியாக, மாரிக்கவுண்டன் பாளையத்தில் பாலம் கட்டப்பட்டது.

    இந்த பாலத்தின் வழியாக வேலாயுதம்பாளையம், மண்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள், வாங்கல், நாமக்கல் மாவட்டம், மோகனூர், திருச்சி மாவட்டம், காட்டுப்புத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    ஆனால், ெரயில்வே பாலம் அமைக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆகியும், மின் விளக்குகள் அமைக்கப் படவில்லை. இதனால், இரவு நேரத்தில் இப்பாலம் இருளில் மூழ்கி கிடப்பதால் பொதுமக்கள், இருசக் கர வாகன ஓட்டிகள் இப்பாலத்தை கடந்து செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர்.

    எனவே, மாரிக்கவுண்டன்பாளையம் ெரயில்வே பாலத்தில், மின் விளக்குகள் அமைக்கபடுமா என பொது மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    மதுரையில் இருந்து பரமக்குடி செல்லும் நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் ரெயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதியில் தற்போது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு அந்த வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.
    திருப்புவனம்:

    மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்டமாக மதுரை ரிங் ரோட்டில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் தரை வழியாக சாலைகள் அமைக்கும் பணி சில பகுதிகளில் நிறைவு பெற்றுள்ளது. ஆனால் இந்த சாலையில் ரெயில்வே இணைப்பு சாலை பல இடங்களில் வருவதால் அந்த இடங்களில் மட்டும் உயர் மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றன. அதில் ஒரு சில இடங்களில் மட்டும் இந்த பணிகள் தாமதமாக நடந்து வந்தன.

    இந்த உயர் மட்ட மேம் பாலம் கட்டும் போது இணைப்பு சாலையும் அமைக்கப்பட்டன. சில இடங்களில் இணைப்புச் சாலை வழியாகத்தான் நகருக்குள் செல்ல முடியும். உதாரணமாக திருப்புவனத்தில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பாலத்தின் வலதுபுறம் திருப்புவனம் நகருக்குள் செல்லும் இணைப்பு சாலை செல்கிறது. இந்த சாலை மூலம் மதுரையில் இருந்து வரும் நகர் மற்றும் புறநகர் பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் திருப்புவனத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன.

    இதேபோல் திருப்புவனத்தில் இருந்து மதுரை நோக்கி செல்லும் அனைத்து பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் இந்த உயர் மட்ட மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக வந்து தென்புறத்தில் அமைக்கப்பட்ட இணைப்பு சாலை வழியாக சென்று வருகிறது. திருப்பு வனம், ரெயில்வே மேம்பாலம் பணி நிறைவு பெற தாமதமானதால் பரமக்குடி, மானாமதுரை வழியாக மதுரை செல்லும் அனைத்து வாகனங்களும் நான்கு வழிச்சாலை வழியாக வந்து திருப்புவனம், புல்வாய்க்கரை சந்திப்பில் திரும்பி ரெயில்வே கேட் வழியாக திருப்புவனம் நகருக்குள் சென்று அதன் பின்னர் மதுரைக்கு செல்கின்றன.

    இதனால் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது மணலூரில் கட்டப்பட்ட மேம்பாலம் போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டதால் பயண நேரம் குறைந்துள்ளது. மேலும் திருப்புவனம் மேம்பாலத்தில் தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் மேம்பாலத்தின் ஒருபகுதி போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டதால், மதுரையில் இருந்து மானாமதுரை, பரமக்குடி வழியாக சென்று வரும் அனைத்து வாகனங்களும் திருப்புவனம் மேம்பாலம் வழியாக ஊருக்குள் வராமல் நான்கு வழிச்சாலையில் சென்று வருகின்றன.

    மேலும் இடைநில்லா பஸ்கள் திருப்புவனம் நகருக்குள் செல்லாததால், பயண நேரம் குறைவாகவும், போக்குவரத்து பாதிப்பு இல்லாமலும் உள்ளது. இதனால் திருப்புவனம் நகருக்குள் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் சிறிது குறைந்துள்ளது.
    பாம்பனில் புதிய ரெயில்வே தூக்குப்பாலம் கட்டப்படும் எனவும் இந்த பணி ஒரு வருடத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரெயில்வே கட்டுமான பிரிவு செயல் இயக்குனர் தெரிவித்தார். #PambanBridge #Ramanathapuram
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் தீவை இணைப்பதில் பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த பாலம் 100 ஆண்டுகள் பழமையான பாலமாகும். பாலத்தின் எடை அதிகமாக உள்ளதால், கப்பல்கள் தூக்குப் பாலத்தை கடக்க வரும் போது பாலத்தை திறந்து மூட முடியாமல் ரெயில்வே பணியாளர்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனால் இந்த ரெயில்வே தூக்குப் பாலத்தை அகற்றிவிட்டு மின் சக்தி மூலம் திறந்து மூடும் வகையில் புதிய தூக்குப்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் பாம்பன் கடலில் புதிய ரெயில்வே தூக்குப்பாலம் கட்டுவது குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று ரெயில்வே கட்டுமான பிரிவு பொது மேலாளர் எம்.பி.சிங் பாம்பன் ரெயில் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து மோட்டார் டிராலி மூலம் ரெயில் தூக்குப் பாலத்தை ஆய்வு செய்தார். அவருடன் முதன்மை திட்ட மேலாளர் ஜி.கே.ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனர். அவர்கள் ரெயில்வே தூக்குப்பாலத்தின் மைய பகுதியில் உள்ள இணைப்பு மற்றும் மேல் பகுதிக்கு சென்று முழுமையாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஆய்விற்கு பின்பு ரெயில்வே கட்டுமான பிரிவு செயல் இயக்குனர் எம்.பி.சிங் நிருபர்களிடம் கூறியதாவது:- பாலத்தின் மைய பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தை மட்டும் அகற்றிவிட்டு புதிய தூக்குப்பாலம் அமைக்க முதலில் திட்டமிடப்பட்டது. இதே தூண்களில் புதிய தூக்குப் பாலம் கட்டி முடிக்க 10 மாதங்களாகும். அதுவரை ரெயில் போக்குவரத்தை நிறுத்த முடியாது. மேலும் பழமையான பாலம் என்பதால், இதை மாற்றி அமைக்க முடியாது.

    பாம்பன் கடலில் தற்போது உள்ள ரெயில் பாலம் அருகிலேயே வடக்கு பகுதியில் புதிய தூக்குப் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பாம்பன் பகுதியில் இருந்து மைய பகுதி வரையிலும் பணிகளை தொடங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்தவுடன் மண்டபம் பகுதியில் இருந்து மைய பகுதி வரையிலும் 2-ம் கட்ட பணிகள் நடைபெறும். இவை நடைபெறும் போதே புதிய ரெயில் பாலத்தின் மைய பகுதியில் ஒரே இணைப்பில் மின் மோட்டார் மூலம் திறந்து மூடும் வகையில் புதிய தூக்குப்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. புதிய ரெயில்வே தூக்குப்பாலப்பணியை ஒரு வருடத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். புதிய பாலம் கட்டி முடித்த பின்பு தான் அருகில் உள்ள பழைய பாலத்தை அகற்றுவது குறித்து முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 50ஆயிரம் கனஅடி நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ரெயில்வே பாலத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
    திருச்சி:

    கர்நாடகத்தில் இருந்து மேட்டூர் அணைக்கு வினாடிக்கு சுமார் 2 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது.

    முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் சுமார் 65 ஆயிரம் கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கொள்ளிடத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை சமாளிக்க முடியாமல் பழைய இரும்பு பாலத்தை தாங்கி நின்ற 2 தூண்களில் விரிசல் ஏற்பட்டது. அந்த தூண்கள் ஆற்றுக்குள் இறங்கியதால் பாலம் இடிந்து விழுந்தது. பாலத்தின் இடிந்த பகுதிகளை தண்ணீர் அடித்து சென்றுவிட்டது.

    இடிந்து விழுந்த பாலத்தின் அருகிலேயே கொள்ளிடம் ஆற்றில் ஏற்கனவே கட்டப்பட்ட புதிய பாலம் பயன்பாட்டில் இருப்பதால் வாகன போக்குவரத்துக்கோ, பொது மக்களுக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை.

    திருச்சியை பொறுத்தவரை காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் அமைக்கப்பட்டுள்ள ரெயில்வே பாலங்களின் வழியாகத்தான் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    திருச்சி-சென்னை ரெயில் மார்க்கத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே இரண்டு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் ஒரு பாலம் மிகவும் பழமையானதாகும். இன்னொரு பாலம் இரு வழிப்பாதை அமைக்கும் பணியின்போது கட்டப்பட்ட புதிய பாலமாகும்.

    கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதாலும், ஏற்கனவே வாகனங்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு பாலத்தின் தூண்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்து இருப்பதாலும் ரெயில்வே அதிகாரிகள் உஷார் அடைந்துள்ளனர். இதற்காக கொள்ளிடம் ரெயில்வே பாலங்களின் இரு பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் பணியாளர்களை நியமித்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் இந்த பாலங்களின் வழியாக செல்லும் ரெயில்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க தண்டவாளம் தகுதியாக உள்ளதா? என்பதை அறிவதற்காக நேற்று ஆய்வு பணிகள் நடைபெற்றது. இதற்காக கொண்டு வரப்பட்ட ராட்சத எந்திரத்தின் உதவியுடன் நேற்று மாலை கொள்ளிடத்தின் இரண்டு ரெயில்வே பாலங்களிலும் பொறியியல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    வெள்ளப்பெருக்கினால் ரெயில்வே பாலத்திற்கு எந்தவித ஆபத்தும் இல்லை. தொடர்ந்து இதுபோன்ற ஆய்வு காவிரி பாலத்திலும் நடைபெறும் என ரெயில்வே அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
    ×