பாவூர்சத்திரம் அருகே கனமழையால் ரெயில்வே தரைப்பாலம் மூழ்கியது

செல்வ விநாயகர் புரத்திலிருந்து மேலப்பாவூர் செல்லும் பிரதான சாலையை அடைய மக்கள் ரெயில்வே தரை பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.மழை நீர் முழுமையாக வடியாத வரையில் அந்த ரெயில்வே தரை பாலத்தை பயன்படுத்த வேண்டாம்.
கனமழையால் தரைப்பாலம் மூழ்கி இருப்பதை படத்தில் காணலாம்
கனமழையால் தரைப்பாலம் மூழ்கி இருப்பதை படத்தில் காணலாம்
Published on

தென்காசி:

பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்வ விநாயகர் புரத்திலிருந்து மேலப்பாவூர் செல்லும் பிரதான சாலையை அடைய அப்பகுதி மக்கள் அருகில் இருக்கும் ரெயில்வே தரை பாலத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக ரெயில்வே தரைப்பாலம் முழுமையாக மழை நீரால் நிரம்பி காணப்படுகிறது.

எனவே அச்சாலையை பயன்படுத்தி வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் யாரும் மழை நீர் முழுமையாக வடியாத வரையில் அந்த ரெயில்வே தரை பால வழியினை பயன்படுத்த வேண்டாம் என போலீசார் தரப்பில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com