கரூர் மாரிக்கவுண்டன்பாளையம் ரெயில்வே பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா - பொது மக்கள் எதிர்பார்ப்பு

கரூர் சேலம் இடையே, புதிய ெரயில்வே பாதை அமைக்கும் போது, மண்மங்கலம் - வாங்கல் இடையே வாகனங்கள் செல்ல வசதியாக, மாரிக்கவுண்டன் பாளையத்தில் பாலம் கட்டப்பட்டது. ெரயில்வே பாலம் அமைக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆகியும், மின் விளக்குகள் அமைக்கப் படவில்லை.
கரூர் மாரிக்கவுண்டன்பாளையம் ரெயில்வே பாலத்தில்  மின் விளக்குகள் அமைக்கப்படுமா - பொது மக்கள் எதிர்பார்ப்பு
Published on

கரூர் :

கரூர் சேலம் இடையே, புதிய ெரயில்வே பாதை அமைக்கும் போது, மண்மங்கலம் - வாங்கல் இடையே வாகனங்கள் செல்ல வசதியாக, மாரிக்கவுண்டன் பாளையத்தில் பாலம் கட்டப்பட்டது.

இந்த பாலத்தின் வழியாக வேலாயுதம்பாளையம், மண்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள், வாங்கல், நாமக்கல் மாவட்டம், மோகனூர், திருச்சி மாவட்டம், காட்டுப்புத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

ஆனால், ெரயில்வே பாலம் அமைக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆகியும், மின் விளக்குகள் அமைக்கப் படவில்லை. இதனால், இரவு நேரத்தில் இப்பாலம் இருளில் மூழ்கி கிடப்பதால் பொதுமக்கள், இருசக் கர வாகன ஓட்டிகள் இப்பாலத்தை கடந்து செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர்.

எனவே, மாரிக்கவுண்டன்பாளையம் ெரயில்வே பாலத்தில், மின் விளக்குகள் அமைக்கபடுமா என பொது மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com