என் மலர்
நீங்கள் தேடியது "extramarital affair"
- பெண்ணை கவர்ந்ததாக திருமணமான ஆணின் மீது வழக்குத் தொடரப்பட்டது.
- ஆணுக்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
திருமணமான ஆண் மற்றும் பெண் தங்கள் திருமணத்தை மீறி விருப்பத்துடன் உடலுறவு வைத்துக்கொள்வது குற்றமல்ல என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருமணமான பெண்ணை கவர்ந்ததாக திருமணமான ஆண் ஒருவருக்கு எதிரான வழக்கு அண்மையில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பிபாஸ் ரஞ்சன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய அவர், "ஆரம்பத்திலிருந்தே சம்மதத்துடன் கூடிய இரண்டு திருமணமான ஆண் - பெண் இடையேயான உடல் ரீதியான உறவு, வாக்குறுதியின் பேரில் ஒருவரை ஏமாற்றுவதற்குச் சமமாகாது.
அத்தகைய உறவு பரஸ்பர ஈர்ப்பு காரணமாக ஒப்புதலுடன் உருவானது என்ற அடிப்படையில் கருதப்படும்" என்று தெரிவித்தார். எனவே குற்றம் சாட்டப்பட்ட திருமணமான ஆணுக்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
- லோக்நாத் சிங்கின் மனைவி மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
- திருமணத்தை மீறிய உறவு காரணமாக கணவரை கொன்றதாக மனைவி வாக்குமூலம்
கர்நாடகாவில் மாமியாருடன் சேர்ந்து கணவரின் கழுத்தை அறுத்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியாயி ஏற்படுத்தியுள்ளது.
37 வயதான லோக்நாத் சிங் பெங்களூரு நகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், பெங்களூரில் உள்ள சிக்கபனாவரா பகுதியில் இருந்த ஒரு காரில் லோக்நாத் சிங்கின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த கொலை தொடர்பாக லோக்நாத் சிங்கின் மனைவி மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர். லோக்நாத் சிங்கின் மனைவி, மாமியார் ஆகியோர் அவரது உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து மயங்கிய பிறகு அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
திருமணத்தை மீறிய உறவு, சட்டவிரோத வணிக நடவடிக்கைகளில் லோக்நாத் சிங் ஈடுபட்டு வந்ததால் அவரை கொன்றதாக மனைவி வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- ஷில்பி கடந்த 3 ஆண்டுகளாக பிரதீப் என்பவருடன் திருமணம் மீறிய உறவில் இருந்துள்ளார்.
- கணவனை பிரிந்து தன்னுடன் வந்துவிடுமாறு ஷில்பியை பிரதீப் கட்டாயப்படுத்தியுள்ளான்.
கணவனை பிரிந்து தன்னுடன் வர மறுத்த பெண்ணை அவளது 4 வயது மகனின் கண்முன்னே கொடூரமாக கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் சிஜர்சி கிராமத்தில் ஷில்பி என்ற பெண் தனது கணவர் அஜய் மற்றும் தனது 4 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார். ஷில்பி கடந்த 3 ஆண்டுகளாக பிரதீப் என்பவருடன் திருமணம் மீறிய உறவில் இருந்துள்ளார்.
நீண்ட நாட்களாக அவளது கணவனை பிரிந்து தன்னுடன் வந்துவிடுமாறு ஷில்பியை பிரதீப் கட்டாயப்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நவம்பர் 11ம் தேதி ஷில்பியின் கணவர் வேலைக்கு சென்ற பிறகு அவளது வீட்டிற்கு பிரதீப் சென்றுள்ளார். அப்போது அவளது கணவன் மற்றும் மகனை விட்டுவிட்டு தன்னுடன் வந்து விடுமாறு பிரதீப் மீண்டும் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு ஷில்பி சம்ம்மதிக்கவில்லை. இதனையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த பிரதீப் ஷில்பியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
ஷில்பியை பிரதீப் கொலை செய்ததை நேரில் பார்த்த அவளது 4 வயது மகன் நடந்த சம்பவம் முழுவதையும் போலீசாரிடம் கூறினான். இதனையடுத்து பிரதீப்பை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அட, பாவி மனுஷா... உன்னை நம்பிதானே என் சாதி சனத்தையெல்லாம் உதறி விட்டு உன்கூட வந்தேன்..!
எனக்கு துரோகம் பண்ணிட்டியே? அவளும் என்னை மாதிரி ஒரு பெண் தானே!
ஏன் கத்துறே? ஊரு உலகத்துல நடக்காத தப்பையா செய்து விட்டேன்? போ... போய் வேலையை பார்...!
ஆமய்யா... ஏன் சொல்ல மாட்டே? நீயே கதின்னு உல் காலடியில் கிடக்கிறேன் பார்! நீ இதுவும் செய்வே! இதுக்கு மேலேயும் செய்வே! உன்னை இப்படியே விட்டால் சரிப்பட்டு வர மாட்டாய்! போலீசுல சொல்லி முட்டிக்கு முட்டி தட்டினால் அவ வீட்டுக்கு போக மாட்டாய்...! இப்ப பாரு!
அடியேய்.... எங்க... போலீசுக்கா? சுப்ரீம் கோர்ட்டுக்கு போனால் கூட ஒண்ணும் செய்ய முடியாதுடி! உள்ளதை சாப்பிட்டு கிட்டு ஒழுங்கா இரு....!
- இது கற்பனையில் எழுதப்பட்ட வசனம் அல்ல. நிஜமாகவே சென்னை நெசப்பாக்கம் பாரதி நகரில் நடந்தது.
ஜான்பால் பிராங்கிளின் (26) அந்த பகுதியில் பூங்கா காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பலதா (24).
இருவரும் காதலித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். ஒரு வயதில் குழந்தையும் உள்ளது.
நல்ல காதல் பூர்த்தி ஆனதும் கள்ளக்காதலுக்கு பிராங்கிளின் வலைவீச வலையில் சிக்கி இருக்கிறார் அதே பூங்காவில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்த பெண்.
கள்ளக்காதலியே தஞ்சம் என்று அந்த பெண் வீட்டிலேயே இருந்துள்ளார். கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்படவே புஷ்பலதா கண்காணிக்க தொடங்கி இருக்கிறார்.
அப்போது கணவரின் கள்ளத்தொடர்பை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இருந்தாலும் கணவரிடம் கேட்க முடியாமல் தவித்து இருக்கிறார்.
கள்ளக்காதலியுடன் உறவாடி விட்டு வந்திருப்பதை அறிந்ததும் புஷ்பலதா ஆத்திரத்தில் பொங்கி எழுந்திருக்கிறார். அப்போது அவர்களுக்குள் நடந்த வாக்குவாதம்தான் மேலே குறிப்பிட்டு இருப்பது.
வாக்குவாதம் முடிந்ததும் கோபத்தில் பிராங்கிளின் வீட்டை விட்டு வெளியே சென்று இருக்கிறார்.
அவரது கோபத்தை கள்ளக்காதலியின் மோகம் கட்டுப்படுத்தி இருக்கும். ஆனால் எந்த தவறும் செய்யாத புஷ்பலதாவின் ஆத்திரத்தை எது கட்டுப்படுத்தும்?
கணவரிடமும் நியாயம் கிடைக்காது. கோர்ட்டுக்கு போனால் கூட நீதி கிடைக்காது என்றதும் புஷ்பலதாவுக்கு வாழ்க்கை வெறுத்தது. மின் விசிறியில் தூக்கு போட்டு தன் உயிரையே முடித்துக் கொண்டார்.
வீடு திரும்பிய பிராங்கிளின் குழந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்ததும் மனைவியை தேடி இருக்கிறார். வெற்றுடலாய் மின் விசிறியில் புஷ்பலதா தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

சட்டம் வேறு! நடைமுறை வாழ்க்கை வேறு! நடைமுறைக்கு ஏற்ற வகையில் சட்டம் வரலாம். சட்டத்துக்கு ஏற்ற வகையில் நடைமுறை வாழ்க்கையை மாற்ற இயலுமா?
பிராங்கிளினும் விரும்பினார். கள்ளக்காதலியும் விரும்பினார். இருவரது சம்மதத்துடன் தகாத உறவும் நல்ல உறவாகி விட்டது.
அதற்காக புஷ்பலதாவும் ‘நீயும், நானும்’ என்பதுதான் நமது சட்டம். நீ ஒருத்தியை தேடிச் சென்றிருக்கிறாய். நானும் ஒருவனை தேடிக் கொள்கிறேன் என்று செல்வாரா? அவர் இந்த மண்ணின் கலாச்சாரத்தின் நடமாடும் அடையாளம் அல்லவா? தனக்கொரு கேடு என்றால் தன்னைத்தான் அழித்துக் கொள்வாள். அதைத்தான் செய்து இருக்கிறார்.
சரி, இனி புஷ்பலதாவின் சாவுக்கு காரணமாகி விட்டார் என்ற சட்டப்பிரிவின் மூலம் பிராங்கிளின் தண்டனைக்கு உள்ளாகலாம்.
எந்த தவறும் செய்யாத அவர்களது குழந்தையும் தண்டிக்கப்பட்டுள்ளதே! அதற்கு யார் பதில் சொல்வது?
யோசிக்காமல் எடுக்கும் எந்த முடிவும் மிகப்பெரிய அழிவுக்கு காரணமாகி விடலாம். பாண்டிய மன்னன் எடுத்த தவறான முடிவு மதுரையின் அழிவுக்கு வழி வகுத்ததல்லவா! #AdulteryVerdict #ExtramaritalAffair






