கணவனை பிரிந்து வரமறுத்த பெண்ணை, மகனின் கண்முன்னே கொடூரமாக கொலை செய்த கள்ளக்காதலன்

ஷில்பி கடந்த 3 ஆண்டுகளாக பிரதீப் என்பவருடன் திருமணம் மீறிய உறவில் இருந்துள்ளார்.கணவனை பிரிந்து தன்னுடன் வந்துவிடுமாறு ஷில்பியை பிரதீப் கட்டாயப்படுத்தியுள்ளான்.
கணவனை பிரிந்து வரமறுத்த பெண்ணை, மகனின் கண்முன்னே கொடூரமாக கொலை செய்த கள்ளக்காதலன்
Published on

கணவனை பிரிந்து தன்னுடன் வர மறுத்த பெண்ணை அவளது 4 வயது மகனின் கண்முன்னே கொடூரமாக கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் சிஜர்சி கிராமத்தில் ஷில்பி என்ற பெண் தனது கணவர் அஜய் மற்றும் தனது 4 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார். ஷில்பி கடந்த 3 ஆண்டுகளாக பிரதீப் என்பவருடன் திருமணம் மீறிய உறவில் இருந்துள்ளார்.

நீண்ட நாட்களாக அவளது கணவனை பிரிந்து தன்னுடன் வந்துவிடுமாறு ஷில்பியை பிரதீப் கட்டாயப்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நவம்பர் 11ம் தேதி ஷில்பியின் கணவர் வேலைக்கு சென்ற பிறகு அவளது வீட்டிற்கு பிரதீப் சென்றுள்ளார். அப்போது அவளது கணவன் மற்றும் மகனை விட்டுவிட்டு தன்னுடன் வந்து விடுமாறு பிரதீப் மீண்டும் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு ஷில்பி சம்ம்மதிக்கவில்லை. இதனையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த பிரதீப் ஷில்பியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

ஷில்பியை பிரதீப் கொலை செய்ததை நேரில் பார்த்த அவளது 4 வயது மகன் நடந்த சம்பவம் முழுவதையும் போலீசாரிடம் கூறினான். இதனையடுத்து பிரதீப்பை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com