என் மலர்

    நீங்கள் தேடியது "Chhattisgarh assembly election"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் இன்று நடைபெற்ற இரண்டாவது, இறுதிகட்ட தேர்தலில் 71.93 சதவீதம் வாக்குகள் பதிவுவானது. இருகட்டங்களிலும் மொத்தமாக 74.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. #voterturnout #Chhattisgarhpolls
    ராய்ப்பூர்:

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 12-ந்தேதி நடந்த தேர்தலில் சுமார் 76.41 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
     
    இரண்டாவது கட்டமாக மீதியுள்ள 72 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. சில வாக்குச்சாவடிகளில் 5 மணிக்கு பிறகும் பலர் வாக்களிக்க ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்ததால் வாக்குப்பதிவுக்கான நேரம் நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது, இறுதிகட்ட தேர்தலில் 6 மணி வரையில் 71.93 சதவீதம் வாக்குகள் பதிவுவானதாக தெரியவந்துள்ளது.



    இரண்டுகட்ட தேர்தல்களையும் சேர்த்து மாநிலம் முழுவதும் சராசரியாக 74.17 சதவீதம் வாக்குகள் பதிவானதாக புதுடெல்லியில் இன்றிரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேசிய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையாளர் உமேஷ் சின்ஹா குறிப்பிட்டுள்ளார். #voterturnout #Chhattisgarhpolls #Chhattisgarh2ndphasepolls
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் அதிகாரிகளை குறிவைத்து மாவோயிஸ்டுகள் இன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். #ChhattisgarhElections #DantewadaBlast #NaxalsAttack
    ராய்ப்பூர்:

    90 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் உள்ளிட்ட 18 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என மாவேயிஸ்டுகள் மிரட்டி உள்ளதால், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த பாதுகாப்பையும் மீறி தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர்.  தேர்தல் பணிக்காக இன்று அதிகாலையில் தேர்தல் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்றபோது துமக்பால்-நயனார் சாலையில் குண்டு வெடித்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிகாரிகள் பாதுகாப்பாக தங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று சேர்ந்தனர்.


    முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் முதல்வர் ராமன் சிங், மந்திரிகள் கேதர் காஷ்யப், மகேஷ் காக்தா, பாஜக எம்பி விக்ரம் உசேந்தி, காங்கிரஸ் கட்சியின் நடப்பு எம்எல்ஏக்கள் போன்ற முன்னிணி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 10 மணி நிலவரப்படி 10.7 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

    இதற்கிடையே, சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலில், அதிக அளவிலான வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். #ChhattisgarhElections #DantewadaBlast #NaxalsAttack
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் முதற்கட்டமாக 18 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. #ChhattisgarhAssemblyElection2018 #Chhattisgarh
    ராய்ப்பூர்:

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

    அந்த வகையில், 18 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு சத்தீஸ்கரில் இன்று (12-ந்தேதி) தொடங்கியது. பஸ்தார், பிஜப்பூர், தண்டேலாடா உள்பட நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் தேர்தல் நடப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்குமாறு நக்சலைட்டுகள் மிரட்டல் விடுத்துள்ளதால், வாக்குப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவுக்காக துணை ராணுவத்தினர், போலீசார் என சுமார் ஒரு லட்சம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பலத்த பாதுகாப்புக்கு இடையே காலை முதல் மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வமுடன் வந்து தங்களது ஓட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.


    படம் - நன்றி ANI

    சத்தீஸ்கர் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அஜித்ஜோகி கூட்டணி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. மொத்தம் 190 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சத்தீஸ்கரில் அடுத்த கட்டமாக எஞ்சிய பகுதிகளுக்கு வருகிற 20-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இதுதவிர மத்திய பிரதேசம், மிசோரமில் வருகிற 28-ந் தேதியும், ராஜஸ்தான், தெலுங்கானாவில் டிசம்பர் 7-ந் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. #ChhattisgarhAssemblyElection2018 #Chhattisgarh #ChhattisgarhElections

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மத்திய பிரதேசத்தில் 160 இடங்களிலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் 52 முதல் 60 இடங்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக புதிய கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. #BJP
    புதுடெல்லி:

    ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் டிசம்பர் 7-ந்தேதியும், மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் வருகிற 28-ந்தேதியும், சத்தீஸ்கரில் வருகிற 12 மற்றும் 20-ந்தேதிகளிலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த மாநிலங்களில் எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இது நடப்பதால் 5 மாநில தேர்தல் அதற்கான ஒரு முன்னோட்டமாக கருதப்படுகிறது.

    கடந்த மாதம் நடந்த கருத்து கணிப்புகளில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் பா.ஜ.க.வுக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    இந்த புதிய கருத்துக்கணிப்பை ஏ.பி.பி.நியூ- லோக்நிதி சி.எஸ்.டி.எஸ். எனும் அமைப்பு நடத்தியுள்ளது. நேற்று அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. 160 இடங்களிலும், காங்கிரஸ் 105 இடங்களிலும் மற்றவர்கள் 9 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் நடத்திய புதிய கருத்துக்கணிப்பில் மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. 120 இடங்களிலும் காங்கிரஸ் 95 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் 4-வது தடவையாக பா.ஜ.க. வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் சில புதிய கருத்து கணிப்புகளில் பா.ஜ.க., காங்கிரஸ் சம அளவில் வெற்றி வாய்ப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க. 52 முதல் 60 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக புதிய கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 17 முதல் 25 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் உள்ள 200 இடங்களில் காங்கிரஸ் கட்சி 110 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக புதிய கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க.வுக்கு 84 இடங்களில்தான் வெற்றி கிடைக்கும் என்று சர்வேயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தெலுங்கானாவில் 85 சதவீதம் இடங்களை சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. #BJP #Congress
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கர்நாடகா சட்டசபை தேர்தல் பணிகள் முடிவடைந்ததால், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அடுத்ததாக சத்தீஸ்கர் மாநிலத்தை குறிவைத்து இப்போதே தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். #Congress #RahulGandhi
    ராய்ப்பூர்:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் ராகுல்காந்தி மிக தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டார். 3 மாதத்துக்கு முன்பே பிரசாரத்தை தொடங்கிய அவர் 9 முறை கர்நாடகாவுக்கு வந்து பிரசாரம் செய்தார். ஆனாலும், ஆட்சியை தக்க வைக்க முடியவில்லை.

    காங்கிரசே இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி சவால் விட்டு பேசி வருகிறார். அவர் சொன்னது போலவே காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை ஒவ்வொன்றாக பாரதிய ஜனதா கைப்பற்றி வருகிறது. சொல்லி அடிப்போம் என்பது போல் மோடியின் நடவடிக்கை தீவிரமாக இருக்கிறது.

    தற்போது கர்நாடகாவும் பறிபோய் விட்டதால் பஞ்சாப், மிஜோரம், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி உள்ளது. இதையும் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் மோடியின் திட்டமாகும்.

    இதற்கு இடம் கொடுக்காத வகையில் இனி வரும் தேர்தல்களில் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் திட்டம் தீட்டி உள்ளது.

    அடுத்ததாக டிசம்பர் மாதம் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 3 மாநிலங்களிலுமே பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது.

    அதே நேரத்தில் அங்கு முக்கிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. இதனால் அந்த 3 மாநிலங்களையும் கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் முயற்சிக்கிறது.


    இதில், சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் எளிதாக வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருதுகிறார்கள். ஏனென்றால், கடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு மிக நெருக்கமாக மக்களின் ஓட்டுகளை காங்கிரஸ் பெற்று இருந்தது.

    அப்போது பாரதிய ஜனதாவுக்கு 41.04 சதவீத ஓட்டுகளும், காங்கிரசுக்கு 40.29 சதவீத ஓட்டுகளும் கிடைத்து இருந்தன. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாரதிய ஜனதா 49 இடங்களிலும், காங்கிரஸ் 39 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன.

    தற்போது அங்கு ஆளும் கட்சி மீது அதிருப்தி நிலவுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, இதை பயன்படுத்தி இந்த தடவை எளிதாக ஆட்சியை கைப்பற்றி விடலாம் என காங்கிரஸ் நினைக்கிறது.

    இதனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பணிகளை இப்போதே ராகுல் காந்தி முடுக்கி விட்டுள்ளார். இந்த மாநிலத்தில் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் அதிக அளவில் உள்ளனர்.


    அவர்களுக்கு எதிராக பாரதிய ஜனதா செயல்படுவதாக கூறி அதை மக்களிடம் விரிவான பிரசாரமாக கொண்டு சென்று அவர்களின் ஓட்டுகளை காங்கிரஸ் பக்கம் இழுத்து விடலாம் என கருதுகிறார்கள்.
    இதற்கான பணிகளை செய்யும்படி ராகுல்காந்தி உத்தரவிட்டு இருக்கிறார். அங்குள்ள 27 மாவட்டங்களிலும் மக்களின் மனநிலை அறிந்து அதற்கு ஏற்றார் போல் தேர்தல் பிரசார திட்டங்களை வகுக்கும்படியும் ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் ராகுல்காந்தி விரைவில் அங்கு சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பணிகளை முடுக்கி விடுவதற்கும் திட்டமிட்டு இருக்கிறார்.

    இதே போல் ராஜஸ்தான், மத்தியபிரதேச மாநிலங்களிலும் அதிக அளவில் கவனம் செலுத்த உள்ளனர். #RahulGandhi #Congress
    ×