என் மலர்
இந்தியா

அதானி வளர்ந்தால்தான் சத்தீஸ்கர் வளருமா?: மோடிக்கு கேள்வி எழுப்பிய சத்தீஸ்கர் முதல் மந்திரி

- சத்தீஸ்கரில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
- மொத்தமுள்ள 90 இடங்களுக்கு வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டசபையில் உள்ள 90 இடங்களுக்கு இம்மாதம் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.
கான்கெர் நகரில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் இருக்கும் இடத்தில் வளர்ச்சி இருக்காது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ராய்ப்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் சத்தீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகெல் பிரதமர் நரேந்திர மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் பேசுகையில், நேற்று பிரதமர் மோடி கான்கேருக்கு வந்தார். எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை என்றார்.
சாமானியர்களின் வளர்ச்சியை அவர் பார்க்கவில்லை, அதானியின் வளர்ச்சியை மட்டுமே பார்க்கிறார்.
சுரங்கத்தையும், நாகர்னார் உருக்காலையையும் அதானிக்கு கொடுக்கவில்லை. அதனால்தான் வளர்ச்சி இல்லை என்று சொல்கிறார்.
அதானிக்கு சுரங்கங்களையும், நகர்நார் உருக்காலையையும் கொடுத்தால்தான் சத்தீஸ்கரில் வளர்ச்சி ஏற்படும் என்று பிரதமர் நினைக்கிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.