search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "voting percent"

    சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் இன்று நடைபெற்ற இரண்டாவது, இறுதிகட்ட தேர்தலில் 71.93 சதவீதம் வாக்குகள் பதிவுவானது. இருகட்டங்களிலும் மொத்தமாக 74.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. #voterturnout #Chhattisgarhpolls
    ராய்ப்பூர்:

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 12-ந்தேதி நடந்த தேர்தலில் சுமார் 76.41 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
     
    இரண்டாவது கட்டமாக மீதியுள்ள 72 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. சில வாக்குச்சாவடிகளில் 5 மணிக்கு பிறகும் பலர் வாக்களிக்க ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்ததால் வாக்குப்பதிவுக்கான நேரம் நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது, இறுதிகட்ட தேர்தலில் 6 மணி வரையில் 71.93 சதவீதம் வாக்குகள் பதிவுவானதாக தெரியவந்துள்ளது.



    இரண்டுகட்ட தேர்தல்களையும் சேர்த்து மாநிலம் முழுவதும் சராசரியாக 74.17 சதவீதம் வாக்குகள் பதிவானதாக புதுடெல்லியில் இன்றிரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேசிய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையாளர் உமேஷ் சின்ஹா குறிப்பிட்டுள்ளார். #voterturnout #Chhattisgarhpolls #Chhattisgarh2ndphasepolls
    கர்நாடக தேர்தலில் இறுதிச்சுற்று முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் கட்சிகள் கைப்பற்றிய இடங்களையும், மொத்தத்தில் பெற்ற வாக்கு சதவீதத்தையும் தெரிந்து கொள்வோம். #KarnatakaElection2018
    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டசபையில் உள்ள 224 இடங்களில் 222 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.

    மாலை 7 மணி நிலவரப்படி, பா.ஜ.க. வேட்பாளர்கள் 97 இடங்களில் வெற்றி பெற்றதாகவும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 74 இடங்களில் வெற்றி பெற்றதாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் 37 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் கர்நாடக பிரகின்யவந்தா கட்சி வேட்பாளர்கள் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இதுதவிர, பா.ஜ.க. வேட்பாளர்கள் 7 இடங்களிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 2 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளனர்.

    இன்னும் 10 தொகுதிகளுக்கான முடிவுகள் மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியாக வேண்டியுள்ள நிலையில், இந்த தேர்தலில் முக்கிய அரசியல் கட்சிகள் பெற்ற ஒட்டுமொத்த வாக்கு சதவீதத்தை பொருத்தவரையில் (மாலை 7 மணி நிலவரப்படி) காங்கிரஸ் கட்சி 38 சதவீதம் வாக்குகளையும், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க. 36.2 சதவீதம் வாக்குகளையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 18.4 சதவீதம் வாக்குகளையும், சுயேட்சை வேட்பாளர்கள் அனைவரும் 4 சதவீதம் வாக்குகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 0.3 சதவீதம் வாக்குகளையும் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

    இன்னும் 10 தொகுதி முடிவுகள் வெளியான பின்னர் இந்த வாக்கு சதவீதத்தில் சில புள்ளிகள் மாறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜெயநகர் தொகுதி வேட்பாளர் மரணம் அடைந்ததாலும், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் கட்டுக்கட்டாக போலி வாக்காளர் அடையாள் அட்டைகள் கைப்பற்றப்பட்டதாலும் இந்த இரு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது. #KarnatakaElection2018
    ×