என் மலர்
நீங்கள் தேடியது "Kanchipuram collector"
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
- தகுதியில்லாத விண்ணப்பதாரர்கள் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
துரித மின் இணைப்பு 2022-2023-ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கான துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தில் மின் மோட்டார் குதிரை திறனுக்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மானியத்தில் ஆதிதிராவிடர்களுக்கு 900 எண்ணிக்கையும், பழங்குடியினருக்கு 100 எண்ணிக்கையில் மொத்தம் 1,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய நிலம் மற்றும் நிலப்பட்டா அவர்களின் பெயரில் இருப்பவர்கள் மட்டும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். முன்னுரிமை அளிக்கப்படும் மேலும் நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்ட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.
துரித மின் இணைப்பு திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5 குதிரைத்திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.25 ஆயிரமும், 7.5 குதிரைத்திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.27 ஆயிரத்து 500-ம், 10 குதிரைத்திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.3 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.30 ஆயிரமும், 15 குதிரைத்திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.4 லட்சத்துக்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.40 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலை அளிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தகுதியில்லாத விண்ணப்பதாரர்கள் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும். கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும் தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 சதவீதம் பயனாளி பங்குத்தொகையுடன் புதிதாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல், 'அ' பதிவேடு நகல், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்ட நிலத்தின் வரைபடம், சர்வே எண், மின்வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல் மற்றும் புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு தாட்கோ, காஞ்சிபுரம், மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஊராட்சி தலைவர் அதே கிராமத்தில் 3 இடங்களில் தேசியக்கொடி ஏற்றியுள்ளார்.
- ஒரு கிராமத்தில் பல இடங்களில் குடியரசு தின விழா நடைபெற்றால் அனைத்து இடங்களிலும் ஒரே நபர் தேசியக் கொடியை ஏற்ற முடியாது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுகுணா. பட்டியலினத்தை சேர்ந்த பெண்ணான இவர் திருப்புட்குழி ஊராட்சியில் பொது வார்டில் போட்டியிட்டு ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றுள்ளார். இவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்.
இவர் குடியரசு தின விழாவில் பங்கேற்க திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தேசிய கொடியை ஏற்றச் சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர்கள் தடுத்துள்ளனர்.
இதனால் அங்கு தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தேசியக்கொடியை ஏற்றவில்லை.
இதுபற்றி ஊராட்சி தலைவர் சுகுணா பாலுசெட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் தன்னை தேசிய கொடி ஏற்றவிடாமல் தடுத்ததாக பாலசந்தர், செல்வம் ஆகியோர் மீது புகார் செய்தார். இதுகுறித்து சுகுணா கூறுகையில், என்னை எதிர்த்து போட்டியிட்டவர்களின் ஆதரவாளர்கள் என்னை பணி செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர். பள்ளியில் என்னை தேசிய கொடி ஏற்றவிடாமல் தடுத்தனர். அவர்கள் மீது போலீசில் புகார் செய்துள்ளேன். தலைமை ஆசிரியர் விஜயகுமாரி மீது பள்ளிக் கல்வித்துறையில் புகார் கொடுக்க உள்ளேன் என்றார்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் விஜயகுமாரி கூறுகையில், "நான் எனது விளக்கத்தை கலெக்டரிடம் தெரிவித்துவிட்டேன்" என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி கூறுகையில், "ஊராட்சி தலைவர் ஆரம்ப பள்ளியில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய கொடியை ஏற்ற வரும்போது முன் விரோதத்தில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனால் சுகுணா அங்கிருந்து வெளியேறினார். எனவே வேறு நபரை வைத்து தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர்" என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
ஊராட்சி தலைவருக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தான் கொடி ஏற்ற முழு அதிகாரம் உள்ளது. பள்ளிக்கூடம் என்பது முழுக்க முழுக்க தலைமை ஆசிரியரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு அவர் தேசியக்கொடியை ஏற்றுவார். அவர் இல்லை என்றால் வேறு யாராவது ஏற்றலாம்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஊராட்சி தலைவர் அதே கிராமத்தில் 3 இடங்களில் தேசியக்கொடி ஏற்றியுள்ளார். ஒரு கிராமத்தில் பல இடங்களில் குடியரசு தின விழா நடைபெற்றால் அனைத்து இடங்களிலும் ஒரே நபர் தேசியக் கொடியை ஏற்ற முடியாது. பள்ளிகளில் ஊராட்சி தலைவர் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று எந்த விதியும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசம் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினை பெற தகுதி உள்ளவர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான "கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :
துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது.
இந்த விருதுடன் ரூ.5 இலட்சத்திற்கான காசோலையும் ஒரு பதக்கமும் வழங்கப்படும். தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசம் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினை பெற தகுதி உள்ளவர்.
2022 ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதுக்கான விண்ணப்பங்கள் விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ 30.6.2022-க்கு முன்பாக வரவேற்கப்படுகிறது.
மேலும் உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 920575 முதல் தவணையும், 736058 இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
- கொரோணா நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
காஞ்சிபுரம்:
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 920575 முதல் தவணையும், 736058 இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் புதிய வகை கொரோனா வைரஸால் BA4, BA5 strain மூலம் மக்களுக்கு கொரோணா காய்ச்சல் வர வாய்ப்புள்ளதால் தமிழக முதல்வரின் ஆணையின்படி, இன்று 12 ம் தேதி சிறப்பு மாபெரும் ஒருநாள் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.
இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 2118 நடமாடும் முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
பொதுமக்கள் அனைவரும் இந்த முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோணா நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள், பட்டியல் இனத்தவர்கள், சிறுபான்மையினர் மற்றும் மகளிர் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து கடன் வழங்க வேண்டும் என கலெக்டர் ஆர்த்தி கூறினார்.
- தொழில் முனைவோர்களுக்கு அதிக கடன்களை கொடுத்து மாவட்டத்தில் அதிகமான வேலை வாய்ப்பை பெருக்க உதவ வேண்டும். மேலும் கடன் வழங்கும் பரிசீலனை முறைகளை எளிதாக்க வேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வங்கிகளின் வாடிக்கையாளர் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார்.
முகாமில் விவசாயம், தொழில் முனைவோர் மற்றும் தனி நபர் கடனாக 5,353 பயனாளிகளுக்கு ரூ.344.53 கோடி கடனுதவிகளையும், வங்கிகளுக்கு சான்றிதழ்களையும் கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
வங்கிகள் மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள், பட்டியல் இனத்தவர்கள், சிறுபான்மையினர் மற்றும் மகளிர் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து கடன் வழங்க வேண்டும்.
தொழில் முனைவோர் களுக்கு அதிக கடன்களை கொடுத்து மாவட் டத்தில் அதிகமான வேலை வாய்ப்பை பெருக்க உதவ வேண்டும். மேலும் கடன் வழங்கும் பரிசீலனை முறைகளை எளிதாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் அதிமுக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். அப்போது, வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது போன்று அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வாகுச்சாவடிகளை கைப்பற்றும் நோக்கத்தில் அன்புமணி ராமதாஸ் இந்த கருத்தை தெரிவித்ததாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்ய திருப்போரூர் தேர்தல் அதிகாரிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். #LokSabhaElections2019 #AnbumaniRamadoss