என் மலர்

  செய்திகள்

  அன்புமணி மீது வழக்கு பதிவு செய்ய காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவு
  X

  அன்புமணி மீது வழக்கு பதிவு செய்ய காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரசாரத்தின்போது வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் நோக்கத்தில் பேசியதாக புகார் எழுந்ததால், அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யும்படி காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். #LokSabhaElections2019 #AnbumaniRamadoss
  காஞ்சிபுரம்:

  காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் அதிமுக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். அப்போது, வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது போன்று அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.  ‘இந்த பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு வங்கி கிடையாது. திமுகவுக்கு மட்டும் கொஞ்சம் வாக்கு வங்கி உள்ளது. எனவே இங்குள்ள வாக்குச்சாவடிகளில் நாம் மட்டும்தான் இருப்போம். நாம் மட்டும் இருந்தால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். நமது வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்’ என அன்புமணி பேசினார்.

  இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வாகுச்சாவடிகளை கைப்பற்றும் நோக்கத்தில் அன்புமணி ராமதாஸ் இந்த கருத்தை தெரிவித்ததாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து,  அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்ய திருப்போரூர் தேர்தல் அதிகாரிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். #LokSabhaElections2019 #AnbumaniRamadoss
  Next Story
  ×