அனுமதியற்ற விளம்பர பேனர்- காஞ்சிபுரம் கலெக்டர் எச்சரிக்கை

அனுமதியற்ற விளம்பர பதாகைகள் அகற்றுவது தொடர்பாக, பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.விதிமுறைகளை மீறி வைப்போருக்கு, அபராதம் அல்லது 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
அனுமதியற்ற விளம்பர பேனர்- காஞ்சிபுரம் கலெக்டர் எச்சரிக்கை
Published on

காஞ்சிபுரம்:

அனுமதி பெறாமல் பதாகைகள், தட்டிகள், பேனர்கள் வைப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த 2-ந் தேதி, கலெக்டர் தலைமையில், துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. இதில், அனுமதியற்ற விளம்பர பதாகைகள் அகற்றுவது தொடர்பாக, பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, கிராம ஊராட்சிகளில், விளம்பர பதாகைகள் நிறுவ, கலெக்டரிடம் விண்ணப்பித்து, அதற்கான அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் ஊராட்சிகளில் விளம்பர பதாகைகள் வைத்தால், ஊராட்சி நிர்வாகத்தால் உடனடியாக அகற்றப்படும். விதிமுறைகளை மீறி வைப்போருக்கு, அபராதம் அல்லது 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com