என் மலர்

    நீங்கள் தேடியது "சிறுவன் கைது"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • விசாரணையில் அவர்கள் நடுக்குப்பத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அவனது கூட்டாளி சத்ய பிரதீப் என்று தெரியவந்தது.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்தபடி 2 பேர் கஞ்சா புகைத்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள். இதையடுத்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    அங்குவைத்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் இருவரும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் நடுக்குப்பத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அவனது கூட்டாளி சத்ய பிரதீப் என்று தெரியவந்தது.

    இதில் சிறுவன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும், சத்ய பிரதீப் அவனுக்கு உறுதுணையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    17 வயதான சிறுவன் பகல் நேரத்தில் ரெயிலில் சமோசா விற்று பிழைப்பு நடத்தி வந்தான். இரவு நேரத்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தான். திருட்டு சம்பவங்கள் மூலம் கிடைக்கும் பணத்தில் கஞ்சா புகைத்து ஆடம்பரமாக செலவழித்து வந்தான்.

    அவர்கள் போலீசில் பிடிபடுவதற்கு முன்பு திருநின்றவூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடி விட்டு அதை விற்பனை செய்வதற்காக எழும்பூருக்கு கொண்டு வந்துள்ளனர். வரும் வழியில் பூந்தமல்லி, நசரத்பேட்டை பகுதிகளில் 3 இடங்களில் செல்போன் வழிப்பறி செய்துள்ளனர்.

    இதையடுத்து அவர்கள் இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி வீட்டிற்குள் நுழைந்தார்.
    • அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி வீட்டிற்குள் நுழைந்தார்.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மகாதேவபுரத்தை சேர்ந்தவர் முனுசாமி என்ற ரஞ்சித் (வயது 45). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    சம்பவத்தன்று இரவு அனைவரும் வீட்டில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி வீட்டிற்குள் நுழைந்தார். ஆனால் இது அவர்களுக்கு தெரியவில்லை.

    அந்த நபர் வீட்டில் இருந்த சிறுமியின் சத்தம் வராதபடி வாயை பொத்தியபடி தூக்கி கொண்டு செல்ல முயன்றார். இதனை சிறுமியின் தாய் பார்த்து விட்டார்.

    அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அப்போது அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி விட்டு வெளியே நிறுத்தி இருந்த காரில் தப்பிச் சென்றார்.

    இதுகுறித்து சிறுமியின் தந்தை மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து சிறுவன் தப்பி சென்ற காரை பின்தொடர்ந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் சிறுவன், காரை கல்லார் ரெயில்வே பாலம் அருகே நிறுத்தி விட்டு தப்பி விட்டார்.

    இதையடுத்து போலீசார் காரை கைப்பற்றி, சிறுமியை கடத்த முயன்றது யார்? எதற்காக கடத்த முயன்றார் என விசாரணை மேற்கொண்டனர். முதலில் கைப்பற்றப்பட்ட காரின் பதிவு எண்ணை வைத்து அது யாருடையது என விசாரிக்க தொடங்கினர்.

    விசாரணையில் அந்த கார் கோவையை சேர்ந்த அழகுமுத்து என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது.

    இதையடுத்து அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் அந்த காரை, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தனுஷ் என்பவருக்கு கடந்த 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை வாடகை பேசி ஒப்படைத்ததாக தெரிவித்தார்.

    போலீசார் தனுஷை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அவர் தனது சகோதரரான 17 வயது சிறுவன் நண்பர்களுடன் ஒரு திருமணத்துக்கு செல்வதற்கு கார் வேண்டும் என கேட்டதாகவும் அவர் தான் எடுத்து சென்றதாகவும் தெரிவித்தார்.

    மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியை கடத்த முயன்ற சிறுவன் ரஞ்சித்தின் தங்கை மகன் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் மேட்டுப்பாளையம் பகுதியில் சுற்றிய 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் சிறுமியை எதற்காக கடத்தினாய் என விசாரித்த போது, செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்க பணம் தேவைப்பட்டதாகவும், அதற்காக சிறுமியை கடத்தி பணம் கேட்க முடிவு செய்ததாக கூறினர்.

    தொடர்ந்து போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2 பேருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தார்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தேவவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் (வயது 53), லாரி டிரைவர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செல்லத்துரை (55), விவசாயி. இவர் பா.ஜனதா கூட்டுறவு பிரிவின் வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய தலைவராக இருந்து வந்தார்.

    இவர்கள் 2 பேருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை தெருவில் வைத்து அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்லத்துரை கத்தியால் ஐயப்பனை குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    அப்போது அங்கு வந்த ஐயப்பனின் 17 வயதான மகன் தனது தந்தையை கொன்ற ஆத்திரத்தில் செல்லத்துரை கையில் வைத்திருந்த கத்தியை பிடுங்கி அவரை குத்தியாக கூறப்படுகிறது. இதில் செல்லத்துரையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தார். பின்னர் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறுவன் சிறுமியை தனது அக்காள் ஊரான விழுப்புரம் பனக்குப்பம் பகுதிக்கு அழைத்து சென்றார்.
    • தனியாக இருந்த சிறுமியிடம் சிறுவனின் அக்காள் உனக்கு எனது தம்பியுடன் எப்படி பழக்கம் ஏற்பட்டது. நீ எப்படி கர்ப்பமானாய் என்று கேட்டுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் அருகே தூக்கணாம்பாக்கம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி திருவந்திபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்துவந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், 14 வயது சிறுமி படிக்கும் பள்ளியில் படித்து வந்தார். அப்போது இருவரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. கண்களால் பேசிய அவர்கள் நாளடைவில் காதல் வயப்பட்டனர். அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்தனர். இந்த விவகாரம் அரசல் புரசலாக தெரியவந்தது. இதனால் 2 பேரும் பள்ளியில் இருந்து படிப்பை நிறுத்திவிட்டனர். இதற்கிடையே அந்த சிறுமி கர்ப்பமானார்.

    அதிர்ச்சியடைந்த சிறுமி தனது காதலனிடம் தெரிவித்தார். உடனே காதலன் உனனை திருமணம் செய்து கொள்கிறேன் என்று உறுதியளித்தார். அதன்பின்னர் அந்த சிறுவன் சிறுமியை தனது அக்காள் ஊரான விழுப்புரம் பனக்குப்பம் பகுதிக்கு அழைத்து சென்றார்.

    அப்போது சிறுவன் தனது அக்காளிடம் நான் இவளை திருமணம் செய்ய உள்ளேன். எனவே பத்திரமாக பாதுகாக்கும்படி கூறிவிட்டு தனது ஊருக்கு வந்துவிட்டார். தனியாக இருந்த சிறுமியிடம் சிறுவனின் அக்காள் உனக்கு எனது தம்பியுடன் எப்படி பழக்கம் ஏற்பட்டது. நீ எப்படி கர்ப்பமானாய் என்று கேட்டுள்ளார்.

    இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம்கேட்டு அந்த பகுதியில் உள்ளவர்கள் குழந்தைகள் நல காப்பகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது நடந்த விபரத்தை கண்ணீர் மல்க அந்த சிறுமி கூறினார். சம்பவம் நடந்த இடம் திருப்பாதிரிபுலியூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் உடனடியாக அங்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது மேற்கண்ட தகவலை தெரிவித்தார். அதன்பேரில் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து கைது செய்தனர். சிறுமி காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கைதான சிறுவனை போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இருவரும் தனிமையில் உல்லா சமாக இருந்ததால், தற்போது சிறுமி கர்ப்பம் அடைந்து ள்ளார்.
    • குழந்தைகள் நல அலு வலர்கள் மூலம் சிறுமி மீட்கப்பட்டார்.

    கடலுார்:

    கடலுார், திரு வந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவரு க்கும், 14 வயது சிறுமி க்கும் பள்ளியில் படிக்கும்போது பழக்கம் ஏற்பட்டது. தற்போது இருவருமே பாதியில் படிப்பை நிறுத்திவிட்டனர். பின்னர் இருவரும் தனிமையில் உல்லா சமாக இருந்ததால், தற்போது சிறுமி கர்ப்பம் அடைந்து ள்ளார். இதுகுறித்து சிறுமியின் உறவி னர்கள் குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், குழந்தைகள் நல அலு வலர்கள் மூலம் சிறுமி மீட்கப்பட்டு, கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் அளிக்க ப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, 16 வயது சிறுவனை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறுவன் அடிக்கடி மது குடித்துள்ளதால் கார்த்திக்ராஜ் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது.
    • இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீரான் பாளையம் தெரு கேசவன் நகரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜ் (வயது 32). கூலித்தொழிலாளி.

    இவரும் அதேபகுதியை சேர்ந்த இவரது உறவினரான 16 வயது சிறுவனும் ஒன்றாக வேலைக்கு சென்று வந்துள்ளனர்.

    இந்நிலையில் சிறுவன் அடிக்கடி மது குடித்துள்ளதால் கார்த்திக்ராஜ் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்தநிலையில் இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டு 2 பேரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு கார்த்திக் ராஜ் தனது வீட்டிற்கு மீரான் பாளையம் தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அங்கு வந்த சிறுவன், கார்த்திக்ராஜிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கார்த்திக்ராஜின் தலை மற்றும் முதுகில் சரமாரியாக வெட்டினார். இதில் நிலைதடுமாறிய கார்த்திக் ராஜ் சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி அருகில் இருந்த ஒரு வீட்டிற்குள் சென்று தப்ப முயன்றுள்ளார்.

    எனினும் அந்த சிறுவனும் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிவிட்டு கார்த்திக் ராஜை அரிவாளால் பலமுறை வெட்டி விட்டு தப்பி ஓடினார். இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் ராஜ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விளாத்திகுளம் போலீசார் கார்த்திக் ராஜை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    ஆனால் கார்த்திக் ராஜ் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட கார்த்திக்ராஜிக்கு லதா (27) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறுவன் தனது கூட்டாளிகள் 4பேருடன் சேர்ந்து பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் கோவில், மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கைவரிசை காட்டி நூதன முறையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
    • சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

    போரூர்:

    சென்னை வடபழனி முருகன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக 2 வாலிபர்கள் சுற்றி திரிவதாக வடபழனி போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் விரைந்து சென்று இருவரையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த கைப்பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் ஏராளமான செல்போன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    போலீசார் விசாரணை செய்து கொண்டு இருந்த போது திடீரென ஒருவன் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டான். பிடிபட்ட வாலிபர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட சிறுவன் என்பது தெரிந்தது.

    சிறுவன் தனது கூட்டாளிகள் 4பேருடன் சேர்ந்து பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் கோவில், மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கைவரிசை காட்டி நூதன முறையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய வாலிபர் உள்பட கூட்டாளிகள் 4 பேரை போலீசார் தேடி வரு கின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறுமி தங்கள் பகுதியைச் சேர்ந்த 16 வயது வாலிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர்களிடம் தெரிவித்தார்.
    • வாலிபர் ஒருவர் 8 மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதி பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி. அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரது பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது அந்த சிறுமி, தங்கள் பகுதியைச் சேர்ந்த 16 வயது வாலிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர்களிடம் தெரிவித்தார். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் தனது பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்த அந்த நபர், பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.

    அந்த சமயம் மேலும் 7 மாணவிகள் எழுந்து தங்களுக்கும் அந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தனர். அதைக் கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி அவர்கள் காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் அந்த வாலிபர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாலிபர் ஒருவர் 8 மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சென்னைக்கு கடத்தி சென்றார்.
    • பாலியல் தொல்லை கொடுத்த அண்ணனும் சிக்கினார்.

    கோவை

    கோவை பெரியநா யக்கன் பாளையத்தை அடுத்த சாமநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து திடீரென மாயம் ஆனார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    இதையடுத்து சிறுமியின் தாயார் பெரியநாயக்கன் பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் மாயம் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். அப்போது சிறுமி சென்னையில் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சென்னை விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். பின்னர் சிறுமியை கோவை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கும் சென்னையை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இது நாளடைவில் காதலாக மாறியது.

    2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். அப்போது சிறுவன், மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி சென்னைக்கு கடத்தி சென்றுள்ளார்.

    அங்கு சிறுவன், மாணவியை பாலியல் தொந்தரவு செய்தது ெதரியவந்தது.

    மேலும் விசாரணையில் சிறுமியை அவரது தாயாரின் தங்கை மகன் அரவிந்த் (25) என்பவரும் சிறுமியை 2 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததும் ெதரியவந்தது.

    இதையடுத்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் மாயம் வழக்கை போக்சோ வழக்காக மாற்றி சிறுமியை கடத்தி சென்ற 17 வயது சிறுவன் மற்றும் சிறுமியின் அண்ணன் அரவிந்த் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுவையில் பள்ளி மாணவனை கடத்தி வந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    • கைது செய்யப்பட்ட அமீது அப்துல் காதர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் பர்கத் நகரை சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி நவுஸ்னா. இவர்களது 11 வயது மகன் லாஸ்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். முகமது குவைத் நாட்டில் வேலை செய்து வருகிறார். மாணவன் பள்ளி முடிந்ததும் அருகில் உள்ள டியூசன் சென்டரில் படித்து வந்தான்.

    அதுபோல் நேற்று மாலை மாணவன் டியூசன் முடிந்ததும் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் திடீரென மாணவனை மிரட்டி மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார்.

    குயவர்பாளையம் லெனின் வீதியில் ஒரு பெட்டிக்கடை அருகே வந்த போது மாணவன் சத்தம் போட்டு அழுதான். அப்போது பெட்டிக்கடை உரிமையாளர் சரவணன் அந்த வாலிபரிடம் விசாரித்த போது தனது உறவினர் மகனை அழைத்து வருவதாக கூறினார்.

    அதற்கு அந்த சிறுவன் அந்த வாலிபர் எனது உறவினர் இல்லை. என்னை மிரட்டி கடத்தி வருவதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தான்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஒரு பெண் அந்த சிறுவனை பத்திரமாக தனது வீட்டுக்குள் அழைத்து சென்று பூட்டி வைத்துக்கொண்டார்.

    இதனால் மாணவனை கடத்தி வந்த அந்த வாலிபர் ஆத்திரமடைந்து சிறுவனை தன்னிடம் ஒப்படைக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினான்.

    உடனே அங்கிருந்தவர்கள் ஒன்று திரண்டு அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் இது குறித்து உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மாணவனை கடத்தி வந்த வாலிபரையும் மாணவனையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் மாணவனின் தாய்க்கு தகவல் தெரிவித்து மாணவனை அவரிடம் ஒப்படைத்தனர்.

    பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குயவர்பாளையம் லெனின் வீதியை சேர்ந்த அமீது அப்துல் காதர் (வயது 21) என்பதும் இவர் மாணவனின் தாயிடம் பணம் பறிக்கும் நோக்கில் மாணவனை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அமீது அப்துல் காதரை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அமீது அப்துல் காதர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin