பிக்பாக்கெட் அடித்த சிறுவன் கைது

பேண்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸை அங்கு நின்று கொண்டிருந்த சிறுவன் பிக்பாக்கெட் அடித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடமுயன்றான்.சுதாரித்து கொண்ட பெரியசாமி அந்த சிறுவனை மடக்கி பிடித்தார்.
பிக்பாக்கெட் அடித்த சிறுவன் கைது
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சாந்தியப்பன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. விவசாயி. இவர் நேற்று கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் ராயக்கோட்டை செல்லும் மேம்பாலம் அருகே உள்ள பேக்கரிகடையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸை அங்கு நின்று கொண்டிருந்த சிறுவன் பிக்பாக்கெட் அடித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடமுயன்றான். உடனே சுதாரித்து கொண்ட பெரியசாமி அந்த சிறுவனை மடக்கி பிடித்தார்.

இதைத்தொடர்ந்து பெரியசாமி அந்த சிறுவனை கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த சிறுவனிடம் போலீசார விசாரித்ததில் அரசமரத்துப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com