என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது
    X

    பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது

    • மாணவியுடன், சிறுவன் நெருங்கி பழகிய நிலையில், அந்த மாணவி கர்ப்பமடைந்தார்.
    • மாணவியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் முறையிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பிராந்தியத்தில் 16 வயது மதிக்கத்தக்க மாணவி பிளஸ்-1 படித்து வருகிறார்.

    இவரை அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினரான 17 வயது நிரம்பிய பிளஸ்-2 படிப்பை பாதியில் கைவிட்ட சிறுவன் காதலித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அந்த மாணவியுடன், சிறுவன் நெருங்கி பழகிய நிலையில், அந்த மாணவி கர்ப்பமடைந்தார்.

    சோர்வுடன் காணப்பட்ட சிறுமியை சமீபத்தில் அவரது பெற்றோர் அங்குள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றபோது அந்த மாணவி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து மாணவியிடம் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை அந்த மாணவி கூறினார். உடனடியாக மாணவி மூலமாக சிறுவனிடம் பேசியபோது இச்சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என அவரை மிரட்டியுள்ளார்.

    இதையடுத்து மாணவியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் முறையிட்டனர். விசாரணை மேற்கொண்ட போலீசார் மாணவியை கர்ப்பமாக்கி மிரட்டல் விடுத்த சிறுவன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    Next Story
    ×