என் மலர்tooltip icon

    வழிபாடு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    திறமை பளிச்சிடும் நாள். தெய்வீக சிந்தனை மேலோங்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். தொழில் வளர்ச்சி உண்டு. உத்தியோக முயற்சி கைகூடும்.

    ரிஷபம்

    அருகில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அயல்நாட்டிலிருந்து அனுகூலத் தகவல் வரலாம். பாக்கிகள் வசூலாகிப் பணவரவைக் கூட்டும்.

    மிதுனம்

    யோகமான நாள். பெற்றோர் வழியில் ஆதரவு உண்டு. நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். பழைய வாகனத்தைப் பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும்.

    கடகம்

    பொருளாதார நிலை உயரும் நாள். புதிய பாதை புலப்படும். சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். தொழில் கூட்டாளிகளால் ஏற்பட்ட துயரம் அகலும்.

    சிம்மம்

    நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். உறவினர் வழியில் ஏற்பட்ட விரிசல் மறையும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். புண்ணிய காரியங்களில் நாட்டம் செல்லும்.

    கன்னி

    கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்லவிதமாக நடைபெறும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

    துலாம்

    வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும் நாள். பக்குவமாகப் பேசி பாராட்டுகளைப் பெறுவீர்கள். உற்றார், உறவினர்கள் உதவி கேட்டு வரலாம். வீடு, இடம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    விருச்சிகம்

    நட்பால் நன்மை கிடைக்கும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும். தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

    தனுசு

    மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செலுத்துவீர்கள்.

    மகரம்

    பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். எதிரிகள் உதிரியாவர். வாழ்க்கைத் துணைவழியே மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று வந்து சேரும்.

    கும்பம்

    விரயங்கள் கூடும் நாள். குடும்ப உறுப்பினர்களிடம் கோபமாகப் பேசிவிட்டுப் பிறகு வருந்துவீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தரும்.

    மீனம்

    கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். பிள்ளைகளின் நலனில் பெரிதும் அக்கறை காட்டுவீர்கள். வருமானம் திருப்தி தரும்.

    • திருக்கார்த்திகை அன்று வீடு முழுவதும் சுத்தம் செய்து முருகப்பெருமானை வரவேற்க வேண்டும்.
    • கந்தப்பெருமான் மீது நம்பிக்கை வைத்து சிந்தை மகிழ வழிபட்டால் எந்த நாளும் இனிய நாளாக அமையும்.

    'திரு' ரு' என்று சூட்டும் அடைமொழி சிறப்பான "ஊர்களுக்கு சேர்ந்திருப்பதை நீங்கள் பார்த் திருப்பீர்கள். குறிப்பாக திருவாடானை, திருவாரூர், திருப்பதி, திருவாடுதுறை, திருப்பூர், திருவண்ணாமலை, திருவானைக்காவல், திருமழபாடி, திருத்தணி போன்ற எண்ணற்ற தலங்கள் 'திரு' என்ற அடைமொழியுடன் இருப்பதைக் காணலாம்.

    அதேபோல பெருமைக்குரிய நட்சத்திரங்களில் 'திரு' என்ற அடைமொழியுடன் கொண்டாடும் திருநாள் 'திருக்கார்த்திகை' ஆகும். அந்த நாளன்று அபிஷேக, ஆராதனைகள் செய்து முருகப்பெருமானை வழிபட்டால், அந்த முத்துக்குமரன் முத்தான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பான். கந்தனை நம்பிக்கையோடு வழிபட்டால் கரம் நிரம்பப் பொருள் குவியும்.

    அந்த இனிய திருக்கார்த்திகை திருநாள் 3.12.2025 (புதன்கிழமை) வருகின்றது. அன்றைய தினம் அருள்வழங்கும் முருகப்பெருமானை வழிபட்டால் பொருள் வளம் பெருகும். ஆலயம் சார்ந்த மலைகளை வலம் வந்து வழிபட்டாலும் மலை வலத்தால் மகத்துவம் காணலாம். அதற்கு முதல் நாள் 2.12.2025 (செவ்வாய்கிழமை) மாலை 6.06 மணிக்கு மேல் பரணி நட்சத்திரம் தொடங்குகிறது. பாவங்கள் போக்க பரணி தீபம் ஏற்றும் வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். நட்சத்திரத்தின் பெயரும், மாதத்தின் பெயரும் ஒன்றாக அமைவது இந்த மாதத்தில்தான்.

    பரணி தீபத்தன்று பிரதோஷமும் வருகின்றது. முருகப்பெருமானின் தந்தையான சிவனையும், உமையவளையும், நந்தியையும் வழிபட வேண்டிய திருநாள் இது. எனவே இல்லத்திலும் விளக்கேற்றி வழிபட வேண்டும். இனிய வாழ்வமைய முருகப்பெருமான் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும். 'பரணி தரணி ஆளும்' என்பார்கள். எனவே பரணி நட்சத்திரமன்று நாம் முருகப்பெருமானை முறையாக வழிபட்டால் தரணி ஆளக்கூடிய யோகம் கிடைக்கும். அதாவது புகழ், கீர்த்தி, செல்வாக்கு, செல்வ வளம், பதவி, பட்டம் ஆகிய அனைத்தும் வந்துசேரும்.

    தீபம் ஏற்றுவதன் மூலம் முழுமையான பலன் நமக்குக் கிடைக்கும் நாள், திருக்கார்த்திகை. அதற்கு முதல் நாள் வரும் பரணி நட்சத்திரமன்று மாலையில் நாம் இல்லங்களில் விளக்கேற்றி வைத்தால் உன்னதமான வாழ்க்கை அமையும். வீட்டில் நல்லெண்ணெயிலும், ஆறுமுருகப்பெருமான் சன்னிதியில் இலுப்பை எண்ணெயிலும் தீபம் ஏற்ற வேண்டும். வீட்டில் விளக்கேற்றும் பொழுது, படிக்கு மூன்று விளக்கு ஏற்ற வேண்டும்.

    மறுநாள் திருக்கார்த்திகை அன்று வீடு முழுவதும் சுத்தம் செய்து முருகப்பெருமானை வரவேற்க வேண்டும். பூஜையறையில் முழுமுதற்கடவுள் விநாயகரின் படத்தோடு, அவரது தம்பியான முருகப்பெருமானின் படத்தையும் வைத்து மாலை சூட்ட வேண்டும். பஞ்சமுக விளக்கேற்றி, அதில் ஐந்து வகையான எண்ணெய் ஊற்றி, கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் எல்லாவற்றையும் பாராயணம் செய்து வழிபட்டால் இனிய வாழ்க்கை அமையும்.

    அதோடு கந்தனுக்கு பிடித்த அப்பத்தை நைவேத்தியமாக படைக்கலாம். செட்டி நாட்டுப் பகுதியில் அப்பத்தை 'கந்தரப்பம்' என்று சிறப்புப் பெயரிட்டு அழைப்பர். அன்றைய தினம் இரவு வரை விரதம் இருந்து வழிபடுவது மிகச் சிறந்த பலனை வழங்கும். அப்படி இயலாதவர்கள் ஒரு நேரமாவது உணவருந்தாமல் விரதம் இருக்கலாம். கார்த்திகைத் திருநாளில் அன்னதானம் செய்தால், ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் நடைபெறும். காக்கைக்கும் உணவளிக்க வேண்டும்.

    இந்த நாளில் ஜோதி வடிவான இறைவனை நினைத்து, சிவாலயங்கள் தோறும் சொக்கப்பனை ஏற்றி வழிபாடு செய்வார்கள். அதிலுள்ள கம்பு அனலில் எரிந்து முடிந்ததும், அதை எடுத்து வந்து வீட்டில் வைத்துள்ள செடிகளில் நட்டுவைத்தால் செடிகள் நன்றாக வளரும் என்பது நம்பிக்கை.

    கந்தப்பெருமான் மீது நம்பிக்கை வைத்து சிந்தை மகிழ வழிபட்டால் எந்த நாளும் இனிய நாளாக அமையும். அந்த அடிப்படையில் கார்த்திகைத் திருநாளில் நேர்த்தியாக நாம் வழிபட்டால் பார்த்த இடமெல்லாம் பாராட்டும், புகழும் கிடைக்கும். அதனால் தான் 'சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை' என்பார்கள்.

    -'ஜோதிடக்கலைமணி' சிவல்புரி சிங்காரம்.

    • ‘சுக்ர மங்கள யோக’த்தால் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு உண்டு.
    • பெண்களுக்கு சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். பொருளாதார நிலை திருப்தி தரும்.

    தனுசு ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளைஆராய்ந்து பார்க்கும் பொழுது, அஷ்டமத்தில் குரு உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். இது அவ்வளவு நல்லதல்ல. அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறையும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். கொடுக்கல் - வாங்கல்களில் புதியவர்களை நம்பி ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். பயணங்களை திடீர், திடீரென மாற்றியமைப்பீர்கள். தொழிலில் குறுக்கீடுகளும், தொல்லைகளும் உண்டு. நினத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும். நீண்ட நாட்களாக கட்டுப்பட்டிருந்த நோய் மீண்டும் தலைதூக்கும்.

    குரு வக்ரம்

    மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கிறார். கார்த்திகை 2-ந் தேதி முதல் அவர் வக்ரம் பெறுகிறார். இந்த வக்ர காலம் உங்களுக்கு நன்மை தரும் காலமாகவே அமையும். ராசிநாதனாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் குரு. கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறும்பொழுது மிகுந்த நன்மையை உண்டாக்கும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். கடன் சுமை பாதிக்கு மேல் குறையும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள்.

    விருச்சிக - சுக்ரன்

    கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 6-க்கு அதிபதி 12-க்கு வருவது யோகம்தான். இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெறுவீர்கள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட புதிய வாய்ப்புகள் உருவாகும். 'சுக்ர மங்கள யோக'த்தால் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு உண்டு. ஊர் மாற்றங்கள் கேட்டு விண்ணப்பித்திருந்தால் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    தனுசு - செவ்வாய்

    கார்த்திகை 20-ந் தேதி, உங்கள் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான அவர், உங்கள் ராசிக்கு வரும்பொழுது எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரும். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். 'வீடு கட்டலாமா? அல்லது கட்டிய வீடாக விலைக்கு வாங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். தேவைக்கேற்ப பணம் வந்து கொண்டேயிருக்கும். மன நிம்மதிக்காக ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

    விருச்சிக - புதன்

    கார்த்திகை 20-ந் தேதி, விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 12-ல் வரும் இந்த நேரத்தில் பயணங்கள் அதிகரிக்கும். பரபரப்பாகக் காணப்படுவீர்கள். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். கடல் தாண்டி வரும் செய்தி மகிழ்ச்சி தரும். உத்தியோக மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு உள்நாட்டில் இருந்தும் அழைப்பு வரலாம். வெளிமாநிலங்களில் இருந்தும் அழைப்புகள் வரலாம். மாமன், மைத்துனர் வழியில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். சேமிப்பு கரைந்தாலும், பொருளாதாரத்தை ஈடுகட்டுவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு முயற்சிகளில் தடை ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு குறுக்கீடு வந்து கொண்டேயிருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். கலைஞர்களுக்கு வரவும், செலவும் சமமாகும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை தேவை. பெண்களுக்கு குடும்பச் சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    நவம்பர்: 18, 26, 27, 30, டிசம்பர்: 1, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.

    மகர ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, குடும்ப ஸ்தானத்தில் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். குருவின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகிறது. உச்சம் பெற்ற குருவின் பார்வை பதிவதால் மிச்சம் வைக்கும் விதத்தில் பொருளாதார நிலை உயரும். வாக்கிய கணித ரீதியாக இன்னும் சில மாதங்களுக்கு ஏழரைச்சனி இருக்கிறது. அதுவரை நன்மையும், தீமையும் கலந்து நடைபெற்றாலும், குரு பார்வை இருப்பதால் கவலைப்படத் தேவையில்லை. பொருளாதாரம் தேவைக்கேற்ப வந்து திருப்திப்படுத்தும். புதிய ஒப்பந்தங்கள் மகிழ்ச்சி தரும் விதம் அமையும்.

    குரு வக்ரம்

    மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். 'குரு பார்த்தால் கோடி நன்மை' என்பது ஜோதிட விதி. அந்த அடிப்படையில் பார்வை பலன் நன்மை செய்தாலும் கார்த்திகை 2-ந் தேதி முதல் குரு பகவான் வக்ரம் பெறுகிறார். எனவே கொஞ்சம் பணத்தட்டுப்பாடு ஏற்படலாம். இருப்பினும் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.

    விருச்சிக - சுக்ரன்

    கார்த்திகை 11-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது தொழில் போட்டி அகலும். எதிரிகள் விலகுவர். வருமானம் அதிகரிக்கும். கிளைத் தொழில் தொடங்கும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு, சுய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். பொன், பொருள் சேர்க்கை உண்டு. பூமி விற்பனையாலும் லாபம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும் நேரம் இது.

    தனுசு - செவ்வாய்

    கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் சொத்து விற்பனையால் லாபம் கிடைக்கும். தாய்வழி ஆதரவோடு சில நலன்களைப் பெறுவீர்கள். 'பழைய வாகனங்கள் பழுதாகி செலவு வைக்கின்றதே' என்று கவலைப்பட்டவர்கள், புதிய வாகனங்கள் வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரும் எண்ணம் நிறைவேறும்.

    விருச்சிக - புதன்

    கார்த்திகை 20-ந் தேதி, விருச்சி ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்பொழுது உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஊதிய உயர்வு இப்பொழுது கிடைக்கும். வெளிநாட்டில் நல்ல நிறுவனங்களில் இருந்து ஒரு சிலருக்கு அழைப்புகள் வரலாம். பெண் பிள்ளைகளின் சுபச் சடங்குகள் நடைபெறும். பிள்ளைகளின் உத்தியோகம் சம்பந்தமாக நீங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. சமூகத்தில் பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, போட்டிக் கடை வைத்தோர் விலகுவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுப்பர். கலைஞர்களுக்கு முயற்சி களில் வெற்றி உண்டு. மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் கூடும். பெண்களுக்கு சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். பொருளாதார நிலை திருப்தி தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    நவம்பர்: 20, 21, 27, 28, டிசம்பர்: 2, 3, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

    கும்ப ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சனி வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே இனி ஆரோக்கியம் சீராகும். பம்பரமாய் சுழன்று பணிபுரிவீர்கள். மந்த நிலை மாறி மகிழ்ச்சியான நிலை அமையும். இந்த மாதத்தில் இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். தொழில் வளர்ச்சி கருதி மாற்றினத்தவர்களைப் பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ள முன்வருவீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் யோகம் உண்டு.

    குரு வக்ரம்

    மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அங்ஙனம் தன லாபாதிபதியான குரு பகவான் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் அடைகின்றார். இது அவ்வளவு நல்லதல்ல. தன வரவில் தடைகள் ஏற்படும். புதியவர்களை நம்பிப் பொறுப்பை ஒப்படைத்து ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். மேலும் உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் வரலாம். இதுபோன்ற நேரங்களில் வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து குரு பகவானை வணங்குவது நல்லது. திசைமாறிய தென்முகக் கடவுளை வழிபட்டு வந்தால் மிகுந்த நன்மையை வழங்கும்.

    விருச்சிக - சுக்ரன்

    கார்த்திகை 11-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வந்து அங்குள்ள செவ்வாய் மற்றும் சூரியனோடு இணைகிறார். எனவே 'சுக்ர மங்கள யோகம்' உருவாகிறது. பிள்ளைகளின் கல்யாணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பெற்றோரின் மணிவிழா, முத்துவிழா, பவளவிழா போன்றவை நடைபெறும் சூழல் உண்டு. ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

    தனுசு - செவ்வாய்

    கார்த்திகை 20-ந் தேதி, தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல நேரம்தான். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது அதிக விலைக்கு விற்று லாபத்தைக் கொடுக்கும். புதிய கூட்டாளிகள் வந்திணையலாம். தள்ளிச் சென்ற ஒப்பந்தங்கள் தானாக வந்துசேரும். அரசு வழியிலும் சலுகைகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். உடன்பிறப்புகளின் திருமண விழாக்களை முன்னின்று நடத்தி வைப்பீர்கள்.

    விருச்சிக - புதன்

    கார்த்திகை 20-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரத்தில் அங்குள்ள சூரியனோடு இணைவதால் 'புத ஆதித்ய யோகம்' ஏற்படுகிறது. எனவே அரசு வழியில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். உத்தியோக முயற்சி பலன் தரும். ஊர் மாற்றம், வீடு மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். தொழிலில் பழைய கூட்டாளிகளை விலக்கி விட்டு, புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்ள முன்வருவீர்கள். உறவினர் பகை அகலும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஒரு தொகை செலவழிந்த பிறகே அடுத்த தொகை கரங்களில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாற்றமும், ஏற்றமும் உண்டு. கலைஞர்களுக்கு எண்ணங்கள் ஈடேறும். மாணவ - மாணவிகளுக்கு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு பிரச்சினைகள் படிப்படியாக குறையும். மாதக் கடைசியில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    நவம்பர்: 19, 20, 23, 24, 30, டிசம்பர்: 1, 4, 5, 15.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    மீன ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பஞ்சம ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியிலேயே பதிகிறது. ராசிநாதன் ராசியைப் பார்க்கும் இந்த நேரம் நீங்கள் யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கமும் நடைபெறுவதால் எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள்.

    குரு வக்ரம்

    மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். கார்த்திகை 2-ந் தேதி முதல் அவர் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் குரு வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. மனக்கவலை அதிகரிக்கும். குடும்பச்சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். தொழிலில் பணியாளர்களை நம்பி எதையும் செய்ய இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். இக்காலத்தில் வியாழக் கிழமைதோறும் விரதம் இருந்து குருவை வழிபடுவது நல்லது. குறிப்பாக யாரையும் நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.

    விருச்சிக - சுக்ரன்

    கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 9-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் உன்னதமான நேரமாகும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த அரசல், புரசல்கள் மாறும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பல நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த சில காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவும் கைகொடுக்கும். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் உண்டு.

    தனுசு - செவ்வாய்

    கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். தொடர்ந்து சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். சேமிப்பு உயரும் இந்த நேரத்தில் அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். அரைகுறையாக நின்ற பணியைத் தொடருவீர்கள். புதிய தொழிலால் பொருளாதார நிலை உயரும்.

    விருச்சிக - புதன்

    கார்த்திகை 20-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 9-ல் சஞ்சரிக்கும் இந்த நேரம் பொருளாதார நிலையில் திருப்தி ஏற்படும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். முன்னோர் வழி சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்கும். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு அதிகார அந்தஸ்து பெறும் வாய்ப்பு உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நட்பால் நன்மை கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவ- மாணவிகளுக்கு, ஆசிரியர்களின் ஆதரவோடு படிப்பில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும். வருமானம் உயரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    நவம்பர்: 20, 21, 26, 27, டிசம்பர்: 2, 3, 6, 7.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    • சிவனின் கண்களில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி என்பது நெருப்பை குறிப்பது.
    • கார்த்திகை மாதத்தில், அகல் விளக்கேற்றி வழிபாடு செய்யும்போது, செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

    ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் சில சிறப்புகள் உண்டு. அந்த வகையில் கார்த்திகை மாத பௌர்ணமி மிகவும் பிரசித்தி பெற்றது. சூரியன் விருச்சிக ராசியில் சஞ்சரிப்பார். அதற்கு ஏழாம் ராசியான ரிஷபத்தில் சந்திரன் உச்சநிலையில் இருப்பார்.சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் சந்திக்கும் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளே திருக்கார்த்திகை யாகும்.சிவன் ஜோதி மயமாக விண்ணுக்கும் மண்ணுக்கும் நின்ற நாள். சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து தெறித்து விழுந்த 6 தீப்பொறிகளே கந்தனாகும்.

    சிவனின் கண்களிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறியும் ஆறு ஆண் குழந்தையாக மாறியது.

    அந்த ஆறு ஆண் குழந்தையும் கிருத்திகைகள் என்று அழைக்கப்பட்ட பெண்களால் வளர்க்கப்பட்டனர். அவரே முருகப்பெருமான் ஆவார்.

    சிவனின் கண்களில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி என்பது நெருப்பை குறிப்பது. எனவேதான் திருக்கார்த்திகை அன்று அனைத்து வீடுகளிலும் வழிபாட்டு ஸ்தலங்களிலும் அகல் விளக்கு ஏற்றும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    கார்த்திகை மாதத்தில், அகல் விளக்கேற்றி வழிபாடு செய்யும்போது, செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. ஏனெனில் விளக்கின் அடிப்பாகத்தில் பிரம்மாவும், தண்டு பாகத்தில் மகாவிஷ்ணுவும், நெய் அல்லது எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும், தீபத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி தேவி, பார்வதி தேவி என முப்பெருந்தேவியர் வாசம் செய்வதாக ஐதீகம். கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வழிபடுவது மேலும் சிறப்பை தரும்.

    • ஊர் மாற்றங்கள் கேட்டு விண்ணப்பித்திருந்தால் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
    • வெளிநாட்டில் நல்ல நிறுவனங்களில் இருந்து ஒரு சிலருக்கு அழைப்புகள் வரலாம்.

    சிம்ம ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியனை குரு பார்க்கின்றார். ஜென்மத்தில் கேது சஞ்சரிக்கிறார். எனவே இனம் புரியாத கவலையும், மனக்குழப்பமும் ஏற்படும். கண்டகச் சனி ஆதிக்கம் இருப்பதால், பெற்றோரின் உடல்நலனில் தொல்லை, பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாத சிக்கல், வருமானப் பற்றாக்குறை ஏற்படும். எதிலும் கவனம் தேவை. தடைகளும், தாமதங்களும் வந்து கொண்டேயிருக்கும். தன்னிச்சையாக செயல்பட்டவர்களுக்கு, பிறரை சார்ந்திருக்கும் சூழ்நிலை உருவாகலாம். விரயங்கள் அதிகரிக்கும்.

    குரு வக்ரம்

    மாதத் தொடக்கத்தில் குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கின்றார். அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகி்றார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. சொத்துப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். சொந்தங்களின் எதிர்ப்புகளால் முடிய வேண்டிய சுபகாரியங்கள் தாமதப்படும். அதேசமயம் அஷ்டமாதி பதியாகவும் குரு பகவான் விளங்குவதால், இதுவரை முடிவடையாதிருந்த வழக்குகள் இப்பொழுது முடிவடையும். வராது என்று நினைத்த கடன் பாக்கிகள் வசூலாகும். சுபச்செய்திகள் உண்டு.

    விருச்சிக - சுக்ரன்

    கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்திற்கு வரும் இந்தநேரம், நல்ல நேரம்தான். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைப்பதோடு புதிய ஒப்பந்தங்களும் வந்து சேரும். அடகுவைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வரும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாறுதல் கிடைக்கும்.

    தனுசு - செவ்வாய்

    கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் புதிய திருப்பங்கள் ஏற்படும். பிள்ளைகளுக்குரிய திருமணம் போன்ற சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும். இடம் வாங்குவது, பூமி வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். வாங்கிய இடத்தை விற்பதன் மூலம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.

    விருச்சிக - புதன்

    கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சுக ஸ்தானத்திற்கு வரும் பொழுது பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் லாபம் உண்டு. பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியர்களின் வழி காட்டுதல் சிறப்பாக அமையும். பெண்களுக்கு பிள்ளைகளால் பெருமை சேரும். வருமானம் திருப்தி தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    நவம்பர்: 17, 20, 21, டிசம்பர்: 2, 3, 7, 8, 14, 15.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

    கன்னி ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் தன ஸ்தானத்தில் சுக்ரனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். 'புத சுக்ர யோகம்' செயல்படும் இந்த மாதத்தில் புதிய பாதை புலப்படும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கிடைக்க நண்பர்கள் உறுதுணைபுரிவர். கடன்சுமை குறையும். தொழில், உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் எளிதில் வந்து சேரும். உச்சம்பெற்ற குரு சகாய ஸ்தானத்தைப் பார்ப்பதால் எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும்.

    குரு வக்ரம்

    மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக் கிறார். அதே சமயம் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறுவது யோகம்தான். நல்ல சம்பவங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும். காரியங்கள் கைகூட நம்பிக்கைக்குரிய நண்பர்கள் வழிவகுத்துக் கொடுப்பர். கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையைச் செவ்வனே செய்து புகழ் பெறுவீர்கள். தாயின் உடல்நலம் சீராகும். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். பத்திரப் பதிவில் இருந்த தடைகள் அகலும். மொத்தத்தில் பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும் நேரம் இது.

    விருச்சிக - சுக்ரன்

    கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் வெற்றிகள் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும். குறிப்பாக சகோதர ஒற்றுமை பலப்படும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த அரசல், புரசல்கள் மாறி பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். 'சுக்ர மங்கள யோகம்' இருப்பதால் மனையில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருளாதார நிலை சீராகும். வழக்குகள் சாதகமாக அமையும்.

    தனுசு - செவ்வாய்

    கார்த்திகை 20-ந் தேதி, தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம், மிக கவனமாக செயல்பட வேண்டும். ஆரோக்கிய சீர்கேடு வந்து கொண்டேயிருக்கும். மன உறுதி குறையும். வருமானம் வரும் வழியில் குறுக்கீடுகள் ஏற்படலாம். பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகளில் இழப்புகள் ஏற்படலாம். விரயங்கள் கூடுதலாகத்தான் இருக்கும்.

    விருச்சிக - புதன்

    கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் புதன், சகாய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். இல்லத்தில் கெட்டிமேளம் கொட்டும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். பணிபுரியும் இடத்தில் சலுகைகள் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். மாணவ- மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு நிம்மதி கிடைக்கும். நிலையான வருமானம் உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    நவம்பர்: 18, 19, 23, 24, டிசம்பர்: 4, 5, 9.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    துலாம் ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு புதன் இணைந்து 'புத சுக்ர யோகம்' உருவாகிறது. எனவே பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய திருப்பங்கள் ஏற்படும். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். 'பழைய தொழிலைப் பைசல் செய்துவிட்டு, புதிய தொழில் தொடங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். கூடுதலாக உழைத்தாலும் அதற்குரிய பலன் கிடைக்கும் நேரம் இது.

    குரு வக்ரம்

    மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். இது அவ்வளவு நல்லதல்ல. '10-ல் குரு பதவியில் மாற்றம்' என்பது ஜோதிடப் பொன்மொழி. ஆனால் அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது மிகுந்த நற்பலன்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டும். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், உத்தியோகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு திரவிய லாபங்கள் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு அழைப்புகள் வரலாம்.

    விருச்சிக - சுக்ரன்

    கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். ராசிநாதன் தன ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். தேர்ந்தெடுத்த களம் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். தெய்வீகப் பயணங்கள் அதிகரிக்கும். இந்த நேரத்தில் இதைச் செய்வோமா? அதைச் செய்வோமா? என்று சிந்திப்பீர்கள். நல்ல சம்பவங்கள் நடைபெறும் நேரமிது. நாட்டுப்பற்று மிக்கவர்களின் கூட்டு முயற்சி பலன் தரும்.

    தனுசு - செவ்வாய்

    கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். செய்ய நினைத்த காரியத்தை செய்ய நினைத்த நேரத்தில் செய்து முடித்து வெற்றி காண்பீ்ர்கள். பணிபுரியும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தனவரவும் திருப்தி தரும்.

    விருச்சிக - புதன்

    கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 12-க்கு அதிபதி புதன் 2-ல் வரும் இந்த நேரம் செலவிற்கு ஏற்ப வரவு வந்துசேரும். சேமிக்க இயலாது. முந்தைய சேமிப்பில் கொஞ்சம் கரையலாம். இடமாற்றம், ஊர் மாற்றம் உத்தியோக மாற்றம், வாகன மாற்றம் போன்றவை வருவதற்கான அறிகுறி தென்படும். எதிலும் யோசித்துச் செயல்படுவது நல்லது. நீண்ட நாட்களுக்கு முன் ஏற்பட்ட நோய் மீண்டும் தலைதூக்கலாம். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பதவி மாற்றம் உண்டு. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய சூழல் உருவாகும். கலைஞர் களுக்கு நட்பு கைகொடுக்கும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் உயரும். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    நவம்பர்: 20, 21, 25, 26, டிசம்பர்: 7, 8, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர்பச்சை.

    விருச்சிக ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியை உச்சம்பெற்ற குரு பார்க்கிறார். 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப, தொட்டது துலங்கும். தொழில், முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். வெற்றிக் கனியை எட்டிப் பிடிப்பீர்கள். முக்கியப் புள்ளிகள் வீடு தேடி வந்து வாழ்த்துவர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். குலதெய்வ வழிபாடும், திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடும், நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலம் கிடைக்க உறுதுணையாக இருக்கும்.

    குரு வக்ரம்

    மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சிக்கிறார். அவரது முழுமையான பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகமாகும். தொட்ட காரியங்கள் வெற்றி பெறவும், தொழில் முன்னேற்றம் ஏற்படவும், வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரவும் குருவின் பார்வை வழிவகுக்கும். அப்படிப்பட்ட குருபகவான் உங்கள் ராசிக்கு தன - பஞ்சமாதிபதி ஆவார். அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். வக்ரம் பெற்றாலும் உச்சம் பெற்ற குரு என்பதால் கவலைப்படத் தேவையில்லை. ஒருசில நல்ல காரியங்கள் தடைப்பட்டாலும், கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.

    விருச்சிக - சுக்ரன்

    கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் இந்த நேரம் 'சுக்ர மங்கள யோகம்' செயல்படும். இதன் விளைவாக ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். உடன்பிறப்புகளின் வழியே வரும் சுபகாரியங்களை சிறப்பாக முடித்து கொடுப்பீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். அரசு அனுகூலம் உண்டு.

    தனுசு - செவ்வாய்

    கார்த்திகை 20-ந் தேதி, தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதன் 2-ம் இடம் எனப்படும் தன ஸ்தானத்திற்கு செல்லும் இந்த நேரம் தனவரவு தாராளமாக வந்துசேரும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதுவரை வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்ற எடுத்த முயற்சி கைகூடும். போட்டிக் கடை வைத்தோர் விலகுவர். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    விருச்சிக - புதன்

    கார்த்திகை 20-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு லாபாதிபதி புதன். அவர் ராசிக்கு வரும் இந்த நேரம் பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்க நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். புதிய சந்தர்ப்பங்கள் தொழில் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும் என்ற சிந்தனை மேலோங்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் தேடிவரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ- மாணவிகளுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    நவம்பர்: 17, 23, 24, 28, 29, டிசம்பர்: 8, 9, 10, 14, 15.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    • குழந்தைகள் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகள் யாவிலும் வெற்றி கிடைக்கும்.
    • பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். மண், பூமி வாங்கும் யோகம் உண்டு.

    மேஷ ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகி பலம்பெறுகின்றார். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய திட்டங்கள் வெற்றி பெறும். அருளாளர்களின் ஆசியும், அன்பு நண்பர்களின் ஆதரவும் திருப்தி தரும். ராசிநாதன் செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியுடன் இணைந்து விருச்சிக ராசியில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரத்தோடு இருந்த பகைமாறும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

    குரு வக்ரம்

    மாதத் தொடக்கத்தில் குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடம் எனப்படும் சுக ஸ்தானத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குருபகவான். எனவே இந்த வக்ர காலத்தில் வளர்ச்சியும் உண்டு, தளர்ச்சியும் உண்டு. நினைத்தது நிறைவேறாமலும் போகலாம். நடக்காது என்று நினைத்த காரியம் நடைபெற்று மகிழச்சியை வழங்கலாம். இருப்பினும் இக்காலத்தில் குரு வழிபாடு அவசியம் தேவை.

    விருச்சிக - சுக்ரன்

    கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அவர் உங்களுக்கு யோகத்தை வழங்கப்போகிறார். அங்குள்ள சூரியன், செவ்வாயோடு இணைகின்றார். எனவே 'சுக்ர மங்கள யோகம்' உருவாகிறது. இதனால் கல்யாணக் கனவுகள் நனவாகும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கையும் உண்டு. உடன்பிறப்புகள் மூலம் ஒரு நல்ல தகவல் கிடைக்கும். அரசு வழியில் வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, இப்பொழுது நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைத்து, வேலையும் கிடைத்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.

    தனுசு - செவ்வாய்

    கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதனாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்கும் செவ்வாய், தற்சமயம் 9-ம் இடத்திற்கு வரும்பொழுது பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகின்றது. எனவே கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். இதுவரை சேமித்த சேமிப்பை இப்பொழுது அசையா சொத்தாக மாற்ற முயற்சிப்பீர்கள். பத்திரப்பதிவில் இருந்த தடைகள் அகலும். மூடிக்கிடந்த தொழிலுக்கு திறப்பு விழா நடத்துவீர்கள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க சகோதரர்கள் உதவுவர்.

    விருச்சிக - புதன்

    கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் இந்தநேரம், ஒரு அற்புதமான நேரமாகும். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப படிப்படியாக தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். அடிப்படை வசதிகள் பெருகும். ஆனந்த வாழ்க்கை மலரும். குழந்தைகள் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகள் யாவிலும் வெற்றி கிடைக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் உண்டு. வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு விடிவு காலம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு நினைத்தது நடக்கும். மாணவ - மாணவியர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு கடன் என்ற மூன்றெழுத்து தீரும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    நவம்பர்: 23, 24, 27, 28, டிசம்பர்: 4, 5, 8, 9.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    ரிஷப ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், தன - பஞ்சமாதிபதி புதனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். அந்த வகையில் 'புத சுக்ர யோகம்' ஏற்படுவதால் பொன், பொருள் சேர்க்கை உண்டு. பூமியால் லாபம் வந்துசேரும். புதிய முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டு. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் பதிவதால் கல்யாண முயற்சிகள் கைகூடும். சுபச்செய்திகள் அதிகம் கேட்கும் மாதம் இது.

    குரு வக்ரம்

    மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகைக் கிரகம் என்பதால், இந்த வக்ர காலம் வளர்ச்சி அதிகரிக்கும் காலமாகவே இருக்கும். திட்டமிடாமலேயே சில காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழிலில் திடீர் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், இலாகா மாற்றம் ஏற்படலாம். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சி பலன் தரும்.

    விருச்சிக - சுக்ரன்

    கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியையே பார்ப்பது யோகம்தான். இது ஒரு பொன்னான நேரம் மட்டுமல்ல புதிய திருப்பங்கள் ஏற்படும் நேரமும் ஆகும். அங்குள்ள சூரியன் மற்றும் செவ்வாயோடு சுக்ரன் இணைவதால் 'சுக்ர மங்கள யோகம்' ஏற்படுகிறது. எனவே உங்களுக்கோ, உங்கள் உடன்பிறப்புகளுக்கோ, தாமதித்த திருமணம் தடையின்றி நடைபெறும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    தனுசு - செவ்வாய்

    கார்த்திகை 20-ந் தேதி, தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் அஷ்டமத்திற்கு வரும் இந்த நேரம் ஆரோக்கியத் தொல்லை உண்டு. அதனால் மனக்கலக்கமும், மருத்துவச் செலவும் அதிகரிக்கும். 'சேமிப்பு கரைகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. இடமாற்றம், ஊர் மாற்றம் எதிர்பாராமல் வந்துசேரும்.

    விருச்சிக - புதன்

    கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் பொன்னான நேரமாகும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். மண், பூமி வாங்கும் யோகம் உண்டு. மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். பயணங்களால் பலன் உண்டு.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு நட்பால் நன்மை கிடைக்கும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    நவம்பர்: 25, 26, 27, 30, டிசம்பர்: 1, 7, 8, 9.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    மிதுன ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு பலம் பெற்ற சுக்ரன் இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்கும் விதத்தில் இருப்பதால் செல்வ நிலை உயரும். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். தொழில் வளர்ச்சியில் இருந்த இடையூறு அகலும். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், குழந்தைகளால் வரும் பிரச்சினைகளை சமாளித்து விடுவீர்கள். நீண்டநாளாக எதிர்பார்த்த ஒரு சில நல்ல காரியங்கள் இப்பொழுது நிறைவேறுவதற்கான அறிகுறி தென்படும்.

    குரு வக்ரம்

    மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் உச்சம்பெற்று சஞ்சரிக்கிறார். எனவே தன ஸ்தானம் வலுவடைகின்றது. ஆனால் அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். எனவே வருமானம் தட்டுப்பாடுகளும் வரலாம். திசாபுத்தி பலம் இழந்திருப்பவர்களுக்கு கடன், கைமாற்று வாங்கும் சூழல் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நல்ல பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு சாதாரணப் பொறுப்பிற்கு மாற்றப்படலாம். குடும்பத்தில் பல பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

    விருச்சிக - சுக்ரன்

    கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 12-க்கு அதிபதி 6-ம் இடத்திற்கு வரும் பொழுது சில நல்ல சம்பவங்கள் நடைபெறும். குறிப்பாக உத்தியோகத்தில் மாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு அது நடைபெறும். புகழ்பெற்ற ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வரவேண்டும் என்று சிந்தித்தவர்களுக்கு அது கைகூடும். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசு வழி ஆதரவு உண்டு.

    தனுசு - செவ்வாய்

    கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் இடமாற்றம், ஊர் மாற்றம் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். கொடுக்கல் - வாங்கல்களில் இருந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாக அகலும். இளைய சகோதரத்துடன் இணக்கம் ஏற்படும். கல்யாண முயற்சிகளில் இருந்த தடை அகலும். பூமி விற்பனையில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    விருச்சிக - புதன்

    கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கும், 4-ம் இடத்திற்கும் அதிபதியானவர் புதன். அவர் 6-ம் இடத்திற்கு வருவது யோகம்தான். நிறைந்த தன லாபம் தரக்கூடிய விதத்தில் சில வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். பிரபலமானவர்களின் பின்னணியில் சுபகாரியங்கள் நடைபெறும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். கல்விக்காகவும், கலை சம்பந்தமாகவும் எடுத்த முயற்சி கைகூடும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவி உண்டு. கலைஞர்களுக்கு நம்பிக்கைகள் நடைபெறும். மாணவ - மாணவி களுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உண்டு. பெண்களின் எண்ணங்கள் ஈடேறும். வருமானம் திருப்தி தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    நவம்பர்: 17, 27, 28, டிசம்பர்: 2, 3, 8, 9.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    கடக ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே அஷ்டமத்துச் சனி வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெறுகிறார். எனவே எதிலும் நிதானமும், பொறுமையும் தேவை. விரயங்கள் கூடுதலாகத்தான் இருக்கும். உடல்நலத்திலும் அக்கறை காட்டுங்கள். எவ்வளவு தொகை வந்தாலும், அது சேமிப்பாக மாறாது. முயற்சிகளில் தடைகள் ஏற்படும். சனிப்பெயர்ச்சி வரை சற்று பொறுமையாகச் செயல்படுவது நல்லது. பணிபுரியும் இடத்தில் பதற்றம் வேண்டாம். பணப்பொறுப்பு சொல்லி யாருக்கேனும் தொகை வாங்கிக் கொடுத்தால் அதில் சிக்கல்கள் ஏற்படலாம். குறிப்பாக குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் கைகொடுக்கும்.

    குரு வக்ரம்

    மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசியிலேயே உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே குரு பார்த்தாலும், சேர்ந்தாலும் கோடி நன்மை என்பதற்கிணங்க தீமைகள் விலக வழிவகுத்துக் கொடுப்பார். கார்த்திகை 2-ந் தேதி முதல் கடக குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், குரு. 6-க்கு அதிபதியான அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். என்றாலும் 9-ம் இடம் எனப்படும் பாக்கிய ஸ்தானத்திற்கும் குருவே அதிபதி என்பதால், பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். குடும்பப் பிரச்சினைகளைக் கவனமுடன் கையாள்வது நல்லது.

    விருச்சிக - சுக்ரன்

    கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பஞ்சம ஸ்தானம் வரும்பொழுது இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும். ஏற்றத் தாழ்வு இல்லாத நிலை வந்து சேரும். உள்ளத்தில் எதை நினைத்தீர்களோ, அதை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    தனுசு - செவ்வாய்

    கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 6-ல் சஞ்சரிக்கும் பொழுது ஜீவன ஸ்தானம் பலப்படுகின்றது. எனவே செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் விலகுவர். ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள், உங்களுக்கு அறிமுகமாவார்கள். தொழிலில் அதிரடி மாற்றங்களைச் செய்து மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள்.

    விருச்சிக - புதன்

    கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகள் வழியில் விரயங்கள் ஏற்படும். பூர்வீகச் சொத்துக்களை முறையாக பாகப்பிரிவினை செய்துகொண்டு வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் வந்துசேரும். நல்ல சந்தர்ப்பங்கள் பலவும் வந்துசேரும் நேரம் இது. வருமானம் உச்சம்பெறும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் பொறுப்புகளில் மாற்றம் ஏற்படலாம். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் பிற்பாதி மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் எளிதில் கிடைக்கும். கலைஞர்களுக்கு எண்ணங்கள் ஈடேறும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அதிக கவனம் தேவை. பெண்களுக்கு சுபச்செய்திகள் வந்துசேரும். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    நவம்பர்: 19, 20, 30, டிசம்பர்: 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    • தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார்.
    • சபரிமலைக்கு வரும் பக்தர்கள் 18-ம் படிக்கு மேல் சன்னிதானம் பகுதியில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு 60 நாட்கள் நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள் விரதத்தை கடைபிடிப்பார்கள். பிறகு இருமுடி கட்டியபடி சபரிமலைக்கு வந்து ஐயப்பனை பயபக்தியுடன் தரிசனம் செய்வார்கள்.

    அந்த வகையில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார்.

    இதனை தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். பிறகு சபரிமலை, மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல் சாந்திகள் பிரசாத் நம்பூதிரி மற்றும் மனு நம்பூதிரி ஆகியோர் மூலம் மந்திரம் சொல்லி பொறுப்பேற்று கொள்வார்கள். மேலும் இருவரும் தந்திரி முன்னிலையில் அபிஷேகம் செய்யப்படுவார்கள்.

    மறுநாள் 17-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜை, வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும். கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி தலைமையில் தினசரி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து காலை 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் நடைபெறும். அத்தாள பூஜைக்கு பிறகு இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.

    நடப்பு சீசனையொட்டி அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.

    சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் 18-ம் படிக்கு மேல் சன்னிதானம் பகுதியில் செல்போன் பயன்படுத்தவும், புகைப்படம், வீடியோ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சீசனையொட்டி நிலக்கல், எருமேலியில் ஒரே நேரத்தில் 14 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும்.

    மாத பூஜை நாட்களில் பம்பையில் ஹில்டாப் மற்றும் ஜக்கு பாலம் பகுதியில் சிறிய வாகனங்கள் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது சீசனிலும் இதே நிலை தொடரும். இந்த இரு இடங்களில் 2 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தம் செய்யலாம்.

    சீசன் சமயத்தில் மாநில எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் விபத்து மூலம் மரணம் அடைந்தால் விபத்து காப்பீடாக பக்தர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். மேலும், உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல (வெளி மாநிலங்களுக்கு) ரூ.1 லட்சம் வரையிலான செலவை திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஏற்றுக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நடப்பு மண்டல பூஜையையொட்டி சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த 1-ந் தேதி தொடங்கியது. தற்போது ஒரு மாத காலத்திற்கான முன்பதிவு (தினசரி 70 ஆயிரம்) முடிந்து விட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் உடனடி தரிசன முன்பதிவு சேவையை (தினமும் 20 ஆயிரம் பக்தர்கள்) பயன்படுத்தி கொள்ளலாம் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு அபிஷேகம்
    • திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஐப்பசி-29 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : ஏகாதசி நாளை விடியற்காலை 5.39 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம் : உத்திரம் பின்னிரவு 3.07 மணி வரை பிறகு அஸ்தம்

    யோகம் : மரணயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருவல்லிக்கேணி வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம், திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு அபிஷேகம்

    திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு அபிஷேகம். தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரக தாம்பிகை தென்காசி சங்கரநயினார் கோவில், பத்தமடை கோவில்களில் ஸ்ரீ அம்பாள் திருக்கல்யாணம். கடையம் ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கல்யாணம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பன் விருஷப சேவை, கம்பை ஆற்றில் கதிர் குளித்தல், இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாணம். மாயவரம் ஸ்ரீ கவுரீமாயூரநதர் கோவிலில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு. ரதாரோகணம் திருத்தேர் வடம் பிடித்தல். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரங்கநாதர் காலை வெண்ணைத்தாழி சேவை. இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் திருவீதி புறப்பாடு.

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜ கோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி திருமஞ்சனம். திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள், திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜர் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-உறுதி

    மிதுனம்-திடம்

    கடகம்-திறமை

    சிம்மம்-சிறப்பு

    கன்னி-தனம்

    துலாம்- வெற்றி

    விருச்சிகம்-இன்பம்

    தனுசு- நிறைவு

    மகரம்-ஜெயம்

    கும்பம்-நேர்மை

    மீனம்-ஈகை

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    உற்சாகம் அதிகரிக்கும் நாள். உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் அகலும்.

    ரிஷபம்

    யோகமான நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்த முயற்சி எடுப்பீர்கள்.

    மிதுனம்

    செல்வாக்கு உயரும் நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பால் பிரச்சனைகள் தீரும்.

    கடகம்

    உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். நண்பர்கள் நம்பிக்கைகுரியவிதம் நடந்துகொள்வர்.

    சிம்மம்

    பற்றாக்குறை அகலும் நாள். பாசம் மிக்கவர்களின் நேசம் கிட்டும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு. உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.

    கன்னி

    நட்பால் நன்மை கிட்டும் நாள். நாகரீகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செய்தொழிலில் மாற்றங்கள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.

    துலாம்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். நீங்கள் தேடிச் செல்ல நினைத்த ஒருவர் உங்கள் இல்லம் தேடி வருவார்.

    விருச்சிகம்

    தெய்வீகச் சிந்தனை மேலோங்கும் நாள். திடீர் வரவு உண்டு. வரன்கள் முடிவாகும். பாராட்டும், புகழும் கூடும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    தனுசு

    சந்தோஷம் கூடும் நாள். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். உறவினர்களின் உதவிகளைப் பெற்று மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.

    மகரம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். வரவை விடச் செலவு கூடும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் தொல்லை உண்டு.

    கும்பம்

    எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்துச் செய்ய வேண்டிய நாள். எடுத்த முயற்சிகளில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும்.

    மீனம்

    சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். செல்வந்தர்களின் ஆதரவு உண்டு. அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணியை மீதியும் தொடருவீர்கள்.

    • கோவிலின் வாசலில் மூன்று நிலை ராஜகோபுரம் அழகுடன் காணப்படுகிறது.
    • கிழக்கு பிரகாரத்தில் பைரவர், கால பைரவர், சூரியன், சனீஸ்வரன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

    திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகே திருமங்கலம் எனும் அமைந்துள்ளது, சாமவேதீஸ்வரர் திருக்கோவில். இத்தல இறைவனின் திருநாமம் சாமவேதீஸ்வரர், இறைவியின் திருநாமம் உலகநாயகி என்பதாகும்.

    தல வரலாறு

    தன் தாயை கொன்றதால் பரசுராமருக்கு மாத்ருஹத்தி எனும் தோஷம் ஏற்பட்டது. இதனால் பரசுராமர் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டார். இதையடுத்து அவரது தோஷம் நீங்கியது. இதன் காரணமாக இங்குள்ள தீர்த்தம் 'பரசுராம தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த ஊருக்கு 'பரசுராமேஸ்வரம்' என்ற பெயரும் உள்ளது.

    சண்டிகேஸ்வரருக்கு, தனது தந்தையை கொன்றதால் பித்ருஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்க சண்டிகேஸ்வரர் பல ஆலயங்களுக்கு சென்று வழிபட்டார். ஆனால் எங்கு சென்றும் அவரது தோஷம் நீங்கவில்லை. இதையடுத்து இத்தலத்துக்கு வந்து, இறைவனின் சன்னிதிக்கு இடதுபுறம் இருந்து இறைவனை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார். இத்தலத்தில் அர்த்தமண்டபத்தின் நுழைவுவாசலில் சண்டிகேஸ்வரரின் திருமேனி காணப்படுகிறது. இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத தனிச் சிறப்பாகும்.

    கோவில் அமைப்பு

    கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலின் வாசலில் மூன்று நிலை ராஜகோபுரம் அழகுடன் காணப்படுகிறது. ராஜகோபுரத்தை கடந்ததும், தனி மண்டபத்தில் கொடி மர விநாயகர் அருள்பாலிக்கிறார். அடுத்ததாக, கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன.

    கருவறையில் இறைவன் சாமவேதீஸ்வரர் லிங்க திருமேனியில் காட்சி தருகிறார். இறைவனின் தேவகோட்டத்தின் தென் திசையில் பிச்சாடனார், தட்சிணாமூர்த்தி, உதங்க முனிவர் ஆகியோர் உள்ளனர். வடதிசையில் பிரம்மாவும், விஷ்ணு துர்க்கையும் காணப்படுகின்றனர். உலக நாயகி அம்பாள் தனிச் சன்னிதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இறைவியின் நுழைவுவாசலில் துவாரபாலகிகளின் சுதை சிற்பங்கள் அழகாக காணப்படுகிறது.

     

    வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான்

    கோவிலின் கிழக்கு பிரகாரத்தில் தனிச் சன்னிதியில் முருகப்பெருமான் காட்சி தருகிறார். வள்ளிதேவியை மணந்த பிறகு முருகன் இத்தலத்தில் எழுந்தருளியதாக கூறப்படுகிறது. பொதுவாக முருகப்பெருமான் வள்ளி - தெய்வானையுடன் நின்ற கோலத்தில் தான் காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில் முருகப்பெருமான் தெய்வானையுடன் நின்ற கோலத்தில் இருக்க, வள்ளிதேவி மயிலின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். இங்குள்ள முருகன் 12 கரங்களுடன் இல்லாமல் ஆறுமுகத்துடனும், நான்கு திருக்கரங்களுடனும் பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.

    கோவிலின் தெற்கு பிரகாரத்தில் பரசுராமர் பூஜை செய்த லிங்கம் உள்ளது. வடக்கு பிரகாரத்தில் அப்பர், சம்பந்தர், ஆனாய நாயனார், பாணலிங்கம், சண்டிகேஸ்வரர் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். கிழக்கு பிரகாரத்தில் பைரவர், கால பைரவர், சூரியன், சனீஸ்வரன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் வட கிழக்கு மூலையில் நவக்கிரகங்கள் உள்ளன.

    வழிபாடு

    பொதுவாக கோவில்களில் சனி பகவானின் வாகனமான காகம் தெற்கு நோக்கி இருப்பது வழக்கம். ஆனால் இங்கு சனி பகவானின் வாகனம் வடக்கு திசை நோக்கி அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும். சனிப்பெயர்ச்சியின்போது இங்குள்ள சனி பகவானுக்கு விசேஷ பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெறும். அர்த்தஜாம பூஜையின்போது பைரவரின் பாதத்தில் வைக்கப்படும் விபூதியை பூசினால் சகலவிதமான பில்லி, சூனியம், நோய்கள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    மகம் நட்சத்திரம் அன்றும், சனிக்கிழமை அன்றும் இக்கோவிலில் 11 முறை வலம் வந்து, தேனில் ஊறிய பலாச்சுளையை தானம் செய்தால் நீண்ட ஆயுளை பெறலாம் என்கிறார்கள்.

    அமைவிடம்

    திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமங்கலம் கிராமத்தில் சாம வேதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    • பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐயப்பன் கோவில் இருக்கிறது.
    • சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் கோவில்கள் காணப்படுகின்றன.

    சபரிமலை கேரளாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்களில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணிய தலமாகும். மகிஷி என்ற பெயர் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என வழங்கப்படுகிறது.

    பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐயப்பன் கோவில் இருக்கிறது. இந்த கோவில் ஒரு மலையின் உச்சியில் இருக்கிறது.

    மேலும் சராசரியான கடல் நீர்மட்டத்துடன் ஒப்பிடும்போது 914 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. மேலும் மலைகள் மற்றும் காடுகளால் சூழ்ந்துள்ளது. சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் கோவில்கள் காணப்படுகின்றன. நிலக்கல், காளகெட்டி மற்றும் கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நாம் நடைமுறைச் சார்ந்த மற்றும் குறைபடாத கோவில்களை காணலாம்.

    இதர மலைகளில் பழங்காலத்து கோவில்களின் எஞ்சிய பிழைத்துக் கொண்ட பாகங்களை காணலாம். ஆண்டுதோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் சபரிமலைக்கு புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் புனித பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியதலம் சபரிமலையே ஆகும்.

    சபரிமலைக்கு புனித பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும், சாதி, மத, இன, தகுதி அல்லது சமூக அந்தஸ்து போன்ற வேறுபாடுகளை பொருட்படுத்தாமல் ஒரே மனதுடன் ஒரே வேட்கையுடனும் ஒரே மந்திரத்தை உட்கொண்டும் அதாவது இறைவனை சுவாமி ஐயப்பன் திருவடிகளை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் புனிதப்பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

    இருந்தாலும் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சமூக ரீதியாக இப்பயணத்தை மேற்கொள்வதில்லை. மேலும் கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. சுவாமி ஐயப்பனை சார்ந்த வரலாறு கதைகளில் வீட்டு விலக்குரிய பெண்கள் இங்கு வருவதற்கு அனுமதி இல்லை எனவும், மேலும் இதர பல காரணங்களாலும் பொதுவாக பெண்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிவதில்லை.

    இதற்கான முக்கிய காரணம் சுவாமி ஐயப்பன் ஒரு பிரமச்சாரி என்ற ஐதீகமே. மண்டல என அறிவிக்கப்பட்ட நாட்களிலும் (தோராயமாக நவம்பர் 15 முதல் டிசம்பர் 26 வரையிலும்), மகர விளக்கன்றும் (ஜனவரி 14 மகா சங்கராந்தி) மற்றும் விஷூ (ஏப்ரல் 14-ந் தேதி) மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களில் மட்டும் கோவில் பிரார்த்தனை செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது.

    • முருகனுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பது போல, ஐயப்ப சுவாமிக்கும் ஆறுபடை வீடுகள் உண்டு.
    • குளத்துபுழாவில் பாலகனாக ஐயப்பன் காட்சி தருகிறார்.

    முருகனுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பது போல, ஐயப்ப சுவாமிக்கும் ஆறுபடை வீடுகள் உண்டு. அவை

    பந்தளம்:- சபரிமலைக்குச் செல்லும் வழியில் உள்ளது பந்தளம். இங்கு ஐயப்பன், மணிகண்ட பாலகனாக நின்ற நிலையில் தரிசனம் தருகிறார். இங்குள்ள விக்ரகம் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.

    குளத்துபுழா:- பாலகனாக ஐயப்பன் காட்சி தருகிறார்.

    எருமேலி:- இங்கு எருமை முகத்துடன் திரிந்த மகிஷின் மீது நின்று அவளை வதம் செய்தார். இங்கு ஐயப்பன் தர்ம சாஸ்தாவாக காட்சிதருகிறார். இங்கு ஐயப்பசாமியின் தோழர் வாவர் பள்ளிவாசல், கோட்டை கருப்புசாமி கோவில்கள் உள்ளன.

    அச்சன்கோவில்:- இங்கு சுவாமி, வன அரசனாக காட்சி தருகிறார்.

    ஆரியங்காவு:- இங்கு சாஸ்த பூர்ணா, புஷ்கலா தேவியர்களுடன் கல்யாண கோலத்தில் காட்சி தருகிறார்.

    சபரிமலை:- சபரி பீடமே சபரி மலையானது.

    ×