என் மலர்tooltip icon

    வழிபாடு

    • வீரவநல்லூர் மரகதாம்பிகை ஊஞ்சல் சேவை.
    • திருச்சானூர் பத்மாவதி தாயார் ரத உற்சவம்.

    இந்த வார விசேஷங்கள்

    18-ந் தேதி (செவ்வாய்)

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * சுவாமிமலை முருகப் பெருமானுக்கு ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * வீரவநல்லூர் மரகதாம்பிகை ஊஞ்சல் சேவை.

    * சமநோக்கு நாள்.

    19-ந் தேதி (புதன்)

    * அமாவாசை.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    20-ந் தேதி (வியாழன்)

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    21-ந் தேதி (வெள்ளி)

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    * திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் பவனி.

    * சமநோக்கு நாள்.

    22-ந் தேதி (சனி)

    * திருத்தணி கவுரி விரதம்.

    * திருவரங்கம் நம்பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    23-ந் தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.

    * திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    24-ந் தேதி (திங்கள்)

    * திருச்சானூர் பத்மாவதி தாயார் ரத உற்சவம்.

    * திருவண்ணாமலை அருணாசலேசுவரர் விழா தொடக்கம்.

    * திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம்.

    * பழனி ஆண்டவர் விழா தொடக்கம்.

    * கீழ்நோக்கு நாள்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.
    • குரங்கணி ஸ்ரீ முத்து மாலையம்மனுக்கு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை-2 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : திரயோதசி காலை 8.31 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம் : சித்திரை காலை 6.59 மணி வரை பிறகு சுவாதி

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் அபிஷேகம்

    இன்று மாத சிவராத்திரி. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை ஊஞ்சலில் காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்.

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம். குரங்கணி ஸ்ரீ முத்து மாலையம்மனுக்கு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆதரவு

    ரிஷபம்-திடம்

    மிதுனம்-வெற்றி

    கடகம்-பக்தி

    சிம்மம்-நன்மை

    கன்னி-விருத்தி

    துலாம்- செலவு

    விருச்சிகம்-அமைதி

    தனுசு- பண்பு

    மகரம்-வரவு

    கும்பம்-பெருமை

    மீனம்-உயர்வு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    யோகமான நாள். தள்ளிச் சென்ற காரியம் தானாக முடிவடையும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.

    ரிஷபம்

    தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பக்கத்திலுள்ளவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். உத்தியோக உயர்வு உண்டு.

    மிதுனம்

    எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். வருமான அதிகரிப்பிற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்.

    கடகம்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் இடர்பாடுகள் ஏற்படும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும்.

    சிம்மம்

    நினைத்தது நிறைவேறும் நாள். தனவரவு திருப்தி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

    கன்னி

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

    துலாம்

    புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். நாகரீகப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பப் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும்.

    விருச்சிகம்

    செல்வநிலை உயரும் நாள். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். இல்லத்தில் சுபகாரியம் நடைபெறும்.

    தனுசு

    உள்ளம் மகிழும் நாள். உடன் இருப்பவர்களின் உதவி கிட்டும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.

    மகரம்

    ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அக்கம்பக்கத்து வீட்டாரின் பகை மாறும். கடன் பிரச்சனைகளை சமாளிப்பீர்கள்.

    கும்பம்

    வசதிகள் பெருகும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அன்புக்கு பாத்திரமாவீர்கள்.

    மீனம்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவை காட்டிலும் செலவு கூடலாம். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். உத்தியோகத்தில் வீண் பழிகள் வரலாம்.

    • கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ஆகியவற்றுக்கான தரிசன டிக்கெட்டுகளை 21-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
    • ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 25-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.

    திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் வழிபட ஆன்லைனில் பல்வேறு தரிசன டிக்கெட்டுகள், தங்குமிட அறைகள் ஒதுக்கீடு வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி கோவிலில் உள்ள ஆர்ஜித சேவைகளான சுப்ர பாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை போன்ற டிக்கெட்டுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

    இந்த ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை 20-ந்தேதி காலை 10 மணி வரை மின்னணு டிப் செய்ய ஆன்லைனில் பதிவு செய்யலாம். 20-ந் தேதி முதல் 22-ந் தேதி மதியம் 12 மணிக்கு முன் பணம் செலுத்தியவர்களுக்கு இந்த டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

    கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ஆகியவற்றுக்கான தரிசன டிக்கெட்டுகளை 21-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

    அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கான ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 10 மணிக்கும், ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் காலை 11 மணிக்கும், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான டோக்கன்கள் மாலை 3 மணிக்கும் வெளியிடப்படும். ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 25-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.

    பக்தர்கள் ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகள், தங்குமிட டிக்கெட்டுகள் ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    • சபரிமலை ஐயப்பன் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு சன்னிதானம் நடை திறக்கப்பட்டு மண்டல பூஜைகள் தொடங்கின.
    • சபரிமலையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மண்டல பூஜை, மகர விளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாலை அணிவது வழக்கம். 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

    அந்த வகையில், இந்த ஆண்டு கார்த்திகை மாதம் இன்று பிறந்ததையொட்டி சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    இதற்காக, பக்தர்கள் தங்களின் இஷ்ட தெய்வங்களை வணங்கி அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று குருசாமி, கோவில் குருக்கள் முன்னிலையில் பயபக்தியுடன் சரண கோஷம் முழங்க மாலைகளை அணிந்து கொண்டார்கள்.



    இதற்கிடையே, சபரிமலை ஐயப்பன் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு சன்னிதானம் நடை திறக்கப்பட்டு, மண்டல பூஜைகள் தொடங்கின. இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

    அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் பெரிய நடை பந்தல், சிறிய நடை பந்தல் போன்ற இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
    • திருச்சேறை ஸ்ரீசாரதர் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை-1 (திங்கட்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : துவாதசி காலை 6.53 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம் : சித்திரை (முழுவதும்)

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    பிரதோஷம், ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் விழா

    இன்று பிரதோஷம். சபரிமலை ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் விழா. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் அலங்கார திருமஞ்சன சேவை. திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் கோவில்களில் 1008 சங்காபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சன சேவை.

    திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் மாலையில் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. திருச்சேறை ஸ்ரீசாரதர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-தனம்

    மிதுனம்-அன்பு

    கடகம்-அமைதி

    சிம்மம்-பணிவு

    கன்னி-நட்பு

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-புகழ்

    தனுசு- சுகம்

    மகரம்-ஆதரவு

    கும்பம்-நிறைவு

    மீனம்-செலவு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    யோகமான நாள். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். அலைபேசி மூலம் சுபச்செய்திகள் வந்து சேரும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.

    ரிஷபம்

    பணவரவு திருப்தி தரும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.

    மிதுனம்

    பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டும் நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்ட நாளைய பிரச்சனை oன்று நல்ல முடிவிற்கு வரும்.

    கடகம்

    நட்பு வட்டம் விரிவடையும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடைய சந்தரப்பம் கைகூடிவரும். உங்கள் யோசனைகளைக் கேட்டு நடந்தவர்கள் வாழ்த்துவர்.

    சிம்மம்

    மகிழ்ச்சி கூடும் நாள். வாழ்க்கைத் துணைக்காகச் செய்த உத்தியோக முயற்சி கைகூடும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.

    கன்னி

    குழப்பம் அகலும் நாள். கொடுத்த தொகை திரும்பக் கிடைக்கும். நிர்வாகத் திறமைகள் பளிச்சிடும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள்.

    துலாம்

    வரவு திருப்தி தரும் நாள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். உத்தியோகத்தில் உங்களின் திறமையைப் பார்த்து வியப்படைவர்.

    விருச்சிகம்

    புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். வளர்ச்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். பூமி வாங்கும் எண்ணம் கைகூடும்.

    தனுசு

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீடு மாற்றங்கள் நன்மை தரும். பணப்பற்றாக்குறை அகலும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

    மகரம்

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.

    கும்பம்

    விருப்பங்கள் நிறைவேற விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். வேலையாட்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். தொழிலில் குறுக்கீடுகள் வரலாம்.

    மீனம்

    தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். கடின முயற்சிக்குப் பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை.

    • அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி 108 சரணம் கூறி பூஜை செய்ய வேண்டும்.
    • விரத காலங்களில் தலைமுடியை வெட்டிக் கொள்வதோ, சேவிங் செய்யவோ கூடாது.

    மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டது.

    இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நாளை பிறக்கிறது. இதையொட்டி கார்த்திகை முதல் தேதியான நாளை சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.

    ஐயப்ப பக்தர்கள் விரதம் எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

    1. சபரிமலை செல்பவர்கள் ஒரு மண்டல காலம் (41 நாட்கள்) விரதம் இருக்க வேண்டும்.

    2. கருப்பு, நீலம், பச்சை, காவி போன்றவற்றில் ஏதாவது ஒரு நிற வேட்டி-சட்டையை அணிய வேண்டும்.

    3. கார்த்திகை முதல் நாள் பெற்றோரை வணங்கி அவர்களின் அனுமதி பெற்று குருசாமியின் கரங்களால் மாலை அணிந்து கொள்ளவேண்டும். பெற்றோர் மூலமும் மாலை அணிந்து கொள்ளலாம்.

    பிரம்மச்சரிய விரதம்

    4. அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி 108 சரணம் கூறி பூஜை செய்ய வேண்டும். இதேபோல சூரியன் மறைந்த பிறகு மாலையில் நீராடி 108 சரணம் கூறி ஐயப்பனுக்கு பூஜை செய்ய வேண்டும், குளிப்பதற்கு சோப்பு உபயோகிக்க கூடாது.

    5. இரவில் தூங்கும்போது தலையணை,மெத்தை உபயோகிக்க கூடாது. பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.

    6. பிரம்மச்சரிய விரதத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இது மனோவலிமையை பெருக்கி மனித வாழ்க்கையை உயர்த்துவதற்கு உதவுகிறது. அதுவும்தவிர மாதர்கள் யாவரையும் மாதாவாக காண வேண்டும். மாதவிலக்கான பெண்களுடன் பேசுவதோ, பார்ப்பதோ கூடாது.

    சைவ உணவு

    7. சைவ உணவு மட்டும் உண்ண வேண்டும். மது அருந்தக்கூடாது, பீடி, சிகரெட், பான்மசாலா போன்றவற்றை அறவே நீக்கி விட வேண்டும்.

    8. திரிகரண சுத்தி (மனம், வாக்கு, செயல்) ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும். ஐயப்பனை எண்ணத்தில் எப்போதும் மனதில் நினைத்து, பக்திப்பூர்வமாக ஐயப்பன் பாடல்களை முணுமுணுத்து கொண்டு இருந்தால் எண்ணங்கள் தூய்மையாகும். செய்யும் செயல்களும், பேசும் பேச்சுக்களும் நல்லவிதமாக அமையும்.

    9. சண்டை, சச்சரவுகளில் கலந்துகொள்ளக்கூடாது. எல்லோரிடமும் சாந்தமாக பழக வேண்டும்.

    சுவாமி சரணம்

    10. காமம், கோபம், கஞ்சத்தனம், மோகம், அகம்பாவம், துவேஷம் முதலிய குணங்களை குறைப்பதற்கு உதல எப்போதும் ஐயப்பன் திருநாமத்தை உறுதுணையாக கொள்ள வேண்டும். பக்தனின் நெஞ்சினில் எப்போதும் நிறைந்து நிற்பது ஐயப்பனின் பேரொளி திருவுருவமே ஆகும்.

    11. உரையாடும்போது சுவாமி சரணம் என்று சொல்லி தொடங்குவதும், முடிக்கும்போதும் சுவாமி சரணம் என்று சொல்லி முடிப்பதும் நன்மைகளை தரும்.

    12. ஒரு ஐயப்ப பக்தரை வழியில் காண நேர்ந்தால் அவர் தெரியாதவராக இருந்தாலும் சுவாமி சரணம் என்று வணங்க வேண்டும்.

    சுவாமி விரதம்

    13. மாலை அணிந்து காணப்படும் ஆண்களை ஐயப்பன் என்றும், பெண்களை மாளிகைப்புறம் என்றும், சிறுவர்களை மணிகண்டன் என்றும் சிறுமிகளை கொச்சு சுவாமி என்றும் அழைக்கவேண்டும்.

    14. குடை, காலணிகள், சூதாடுதல், சினிமாவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

    15. விரத காலங்களில் உணவின் அளவை குறைத்து, உடலையும் குறைத்துக் கொள்ள வேண்டும். மார்கழி மாதத்தில் 15 நாட்களாவது ஒருவேளை உணவை விடுத்து விரதம் இருக்க வேண்டும்.

    கன்னி பூஜை

    16. இலையில் சாப்பிடுவது நல்லது. உணவு உண்ண ஆரம்பிக்கும்போது ஐயப்பனை மனதில் நினைத்து, சரணம் கூறி சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.

    17. கன்னி சுவாமிகள் கன்னி பூஜை நடத்த வேண்டும். அல்லது ஒரு சுவாமிக்காவது அன்னதானம் செய்ய வேண்டும். விரத காலங்களில் இயன்றவரை அன்னதானம் செய்ய வேண்டும்.

    18. நெருங்கிய ரத்த தொடர்பு உள்ள தாய், தந்தை, சகோதரிகள் போன்றவர்களின் மரணம் ஏற்படுமாயின், மாலையைக் கழற்றி விடவேண்டும்.

    பூஜை-பஜனைகள்

    19.பெண்கள் ருது மங்கல சடங்கிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ சென்று கலந்துகொள்ளக்கூடாது.

    20. விரத காலங்களில் தலைமுடியை வெட்டிக் கொள்வதோ, சேவிங் செய்யவோ கூடாது.

    21. மாலை அணிந்த எந்த ஐயப்பன் வீட்டிலும் உணவு அருந்தலாம். கடைகளில் சாப்பிடுவது, தெருக்களில் விற்கும் பலகாரங்களை உண்பது கண்டிப்பாக கூடாது.

    22. பக்தர்கள் நடத்தும் ஐயப்ப பூஜை, பஜனைகளில் கலந்து கொள்ள வேண்டும்.

    • அனைத்து கோவில்களிலும் கார்த்திகை மாதம் 30 நாட்களும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
    • வீடுகள் தோறும் கார்த்திகை தீபம் ஏற்றி பெண்கள் வழிபடுவார்கள்.

    சபரிமலையில் புகழ்பெற்ற ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி முதல் துளசி மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டு சுமந்து செல்வது வழக்கம். மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டது.

    இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நாளை (திங்கட்கிழமை) பிறக்கிறது. இதையொட்டி கார்த்திகை முதல் தேதியான நாளை சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரையில் நாளை அதிகாலையில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கடலில் புனித நீராடி கோவில்களுக்கு சென்று துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

    இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் நாளை காலையில் மாலை அணிவதற்காக ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நாளை முதல் எங்கு பார்த்தாலும் சரண கோஷம் ஒலிக்கும். ஐயயப்ப பக்தர்கள் நீலம் மற்றும் கருப்பு நிற ஆடை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து வருவார்கள்.

    இதில் சிலர் மண்டல பூஜை தரிசனத்துக்காகவும் மற்றும் சிலர் மகர விளக்கு தரிசனத்திற்காகவும் இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வார்கள். குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை மாதம் 30 நாட்களும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இது தவிர நாளை முதல் வீடுகள் தோறும் கார்த்திகை தீபம் ஏற்றி பெண்கள் வழிபடுவார்கள்.

    • கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
    • ஐப்பசி மாதம் கடைசி சுப முகூர்த்த தினம் என்பதால் திருச்செந்தூர் கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது.

    இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்த னர்.

    இதையொட்டி கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சுமார் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று ஐப்பசி மாதம் கடைசி சுப முகூர்த்த தினம் என்பதால் திருச்செந்தூர் கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது. இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டத்துடன் மணமக்கள் வீட்டார்கள் கூட்டமும் கோவில் அதிகமாக காணப்பட்டது.

    • கடகம் கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட இன்னல்கள் குறையும் வாரம்.
    • கன்னி முயற்சிகள், எண்ணங்கள் நிறைவேறும் வாரம்.

    மேஷம்

    நல்ல வாய்ப்புகள் தேடி வரும் வாரம். ராசிக்கு 2,7-ம் அதிபதி சுக்ரன் பார்வை உள்ளது. லட்சியம் நிறைவேற சில கொள்கைகளை பின்பற்றுவீர்கள். தொட்டது துலங்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். ராசி அதிபதிக்கு குரு பார்வை இருப்பதால் புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும்.தொழில் துறையில் புதிய முதலீடுகள் செய்ய இது உகந்த காலமாகும். தொழில் மூலம் நல்ல வருவானம் கிடைக்கும். சுயஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும். திருமண தடை அகலும். குடும்பத்தில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்வுகள் நடைபெறும். பெண்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். கடன் தொல்லை குறையும். 20.11.2025 அன்று அதிகாலை 4.14 முதல் 22.11.2025 மாலை 4.47 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கிரடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை கவனமாக கையாள வேண்டும். உலக வாழ்வில் பற்றற்ற நிலையை அடையச் செய்யும் பக்தி மார்க்கத்தில் மனம் லயிக்கும். பாவம், புண்ணியம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அமாவாசை அன்று சிவப்பு துவரை தானம் வழங்கவும்.

    ரிஷபம்

    விரும்பிய மாற்றங்கள் நிகழும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் தனது மற்றொரு வீடான துலாம் ராசியில் ஆட்சி பலம் பெற்றிருக்கிறார். சிலருக்கு பதவி மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம். தந்தை வழி உறவுகளிடம் முக்கிய பேச்சு வார்த்தையை நடத்த உகந்த நேரம். பெண்களுக்கு பிறந்த வீட்டு விசேஷத்திற்கு சீரும் அழைப்பும் வரும். தாய், தந்தை உடன் பிறப்புகளுடன் கூடி மகிழ்வீர்கள்.தாய்க்கும் மூத்த சகோதரிக்கும் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும். உடல் நலக் குறைபாடு இருப்பவர்கள் உரிய மருத்துவரை அணுகவும். நெருங்கிய உறவில் திருமண முயற்சி கைகூடும். வீடு, மனை தொடர்பாக நீங்கள் எதிர்பார்த்த நற்செய்திகள் உங்களை திக்கு முக்காடச் செய்யும். தகவல் தொடர்பு சாதனங்களான வாட்ஸ் அப், பேஸ்புக் போன்றவற்றை முக்கிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது நல்லது.22.11.2025 மாலை 4.47 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். இதனால் சிலருக்குக் காரியத்தடைகள், கால தாமதங்கள் ஏற்பட்டாலும் வெற்றி நிச்சயம்.ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் வழிபாட்டால் நிம்மதியை அதிகரிக்க முடியும்.

    மிதுனம்

    சுமாரான வாரம். ராசி அதிபதி புதன் 6-ம் இடத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். சரியான திட்டங்கள் தீட்டி செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம். சொத்து வாங்குவது, விற்பது, திருமணம் போன்ற முக்கிய முடிவுகளை புதன் வக்ர நிவர்த்தி வரை ஒத்திப் போடவும். வேலை இழந்தவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.சிலர் வெளியூர், வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு இடம் பெயர நேரும். அரசுப் பணியாளர்கள் தங்கள் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றித் திசையை நோக்கிச் செல்லும். கமிஷன் தொழில், தரகு, பங்குச் சந்தை, ஜோதிடம் போன்ற தொழிலில் இருப்பவர்களுக்கு பெயர், புகழ், அந்தஸ்து அதிகரிக்கும்.சிலர் ரிலாக்சாக மன மாற்றத்திற்காக சொந்த ஊர் சென்று உற்றார் உறவுகளைக் கண்டு வரலாம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். சுபகாரிய நிகழ்ச்சிகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். உயர்ந்த வாகன வசதி அமையும். சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.

    கடகம்

    கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட இன்னல்கள் குறையும் வாரம். ராசியில் உள்ள வக்ர குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாயையும் பாக்கியாதிபதி சனிபகவானையும் பார்க்கிறார். பூர்வீகம் தொடர்பான பிரச்சினைகள் சர்ச்சைகள் அகலும். பல வருடங்களாக விற்க முடியாமல் கிடந்த பூர்வீகச் சொத்துக்கள் விற்கும். அரசியல்வாதிகளிடமும், அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும்.சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் கிடைக்கும். பிள்ளைகள் கல்வி, வேலை விசயமாக இடம் பெயர நேரும். திருமணத்திற்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். கலைஞர்களுக்கு வேலைப்பளு மிகுதியாகும். மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கலாம். முதியவர்களுக்கு அரசின் உதவித்தொகை, பென்சன் கிடைக்கும். பங்குச் சந்தை முதலீட்டில் நல்ல ஆதாயம் கிடைக்கும். அம்மன் வழிபாட்டால் மேன்மை அடைய முடியும்.

    சிம்மம்

    லாபகரமான வாரம். ராசி அதிபதி சூரியன் தனலாப அதிபதி புதனுடன் சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கும் அற்புதமான வாரம். புதுப்புது முயற்சிகளில் ஈடுபட்டு நல்ல யோகமான பலனை பெறக்கூடிய நேரம். நிதி நிலையை நன்கு திடப்படுத்திக் கொள்வீர்கள். புதிய வெளிநாட்டு தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். பங்குதாரர் மூலம் புதிய தொழில் முதலீடு உண்டாகும். வியாபாரிகள் நல்ல வாய்ப்புகள் மூலம் லாபத்தை அதிகரித்துக் கொள்வர். தொழிலாளர்கள் ஆதரவால் உற்பத்தி பெருகி, லாபமும் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். வேலை இழந்தவர்கள் புதிய வேலையில் சேரும் அமைப்பு உள்ளது. மதிப்பு மிகுந்த நல்ல சொத்துக்கள் சேரும். புதிய இரண்டு, நான்கு சக்கர வாகனம் வாங்குவீர்கள். அனைத்து விதமான சாதகமான பலன்களும் சிம்ம ராசியினருக்கு உண்டு. வங்கித் தொழில், ஜோதிடம், புத்தக விற்பனை, ஆலோசனை வழங்கும் கன்சல்டிங் நிறுவனங்கள், காலி மனை விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வளர்ச்சி பெறும். சிலருக்கு சுகர், பிரஷர், மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் ஆரம்பமாகும். தனலட்சுமியை வழிபட தனசேர்க்கை கூடும்.

    கன்னி

    முயற்சிகள், எண்ணங்கள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி புதன் வெற்றி ஸ்தானத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். நல்லவர்களுடன் நட்பு ஏற்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். அரசு உத்தியோகத்திற்கு பணி நியமன ஆணை கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த அனைத்து சிக்கலும் தீரும். குடும்ப உறவுகளுடன் கருத்து ஒற்றுமை அதிகமாகும். நீண்ட நாட்களாக உங்கள் எதிர்பார்ப்பிற்கு கிடைக்காத வரன் இப்பொழுது கிடைக்கும். சில விவாகரத்தான தம்பதிகள் மீண்டும் சேரும் வாய்ப்பு உருவாகும். சிலருக்கு அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு உண்டாகும். கண்டகச் சனியினால் ஏற்பட்ட பாதிப்புகள் சீராகும்.பங்குச் சந்தையில் அதிக முதலீடு வைத்து இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இழுபறியில் இருந்து வந்த நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். வெகு நாட்களாக பாதித்த கடன் தொல்லையில் இருந்து மீள தேவையான நிதி உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியகேடு வைத்தியத்தில் சீராகும். புதன் கிழமை சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.

    துலாம்

    இன்னல்கள் அகலும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுகிறார். மனதில் திடமான சிந்தனைகள் தோன்றும். வெற்றி புகழ் மதிப்பு, மரியாதை கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். செல்வச் செழிப்பில் மிதப்பீர்கள். தீய பழக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மன சங்கடங்கள் குறையும். பாக்கிய பலத்தால் அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். தொழில் துறையினருக்கு அபிவிருத்தி உண்டு. பரம்பரை குலத் தொழிலில் மாற்றமும் ஏற்றமும் உண்டு. அரசுப் பணியாளர்கள் பேச்சை மூலதனமாகக் கொண்டவர்களின் தனித்திறமை வெளிப்படும். தந்தை பூர்வீகச் சொத்துக்கு உயில் எழுதுவார்கள். சிலர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களின் பிடியில் கவுரத்திற்காக வழியச் சென்று அகப்படுவார்கள். பணவசதி சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். ஶ்ரீ ரங்கநாதரையும் தாயாரையும் வணங்கி வர நலம் பெருகும்.

    விருச்சிகம்

    தடைபட்ட நல்ல முயற்சிகள் துரிதமாகும் வாரம். ராசியில் உள்ள சூரியன் செவ்வாய், புதனுக்கு குரு பார்வை உள்ளது. சூரியனை குரு பார்ப்பதால் எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் உருவாகும். ஆன்மபலம் பெருகும். பூர்வீக குலத் தொழிலில் ஏற்றமான பலன் உண்டு. வழக்கத்தைவிட உபரி வருமானம் அதிகளவில் உண்டாகும். கூட்டுத் தொழில் நல்ல வளர்ச்சி அடையும். புதியதாக தொழில் தொடங்குபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். அலுவலகப் பணி அதிகரிக்கும். புதிய பொறுப்புகள், பதவிகள் கிடைக்கும். சிலர் வேலையை மாற்றலாம். வீடு கட்டும் பணி துரிதமாகும். சிலர் வீடு, மனை அல்லது புதிய வாகனம் வாங்கலாம். குடும்ப சுப விசேஷங்களுக்கு எதிர்பார்த்த தொகை ஓரிரு நாட்களில் கிடைக்கும். பெண்களுக்கு கணவரிடம் இருந்து எதிர்பாராத வெளிநாட்டு பரிசுகளும் அன்பளிப்புகளும் கிடைக்கும். அழகு ஆடம்பர துணி நகைகள் கிடைக்கும். குல இஷ்ட தெய்வ வழிபாடு நன்மைகளை மிகைப்படுத்தும்.

    தனுசு

    செல்வாக்கு உயரும் வாரம். ராசிக்கு தன ஸ்தான அதிபதி சனியின் பார்வை உள்ளது. வெகு சில நாட்களில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைகிறார். வருமானம் தரக்கூடிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கைவிட்டுப் போனது எல்லாம் தேடி வரும். பங்குச் சந்தை லாபம், அதிர்ஷ்ட பணம், சொத்துக்கள் என எதிர்பாராத ராஜ யோகங்கள் ஏற்படலாம். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். வீடு வாகன யோகம் சிறப்பாக அமையும். சிலர் பழைய வேலையை விட்டு புதிய வேலைக்கு செல்லலாம். சுறுசுறுப்புடன் செயல்பட்டாலும் அலைச்சல், அசதி மன சஞ்சலம், பய உணர்வு மிகுதியாக இருக்கும். ஒரு சில நேரங்களில் சின்ன சின்ன சங்கடங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் சமாளித்து விடுவீர்கள். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். மனமும், உடலும் உற்சாகமாக இருக்கும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். பிள்ளைகளின் கல்வி ஆர்வம், முன்னேற்றம் மன நிம்மதி தரும். கார்த்திகை மாதம் சிவனை வழிபட அனைத்து விதமான சுப பலன்களும் கூடி வரும்.

    மகரம்

    தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாரம். ராசிக்கு அதிசார வக்ர குருவின் சமசப்தம பார்வை உள்ளது. இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்ம பலம் கூடும். வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருமணம், குழந்தை பேறு, வேலை வாய்ப்பு சொத்துச் சேர்க்கை போன்றவற்றில் நிலவிய தடைகள் அகலும். புதிய பொறுப்புகளையும் சவால்களையும் சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட இன்னல் தீரும். தொழில், உத்தியோக நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். பத்திரிக்கை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளின் பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்ய உகந்த காலம். பூர்வீகச் சொத்தில் நிலவி வந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும். வாலிப வயதினர் காதல் போன்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது. கடந்து வந்த காலங்களில் நடந்த எதிர்மறையான சம்பவங்களை மறந்து நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொண்டால் வாழ்க்கை வளமாகும். குல தெய்வ, இஷ்ட தெய்வ பிரார்த்தனைகளை நிவர்த்தி செய்வீர்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் துர்க்கை அம்மனை வழிபடவும்.

    கும்பம்

    சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசியில் ராகு பகவான் உள்ளார். தன, லாப அதிபதி குரு பகவான் ராசிக்கு 6ல் வக்ர கதியில் உள்ளார். குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடு நிலவும். சில நேரங்களில் உறவுகளுக்காக சூழ்நிலைக் கைதியாக வாழலாம். கண் திருஷ்டி மற்றும் காரியத் தடை உண்டாகும். வாழ்க்கையை பாதிக்கும் புதிய முயற்சிகளை தவிர்த்தல் நன்மை தரும். எந்த செயலையும் பல முறை யோசித்து திட்டத்தை செயல்படுத்தும் தைரியம் இருந்தாலும் கோபம் கூடவே இருந்து குழி பறிக்கும். உடன் பிறந்தவர்களுடன் குறிப்பாக இளைய சகோதரத்துடன் கருத்து வேறுபாடு வரும். விட்டுக் கொடுத்து செல்லும் போது பின்நாட்களில் வரும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். குடும்ப உறவுகளிடம் பழைய கதையைப் பேசி வம்பை வளர்க்காமல் இருந்தால் மன நிம்மதி நிலைக்கும். கணவன், மனைவி குடும்ப பிரச்சினைகளை தங்களுக்குள்ளே தீர்த்து கொள்தல் நலம். வீடு மாற்றம், ஊர் மாற்றம் நாடு மாற்றம் வரலாம்.17.11.2025 அன்று மதியம் 3.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நடந்ததை நினைத்து மனம் வருந்துவார்கள் அல்லது நடக்காததை நடப்பது போல் நினைத்து பயப்படுவார்கள். சிவ வழிபாடு செய்யவும்.

    மீனம்

    தடை தாமதங்கள் அகலும் வாரம். ராசி அதிபதி குருபகவான் தன் வீட்டைத் தானே பார்க்கிறார். அனுபவ அறிவு, தன்னைத்தானே உணரும் சக்தியும் கூடும். தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களையும் அடைவீர்கள். சகோதர, சகோதரிகளின் ஒற்றுமை பலப்படும். திருமணம், குழந்தை பேறு, பேரன், பேத்தி, வீடு, வாகன யோகம், பொன், பொருள் சேர்க்கை என பல்வேறு பாக்கிய பலன்கள் நடக்கும். தேவைக்கேற்ற தன வரவால் குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தாய்வழிச் சொத்து தேடி வரும். தேவையற்ற கற்பனை, பயங்கள் அகலும். மன சஞ்சலமின்றி நிம்மதியாக தூங்குவீர்கள். தாய் வழிச் சொத்தை பிரிப்பதில் இருந்த குறுக்கீடுகள் அகலும். அடகு வைத்த நகைகள், சொத்துக்களை மீட்பீர்கள். 17.11.2025 அன்று மதியம் 3.35 முதல் 20.11.2025 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உழைப்பவர் நீங்களாக இருந்தால் ஊதியம் பெறுபவர் வேறொருவராக இருப்பார்கள். நிறைய அலைச்சலும், விரயச் செலவும் உண்டாகும். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாது போன்ற மன வருத்தம், சங்கடங்கள் நீடிக்கும். வேலையில் மந்தத்தன்மை நிலவும். சிவபுராணம் படித்து சிவ, சக்தியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    • சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம்.
    • கானாடுகாத்தான் ஸ்ரீ சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஐப்பசி-30 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : துவாதசி (முழுவதும்)

    நட்சத்திரம் : அஸ்தம் மறுநாள் விடியற்காலை 4.49 மணி வரை பிறகு திரயோதசி

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சுபமுகூர்த்த தினம், வைஷ்ணவ ஏகாதசி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்

    இன்று வைஷ்ணவ ஏகாதசி. சுபமுகூர்த்த தினம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரங்கநாதருக்கு காலையில் திருத்தேர் சேவை. மாயவரம் ஸ்ரீ கவுரிமாயூரநாதர் கடைமுக தீர்த்தவாரி. ஸ்ரீநடராசர் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம். திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி.

    வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். காஞ்சிஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் பவனி. திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவருக்கு அபிஷேகம். கானாடுகாத்தான் ஸ்ரீ சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-முயற்சி

    ரிஷபம்-இன்பம்

    மிதுனம்-செலவு

    கடகம்-ஈகை

    சிம்மம்-உவகை

    கன்னி-வரவு

    துலாம்- செலவு

    விருச்சிகம்-சாந்தம்

    தனுசு- அன்பு

    மகரம்-சுகம்

    கும்பம்-சுபம்

    மீனம்-மகிழ்ச்சி

    ×