Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 25 ஜனவரி 2026: ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்

திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் சூரிய பிரபையிலும், ஸ்ரீ வேணு கோபாலன் திருக்கோலமாய் காட்சி. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 25 ஜனவரி 2026: ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு தை-11 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சப்தமி இரவு 9.19 மணி வரை பிறகு அஷ்டமி

நட்சத்திரம் : ரேவதி நண்பகல் 12.10 மணி வரை பிறகு அசுவினி

யோகம் : அமிர்த, சித்தயோகம்

ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், அம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம்

இன்று ரத சப்தமி. ஸ்ரீ நமசிவாய மூர்த்தி நாயனார் குரு பூஜை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் சூரிய பிரபையிலும், ஸ்ரீ வேணு கோபாலன் திருக்கோலமாய் காட்சி. கோவை ஸ்ரீ பால தண்டாயுதபாணி உற்சவம் ஆரம்பம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. கானா முகத்தான் ஸ்ரீ சிவபெருமானுக்கு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-நற்செய்தி

ரிஷபம்-பரிசு

மிதுனம்-ஆக்கம்

கடகம்-மேன்மை

சிம்மம்-இன்பம்

கன்னி-உழைப்பு

துலாம்- தனம்

விருச்சிகம்-வாழ்வு

தனுசு- பாசம்

மகரம்-பக்தி

கும்பம்-செலவு

மீனம்-பயணம்

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com