என் மலர்tooltip icon

    வழிபாடு

    • கோவிலில் பக்தர்கள் கிரிவலம் செல்வது சிறப்பு.
    • மலையடிவாரத்தில் பீமன் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.

    சிவ வழிபாட்டில் நினைத்தாலே முக்தி தரும் ஆலயமாக கருதப்படுவது திருவண்ணாமலை. அப்படிப்பட்ட திருவண்ணாமலை தலத்துக்கு இணையான கோவில் கொங்கு மண்டலமான கோவையில் உள்ளது. அந்த கோவில் மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் ஆலயம் ஆகும்.

    கொங்கு திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் இந்த கோவில் கோவை- பாலக்காடு சாலையில் குனியமுத்தூரை தாண்டியதும் மதுக்கரை மரப்பாலம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. சுமார் 1600 அடி உயரமுள்ள மலை உச்சியில் கோவில் அமைந்திருப்பது சிறப்பானது. இந்த மலை தர்மலிங்க மலை என்று அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலில் பக்தர்கள் கிரிவலம் செல்வது சிறப்பு. திருவண்ணாமலைக்கு அடுத்து அதிக பக்தர்கள் கிரிவலம் செல்லும் ஆலயமாக தர்மலிங்கேஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. இதனால் கொங்கு திருவண்ணாமலை என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

    அதேசமயம் வனவிலங்குகள் நடமாட்டம் கருதி பவுர்ணமி தினத்தில் மட்டும் கிரிவலம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். திருவண்ணாமலையில் ஏற்றுவது போல் இங்கும் கார்த்திகை திருவிழாவின் போது மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    தர்மலிங்கேஸ்வரர் பெயர்க்காரணம்

    பஞ்சபாண்டவர்கள் காலக்கட்டத்தில் பாண்டவர்களில் மூத்தவரான தருமன் இங்கு வந்து ஈஸ்வரனை தவமிருந்து வழிபட்ட காரணத்தால் சுவாமி, தர்மலிங்கேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அந்த சமயத்தில் பீமன் கீழே காவல் காத்ததாகவும், மற்ற தம்பிகள் பாதுகாப்பாக கிரிவலம் வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. இதன்காரணமாக மலையடிவாரத்தில் பீமன் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.

     

    சுயம்பு மூர்த்தி

    தர்மலிங்கேஸ்வரர் மலையில் தானாகவே தோன்றிய சுயம்பு மூர்த்தி ஆவார். பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிக்கு சொந்தமான பசுமாடு காணாமல் போய் இருக்கிறது. அந்த பசுவை தேடி விவசாயி மலை உச்சிக்கு சென்று இருக்கிறார். அங்கு சுயம்புலிங்கத்திற்கு மாடு பால்சொரிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவரம் ஊர் முழுக்க பரவி அதன்பிறகே பக்தர்கள் வழிபடத் தொடங்கி அங்கு கோவில் எழுப்பப்பட்டதாக சொல்கிறார்கள்.

    ஏன் கொங்கு திருவண்ணாமலை

    இந்த ஆலயத்தை கொங்கு திருவண்ணாமலை என்று அழைப்பதற்கும் சில காரணங்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி தான் தர்மலிங்கேஸ்வரர் வீற்றிருக்கும் மலை. ஆனால் மற்ற மலைகளுடன் சேர்ந்து இருக்காமல் தனித்துவமாக இந்த மலை அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது போல் இங்கும் கிரிவலப்பாதையில் 8 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    ஆலய அமைப்பு:

    கோவில் சன்னதிக்கு முன்பு முதலில் ஸ்தூபியும், கொடிமரமும் உள்ளன. அதையடுத்து மகாமண்டபம், நந்தி, பலிபீடத்தைத் தொடர்ந்து அர்த்த மண்டபம் உள்ளது. கருவறையில் சித்தலிங்கேஸ்வரர் ஆவுடையார் மீது சிவலிங்கத் திருமேனியில் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். மூலவர் தர்மலிங்கேஸ்வரர் இரண்டே கால் அடி உயரத்தில் உள்ள கற்சிலை ஆகும். கருவறை நுழைவுவாசலில் இடதுபுறம் விநாயகர் மற்றும் வலது புறம் முருகப் பெருமான் திருமேனிகள் உள்ளன.

    ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. காலைக் கதிரவன் தன் பொற்கதிர்களால் கருவறை இறைவனை தினம் தினம் குளிப்பாட்டும் காட்சி நம் கண்களை வியக்க வைக்கும் காட்சியாகும். கருவறையின் விமானம் தொலைவிலிருந்து பார்க்கும் பக்தர்களின் கண்களுக்கு நல் விருந்தாக அமைகிறது. தைப்பூசம், நவராத்திரி, சிவராத்திரி, ஆண்டு பிறப்பு நாட்களில் இறைவனுக்கு சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறுகின்றன.

    குழந்தை பேறு இல்லாத தம்பதிகள் இங்கு வந்து இறைவனை வேண்டிக் கொள்கின்றனர். தங்கள் பிரார்த்தனை பலித்ததும் பிறந்த குழந்தையை அழைத்து வந்து இறைவன் சன்னதியில் இறைவனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுவது இங்கு இயல்பாக காணும் காட்சிகளாக உள்ளது. கோவிலில் தமிழ் முறைப்படி மட்டுமே அர்ச்சனைகள், வழிபாடுகள் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிவபெருமானின் காளைமாடு சுந்தரருக்கு வழி காட்டியதால் இந்த இடத்திற்கு ‘காளையார்கோவில்’ என்ற பெயர் வந்துள்ளது.
    • பூர்வ ஜென்ம பாவத்தை விலக்கும் சக்தி இத்தல இறைவனுக்கு உள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவிலில் சொர்ணகாளீஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று சிறப்புகளை கொண்டது. தமிழ்நாட்டில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 200-வது ஆலயம் ஆகும். மேலும் தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் இது 10-வது தலமாகும்.

    தல வரலாறு

    சிவபெருமானின் காளைமாடு சுந்தரருக்கு வழி காட்டியதால் இந்த இடத்திற்கு 'காளையார்கோவில்' என்ற பெயர் வந்துள்ளது. சங்க காலத்தில் இந்த ஊரின் பெயர் 'திருக்கானப்பேர்' என வழங்கப்பட்டதை புறநானூற்றுப் பாடல்கள் மூலம் அறிய முடியும். கி.பி. 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் பாடல்களில் சிவனை காளையாக உருவகித்து பாடியதால் இக்கோவிலின் தெய்வமான சிவன் 'காளையார்' என வழங்கப்பட்டதாகவும் கூறப் படுகிறது. திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி என்பதுபோல, இந்த காளையார்கோவில் தலத்தில் பிறந்தாலும், இறந்தாலும் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்கு பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை. இவர் இங்குள்ள இறைவனிடம் வேண்டி தங்கத்தால் செய்த குழந்தையை இறைவனிடம் சமர்ப்பிக்கப் போகும்போது, அதை குளத்தில் போடுமாறு அசரீரி கேட்டது. உடனே அவர் கையில் இருந்த அந்த தங்கக் குழந்தையை குளத்தில் போட்டு விட்டு கையை மேலே எடுக்கும்போது, நிஜமான ஒரு ஆண் குழந்தை அவர் கையில் இருந்திருக்கிறது. இது ஒவ்வொரு ஆண்டு திருவிழாவின்போதும் பொய்ப்பிள்ளையை மெய்ப் பிள்ளையாக்கும் நிகழ்வாக வைகாசி விசாகத்தன்று மிகவும் சிறப்பாக இந்த ஆலயத்தில் கொண்டாடப்படுகிறது.

    இக்கோவிலின் தல விருட்சம் வெள்ளை நிற பூக்கள் கொண்ட மந்தாரை மரம். இரட்டையாக விரியக்கூடிய இலைகள் கொண்ட இந்த சிறு மரங்களில் கொக்கு நிற்பது போல பூக்கள் பூப்பதால் 'கொக்கு மந்தாரை' என்று அழைக்கப்படுகிறது. இந்த கொக்கு மந்தாரை பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை.

    யானைமடு தீர்த்தம், அக்காமடு தீர்த்தம், தங்கச்சிமடு தீர்த்தம் என்னும் மூன்று தெப்பங்களில் தீர்த்தம் எடுக்கப்பட்டு சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

    மருது சகோதரர்கள் சரணடையாவிட்டால் இங்குள்ள சுமார் 150 அடி உயரம் கொண்ட பெரிய கோபுரம் தகர்க்கப்படும் என ஆங்கிலேயர் அறிவித்தனர். அதன் பின்னரே அவர்கள் கைதிகளாக பிடிக்கப்பட்டு தூக்கில் இடப்பட்டனர் என்று சொல்லப்படுகிறது. கோவில்களை பாதுகாக்க மன்னர்கள் உயிரையும் தியாகம் செய்தனர் என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

    கோவில் அமைப்பு

    பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னனால் அமைக்கப்பெற்ற இக்கோவில், பின்னர் பலராலும் திருப்பணிகள் செய்யப்பட்டு வந்துள்ளது. பொதுவாக ஒரு கோவிலில் ஒரு மூலவரும் அம்பாளும் மட்டுமே இருப்பர். காஞ்சிபுரம் ஓணகாந்தன்தளியில் மூன்று சிவன் சன்னதிகள் உள்ளன. அம்பாளுக்கு தனிச் சன்னதி கிடையாது. ஆனால், இத்தலத்தில் மூன்று இறைவனும், மூன்று இறைவியும் எழுந்தருளுகின்றனர்.

    இங்கு சோமேஸ்வரர், சொர்ணகாளீஸ்வரர், சுந்தரேஸ்வரர் என்று மூன்று சிவன் சன்னிதிகளும், சவுந்தரநாயகி, சொர்ணவல்லி, மீனாட்சி என மூன்று அம்மன் சன்னிதிகளும் தனித்தனியாக அமைந்துள்ளன. மேலும் வெளி மண்டபத்தில் மூன்று ஆண் தெய்வங்களும், மூன்று பெண் தெய்வங்களும் அமைக்கப்பட்டுள்ளனர்.

    இந்திரன், தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்க, பல ஆயிரம் சிவாலயங்களை வழிபாடு செய்ய வேண்டியதிருந்தது. அதன் ஒருபகுதியாக இங்கும் வந்து வழிபட்டான். இத்தலத்தில் வழிபட்டதும் ஆயிரம் சிவாலயங்களை வழிபட்ட பலன் கிடைத்ததாக உணர்ந்தான். இதன் அடிப்படையிலேயே இங்கு 1000 லிங்கங்களால் உருவான 'சகஸ்ரலிங்கம்' பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இந்திரனின் வாகனமான வெள்ளை யானைக்கு 'ஐராவதம்' என்று பெயர். இந்த யானை சாபம் பெற்றதால் இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது. மனிதனின் பார்வையில் படக்கூடாது என்பது இந்த யானைக்கான விதி. ஆனாலும் ஒரு மனிதன் அந்த யானையைப் பார்த்து விட்டான். இதனால் அந்த யானை தன்னுடைய தலையால் பூமியை முட்டி பாதாளத்திற்குள் நுழைந்தது. யானை முட்டியதில் ஏற்பட்ட பள்ளத்தில் தண்ணீர் பெருகி ஒரு தீர்த்தக்குளம் உண்டானது. இதற்கு 'யானை மடு' என்று பெயர். வேறு எந்த கோவிலிலும் இல்லாத தங்கத்தால் ஆன பள்ளியறை இங்கு உள்ளது.

    ஏழாம் நூற்றாண்டில் மதுரையை ஆட்சி செய்த வரகுண பாண்டியன் இங்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னிதியை ஏற்படுத்தினார். இங்குள்ள பெரிய கோபுரம் மருதுபாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. கோபுரத்திலிருந்து பார்த்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் தெரியும் விதத்தில் கட்டிட அமைப்பை உருவாக்கினார். அந்த காலத்தில் இதன் மீது ஏறினால் மதுரை மீனாட்சி அம்மன் கோபுரம் தெரியும் என்கின்றனர்.

    பூர்வ ஜென்ம பாவத்தை விலக்கும் சக்தி இத்தல இறைவனுக்கு உள்ளது. சொர்ணகாளீஸ்வரரை வழிபட்டால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. மேலும் இந்த ஆலயத்தில் வழிபாடு செய்தால் மன நோய் முற்றிலும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

     

    தெப்பக்குளம்

    திருவிழாக்கள்

    சொர்ணகாளீஸ்வரர் கோவிலில் தை மாதம் தேர்த்திருவிழா, தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. வைகாசி மாதம் சோமேஸ்வரர் பிரமோற்சவம் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் தெப்பத்திருவிழா நடைபெறும்.

    ஆலயம் காலை 5.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    சிவகங்கையில் இருந்து தொண்டி செல்லும் சாலையில் சுமார் 18 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து தென்கிழக்கே 66 கிலோமீட்டர் தூரத்திலும் காளையார்கோவில் உள்ளது.

    • பக்தர்களின் உடைமைகளை சோதனையிட்ட பின் வனத்துறையினர் மலையேற அனுமதித்தனர்.
    • மொட்டை உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு இன்று ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு அதிகாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு சதுரகிரியை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் காட்டுத் தீ பரவியது. இதனால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினரின் தீவிர நடவடிக்கைக்கு பின் காட்டுத் தீ பரவுவது தடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

    6.30 மணியளவில் நுழைவுவாயில் திறக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களின் உடைமைகளை சோதனையிட்ட பின் வனத்துறையினர் மலையேற அனுமதித்தனர்.

    பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் உற்சாகத்துடன் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர். கடும் வெயிலை தவிர்க்க காலையிலேயே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்வதில் ஆர்வம் காட்டினர்.

    இன்று ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். மொட்டை உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்கா வலர் ராஜா என்ற பெரிய சாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்து இருந்தனர்.

    ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகர், மதுரை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தானிப்பாறைக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 

    • விநாயகரை ஒரு முறை வலம் வந்து வழிபடுவதே சிறப்பு.
    • விநாயகப் பெருமான், பிரணவ மந்திரமான ஓம்காரத்தின் உருவமாகத் திகழ்கிறார்.

    காரியத் தடைகளை விலக்கி, நாம் தொடங்கும் செயல்களை வெற்றியாக்கித் தருபவர் விநாயகர். அவரைப் பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்...

    விநாயகரை வழிபடும் முறைக்கு 'காணாபத்யம்' என்று பெயர். இதனை ஒரு பிரிவாக ஏற்படுத்தியவர், ஆதிசங்கரர்.

    விநாயகர் ஒரு கொம்பு, இரண்டு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள், ஆறெழுத்துகள் உடையவர்.

    விநாயகப் பெருமானுக்கு தும்பிக்கையுடன் சேர்த்து ஐந்து கரங்கள் உண்டு. தும்பிக்கையில் தண்ணீர் குடம் தாங்கியும், பின் இரண்டு கரங்களில் அங்குசம், பாசம் ஏந்தியும், முன் வலது கரத்தில் தந்தம், முன் இடது கரத்தில் மோகமும் வைத்திருப்பார்.

    அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கி இருப்பதை, அவருடைய மத்தள வயிறு வெளிப்படுத்துகிறது.

    விநாயகரை ஒரு முறை வலம் வந்து வழிபடுவதே சிறப்பு.

    மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல, விநாயகர் எழுதினார்.

    விநாயகருக்கு மூஷிகம் (எலி) வாகனத்தைத் தவிர, மயில், காளை, சிங்கம், யானை, குதிரை, பூதம் ஆகியவையும் வாகனங்களாக உள்ளன.

    வெள்ளிக்கிழமை தோறும் அருகம்புல், தேங்காய் கொண்டு பூஜிப்பதோடு, கணபதி ஹோமம் செய்து வந்தால் நீண்ட ஆயுளும், செல்வமும் வந்துசேரும்.

    'ஓம் ஹம் கணபதியே நமஹ' என்ற விநாயகர் மந்திரத்தை, காலையும், மாலையும் 108 முறை சொல்லி வந்தால், சகல நன்மைகளும் உண்டாகும்.

    பஞ்சபூதத்தோடு தொடர்புடையவராகவும் விநாயகர் இருக்கிறார். இவர் அரச மரத்தடியில் ஆகாய வடிவமாகவும், வாதநாராயண மரத்தடியில் வாயு வடிவமாகவும், நெல்லி மரத்தடியில் நீர் வடிவமாகவும், ஆலய மரத்தடியில் மண் வடிவமாகவும், வன்னி மரத்தடியில் நெருப்பு வடிவமாகவும் விளங்குகிறார்.

    விநாயகப் பெருமான், பிரணவ மந்திரமான ஓம்காரத்தின் உருவமாகத் திகழ்கிறார்.

    விநாயகரின் உருவத்தில் அனைத்து கடவுள்களும் வாசம் செய்கின்றனர். நாபி (தொப்புள்)- பிரம்மதேவர், முகம்- விஷ்ணு, கண்- சிவன், இடப்பாகம்- சக்தி, வலப்பாகம்- சூரியன் உள்ளனர்.

    விநாயகப் பெருமான் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற மூன்று சக்திகளையும் அருள்கிறார். இச்சா சக்தி என்பது ஆசையையும், கிரியா சக்தி என்பது செயலையும், ஞான சக்தி என்பது அறிவையும் குறிக்கும்.

    சந்தனம், களிமண், சாணம், மஞ்சள் போன்ற எளிதாக கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டு விநாயகரை செய்து வழிபட்டால் அனைத்துவித நலன்களும் கிடைக்கும்.

    விநாயகருக்கு அனைத்து விதமான அபிஷேகங்களையும் விட தேங்காய் எண்ணெய் காப்புதான் பிரியமானது.

    'விநாயகர்' என்ற சொல்லுக்கு 'இவரை விட மேலானவர் இல்லை' என்று பொருள்.

    விநாயகருக்கும், சனி பகவானுக்கும் பிரியமானது, வன்னி மரம். இந்த மரத்தின் இலைகளால் விநாயகரை பூஜித்து வழிபட்டால் சனி பகவான் தோஷம் நம்மை நெருங்காது.

    • ராமேஸ்வரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்வது நன்று.
    • திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-6 (வெள்ளிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சதுர்த்தசி நண்பகல் 12.53 மணி வரை. பிறகு அமாவாசை.

    நட்சத்திரம் : ஆயில்யம் நள்ளிரவு 1.51 மணி வரை பிறகு மகம்.

    யோகம் : மரணயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சர்வ அமாவாசை

    இன்று சர்வ அமாவாசை. வாஸ்து நாள் (காலை 7.23 மணிக்கு மேல் 7.59 மணிக்குள் வாஸ்து செய்ய நன்று). ராமேஸ்வரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்வது நன்று. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.

    பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் புறப்பாடு. சோழசிம்மபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருவிழா உற்சவம் ஆரம்பம். பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் வெள்ளி கேடயத்தில் பவனி. திருக்கண்ணபுரம் ஸ்ரீசவுரிராஜப் பெருமாள் ஸ்ரீவிபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பக்தி

    ரிஷபம்-முயற்சி

    மிதுனம்-களிப்பு

    கடகம்-சாந்தம்

    சிம்மம்-வெற்றி

    கன்னி-பெருமை

    துலாம்- பணிவு

    விருச்சிகம்-மகிழ்ச்சி

    தனுசு- ஆர்வம்

    மகரம்-கீர்த்தி

    கும்பம்-ஜெயம்

    மீனம்-பயணம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    முன்னேற்றம் கூட முன்னோர்களை வழிபட வேண்டிய நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வரலாம். சுப காரியப் பேச்சுகள் முடிவாகும்.

    ரிஷபம்

    லாபகரமான நாள். தொழிலில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வருமானம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    மிதுனம்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். குடும்ப முன்னேற்றம் கூடும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். பழைய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.

    கடகம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நண்பர்கள் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டு. உத்தியோகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    சிம்மம்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். இடம், பூமி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    கன்னி

    போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிட்டும். நேற்றைய பிரச்சனை ஒன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    துலாம்

    வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    விருச்சிகம்

    வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். வி.ஐ.பி.க்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். பொருளாதார நிலை உயரும்.

    தனுசு

    தேவைகள் பூர்த்தியாக தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டிய நாள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கலாம். கொடுக்கல், வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை.

    மகரம்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி மாறும். உத்தியோகத்தில் உயர்வு பற்றிய தகவல் வரலாம். மாலைப் பயணம் மகிழ்ச்சி தரும்.

    கும்பம்

    நட்பால் நன்மை கிடைக்கும் நாள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். உயர்ந்த மனிதர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

    மீனம்

    தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையில் வரலாம்.

    • அமாவாசை நாளில் பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிப்பது என்பது விசேஷ சக்திகளை கொடுக்கும்.
    • உங்களுக்கு தெரிந்த சிறு சிறு மந்திரங்களை கூட அமாவாசை நாளில் உச்சரித்து பாருங்கள்.

    முன்னோர்களின் ஆன்மாக்களை யாரும் பார்க்க முடியாது, ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கவும் முடியாது. எனவே பஞ்ச பூதங்களையும், நவக்கிரகங்களையும் முன் நிறுத்தி உரிய மந்திரங்களோடு செய்யப்படும் 'தில ஹோமம்', எத்தகைய ஆத்மாவையும் சாந்தி அடைய செய்துவிடும். ஹோமம் செய்ய முடியாதவர்களுக்கு நாளைய அமாவாசை வழிபாடு நல்ல பலன் தரும்.

    முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்யாதவனுக்கு 'பித்ரு தோஷம்' ஏற்படும். ஒரு வேளை அதிகமான புண்ணிய பலத்தால், ஒருவன் தன் வாழ்நாளில் பித்ரு தோஷத்தை அனுபவிக்காமல் போகலாம். ஆனால் அந்த பித்ரு தோஷம் அவனது வம்சத்தினரை பாதிக்கும். ஒருவர் தன் தலைமுறைக்கு சொத்து சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை, பித்ரு தோஷத்தை மட்டும் விட்டுச் செல்லக்கூடாது.

    அமாவாசை அன்று முன்னோர்கள் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி, தர்ப்பண பூஜையானது, நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும். தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு, வலது ஆள் காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையில் உள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக நீரை வார்த்து தரப்படுவதாகும். இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பிச் சென்று, பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும். ஒவ்வொரு அமாவாசையன்றும், இந்த சக்தியானது மிகவும் அபரிமிதமாக பெருகுகிறது.

    எனவே அமாவாசை தோறும் கட்டாயம் பித்ரு தர்ப்பணம் கொடுப்பது உங்களுக்கு மட்டுமல்லாமல், உங்களுடைய சந்ததியினருக்கும் நல்ல பலன்களை வாரி வழங்கக் கூடியது ஆகும். பித்ரு தர்ப்பணம் செய்ய மறந்தவர்கள் பித்ரு சாபத்திற்கு ஆளாக நேரிடும். இதனால் குடும்பத்தில் பிரச்சனைகளும், நிம்மதி இன்மையும் ஏற்படும். எனவே தவறாமல் ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் உங்கள் முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து எளிதாக வீட்டிலேயே கூட பூஜை செய்து வழிபட வேண்டும்.

    அமாவாசையில் உணவு எதுவும் உண்ணாமல் மந்திரங்களை உச்சரித்து விரதமிருந்து வழிபட்டு வந்தால் சகல பாக்கியங்களும் உண்டாகும் என்கிறது சாஸ்திரம்.

    அமாவாசை நாளில் பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிப்பது என்பது விசேஷ சக்திகளை கொடுக்கும். இது உங்களிடம் இருக்கும் கெட்ட சக்திகளை விலகி ஓட செய்யும். வீட்டை சுத்தம் செய்ய அன்றைய நாளில் தண்ணீருடன் சிறிது அளவு கல் உப்பு சேர்த்து துடைத்து எடுக்கலாம். காலை, மாலை இரு வேளையும் பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும்.

    குறிப்பாக அமாவாசை நாளில் விரதம் இருப்பவர்கள், விரதம் இல்லாதவர்கள் என்று யாராக இருந்தாலும் அசைவ உணவைத் தவிர்ப்பது நல்லது. அமாவாசை நாளின் போது அசைவம் உணவு உண்ணும் பொழுது உடம்பில் ஒருவித அசவுகரியம் உண்டாகும். இது அறிவியல் ரீதியாகவும் உண்மை என்பதால் அமாவாசை தினத்தில் அசைவ உணவு சாப்பிடாமல் இருப்பது நல்லது.

    வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க அன்றைய நாளில் மந்திர ஸ்லோகங்களை உச்சரிக்க வேண்டும். அல்லது ஒலிக்க விடுவதும் செய்ய வேண்டும். உங்களுக்கு தெரிந்த சிறு சிறு மந்திரங்களை கூட அமாவாசை நாளில் உச்சரித்து பாருங்கள். நல்ல பலன்கள் எல்லாம் கிடைக்கும்.

    பொன், பொருள் சேரவும், சகல சம்பத்தும் கிடைக்கவும், குலதெய்வ அருள் பெறவும் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது. ஒரு மண்பானையில் அல்லது செம்பு, பித்தளை கலசத்தில் தண்ணீரை வைத்து பூஜை அறையில் வையுங்கள். அதில் குலதெய்வத்தை நினைத்து ஆவாகனம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு விளக்கு ஏற்றி தீப வழிபாடு செய்வது குலதெய்வ வழிபாட்டை நிறைவு செய்கிறது. உங்களால் முடிந்தால் நைவேத்தியம் வைத்து வழிபடவும், அப்படி இல்லை என்றால் சிறிதளவு கற்கண்டு வைத்து வழிபடுங்கள்.

    அமாவாசை தினத்தன்று காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது "ஓம் ஸ்ரீம் என்று சொல்லி உங்கள் குலதெய்வத்தின் பெயரை சொல்லி நமஹ" என்று சொல்லவும். அதாவது குலதெய்வத்தின் பெயர் சுப்பிரமணி என்றால் "ஓம் ஸ்ரீம் சுப்பிரமணி நமஹ" என்று 108 முறை கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு குலதெய்வம் என் வீட்டிற்கு எழுந்தருள வேண்டும் என்று மனதார வழிபாடு செய்து கொள்ள வேண்டும். அன்று நண்பகல் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் சைவ உணவுகளை தயார் செய்து கொள்ள வேண்டும்.

    ஒரு வாழை இலையை விரித்து அதில் சைவ உணவுகளை படையலாக போட்டு அந்த வாழை இலைக்கும் முன்பாக ஒரு சிறிய கண்ணாடியை வைக்க வேண்டும். அந்த கண்ணாடிக்கு சந்தனம் குங்குமம் வைத்து அதை குலதெய்வமாகவும் நம்முடைய முன்னோர்களாகவும் பாவித்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு தேங்காய் உடைத்து பழம் வைத்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி அந்த கண்ணாடியை பார்த்தவாறு குலதெய்வத்திடம் பேசுவது போல் பேசி வீட்டிற்கு எழுந்தருள வேண்டும் என்று பேச வேண்டும்.



    பிறகு இந்த படையலில் இருந்து சாதத்தை சிறிதளவு எடுத்து காக்கைக்கு உணவாக வைத்துவிட்டு வழிபாட்டை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த முறையில் அமாவாசை தினத்தன்று குலதெய்வத்தை நினைத்தும் முன்னோர்களை நினைத்தும் சைவப்படையல் இட்டு வழிபாடு செய்பவர்களுக்கு குலதெய்வத்தின் அருளும் முன்னோர்களின் ஆசீர்வாதமும் பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் நம் வாழ்க்கை சிறந்து விளங்கும்.

    குலதெய்வ ஆலயம் செல்ல முடியாதவர்கள் வீட்டிலே வழிபாடு செய்யலாம். அதற்கு மாலை வேலையில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு குலதெய்வ படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள் உங்கள் குலதெய்வத்திற்கு பிடித்த நெய்வேத்தியத்தை வைத்து விட்டு நீங்கள் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு உங்கள் குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

    இப்படி பிரார்த்தனை செய்யும் நேரத்தில் உங்கள் குலதெய்வத்தின் பெயரை சொல்லி வசி வசி என்ற வார்த்தையும் சேர்த்து சொல்லுங்கள். குலதெய்வமே தெரியாது என்பவர்கள் ஓம் குலதெய்வமே வசி வசி என்ற இந்த மந்திரத்தை மட்டும் சொன்னால் போதும். இதை எத்தனை முறை உங்களால் சொல்ல முடியுமோ அத்தனை முறை சொல்லுங்கள்.

    குலதெய்வம் தெரியாதவர்கள் மேல்மலையனூர் அங்காளம்மனை குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபாடு செய்யலாம். ஏனென்றால் அகிலம் பிறக்கும் முன்பு பிறந்த அங்காளம்மனே அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமாய் விளங்குகிறாள் அவளே குலதெய்வங்களுக்கெல்லாம் மூல தெய்வமாக காட்சியளிக்கிறாள்.

    இவ்வாறு அங்காளம்மனை குலதெய்வமாக ஏற்று வழிபாடு செய்வதனால் தொட்ட காரியங்கள் அனைத்தும் நன்மையில் முடியும், தடைபட்டு வந்த சுப காரியங்கள் விரைவில் நிறைவேறும், வாழ்வில் நிம்மதி ஏற்படும், குடும்பத்தில் அமைதியான சூழல் ஏற்பட்டு, தோஷங்கள் நிவர்த்தி ஆகி, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.

    குலதெய்வ கோவில்களுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டில் இருந்தவாறு குலதெய்வ வழிபாடு செய்து ஏதேனும் ஒரு ஏழைக்கு உணவளித்த பின் உண்ண வேண்டும். இவ்வாறு வழிபட குலதெய்வ கோவில் சென்று வந்த புண்ணியத்தை பெற முடியும்.

    • ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வருகிறது.
    • சுவாமி சண்முகர் வள்ளி- தெய்வானையுடன் வெள்ளை சாத்தி கோலத்தில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வருகிறது.

    8-ம் திருவிழாவான இன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

    இன்று அதிகாலை சுவாமி சண்முகர் பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 7.30 மணிக்கு சப்பரம் மேல் கோவில் வந்து சேரவேண்டும். ஆனால் இன்று காலதாமதமாக காலை 8.30 மணிக்கு சப்பரபவனி தொடங்கியது.

    சுவாமி சண்முகர் வள்ளி- தெய்வானையுடன் வெள்ளை சாத்தி கோலத்தில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். தொடர்ந்து 11.30 மணிக்கு மேல கோவிலில் இருந்து சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7 மணியில் இருந்து 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 2-ந்தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு கடற்கரையில் பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.
    • அக்டோபர் 4-ந்தேதி தசரா பெருந்திருவிழா நிறைவு பெறும்.

    இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாகவும் தமிழ்நாட்டில் முதலிடம் வகிக்கும் தசரா பெரும் திருவிழா தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டு தோறும் 12 நாட்கள் நடக்கும். இதில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டு தசரா பெரும் திருவிழா அடுத்த மாதம் மாதம் 23-ந்தேதி (செவ்வாய்கிழமை) கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 2-ந்தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு கடற்கரையில் பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. அக்டோபர் 4-ந்தேதி தசரா பெருந்திருவிழா நிறைவு பெறும்.

    திருவிழாவில் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற தங்கள் வசதிக்கு ஏற்றவாறு 41 நாள், 31 நாள், 21 நாள், 11 நாள், 3 நாள் என விரதம் இருந்து கோவிலில் கொடியேறியதும், கோவிலில் இலவசமாக வழங்கப்படும் மஞ்சள் கயிறான காப்பு வாங்கி வலது கையில் கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து கோவிலில் கொண்டு சேர்ப்பதே தசராவின் சிறப்பு அம்சமாகும்.

    அந்த வகையில் 61 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் கடந்த 4-ந்தேதியும், 51 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் கடந்த 14-ந் தேதியும், 48 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் கடந்த 17-ந்தேதியும் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர்.

    இந்நிலையில் 41 நாட்கள் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை அணிந்து விரதம் தொடங்க உள்ளனர்.

    அதேபோல் 31 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் வருகிற 3-ந் தேதியும், 21 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் 13-ந் தேதியும், 11 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் அடுத்தமாதம் 23-ந்தேதியும் மாலை அணிகிறார்கள்.

    விரதம் தொடங்கும் முன் பக்தர்கள் கடலில் நீராடி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துமாலை அணிவித்து விரதம் தொடங்கி வருகின்றனர். பெரும்பாலான மக்கள் வெள்ளி, செவ்வாய் நாட்களில் விரதம் தொடங்கி வருகின்றனர்.

    விரதம் தொடங்கியபின் வீட்டில் முத்தாரம்மன் படம் வைத்து சின்னகுடில் அமைத்து தினசரி காலை, மாலை பூஜை செய்து வருவார்கள். தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்கள் விரதம் தொடங்க தினசரி கோவிலுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். தசரா திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், அறங்காவலர் குழுத் தலைவர் தாண்டவன்காடு கண்ணன் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். தொழில் ரீதியாகப் புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். பிரதிபலன் பார்க்காமல் நீங்கள் செய்த உதவிக்கு நன்றி கிடைக்கும்.

    ரிஷபம்

    மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழிபிறக்கும். உத்தியோகத்தில் புதிய வேலையை விட பழைய வேலைக்கே திரும்பி செல்லலாம் என்று நினைப்பீர்கள்.

    மிதுனம்

    சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் அடையும் நாள். தனவரவு திருப்தி தரும். தக்க விதத்தில் நண்பர்கள் உதவி செய்வர். உறவினர் வழியிலும் உதவிகள் கிடைக்கும்.

    கடகம்

    காரிய வெற்றி ஏற்படும் நாள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். புகழ் கூடும். புதிய உத்தியோக முயற்சியில் அனுகூலம் கிட்டும். நேற்று பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும்.

    சிம்மம்

    சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். பழைய நண்பர்களின் மூலம் பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றத்திற்கு முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள்.

    கன்னி

    உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும் நாள். தேங்கிய காரியங்கள் சிறப்பாக நடைபெறும். உடல்நலம் சீராக ஒரு தொகையை செலவிடுவீர்கள். பயணத்தால் பலன் கிடைக்கும்.

    துலாம்

    விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் அரசு பணிக்காக செய்த முயற்சியில் அனுகூலம் உண்டு.

    விருச்சிகம்

    நல்ல வாய்ப்பு இல்லம் தேடி வரும் நாள். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். தனவரவு திருப்தி தரும். தொழில் ரீதியாகச் சில முக்கிய முடிவெடுப்பீர்கள்.

    தனுசு

    திட்டமிட்ட காரியம் திசைமாறிச் செல்லும் நாள். கூட்டாளிகளிடம் யோசித்துப் பேசுவது நல்லது. வரவேண்டிய பாக்கிகள் வருவதில் தாமதப்படும். உடல் நிலையில் சோர்வு ஏற்படும்.

    மகரம்

    விரயங்களை சமாளிக்க வேண்டிய நாள். நாகரீகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடந்த இரண்டு நாட்களாக நடைபெறாத காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும்.

    கும்பம்

    யோகமான நாள். சொத்துகள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். அயல்நாட்டிலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக எதிர்பார்த்த தகவல் வரலாம். வரன்கள் முடிவாகும்.

    மீனம்

    ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. வியாபார விருத்தி ஏற்படும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

    • மாத சிவராத்திரி. சுபமுகூர்த்த தினம்.
    • திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-5 (வியாழக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : திரயோதசி நண்பகல் 1.45 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம் : பூசம் நள்ளிரவு 1.45 மணி வரை பிறகு ஆயில்யம்

    யோகம் : அமித்த, சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    மாத சிவராத்திரி, திருவல்லிக்கேணி ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம், தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்

    மாத சிவராத்திரி. சுபமுகூர்த்த தினம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கமல வாகன பவனி. உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் மயில் வாகனத்தில் புறப்பாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. செறுத்துணை நாயனார் குரு பூஜை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம்.

    ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சந்திர வல்லப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சனம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நலம்

    ரிஷபம்-ஓய்வு

    மிதுனம்-சுபம்

    கடகம்-செலவு

    சிம்மம்-வரவு

    கன்னி-ஈகை

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-வெற்றி

    தனுசு- அமைதி

    மகரம்-முயற்சி

    கும்பம்-உயர்வு

    மீனம்-இன்பம்

    • குரு புஷ்ய யோகம் தெய்வீக வலிமையைக் கொண்டுள்ளது.
    • புதிய தொழில்களைத் தொடங்குவதற்கும் நாளைய நாள் ஏற்றது.

    நாளை (வியாழக்கிழமை) குரு புஷ்ய யோக தினமாகும்.

    குரு புஷ்ய யோகம் தினம் என்பது அட்சய திரிதியையை விட அபூர்வமான தினமாகும்.

    குருவுக்குரிய வியாழக்கிழமையும், பூச நட்சத்திரமும் எப்போது இணைகிறதோ அந்த நாளே குரு புஷ்ய யோக நாள். புஷ்யம் என்பது பூசம் நட்சத்திரத்தின் வடமொழி பெயர்.

    அட்சய திரிதியை ஆண்டுக்கு ஒரு முறையே வரும். குரு புஷ்ய யோகம் ஆண்டின் இரண்டு, மூன்று நாட்களில் வரும். கடந்த ஜூலை மாதம் 24-ந்தேதி மாலை 6.12 மணி முதல் 25-ந்தேதி மாலை 5.57 மணி வரை இந்த யோகம் இருந்தது.

    ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி காலை 6.11 மணி முதல் மறுநாள் மதியம் 12.08 மணி வரை 30 மணி நேரம் இந்த யோகம் வருகிறது. இதையடுத்து செப்டம்பர் 18-ந்தேதி மட்டும் காலை 6.09 மணி முதல் 9.28 மணி வரை 3 மணி நேரம் மட்டும் இந்த யோகம் இருக்கிறது.

    அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்கினால் பல்கிப் பெருகும் என்ற நம்பிக்கை எவ்வாறு உள்ளதோ அதை விட சிறந்த நாளாக குரு புஷ்ய யோக நாள் அமைகிறது. குருவுக்குரிய நிறம் மஞ்சள். இதனால் மஞ்சள் நிற தங்கம் வாங்குவது மிக மிக யோகம்.

    லட்சுமி தாயார், பூசம் நட்சத்திரத்தை தேர்ந்தெடுத்து, அந்த நட்சத்திரத்தில் பிறந்த நாள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். குரு புஷ்ய யோக நாளில் தங்கம் வாங்குவது மிக மிக சிறப்பு என பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு வாங்கும் தங்கம் எதிர்காலத்தில் அவர்களை உச்சத்துக்கு உயர்ந்த அடிப்படையாக அமையும் என்கின்றனர்.

    இந்த நாளில் குரு கோவில்களான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், தென்குடித் திட்டை குரு கோவில், சிவகங்கை மாவட்டம், பட்டமங்கலம் குரு கோவில் உள்ளிட்டவற்றுக்கு சென்று வரலாம்.

    இது தவிர ஏராளமான குரு கோவில்கள் தமிழகத்தில் உள்ளன. முக்கியமாக இந்த நாளில் திருச்செந்தூரில் முருகப் பெருமானையும், சுற்றுப் பிரகாரத்தில் உள்ள குருவையும் வணங்குவது மிக மிக நலம் தருவதாக இருக்கும்.

    செந்தூர் முருகனை, தேவர்களின் குருவான பிரகஸ்பதியே வழிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தந்தைக்கே பாடம் சொன்ன குருநாதனான முருகனை, குருவே வழிபட்டதால் இது இரட்டை குரு தலமாக விளங்குகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளை விட செந்தூர் முருகனை வணங்க ஏற்ற நாள், வியாழன் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆலங்குடி குருபகவானுக்கு 24 நெய் தீபங்கள் ஏற்றி உட்பிரகாரத்தை 24 முறை மவுனமாக வலம் வந்தால் குருபகவான் திருவருள் கிட்டும்.

    சோழவந்தானை அடுத்து குருவித்துறை உள்ளது. இங்கு குருபகவான் தனி சந்நதி கொண்டு அருள்வது அற்புதம். இந்த குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் ஊற வைத்த கொண்டக்கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து அவருருள் பெறுகின்றனர்.

    திருவாரூர் கமலாம்பிகை, குருபகவானின் அம்சமாக அருள்கிறார். குருபெயர்ச்சி அன்று இந்த அம்பிகையை தரிசித்தால் குருதோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

    காரைக்குடியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள பட்டமங்கலத்தில் குருபகவான் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்கிறார். இத்தலத்தில் மட்டுமே ஆலமரத்தோடு அமர்ந்த குருபகவானை தரிசிக்கலாம். இங்குள்ள ஐம்பொன்னாலான குரு பகவானின் திருவுருவை குரு பெயர்ச்சி மற்றும் விசேஷ நாட்களில் மட்டுமே தரிசிக்க முடியும்.

    புஷ்ய யோகம் என்பது ஜோதிடத்தில் மிகவும் நல்ல சேர்க்கைகளில் ஒன்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமான பணிகள், முதலீடுகள் அல்லது ஆன்மீக நடைமுறைகளைத் தொடங்க இந்தநாள் மிகவும் சாதகமான காலமாக கருதப்படுகிறது.

    புதிய சிகிச்சைகள் அல்லது உடற்பயிற்சி நடைமுறைகளைத் தொடங்குவதற்கும் குரு புஷ்ய யோகம் தினம் முக்கியமானதாக உள்ளது.

    குரு புஷ்ய யோகம் என்பது ஜோதிடத்தில் மிகவும் புனிதமான காலமாகும், இது வியாழன் (குரு) மற்றும் புஷ்யா என்ற விண்மீன் கூட்டத்தின் அதன் சக்திவாய்ந்த கலவைக்காக மதிக்கப்படுகிறது.

    ஜோதிடத்தில், வியாழன் ஞானம், அறிவு, ஆன்மீகம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை குறிக்கும் மிகவும் நன்மை பயக்கும் கிரகமாக கருதப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் வியாழன் செல்வாக்கு வலுவாக இருக்கும்போது, அது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நேர்மறையான மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

    புஷ்ய நட்சத்திரம் என்பது ஜோதிடத்தில் உள்ள 27 விண்மீன்களில் ஒன்றாகும். இது ஊட்டச்சத்து மற்றும் வளர்ப்பு குணங்களுடன் தொடர்புடையது. இந்த நட்சத்திரத்திற்கு தலைமை தாங்கும் தெய்வம் பிரஹாஸ்பதி (வியாழன்) ஆவார். இது வியாழன் உடன் இணைந்திருக்கும் போது அதன் நல்ல தன்மையை மேலும் பெருக்குகிறது.

    புஷ்ய நட்சத்திரத்தின் விண்மீன் கூட்டத்தின் வழியாக வியாழன் வரும்போது, இந்த காலம் குரு புஷ்ய யோகக் காலம் என்று அழைக்கப்படுகிறது.

    இந்த காலம் திருமண விழாக்கள் அல்லது சொத்து வாங்கும் பொருட்கள் போன்ற தனிப்பட்ட மைல்கற்களுக்கும் ஏற்றதாக கருதப்படுகிறது.

    நீங்கள் ஒரு புதிய முயற்சியைத் தொடங்க விரும்பினாலும் அல்லது உங்கள் ஆன்மீக பயிற்சியை ஆழப்படுத்த விரும்பினாலும், குரு புஷ்ய யோகக் காலத்தை புரிந்துகொள்வதும் பயன்படுத்துவதும் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்க முடியும்.



    ஜோதிட பாரம்பரியத்தின் படி, திதி நட்சத்திரம் மற்றும் கிழமை ஆகியவற்றின் சில சேர்க்கைகள் மிக உன்னதமான நல்ல நாளாக கருதப்படுகின்றன. எனவே சில செயல்களைச் செய்ய அல்லது புதிய செயலைத் தொடங்குவதற்கு ஏற்றதாக இந்த நாட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

    இந்த குரு பூசம் யோகம் தினம் லட்சுமி தேவியிடம் பிரார்த்தனை செய்வதற்கும் அவரது ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது.

    நட்சத்திர மண்டலத்தில் குரு (வியாழன்) புனிதமான சுப கிரகமாகும். கடவுள்களால் ஆசீர்வதிக்கப்பட்ட பூசம் நட்சத்திர அதிபதி சனி. பூசம் நட்சத்திரத்தை குருவால் ஆளப்படும் தினம் புனிதமாகிறது, இந்த பூச நட்சத்திரம் இடம்பெற்றிருக்கும் கடக ராசிக்கு அதிபதி சந்திரன், இதன் விளைவாக, குரு மற்றும் சந்திரனின் சாதகமான கலவையானது இந்த நட்சத்திர கூட்டத்திற்குள் உருவாகிறது. எனவே பூசம் நட்சத்திரம் எந்தவொரு புனிதமான செயலையும் செய்ய சிறந்ததாக கருதப்படுகிறது.

    அதன்படி தங்கம் வாங்குவதற்கும், முதலீடு செய்வதற்கும், புதிய தொழில்களைத் தொடங்குவதற்கும் நாளைய நாள் ஏற்றது.

    நாளை தங்க நகை வாங்கினால் யோகம் பெருகும் என்பது நம்பிக்கை.

    நிலம், சொத்து, முதலியன வாங்குவதற்கும் நல்லது.

    நிலம், சொத்து, வெள்ளி, மின்னணு பொருட்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல வகையான பொருட்கள் கொள்முதல் செய்ய இந்த நாள் சிறந்த நாளாக பயன்படுத்தப்படுகிறது.

    குரு புஷ்ய யோக நாள் மேலும் எதற்கெல்லாம் புனிதமானதாக பார்க்கப்படுகிறது தெரியுமா?

    1) புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுதல்

    2) மந்திரம் மற்றும் தந்திரத்தை கற்றுக்கொள்வது மற்றும் உங்கள் பெரியவர்கள், குரு அல்லது ஆசிரியரிடம் அறிவைப் பெறுதல், ஆசி பெறுதல்

    3) ஒரு புதிய வணிக நிறுவனம் தொடங்க

    4) இந்த காலகட்டத்தில் தங்கம் அல்லது வெள்ளி வாங்குவதால் நல்ல அதிர்ஷ்டத்தை அளிப்பதாகக் கருதப்படுகிறது

    5) புதிய வாகனம் வாங்குவது

    6) புதுமனை புகுவிழா நடத்த, செல்வமும் செழிப்பும் என்றென்றும் நிலைத்திருக்க சனியின் ஆதிக்கத்தைப் பெற்றிருக்கும் பூச நட்சத்திரம் குருவுக்கு உகந்த வியாழக்கிழமை அமையும் போது, மங்களகரமாகிறது. இந்த நாளில் புனித செயல்கள் செய்யலாம்.

    இந்த தினத்தில் வாங்கும் சொத்து அல்லது பொருள் பல மடங்கு பெருகும். அதே போல் செய்யும் தர்மம், தானம் பெருகும் என்பது ஐதீகம்.

    குரு புஷ்ய யோகம் தெய்வீக வலிமையைக் கொண்டுள்ளது. நாளைய தினம் நீங்கள் எடுக்கும் முயற்சி 99.99 சதவீதம் வெற்றியைத் தருவது உறுதி.

    ஆன்மீக மற்றும் மத செயல்களைப் பின்பற்றுபவருக்கு குரு புஷ்ய அமிர்த யோகம் மிகவும் பயனளிக்கிறது. இது பல்வேறு வகையான விஷயங்களைத் தொடங்குவதற்கு மிகவும் நல்ல முகூர்த்த தினமாக கருதப்படுகிறது.

    இந்த நாளில் எடுக்கப்பட்ட எந்த வகையான ஆன்மிக சிந்தனை, பூஜை, ஹோமம், யாகம் அதற்குரிய வெற்றியைத் தருகிறது, அதனால் இந்த புண்ணிய நாளின் நல்ல அதிர்ஷ்டம், சிறந்த யோகத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    ×