என் மலர்
வழிபாடு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
ரிஷபம்
மனக்குழப்பம் அகலும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
மிதுனம்
பணவரவு திருப்தி தரும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு உதவிய சிலரைச் சந்தித்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும். வாகனம் வாங்கும் யோகமுண்டு.
கடகம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
சிம்மம்
பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். எதிர்கால நலன் கருதி சேமிப்பீர்கள். பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வாங்கும் திட்டம் நிறைவேறும்.
கன்னி
நினைத்தது நிறைவேறும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வெளிநாட்டு தொடர்பு நன்மை தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
துலாம்
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். வீடு மாற்றம் செய்வது பற்றி யோசிப்பீர்கள்.
விருச்சிகம்
புகழ் கூடும் நாள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து செயல்படுவர். தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.
தனுசு
யோகமான நாள். பொருளாதார நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இலாகா மாறுதல் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.
மகரம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் பொழுது ஒருகணம் சிந்திப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கும்பம்
சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிக்கும் நாள். புதிய தொழில்தொடங்கும் எண்ணம் மேலோங்கும். கூட இருப்பவர்களின் ஒத்துழைப்பால் குடும்பப் பிரச்சினை தீரும்.
மீனம்
மகிழ்ச்சி கூடும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். முன்னோர் சொத்துகளில் முறையான பங்கீடுகள் கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
- மலையின் நடுப்பகுதியில் அடியார்சாமி சித்தர் சன்னதி உள்ளது.
- சிவன் குடிகொண்டு இருக்கும் மலையை சுற்றி சித்தர்கள் உலா வருவார்கள் என்று சொல்லப்படுவது உண்டு.
மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் மலைவாழ் மக்களின் குலதெய்வமாகவும் விளங்குகிறார். முன்னொரு காலத்தில் புதுப்பதி, சின்னாம்பதி, வெள்ளியங்கிரி போன்ற இடங்களில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வந்துள்ளனர். அவர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோவிலுக்கு வந்து சாமியை தரிசித்து விட்டு சென்றுள்ளனர்.
மேலும் படியேறும் வழியில் அடியார்சாமி என்ற சித்தர் சன்னதி உள்ளது. அந்த சன்னதியிலும் மலைவாழ் மக்கள் அதிகம் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மலைவாழ் மக்கள் பல இடங்களுக்கு பிரிந்து சென்று வாழ்ந்து வந்தாலும் தற்போதும் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுகிறார்கள். சிலர் மொட்டையடித்து காணிக்கை செலுத்தி இங்கு வந்து வழிபடுவதை காண முடிகிறது.
மலையின் நடுப்பகுதியில் அடியார்சாமி சித்தர் சன்னதி உள்ளது. மலைக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. சிவன் குடிகொண்டு இருக்கும் மலையை சுற்றி சித்தர்கள் உலா வருவார்கள் என்று சொல்லப்படுவது உண்டு.
இந்தநிலையில் அடியார்சாமி சித்தர் சிலையுடன் சன்னதி இருப்பது விசேஷமானதாக கருதப்படுகிறது. இதனால் மலையேறும் பக்தர்கள் அடியார்சாமியை வழிபட்டு செல்கிறார்கள். அவருக்கும் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
- உலக வாழ்க்கையில் வியாதியும், உபத்திரவமும் பெருகிக்கொண்டே போகிறது.
- கர்த்தர் உங்களுக்கு ஆறுதல் தர வல்லவராயிருக்கிறார்.
அன்றாட உலக வாழ்க்கையில் நாம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து கொண்டுதான் இருக்கிறோம். ஏதோ ஒரு துக்கம் நம் வாழ்க்கையில் வந்து கொண்டு தான் இருக்கிறது.
வியாதியால் வரும் துக்கம், பாவத்தினால் வரும் துக்கம், குடும்ப பிரச்சனைகளால் வரும் துக்கம், வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் பிரச்சனையால் வரும் துக்கம் இப்படி ஏதோ ஒன்று நம் வாழ்க்கையில் நம்மை துக்கத்தில் நடத்திக்கொண்டு தான் இருக்கிறது.
எல்லா துக்கங்களையும், துன்பங்களையும் இயேசு மாற்றி உங்களுக்கு ஆறுதல் தர வல்லவராயிருக்கிறார். வேதாகமத்தில் தேவன் எப்படி ஆறுதல் தந்தார் என்பதை இங்கே காண்போம்.
துக்கத்தில் ஆறுதல்
ஆதியாகமம் 24-ம் அதிகாரம் 67-ம் வசனத்தில் கூறப்படுகிறது: ஆபிரகாமின் மனைவி சாராள் மரித்து விட்டாள். அவளின் மகன் ஈசாக், தாயாரின் இறப்பால் துக்கமுகத்தோடு காணப்பட்டான் என்று வேதாகமம் கூறுகிறது. ஈசாக் ரெபெக்காளை திருமணம் செய்து கொண்ட பின் தன் தாய்க்காக கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான் என்று வேதாகமம் சொல்கிறது.
ஈசாக் தன் மனைவியை நேசித்து ஆறுதல் அடைந்தான். முதலாவதாக நாம் நம் குடும்பத்தை நேசிக்க வேண்டும். மனைவி, குழந்தைகள் மேல் அன்பு செலுத்த வேண்டும். அப்போது குடும்ப வாழ்க்கை ஆறுதலாக மாறும்.
உபத்திரவத்தில் (அல்லது) வியாதியில் ஆறுதல்
உலக வாழ்க்கையில் வியாதியும், உபத்திரவமும் பெருகிக்கொண்டே போகிறது. வியாதி இல்லாத மனிதனே கிடையாது. வேதாகமத்தில் 12 ஆண்டுகளாக உபத்திரவத்தில் வாழ்ந்த பெரும்பாடுள்ள ஸ்திரி தன் ஆஸ்தியை விற்று மருத்துவம் பார்த்தாள். ஆனால் பயன் ஒன்றும் இல்லை. ஒருவராலும் அவளை சுகப்படுத்த முடியவில்லை. தன் ஆஸ்திகளை இழந்தாள். தேவனைப்பற்றி அறியாத அவள் நமக்கு சுகம் தர வல்லவர் ஒருவர் இருக்கிறார் என்று அறிந்தவுடனே அவரை காண புறப்பட்டு வருகிறாள். இந்த நிகழ்வு லூக்கா 8-ம் அதிகாரம் 41 முதல் 56-ம் வரையிலான வசனங்கள் மற்றும் மாற்கு 5-ம் அதிகாரம் 25, 26-வது வசனங்களில் காணப்படுகிறது.
யவீருவின் 12 வயது மகள் மரண அவஸ்தையில் இருக்கிறாள். அவளை காப்பாற்ற வரும்படி இயேசுவை அழைத்ததன் நிமித்தம் யவீருவின் வீட்டிற்கு இயேசு போகையில், திரளான ஜனங்கள் அவரை நெருங்கினார்கள். இயேசு வரும் செய்தியை கேட்ட பெரும்பாடுள்ள ஸ்திரி எப்படியாவது அவரைப்பார்த்து சுகம் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு வருகிறாள்.
இயேசுவை நெருங்கும் சமயத்தில் சீடர்கள் அவளை அதட்டினார்கள். ஆஸ்திகளை செலவழித்தும் ஒருவனாலும் சுகப்படாதிருந்த அந்த ஸ்திரி இயேசுவுக்கு பின்னால் சென்று அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொட்டாள். உடனே அவள் பெரும்பாடு நின்று விட்டது. (லூக்கா 8-ம் அதிகாரம் 43, 44-வது வசனங்கள்)
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்ற வாக்குதத்தம் சொன்னவர் வாக்கு மாறாத தேவனாய் இருக்கிறார்.
கண்ணீரில் ஆறுதல் தரும் தேவன்
சாமுவேல் 1-ம் அதிகாரத்தில் எல்க்கானாவிற்கு 2 மனைவிகள். ஒருவள் பெனின்னாள், மற்றவள் அன்னாள். பெனின்னாளுக்கு குழந்தை இருந்தது. அன்னாளுக்கோ குழந்தை இல்லை. பெனின்னாளோ, அன்னாள் மனம் துக்கப்படும்படியாக விசனப்படுத்துவாள். அவளை மனமடிவாக்குவாள். அன்னாளோ துக்கமுகமாய் அழுது கொண்டிருப்பாள். அன்னாள் மனம் கசந்து மிகவும் அழுது கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்தாள். உம்முடைய அடியாளை மறவாமல் நினைத்தருளி எனக்கு ஒரு ஆண் பிள்ளையை கொடுத்தால் அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனை கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன் என்று பிரார்த்தனை செய்தாள். அதன்பின் அவள் துக்கமுகமாய் இருக்கவில்லை என்று வேதாகமம் சொல்கிறது. கர்த்தர் அவள் கண்ணீரை கண்டு விண்ணப்பத்தை கேட்டு சாமுவேல் என்ற தீர்க்கதரிசியை மகனாக அளித்தார்.
குழந்தை இல்லை என்று கண்ணீரோடு இருப்பவர்களே நீங்கள் கவலைப்படாதிருங்கள். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் என்று வேதாகமம் கூறுகிறது. கர்த்தர் உங்களை காண்கிற தேவனாயிருக்கிறார். குழந்தையில்லை என்று துக்கத்தோடு இருக்கிறீர்களா? கவலைப்படாதிருங்கள். தேவனை நோக்கி நம்பிக்கையோடு விண்ணப்பம் செய்யுங்கள். கர்த்தர் உங்களுக்கு ஆறுதல் தர வல்லவராயிருக்கிறார். ஆறுதல் தரும் தேவன் இன்றும் ஜீவிக்கிறவராயிருக்கிறார். ஆமென்.
- காவல் தெய்வங்கள், வெவ்வேறு ராசியின் அதிபதிகள்.
- மிதுனம், கன்னி - ஈசான்ய லிங்கம்.
கிரிவலம் வரும் போது அஷ்ட லிங்கங்களைத் தரிசிக்கலாம். இவை ஒவ்வொன்றும், எட்டுத் திசைகளின் காவல் தெய்வங்கள், வெவ்வேறு ராசியின் அதிபதிகள், அவரவர் நட்சத்திரம், ராசிக்கு உரிய லிங்கத்தை வழிபட்டால் நலம் உண்டாகும்.
ரிஷபம், துலாம் - இந்திர லிங்கம்
சிம்மம் - அக்னி லிங்கம்
விருச்சிகம் - எம லிங்கம்
மேஷம் - நிருதி லிங்கம்
மகரம், கும்பம் - வருண லிங்கம்
கடகம் - வாயு லிங்கம்
தனுசு, மீனம் - குபேர லிங்கம்
மிதுனம், கன்னி - ஈசான்ய லிங்கம்.
- தேரோட்டத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
- 11-ம் திருவிழா நாளை நடைபெறுகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் திருவிழாவில் குடவருவாயில் தீபாராதனையும், 7-ம் திருவிழாவில் சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பர பவனியும், மாலையில் சுவாமி சண்முகர் சிகப்பு சாத்தி கோலத்தில் சிவன் அம்சமாக சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது.
8-ம் திருவிழாவில் சுவாமி சண்முகர் காலையில் வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மன் அம்சமாக வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலாவும், மதியம் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் பச்சை கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் இன்று காலையில் நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூபம் 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
காலை 7.20 மணிக்கு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷம் விண்அதிர திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
11-ம் திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. நாளை மறுநாள் 12-ம் திருவிழாவில் இரவு சுவாமி, அம்பாள் தனித்தனி பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
- 8-வது நாளாக வருகிற 25-ந்தேதி வெள்ளி குதிரை வாகனத்திலும் சுவாமி எழுந்தருளுகிறார்.
- பஞ்சமூர்த்தி சுவாமிகளின் புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு விழா கடந்த 18-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி தினமும் இரவு சுவாமி மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று (சனிக்கிழமை) மாலை கஜமுகசூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் வெள்ளி யானை வாகனத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு கோவிலை சுற்றி அசுரனை வதம் செய்ய வீதி உலா வருகிறார். பின்னர் இரவு 7 மணி அளவில் கோவில் தெப்பக்குளம் முன்பு சூரனை யானை தந்தத்தால் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து 8-வது நாளாக வருகிற 25-ந்தேதி வெள்ளி குதிரை வாகனத்திலும் சுவாமி எழுந்தருளுகிறார். 9-வது நாள் திருவிழாவான 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை தேரோட்டம் நடக்கிறது. முன்னதாக காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளுகிறார்.
அதன் பின்னர் ஆண்டிற்கு ஒருமுறை சந்தனகாப்பு அலங்காரத்தில் மூலவர் கற்பகவிநாயகர் காட்சியளிக்கும் வகையில் அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் கற்பகவிநாயகர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். பின்னர் மாலை தேரோட்டம் நடக்கிறது.
இரவு சுவாமி யானை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வருகிறார். 10-ம் திருநாளான 27-ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பகவிநாயகர் எழுந்தருளி கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து உச்சிகால சிறப்பு பூஜைகள் மற்றும் மூலவர் கற்பகவிநாயகருக்கு முக்குறுணி கொழுக்கட்டை, படையல் படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகளின் புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி பழனியப்பச்செட்டியார் மற்றும் நச்சாந்துபட்டி குமரப்பச் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- திருச்செந்தூர் முருகப் பெருமான் ரதோற்சவம்.
- ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆவணி-7 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : அமாவாசை நண்பகல் 12.29 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம் : மகம் பின்னிரவு 2.27 மணி வரை பிறகு பூரம்
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வெள்ளி கேடயத்தில், மாலை கஜமுக சூரசம்ஹார லீலை
குச்சனூர் ஸ்ரீ சனி பகவான் சிறப்பு திருமஞ்சன சேவை. திருச்செந்தூர் முருகப் பெருமான் ரதோற்சவம். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் வெள்ளி கேடயத்தில், மாலை கஜமுக சூரசம்ஹார லீலை. இளையான்குடி ஸ்ரீ மாறநாயனார் குரு பூஜை. பெருவயல் ஸ்ரீ முருகப் பெருமான் ரதோற்சவம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்.
ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜ பெருமாள், திருச்சேறை ஸ்ரீ சாரநாதப் பெருமாள் கோவில்களில் காலை சிறப்பு திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தேர்ச்சி
ரிஷபம்-மகிழ்ச்சி
மிதுனம்-ஆர்வம்
கடகம்-பாசம்
சிம்மம்-வாழ்வு
கன்னி-நன்மை
துலாம்- பயணம்
விருச்சிகம்-பாராட்டு
தனுசு- தெளிவு
மகரம்-மேன்மை
கும்பம்-யோகம்
மீனம்-ஆதாயம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பொழுது விடியும் பொழுதே பொன்னான தகவல் வந்து சேரும் நாள். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லை அகலும்.
ரிஷபம்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும். பக்கபலமாக இருப்பவர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர்.
மிதுனம்
தடைபட்ட காரியங்கள் தானாக நடைபெறும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். புதிய உத்தியோகத்திற்கான அழைப்பு வரலாம்.
கடகம்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். நேற்றைய மனக்கசப்பு இன்று மாறும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
சிம்மம்
வாய்ப்புகள் வாயிற் கதவைத் தட்டும் நாள். நேற்று பாதியில் நின்ற பணியை இன்று மீதியும் தொடருவீர்கள். பக்கத்தில் இருந்தவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும்.
கன்னி
விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
துலாம்
சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். துணிவும். தன்னம்பிக்கையும் கூடும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
விருச்சிகம்
முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர்.
தனுசு
சச்சரவுகள் அகலும் நாள். தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறிவது நல்லது. பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும்.
மகரம்
அருகிலுள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். முயற்சித்த காரியங்களில் குறுக்கீடுகள் வரலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளைப் பகைத்துக்கொள்ள வேண்டாம்.
கும்பம்
கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். கவுரவம், புகழ் கூடும். உத்தியோக உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மீனம்
யோகமான நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் நன்மை உண்டு. புதிய ஒப்பந்தங்கள் தொழில் ரீதியாக வந்து சேரும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.
- கையை வீசிக் கொண்டு வேக வேகமாக வலம் வரக்கூடாது.
- கிரிவலம் வரும்போது சுற்றுச் சாலையின் இடது ஓரமாக நடக்க வேண்டும்.
கிரிவலம் செல்லும்போது பக்தர்கள் கடைபிடிக்க வேண்டியவைகள் வருமாறு:-
குடை பிடித்துக் கொண்டு வலம் வரக்கூடாது.
நீராடி தூய ஆடை அணிந்து, விபூதி, குங்குமம், இட்டுக் கொண்டுதான் கிரிவலம் வர வேண்டும்.
ஆண்கள் வேட்டி, துண்டு அணிந்து கொண்டு வலம் வரலாம். பெண்கள் மெட்டி, வளையல், நெற்றியில் குங்குமம் வைத்து வலம் வர வேண்டும்.
மிதியடி அணிந்து கொண்டு வலம் வரக்கூடாது. ஏனென்றால் அடிக்கு ஆயிரத்தெட்டு லிங்கம் உள்ளது என்பார்கள். குடை பிடித்துக் கொண்டு வலம் வரக்கூடாது.
கையை வீசிக் கொண்டு வேக வேகமாக வலம் வரக்கூடாது. பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் குறிப்பாக தொலைக்காட்சி தொடர்கள் பற்றி தேவை இல்லாமல் பேசிக் கொண்டும், வேடிக்கை பார்த்துக் கொண்டும், வழியில் எல்லா இடங்களில் அமர்ந்து கொண்டும் வலம் வரக்கூடாது. மனம் முழுக்க ஈசன் நினைவு மட்டுமே இருக்க வேண்டும்.வேறு பல நினைவுகளுடன் வரக்கூடாது. குறுக்கும், நெடுக்கும் நடந்து வலம் வரக்கூடாது.
போதை பொருளை உட்கொள்ளக் கூடாது. சிகரெட், பீடி குடிக்க கூடாது. புலால் உண்ட அன்றும், போதைப் பொருட்கள் பயன்படுத்திய தினத்திலும் கிரிவலம் வரக்கூடாது.
தூரம் அதிகமாக உள்ளதே என்று மலைத்த இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது. எப்படி நடக்கப்போகிறோம் என்று மலைப்புடன் வலம் வரக்கூடாது.
யாருடனும் பேசாது அஞ்செழுத்தை மனதிற்குள் கூறியபடி வலம் வருதல் நல்லது. மனம் முழுவதும் சிவன் மீது நாட்டம் கொண்டிருக்க வேண்டும்.
கை வீசிக் கொண்டு செல்லாமல் நிதானமாக நடந்து வலம் வர வேண்டும். இது பிராணாயாமம் செய்வதற்கு சமமாக பலன் கிடைக்கும். இன்னும் கூறப்போனால் ஒரு கர்ப்பிணிப் பெண் போல் மெல்ல அடி எடுத்து வைத்து நடக்க வேண்டும். இது ஒட்டப் பந்தயமோ, நடைப் பந்தயமோ அல்லது எவ்வளவு வேகமாக நடந்தோம் என்பதை விட எவ்வளவு மெதுவாக நடந்தோம் என்பதிலேயே பலன் உள்ளது.
கிரிவலம் வரும்போது சுற்றுச் சாலையின் இடது ஓரமாக நடக்க வேண்டும். மலையை பார்த்துக் கொண்டே நடக்க வேண்டும். அப்போது ஓம் நமச்சிவாய என்று தவறாமல் உச்சரிக்க வேண்டும். திருநீறு, சந்தனம், குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை வைத்திருத்தல் அவசியம். கையில் ஊதுபத்தி மற்றும் தூபம் எடுத்துக் கொண்டு சென்று அதன் மூலம் ஆராதித்து வழிபடுவது சிறப்பு.
பிராணிகளுக்கோ, பசுக்களுக்கோ, பிச்சை கேட்போருக்கோ, வலம் வரும்போது சிறு பிரசாதம் அல்லது வாழைப்பழம், பிஸ்கட் ஆகியவற்றை தருதல் நலம்.
- திருவண்ணாமலையை போல் இங்கும் பெரியமலை உள்ளது.
- வனப்பகுதியில் இருக்கும் லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு செல்கிறார்கள்.
திருவண்ணாமலைக்கு இணையான தலமாக கருதப்படுவது கோவை மாவட்டம் மதுக்கரையில் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் ஆலயம். இங்குள்ள சுவாமியை வணங்கி கிரிவலம் வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் தான் திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக அதிக பக்தர்கள் கிரிவலம் செல்லக்கூடிய இடமாக தர்மலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது.
கோவை மட்டுமின்றி திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, திண்டுக்கல் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் செல்கிறார்கள். திருவண்ணாமலையை போல் இங்கும் பெரியமலை உள்ளது. திருவண்ணாமலையில் தினந்தோறும் கிரிவலம் செல்லலாம். ஆனால் இங்கு பவுர்ணமி அன்று ஒருநாள் மட்டுமே கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் காரணமான வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு மற்ற நாட்களில் யாரையும் கிரிவலம் செல்ல அனுமதிப்பதில்லை.
கிரிவலப்பாதையானது மொத்தம் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்கங்களான இந்திர லிங்கம், அக்னிலிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகியவை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. கிரிவலப்பாதையில் உள்ள 8 லிங்கங்களையும் பக்தர்கள் தரிசித்தபடி செல்கிறார்கள். கிரிவலம் செல்லும்போதே பக்தர்கள் பால், பன்னீர், மலர்கள், வில்வ இலைகளை வாங்கிச் செல்கிறார்கள். அந்த அபிஷேக பொருட்களை கொண்டு வனப்பகுதியில் இருக்கும் லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு செல்கிறார்கள்.

கிரிவலப்பாதையில் தார்சாலையோ, சிமெண்டு சாலையோ கிடையாது. கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தை என்பார்களே. அதேபோல கிரிவலப்பாதையில் பல இடங்கள் மேடு, பள்ளமாகவும், கற்கள் படர்ந்தும் காணப்படும். அவற்றை பொருட்படுத்தாமலேயே பக்தர்கள் கிரிவலம் சென்று வருகிறார்கள். மலையை சுற்றி ஏராளமான மூலிகை மரங்கள் உள்ளன. அவற்றை உராய்ந்து வரும் தூய காற்று மருத்துவக்குணம் கொண்டது. அவற்றை முகர்ந்தபடியே பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். இந்த மூலிகை மரங்களும் பக்தர்கள் அங்கு திரண்டு வர காரணமாக அமைந்துள்ளது. எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் 3 முறை தொடர்ந்து பவுர்ணமி கிரிவலம் வந்தால் நிச்சயம் பிரச்சினைகள் தீரும் என்கிறார்கள். மனஅழுத்தம், திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கிரிவலம் சென்றால் விரைவில் பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் பிரச்சினைகள் உள்ளவர்களும் கிரிவலம் சென்று வர நோய்கள் நீங்கும்.
கிரிவலத்தின் சிறப்புகள்:
உடல்நலம்: கிரிவலம் செல்வதால் பாதங்களில் ரத்த ஓட்டம் சீராகும், கால்களுக்கு பயிற்சி கிடைக்கும், மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
மனநலம்: கிரிவலம் மன அழுத்தத்தை குறைத்து, அமைதியையும், நிம்மதியையும் தரும்.
ஆன்மீக பலம்: கிரிவலம் செல்வதால் தெய்வத்தின் அருள் கிடைக்கும், பாவங்கள் நீங்கும், மனத்தெளிவு பிறக்கும்.
நன்மைகள்: கிரிவலம் செல்வதால் குடும்ப வாழ்வில் இன்பம், மாங்கல்ய பலம், எதிரிகளின் தொல்லை நீங்குதல் போன்ற பலன்கள் கிடைக்கும்.
- கோவிலில் பக்தர்கள் கிரிவலம் செல்வது சிறப்பு.
- மலையடிவாரத்தில் பீமன் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.
சிவ வழிபாட்டில் நினைத்தாலே முக்தி தரும் ஆலயமாக கருதப்படுவது திருவண்ணாமலை. அப்படிப்பட்ட திருவண்ணாமலை தலத்துக்கு இணையான கோவில் கொங்கு மண்டலமான கோவையில் உள்ளது. அந்த கோவில் மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் ஆலயம் ஆகும்.
கொங்கு திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் இந்த கோவில் கோவை- பாலக்காடு சாலையில் குனியமுத்தூரை தாண்டியதும் மதுக்கரை மரப்பாலம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. சுமார் 1600 அடி உயரமுள்ள மலை உச்சியில் கோவில் அமைந்திருப்பது சிறப்பானது. இந்த மலை தர்மலிங்க மலை என்று அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் பக்தர்கள் கிரிவலம் செல்வது சிறப்பு. திருவண்ணாமலைக்கு அடுத்து அதிக பக்தர்கள் கிரிவலம் செல்லும் ஆலயமாக தர்மலிங்கேஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. இதனால் கொங்கு திருவண்ணாமலை என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
அதேசமயம் வனவிலங்குகள் நடமாட்டம் கருதி பவுர்ணமி தினத்தில் மட்டும் கிரிவலம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். திருவண்ணாமலையில் ஏற்றுவது போல் இங்கும் கார்த்திகை திருவிழாவின் போது மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
தர்மலிங்கேஸ்வரர் பெயர்க்காரணம்
பஞ்சபாண்டவர்கள் காலக்கட்டத்தில் பாண்டவர்களில் மூத்தவரான தருமன் இங்கு வந்து ஈஸ்வரனை தவமிருந்து வழிபட்ட காரணத்தால் சுவாமி, தர்மலிங்கேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அந்த சமயத்தில் பீமன் கீழே காவல் காத்ததாகவும், மற்ற தம்பிகள் பாதுகாப்பாக கிரிவலம் வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. இதன்காரணமாக மலையடிவாரத்தில் பீமன் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.

சுயம்பு மூர்த்தி
தர்மலிங்கேஸ்வரர் மலையில் தானாகவே தோன்றிய சுயம்பு மூர்த்தி ஆவார். பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிக்கு சொந்தமான பசுமாடு காணாமல் போய் இருக்கிறது. அந்த பசுவை தேடி விவசாயி மலை உச்சிக்கு சென்று இருக்கிறார். அங்கு சுயம்புலிங்கத்திற்கு மாடு பால்சொரிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவரம் ஊர் முழுக்க பரவி அதன்பிறகே பக்தர்கள் வழிபடத் தொடங்கி அங்கு கோவில் எழுப்பப்பட்டதாக சொல்கிறார்கள்.
ஏன் கொங்கு திருவண்ணாமலை
இந்த ஆலயத்தை கொங்கு திருவண்ணாமலை என்று அழைப்பதற்கும் சில காரணங்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி தான் தர்மலிங்கேஸ்வரர் வீற்றிருக்கும் மலை. ஆனால் மற்ற மலைகளுடன் சேர்ந்து இருக்காமல் தனித்துவமாக இந்த மலை அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது போல் இங்கும் கிரிவலப்பாதையில் 8 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
ஆலய அமைப்பு:
கோவில் சன்னதிக்கு முன்பு முதலில் ஸ்தூபியும், கொடிமரமும் உள்ளன. அதையடுத்து மகாமண்டபம், நந்தி, பலிபீடத்தைத் தொடர்ந்து அர்த்த மண்டபம் உள்ளது. கருவறையில் சித்தலிங்கேஸ்வரர் ஆவுடையார் மீது சிவலிங்கத் திருமேனியில் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். மூலவர் தர்மலிங்கேஸ்வரர் இரண்டே கால் அடி உயரத்தில் உள்ள கற்சிலை ஆகும். கருவறை நுழைவுவாசலில் இடதுபுறம் விநாயகர் மற்றும் வலது புறம் முருகப் பெருமான் திருமேனிகள் உள்ளன.
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. காலைக் கதிரவன் தன் பொற்கதிர்களால் கருவறை இறைவனை தினம் தினம் குளிப்பாட்டும் காட்சி நம் கண்களை வியக்க வைக்கும் காட்சியாகும். கருவறையின் விமானம் தொலைவிலிருந்து பார்க்கும் பக்தர்களின் கண்களுக்கு நல் விருந்தாக அமைகிறது. தைப்பூசம், நவராத்திரி, சிவராத்திரி, ஆண்டு பிறப்பு நாட்களில் இறைவனுக்கு சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறுகின்றன.
குழந்தை பேறு இல்லாத தம்பதிகள் இங்கு வந்து இறைவனை வேண்டிக் கொள்கின்றனர். தங்கள் பிரார்த்தனை பலித்ததும் பிறந்த குழந்தையை அழைத்து வந்து இறைவன் சன்னதியில் இறைவனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுவது இங்கு இயல்பாக காணும் காட்சிகளாக உள்ளது. கோவிலில் தமிழ் முறைப்படி மட்டுமே அர்ச்சனைகள், வழிபாடுகள் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- சிவபெருமானின் காளைமாடு சுந்தரருக்கு வழி காட்டியதால் இந்த இடத்திற்கு ‘காளையார்கோவில்’ என்ற பெயர் வந்துள்ளது.
- பூர்வ ஜென்ம பாவத்தை விலக்கும் சக்தி இத்தல இறைவனுக்கு உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவிலில் சொர்ணகாளீஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று சிறப்புகளை கொண்டது. தமிழ்நாட்டில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 200-வது ஆலயம் ஆகும். மேலும் தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் இது 10-வது தலமாகும்.
தல வரலாறு
சிவபெருமானின் காளைமாடு சுந்தரருக்கு வழி காட்டியதால் இந்த இடத்திற்கு 'காளையார்கோவில்' என்ற பெயர் வந்துள்ளது. சங்க காலத்தில் இந்த ஊரின் பெயர் 'திருக்கானப்பேர்' என வழங்கப்பட்டதை புறநானூற்றுப் பாடல்கள் மூலம் அறிய முடியும். கி.பி. 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் பாடல்களில் சிவனை காளையாக உருவகித்து பாடியதால் இக்கோவிலின் தெய்வமான சிவன் 'காளையார்' என வழங்கப்பட்டதாகவும் கூறப் படுகிறது. திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி என்பதுபோல, இந்த காளையார்கோவில் தலத்தில் பிறந்தாலும், இறந்தாலும் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்கு பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை. இவர் இங்குள்ள இறைவனிடம் வேண்டி தங்கத்தால் செய்த குழந்தையை இறைவனிடம் சமர்ப்பிக்கப் போகும்போது, அதை குளத்தில் போடுமாறு அசரீரி கேட்டது. உடனே அவர் கையில் இருந்த அந்த தங்கக் குழந்தையை குளத்தில் போட்டு விட்டு கையை மேலே எடுக்கும்போது, நிஜமான ஒரு ஆண் குழந்தை அவர் கையில் இருந்திருக்கிறது. இது ஒவ்வொரு ஆண்டு திருவிழாவின்போதும் பொய்ப்பிள்ளையை மெய்ப் பிள்ளையாக்கும் நிகழ்வாக வைகாசி விசாகத்தன்று மிகவும் சிறப்பாக இந்த ஆலயத்தில் கொண்டாடப்படுகிறது.
இக்கோவிலின் தல விருட்சம் வெள்ளை நிற பூக்கள் கொண்ட மந்தாரை மரம். இரட்டையாக விரியக்கூடிய இலைகள் கொண்ட இந்த சிறு மரங்களில் கொக்கு நிற்பது போல பூக்கள் பூப்பதால் 'கொக்கு மந்தாரை' என்று அழைக்கப்படுகிறது. இந்த கொக்கு மந்தாரை பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை.
யானைமடு தீர்த்தம், அக்காமடு தீர்த்தம், தங்கச்சிமடு தீர்த்தம் என்னும் மூன்று தெப்பங்களில் தீர்த்தம் எடுக்கப்பட்டு சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
மருது சகோதரர்கள் சரணடையாவிட்டால் இங்குள்ள சுமார் 150 அடி உயரம் கொண்ட பெரிய கோபுரம் தகர்க்கப்படும் என ஆங்கிலேயர் அறிவித்தனர். அதன் பின்னரே அவர்கள் கைதிகளாக பிடிக்கப்பட்டு தூக்கில் இடப்பட்டனர் என்று சொல்லப்படுகிறது. கோவில்களை பாதுகாக்க மன்னர்கள் உயிரையும் தியாகம் செய்தனர் என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
கோவில் அமைப்பு
பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னனால் அமைக்கப்பெற்ற இக்கோவில், பின்னர் பலராலும் திருப்பணிகள் செய்யப்பட்டு வந்துள்ளது. பொதுவாக ஒரு கோவிலில் ஒரு மூலவரும் அம்பாளும் மட்டுமே இருப்பர். காஞ்சிபுரம் ஓணகாந்தன்தளியில் மூன்று சிவன் சன்னதிகள் உள்ளன. அம்பாளுக்கு தனிச் சன்னதி கிடையாது. ஆனால், இத்தலத்தில் மூன்று இறைவனும், மூன்று இறைவியும் எழுந்தருளுகின்றனர்.
இங்கு சோமேஸ்வரர், சொர்ணகாளீஸ்வரர், சுந்தரேஸ்வரர் என்று மூன்று சிவன் சன்னிதிகளும், சவுந்தரநாயகி, சொர்ணவல்லி, மீனாட்சி என மூன்று அம்மன் சன்னிதிகளும் தனித்தனியாக அமைந்துள்ளன. மேலும் வெளி மண்டபத்தில் மூன்று ஆண் தெய்வங்களும், மூன்று பெண் தெய்வங்களும் அமைக்கப்பட்டுள்ளனர்.
இந்திரன், தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்க, பல ஆயிரம் சிவாலயங்களை வழிபாடு செய்ய வேண்டியதிருந்தது. அதன் ஒருபகுதியாக இங்கும் வந்து வழிபட்டான். இத்தலத்தில் வழிபட்டதும் ஆயிரம் சிவாலயங்களை வழிபட்ட பலன் கிடைத்ததாக உணர்ந்தான். இதன் அடிப்படையிலேயே இங்கு 1000 லிங்கங்களால் உருவான 'சகஸ்ரலிங்கம்' பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்திரனின் வாகனமான வெள்ளை யானைக்கு 'ஐராவதம்' என்று பெயர். இந்த யானை சாபம் பெற்றதால் இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது. மனிதனின் பார்வையில் படக்கூடாது என்பது இந்த யானைக்கான விதி. ஆனாலும் ஒரு மனிதன் அந்த யானையைப் பார்த்து விட்டான். இதனால் அந்த யானை தன்னுடைய தலையால் பூமியை முட்டி பாதாளத்திற்குள் நுழைந்தது. யானை முட்டியதில் ஏற்பட்ட பள்ளத்தில் தண்ணீர் பெருகி ஒரு தீர்த்தக்குளம் உண்டானது. இதற்கு 'யானை மடு' என்று பெயர். வேறு எந்த கோவிலிலும் இல்லாத தங்கத்தால் ஆன பள்ளியறை இங்கு உள்ளது.
ஏழாம் நூற்றாண்டில் மதுரையை ஆட்சி செய்த வரகுண பாண்டியன் இங்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னிதியை ஏற்படுத்தினார். இங்குள்ள பெரிய கோபுரம் மருதுபாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. கோபுரத்திலிருந்து பார்த்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் தெரியும் விதத்தில் கட்டிட அமைப்பை உருவாக்கினார். அந்த காலத்தில் இதன் மீது ஏறினால் மதுரை மீனாட்சி அம்மன் கோபுரம் தெரியும் என்கின்றனர்.
பூர்வ ஜென்ம பாவத்தை விலக்கும் சக்தி இத்தல இறைவனுக்கு உள்ளது. சொர்ணகாளீஸ்வரரை வழிபட்டால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. மேலும் இந்த ஆலயத்தில் வழிபாடு செய்தால் மன நோய் முற்றிலும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தெப்பக்குளம்
திருவிழாக்கள்
சொர்ணகாளீஸ்வரர் கோவிலில் தை மாதம் தேர்த்திருவிழா, தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. வைகாசி மாதம் சோமேஸ்வரர் பிரமோற்சவம் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் தெப்பத்திருவிழா நடைபெறும்.
ஆலயம் காலை 5.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்
சிவகங்கையில் இருந்து தொண்டி செல்லும் சாலையில் சுமார் 18 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து தென்கிழக்கே 66 கிலோமீட்டர் தூரத்திலும் காளையார்கோவில் உள்ளது.






