என் மலர்tooltip icon

    வழிபாடு

    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
    • பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மயில் வாகனத்தில் திருவீதி உலா.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆவணி-29 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: அமாவாசை காலை 7.51 மணி வரை. பிறகு பிரதமை.

    நட்சத்திரம்: பூரம் காலை 6.27 மணி வரை. பிறகு உத்திரம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை.

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திண்டுக்கல் விநாயகப் பெருமான் பவனி. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மயில் வாகனத்தில் திருவீதி உலா. சோழவந்தான் ஜனகமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம். மறைஞான சம்பந்தர் குரு பூஜை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-இன்பம்

    ரிஷபம்-முயற்சி

    மிதுனம்-தனம்

    கடகம்-உதவி

    சிம்மம்-பரிசு

    கன்னி-பாராட்டு

    துலாம்-அசதி

    விருச்சிகம்-சிரத்தை

    தனுசு- சிந்தனை

    மகரம்- வரவு

    கும்பம்-விருத்தி

    மீனம்-லாபம்

    • வத்திராயிருப்பு பக்கத்தில் அர்ஜுனாபுரம் என்ற அழகான கிராமம் இருந்தது.
    • பார்ப்பதற்கே செழிப்பாக பச்சைபசேல் என்று பசுமையாக இருக்கும்.

    கொடுமையான வறுமையால் தன்னையும் தன் மக்களையும் பறிகொடுத்து தெய்வமாக இருக்கும் நல்லதங்காள் வரலாற்றை பற்றி இன்று தெரிந்துகொள்வோம்.

    விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு பக்கத்தில் அர்ஜுனாபுரம் என்ற அழகான கிராமம் இருந்தது. அந்த கிராமத்தில் எந்த பக்கம் பார்த்தாலும், மா மரங்களும், தென்னை மரங்களும், வாழைமரங்களும், தேக்கு மரங்களும் பார்ப்பதற்கே செழிப்பாக பச்சைபசேல் என்று பசுமையாக இருக்கும்.

    இந்த அர்ஜுனாபுரத்தை தலைமை இடமாக கொண்டு மதுராபுரி நகரத்தில் பிறந்த ராமலிங்க மகாராஜா. இவருக்கு இந்திராணி என்ற மனைவி இருந்தார். இவருக்கும், இந்திராணிக்கும் திருமணம் முடிந்து பலவருடங்களுக்கு பிறகு தான் குழந்தைப்பேறு கிடைத்தது. மொத்தம் அவர்களுக்கு 2 குழந்தைகள் இருந்தனர். மூத்த குழந்தை பெயர் நல்லதம்பி, இளைய குழந்தை நல்லதங்காள். இந்த இரண்டு குழந்தைகளுமே நல்ல செல்வசெழிப்புடன் வளர்ந்து வந்தனர்.

    சிலநாட்களுக்கு பிறகு ராமலிங்க மகாராஜாவுக்கு முதுமை காலம் வந்தது. தான் உயிரோடு இருக்கும்போதே நல்லதம்பிக்கு முடிசூட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். உடனே குந்தல தேசத்தை ஆட்சிபுரிந்து வந்த கோமகனின் மகள் மூழி அலங்காரியை திருமணம் செய்து வைத்தார்.

    திருமணம் முடிந்த 10-வது நாள் நல்லதங்காளின் தாய் இந்திராணி இறந்துவிட்டார். மனைவி இறந்த துயரத்தாலும், தன்னுடைய மகளுக்கு இன்னும் திருமணம் முடித்து வைக்கவில்லையே என்ற துக்கத்தில் ராமலிங்க மகாராஜா சிலநாட்கள் கழித்து இறந்துவிட்டார்.

    தாயும், தந்தையும் இறந்த பின்னர் நல்லதங்காளின் அண்ணன் நலல்தம்பி அவளை அதிக பாசத்துடன் வளர்த்து வந்தார். இனி தனது தங்கைக்கு திருமணம் செய்துவைக்க எண்ணிய நல்லதம்பி நிறைய நல்ல வரன்களை எல்லாம் பார்த்தார். மானாமதுரையில் உள்ள காசிராஜனுக்கு தனது தங்கையான நல்லதங்காளை திருமணம் முடித்துவைக்க எண்ணினார் நல்லதம்பி.

    சித்திரை திங்கள் புதன்கிழமை அன்று அர்ஜுனாபுரத்தில் கோலாகலமாக திருமணம் நடந்தது. நல்லதம்பி தனது தங்கையான நல்லதங்காளுக்கு நிறைய சீதனம் கொடுத்தார். தங்கத்தினாலும் நகைகளும், வெள்ளியினால் ஆன பூஜை பொருட்களும், வெள்ளாடுகளும், பசுமாடுகளும், பொன்னாலான முக்காலி போன்ற நிறைய பொருட்களுடன், ௯ பணிபெண்களையும் கொடுத்து கலங்கிய கண்களுடன் பிரியமனம் இல்லாமல் மானாமதுரைக்கு நல்லதங்காளை வழிஅனுப்பி வைத்தார் நல்லதம்பி.

    8 ஆண்டுகள் ரொம்ப சந்தோசமாக இருந்தார்கள். காசிராஜனுக்கும், நல்லதங்காளுக்கும் 7 குழந்தைகள் பிறந்தனர். இதில் ௪ ஆண்குழந்தைகள், 3 பெண்குழந்தைகளும் இருந்தனர்.

    இப்படி சந்தோசமாக வாழ்ந்து வந்த இவருடைய வாழ்க்கையில் ஒரு பெரிய சோதனை வந்தது. ஒருநாள் மானாமதுரையில் தண்ணீர் பஞ்சம் வந்தது. விளைச்சலும் குறைந்தது. ஆடு, மாடுகள் எல்லாம் செத்துப்போயின. மக்கள் பலர் பசியினால் இறந்து போனார்கள்.

    காசிராஜனுக்கு தன்னுடைய மக்கள் கஷ்டப்படுவதை பார்க்கமுடியவில்லை. உடனே தன்னுடைய நாட்டு மக்கள் அண்டை நாடு செல்வதற்கு ஏற்பாடு செய்தார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மாளிகையில் இருக்கக்கூடிய பொன்னையும், பொருளையும் கொடுத்து உதவியும் செய்தார்.

    தினமும் தன்னுடைய மக்கள் அனைவருக்கும் உணவு கிடைச்சுதா என்பதை தெரிந்த பிறகுதான் காசிராஜன் சாப்பிட்டு வந்தார். கொஞ்சநாட்களிலேயே தானியக்கிடங்கில் இருக்கும் பொருட்கள் எல்லாம் தீர்ந்துபோயின. உடனே காசிராஜன் தன்னுடைய மந்திரி முதற்கொண்டு எல்லா மக்களையும் அடுத்த நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.

    காசிராஜனுடைய மனைவி நல்லதங்காளும், அவனுடைய 7 குழந்தைகளும் பசியால் அழுது துடைத்தனர். தன்னுடைய குழந்தைகள் பசியால் துடிப்பதை கண்ட நல்லதங்காள் தன்னுடைய அண்ணன் வீட்டிற்கு சென்றால் குழந்தைகளுக்கு உணவாவது கிடைக்கும். இப்படி பசியால் துடிக்கமாட்டாங்க என்று நினைத்தாள். இதை எப்படி காசிராஜனிடம் கூறுவது என்று நினைத்து, காசிராஜனையும் தன்னுடன் கூட்டி சென்றுவிடலாம். அப்போது வறுமையில் இருந்து தப்பித்துவிடலாம் என்று நினைத்து தன்னுடைய விருப்பத்தை காசிராஜனிடம் சொன்னாள் நல்லதங்காள்.

    காசிராஜனிடம், நல்லதங்காள் என்னுடைய அண்ணன் வீட்டிற்கு செல்லலாமா? என்று கேட்டாள். இதை கேட்டதும் காசிராஜனுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. அதற்கு காசிராஜன் நான் இந்த நாட்டிற்கு அரசன். எந்த நிலை வந்தாலும் நான் வரக்கூடாது. நீ வேண்டுமென்றால் நம்முடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு உன்னுடை அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டு வா என்று நல்லதங்காளை அனுப்பிவைத்தார்.

    நல்லதங்காளும் குழந்தைகளுக்கு நல்ல உணவு கிடைக்கும் என்று சந்தோசத்தில் அவர்களை அழைத்துக்கொண்டு தன்னுடைய அண்ணன் வீட்டிற்கு நடந்து சென்றார். காடு மேடு கடந்து, நல்லதங்காளும் அவர்களுய 7 குழந்தைகளும் மானாமதுரையில் இருந்து காட்டு வழியில் சென்றார். அப்போது நல்லதங்காளுக்கு வழிதெரியவில்லை. பக்கத்தில் இருந்த மரத்தின் அடியில் இளைப்பாறினார் நல்லதங்காள் குழந்தைகளுடன். பசி பசி என்று குழந்தைகள் அழுதுகொண்டே இருந்தன. அதைக்கண்டு நல்லதங்காளும் கதறி அழுதாள்.

    நல்லதங்காளின் அழு குரலை கேட்டதும், வேடர்கள் எல்லோரும் ஓடி வந்து நல்லதங்காளிடம் விசாரித்தனர். தலைவிரி கோலமாக பசியால் மெலிந்துபோய் யார் என்றே அடையாளம் தெரியாமல் இருந்த நல்லதங்காளை பார்த்தவுடன் வேடர்குல தலைவன் வாய்விட்டு அழுதார்.

    ஏனென்றால் அந்த வேடர்குல தலைவன் யார் என்றால் நல்லதம்பி தான். நல்லதங்காளின் உடன் பிறந்த அண்ணன். ஏன் வேடர் கோலத்தில் வந்தார் என்றால் ஒரு புலி ஒன்று ஊர் மக்களை துன்பப்படுத்திக்கொண்டே இருந்தது. அந்த புலியை வேட்டையாடவே வேடர் உருவத்தில் இருந்தார்.

    நல்லதம்பி, நல்லதங்காளை பார்த்து கதறி அழுதார். அதன்பிறகு நடந்ததை எல்லாவற்றையும் நல்லதங்காள் தன்னுடைய அண்ணனிடம் சொன்னாள். இதைகேட்டதும் நல்லதம்பி, நல்லதங்காளிடம் தங்கையே நான் வந்த வேலை இன்னும் முடியவில்லை. வேலை முடிவதற்கு இன்னும் 2 நாட்கள் ஆகும்.

    முதலில் பசியால் உன்னுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு அரண்மணைக்கு போ... அங்க அண்ணி உனக்கு வேணுங்றதை எல்லாம் தருவாள் என்று சொன்னார் நல்லதம்பி.

    அதன்பிறகு தன்னுடைய பரிவாரங்களை அழைத்து என்னுடைய தங்கை நல்லதங்காளை அரண்மணைக்கு அழைத்து செல்லுமாறு உத்தரவிட்டான். அந்த நேரத்தில் அர்ஜுனாபுரம் அரண்மணை மாடத்தில் பெண்கள் எல்லோரும் தனக்கு சேவகம் செய்ய ரொம்ப சந்தோசமாக உட்காந்து இருந்தார் நல்லதம்பியின் மனைவியான மூழி அலங்காரி.

    மூழிஅலங்காரிக்கு, செந்திலபதி என்ற தம்பி இருந்தார். இவர் நல்லதங்காளும் அவளுடைய 7 குழந்தைகளும் வறுமையால் தன்னுடைய நாட்டைவிட்டு அண்ணனை தேடி வந்திருக்கிறார்கள் என்ற செய்தியை நல்லதங்காளும், அவளுடைய குழந்தைகளும் அரண்மனைக்கு வருவதற்கு முன்னாடியே காட்டில் நடந்த நிகழ்ச்சியை தன்னுடைய சகோதரி மூழி அலங்காரியிடம் அவசர அவசரமாக சொன்னார்.

    இதை கேட்டதும் மூழிஅலங்காரிக்கு பயங்கரமாக கோபம் வந்தது. அடடா? நல்லதங்காள் மறுபடியும் அரண்மனைக்கு வந்துவிட்டாளா? இனி இங்கு இருக்கும் சொத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவாள் என்று நினைத்து அங்கிருந்த பணிப்பெண்கள் அனைவரையும் போகச்சொல்லிவிட்டாள்.

    அரண்மனையில் உள்ள உணவுப்பொருட்கள் எல்லாவற்றையும் பாதாளத்தில் உள்ள அறையில் கொண்டுபோய் மறைத்து வைத்தாள். அதன்பிறகு தானும் ஒரு மூலையில் சென்று படுத்துக்கொண்டாள். கொஞ்சநேரத்தில் அரண்மனை வாயிலை நுழைந்தவுடன் வாசல் கதை அடைத்து இருந்தது.

    உடனே நல்லதங்காள் இங்கே ஏதோ தவறாக இருக்கிறது என்று உணர்ந்துகொண்டாள். கதவிற்கு அருகில் சென்றதும் நல்லதங்காள் அண்ணி கால், கைகள் எல்லாம் வலிக்கிறது. என்னுடைய பிள்ளைகள் பசியால் அழுகிறார்கள். கதவை திறங்க அண்ணி என்று கதவை தட்டினாள்.

    ஆனால் மூழிஅலங்காரி கதவை திறக்கவில்லை. அதன்பிறகு அழுதுகொண்டே இறைவனாகிய சிவபெருமானை நினைத்து ஈஸ்வரனே என்னுடைய பிள்ளைகள் பசியாற கதவை திறங்க என்று கதறி அழுதாள். கொஞ்ச நேரத்தில் அரண்மனையின் கதவுகள் தானாகவே திறந்தது.

    உடனே நல்லதங்காள் தன்னுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு மூழு அலங்காரி இருக்கும் இடத்திற்கு சென்றாள். அண்ணி என்னுடைய பிள்ளைகள் பசியால் துடிக்கின்றனர். ஏதாவது சாப்பிடுவதற்கு கொடுங்கள் என்றாள் நல்லதங்காள். உடனே மூழி அலங்காரி நானே உடம்பு சரியில்லாமல் படுத்திருக்கிறேன். காட்டிற்கு சென்ற உனது அண்ணன் அவர்கள் நல்லபடியா படைகளோடு திரும்பி வர வேண்டும் என்று அனைவரும் விரதம் இருக்கிறோம். அதனால் எதுவுமே சமைக்க வில்லை என்று பதில் சொன்னார்.

    இதைக்கேட்டதும் நல்லதங்காள் சரி அண்ணி. அண்ணன் வரும் வரை நான் பசியை பொறுத்துக்கொள்வேன். ஆனால் எனது குழந்தைகள் பசியாற ஏதாவது கொடுங்க என்று கூறினாள். நான் அந்த அரிசியை வைத்து நான் எனது குழந்தைகளுக்கு உணவு சமைத்து கொடுக்கிறேன் என்று பணிவுடன் கேட்டாள் நல்லதங்காள்.

    மூழிஅலங்காரி, நல்லதங்காளை பார்த்து, உனக்கு தெரியாதா எங்களுடைய நாட்டிலும் பயங்கர பஞ்சம். விளைச்சளே இல்லை. அரிசிக்கு நான் எங்கபோறது. இரு கொஞ்சம் கேழ்வரகு வேண்டுமென்றால் தருகிறேன் என்று கூறிக்கொண்டு அதை உன்னுடைய பிள்ளைகளுக்கு கொடு என்று சொல்லி தன்னுடைய பணிப்பெண்ணை அனுப்பி வைத்தாள்.

    அதன்பிறகு மூழி அலங்காரி இன்னொரு பணிப்பெண்ணை அழைத்து நல்லதங்காளுக்கு ஒரு பச்சை மட்டையும், ஓட்டை பானையும் கொடு அதைக்கொண்டு சமைக்கட்டும் என்று கூறினாள். அந்த பணிப்பெண்ணும் நல்லதங்காளுக்கு ஒரு பச்சை மட்டையும், ஓட்டை பானையும் கொடுத்தாள்.

    எப்படியோ கேழ்வரகை அரைத்து கஞ்சு காய்ச்சுவதற்காக அடுப்பை பற்ற வைத்தாள் நல்லதங்காள். அடுப்பு எரியவே இல்லை. உடனே நல்லதங்காள் அழுதுகொண்டே தாயே அன்னபூரணி நான் பத்தினி என்றால் இந்த அடுப்பு எரியவேண்டும் என்று சொன்னாள். உடனே அடுப்பு கொளுந்துவிட்டு எரிந்தது.

    இதைப்பார்த்த பணிப்பெண்கள் பயந்துபொய் மூழிஅலங்காரியிடம் ஓடிபோய் இந்த விஷயத்தை கூறினர். இதை கேட்டதும் மூழி அலங்காரிக்கு கோபம் வந்து நல்லதங்காள் இருக்கும் இடத்துக்கு வந்தாள். மூழிஅலங்காரி, நல்லதங்காளை பார்த்து உன்னுடைய திருமணத்தின்போது நீ எடுத்துக்கொண்டு சென்ற செல்வம் எல்லாம் பத்தாது என்றா இந்த அரண்மனையை கொளுத்தப்பார்க்கிறாய் என்று சொல்லிவிட்டு கேழ்வரகு கஞ்சி கொதித்துக்கொண்டிருக்கும் பானையை தனது காலால் எட்டி உதைத்தாள்.

    பானையில் உள்ள கஞ்சி எல்லாம் தரையில் சிதறிக்கிடந்தன. இதை பார்த்ததும் பசியால் இருந்த நல்லதங்காளின் குழந்தைகள் தரையில் சிதறிய கஞ்சியை வழித்து குடித்தனர். நல்லதங்காளுக்கு இந்த காட்சியை பார்க்கமுடியவில்லை. இனியும் இங்கு இருந்து அவமானப்படக்கூடாது என்று நினைத்துக்கொண்டு தன்னுடைய 7 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சென்று விட்டாள்.

    பாழடைந்த கிணற்றை தேடி சென்றாள் நல்லதங்காள். தன்னுடையை அண்ணன் வந்தால் தன்னுடைய வழியை தெரிந்துகொள்வதற்காக போகிற வழிகள் எல்லாம் ஆவாரம் பூ செடிகளை உடைத்து போட்டுக்கொண்டே சென்றாள் நல்லதங்காள். கொஞ்ச தூரம் சென்ற பிறகும் எந்த ஒரு கிணற்றையும் காணவில்லை. அந்த காட்டில் 3 பேர் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டு இருந்தனர்.

    அவர்களிடம் சென்று நல்லதங்காள் எங்களுக்கு ரொம்ம தண்ணீர் தாகமாக உள்ளது. எனவே பக்கத்தில் ஏதாவது கிணறு இருக்கிறதா என்று கேட்டாள். உடனே ஆடு மேய்ப்பவர்களான மூவரி ஒருவர் ரொம்ப தூரத்துல் கருப்பராயன் என்று ஒரு கோவில் உள்ளது. அதைத்தாண்டி போனால் ஒரு கிணறு இருக்கிறது என்று கூறினான்.

    உடனே நல்லதங்காள் தன்னுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு கிணறு இருக்கும் இடத்திற்கு சென்றால். அங்கு சென்றதும் நல்லதங்காளின் குழந்தைகள் அனைவரும் பசிமயக்கத்தில் உறங்கிவிட்டனர். நல்லதங்காளும் தன்னுடைய குழந்தைகளுக்கு அருகிலேயே அமர்ந்து இருந்தாள். அந்த சமயத்தில் தான் நல்லதங்காளின் மனதில் ஒன்று தோன்றியது. எந்த சமயத்திலும் அழையா விருந்தாளியாக யாருடைய வீட்டிற்கு போகக்கூடாது என்று கணவன் காசிராஜன் சொன்னது நினைவிற்கு வந்தது. தன்னுடைய தவறை எண்ணி அழுதுகொண்டே இருந்தாள்.

    தன்னுடைய கணவனின் பேச்சை கேட்காமல் வந்தது எவ்வளவு தவறு என்று எண்ணி அழுதாள். நல்லதங்காளின் குழந்தைகள் கிணற்றாங்கரையில் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தனர். தன்னுடைய குழந்தைகள் தூங்கி முழித்துவிட்டால் அவர்களை கிணற்றில் தூக்கிபோடுவதற்கு மனதே வராது. எனவே இதுதான் சரியான சமயம் என்று நினைத்த நல்லதங்காள் தன்னிடைய தாலியை கழற்றி தன்னுடைய கணவனோ, அல்லது அண்ணனோ தன்னை தேடிக்கொண்டு வந்தார் அவர்களுடை கண்ணில் படுமாறு நினைத்து அந்த கிணற்றின் மேட்டில் வைத்தாள் நல்லதங்காள்.

    உடனே கிணற்றை 3முறை சுற்றி வந்து ஒவ்வொரு குழந்தைகளாக தூக்கி கிணற்றில் போட்டாள். இந்த சத்தம் கேட்டு நல்லதங்காளின் மூத்த மகன் முழித்துக்கொண்டான். அம்மாவிடம் இருந்து தப்பி ஓட முயற்சி செய்தான். அவன் அம்மாவிடம், என்னை மட்டுமாவது தப்பித்துபோக விடுங்கம்மா. நம்முடைய வம்சத்தின் பேர் சொல்ல நான் மட்டுமாவது இருக்கிறேன் என்று கூறி கதறி அழுதான்.

    நல்லதங்காளும் தன்னுடைய மகனின் பேச்சைக்கேட்டு அழுதுகொண்டே தன்னுடைய மூத்த மகனை பிடித்து கிணற்றில் தூக்கி போட்டு விட்டு கடைசியில் தானும் கிணற்றில் குதித்தாள். இப்போது நல்லதங்காளும், அவளின் 7 குழந்தைகளும் கிணற்றில் இறந்து மிதந்தனர்.

    இந்த நேரத்தில் நல்லதங்காளின் அண்ணன் நல்லதம்பி வேட்டையை முடித்துக்கொண்டு அரண்மனைக்கு வந்தான். தன்னுடைய தங்கையையும், 7 குழந்தைகளையும் அரண்மனை முழுவதும் தேடினான். அவர்கள் அங்கு இல்லை. உடனே தன்னுடைய மனைவி மூழிஅலங்காரியிடம் வந்து கேட்டான் நல்லதம்பி.

    உடனே மூழிஅலங்காரி தன்னுடைய கணவனிடம் நானே உடம்பு முடியாமல் படுத்துக்கொண்டு இருந்தேன். அப்படி இருந்தும் உங்க தங்கைக்கு சுவையான உணவுகளை சமைத்து சாப்பிட கூப்பிட்டேன். ஆனால் அவர்கள் எல்லோரும் அண்ணன் வந்து சாப்பாடு போட்டால் தான் சாப்பிடுவோம். இல்லை என்றால் சாப்பிடமாட்டோம் என்று கோபப்பட்டு இங்கிருந்து சென்றுவிட்டனர் என்று பொய் சொன்னாள் மூழிஅலங்காரி.

    நல்லதம்பிக்கு தன்னுடைய மனைவி சொன்னது சரியாகப்படவில்லை. உடனே நல்லதம்பி அங்குள்ள பணிப்பெண்களுடம் விசாரித்தான். உடனே நல்லதம்பி தன்னுடைய தங்கையை தேடி காட்டிற்குள் சென்றான். வழி எங்கும் ஆவாரம் பூவை பின் தொடர்ந்து சென்றான் நல்லதம்பி.

    ஆனால் மறுபுறம் மானாமதுரையில் நல்லா மழைபெய்து நாடே செழிப்பாக இருந்தது. காசிராஜனும், தன்னுடைய மனைவி நல்லதங்காளையும், 7 குழந்தைகளையும் நல்லதம்பி வீட்டில் இருந்து அழைத்துக்கொண்டு வரலாம் என்று சொல்லி காட்டில் வந்துகொண்டிருந்தார்.

    அந்த காட்டின் வழியாக தான் நல்லதம்பியும் தன்னுடைய தங்கை நல்லதங்காளை தேடிக்கொண்டு சென்று கொண்டிருந்தான். நல்லதம்பியும், காசிராஜனும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டனர். நல்லதம்பி நடந்த உண்மைகளை காசிராஜனிடம் சொன்னார். அந்த ஆவாரம் பூவை பின் தொடர்ந்தே காசிராஜனும், நல்லதம்பியும் சென்றனர். அது ஒரு கிணற்றுப்பகுதியை வந்தடைந்தது.

    கிணற்றுக்குள் நல்லதங்காளும், அவளுடைய 7 குழந்தைகளும் இறந்து மிதந்துகொண்டிருந்தனர். இதை பார்த்ததும் காசிராஜனும், நல்லதம்பியும் கதறி அழுதனர். அதன்பிறகு நல்லதங்காளையும், அவளுடைய 7 குழந்தைகளையும் வெளியே எடுத்து ஈமக்காரியங்களை செய்தனர்.

    உடனே காசிராஜன், தன்னுடைய மனைவி நல்லதங்காளும், 7 குழந்தைகளும் இறந்த துக்கம் தாங்காமல் இறந்துவிட்டார். நல்லதம்பிக்கு ரொம்ப கோபம் வந்தது. தன்னுடைய தங்கையும், அவளுடைய குழந்தைகளும் இறந்ததற்கு மூழ் அலங்காரி தான் முக்கிய காரணம் என்று நினைத்துக்கொண்டு மூழி அலங்காரியையும், அவளுடைய வம்சத்தையே அழிக்க வேண்டும் என்று ஒரு சபதம் எடுத்தார்.

    உடனே அரண்மனைக்கு சென்று தன்னுடைய மனைவி மூழிஅலங்காரியிடம் ஒரு துக்கம் நடந்த வீட்டில் நல்ல காரியம் உடனே நடத்த வேண்டும். இதனால் உன்னுடைய தம்பி செந்திலபதிக்கு திருமணத்தை நடத்தி வைக்கலாம். உன்னுடைய சொந்தபந்தங்களை எல்லாம் வரச்சொல்லு என்றான் நல்லதம்பி.

    இதனால் மூழ் அலங்காரிக்கு ரொம்ப சந்தோசம். திருமண ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடந்தது. நல்லதம்பி தன்னுடைய அரண்மனையில் உள்ள சிற்பியை அழைத்து ஒரு பொய்யான மண்டபத்தை தயார் செய்யும்படி கூறினான். மூழுஅலங்காரியின் சொந்த பந்தங்களை பொய்யாக உள்ள மண்டபத்திலும், நல்லதம்பியின் சொந்தங்களை அவனுடைய அரண்மனையிலும் தங்க வைத்தான்.

    திருமணம் நடப்பதற்கு கொஞ்சநேரத்திற்கு முன்னால் நல்லதம்பி திட்டம் போட்டது மாதிரி போலியாக கட்டப்பட்ட மண்டபம் இடிந்து விழுந்தது. மூழிஅலங்காரியின் வம்சமே அடியோடு அழிந்துவிட்டது. உடனே தன்னுடைய கடமையை நல்லபடியாக முடித்துவிட்டோம் என்று நினைத்துக்கொண்டு நல்லதம்பி ஈட்டி மீது பாய்ந்து உயிரையே விட்டார்.

    பச்சை ஆடை போர்த்திய வயல்களுக்கு மத்தியில் தான் அர்ஜுனாபுரத்தில் கோவில் கொண்டுள்ளார் நல்லதங்காள். இங்குள்ள கோவில் அமைப்பை பார்த்தால் மற்ற கோவில்களை போல் இல்லாமல் வித்தியாசமாக இருக்கும். கோவில் கருவறையில் நல்லதங்காள் சிலை கம்பீரமாக இருக்கும். 7 குழந்தைகளின் சிலையும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு தனியே இன்னொரு சன்னதியாக இருக்கும்.

    இங்கு நல்லதங்காளுக்கும், நல்லதம்பிக்கும் 2 கோவில்கள் கட்டப்பட்டு மக்கள் வழிபட்டு வருகிறார்கள். இந்த கோவிலுக்கு சற்று தொலைவில் தான் ஒரு பாழடைந்த கிணறு சிதைந்துபோய் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதமும் பொங்கல் விழாவின் போது நல்லதங்காளின் உறவினர் வழித்தோன்றலில் வந்தவர்கள் மானாமதுரையில் இருந்து வந்து விழாவில் கலந்துகொள்கிறார்கள். இந்த திருவிழா 4 நாட்கள் நடக்கிறது.

    அதன்பிறகு மாதம் தோறும் பவுர்ணமி பூஜையும் சிறப்பாக நடக்கிறது. அவர்கள் வாழ்ந்த அரண்மனையின் எஞ்சிய இடிபாடுகள், தற்கொலை செய்துகொண்ட கிணறு போன்றவை இன்றும் வத்திராயிருப்பில் இன்றும் உள்ளது. நல்லோர் தெய்வமாவர் என்ற ஆன்மிக தத்துவத்தின் அடிப்படையில் தான் நல்லதங்காளும், நல்லதம்பியும் வாழ்ந்த அரண்மனை கோவிலாக போற்றப்படுகிறது.

    • அனைத்துவித சுப காரியங்கள் செய்ய மிகவும் உகந்த மாதம் ஆவணி மாதம்.
    • வாசலை சுத்தம் செய்யலாம் ஆனால் கோலம் போடக்கூடாது.

    ஆவணி அமாவாசை தினத்தில் பெற்றோர்கள் இல்லாத ஆண் எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்வது அவசியம். முன்னோர்களுக்கு தர்ப்பணம், காகத்திற்கு உணவளிப்பதால் ஏழ்மை விலகி உங்கள் அனைத்து முயற்சிக்கும் நல்ல வெற்றி ஏற்படும். அனைத்துவித சுப காரியங்கள் செய்ய மிகவும் உகந்த மாதம் ஆவணி மாதம். இந்த அற்புத மாதத்தில் ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி, ஆவணி அவிட்டம், ஆவணி அமாவாசை, பௌர்ணமி போன்ற தெய்வீக சிறப்புகள் பொருந்திய பல விசேஷங்கள் அடங்கியது.

    அதிலும் குறிப்பாக ஆவணி அமாவாசை எல்லா அமாவாசைகளைப் போல முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து, முன்னோர் வழிபாடு செய்ய மிகவும் உகந்த தினம். இந்த அற்புத நாளில் உங்கள் முன்னோர்களை நினைத்து பித்ருக்கள் வழிபாடு தர்ப்பணம் கொடுப்பதோடு, காக்கைக்கு உணவளித்து அவர்களின் ஆசி பெற உகந்த தினம். பித்ருக்களுக்கு தர்ப்பணம், கொடுப்பதன் மூலம் பித்ரு சாபம் நீங்கி, உங்கள் வாழ்வில் பெருமகிழ்ச்சியுடன் வாழலாம்.

    ஆவணி அமாவாசை தினத்தில் என்ன செய்யலாம்?

    ஒவ்வொரு அமாவாசை தினமும் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள். இந்த நாளில் முன்னோர்களுக்கு கருப்பு எள், தண்ணீர் விட்டு தர்ப்பணம் கொடுப்பதோடு, கருப்பு எள் மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு வைப்பதன் மூலம், முன்னோர்களின் ஆசி பெற்றிடலாம்.

    இந்த தினத்தில் பெற்றோர்கள் இல்லாத ஆண் எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்வது அவசியம். இந்த நாளில் காலையில் வீட்டு வாசலை சுத்தம் செய்யலாம் ஆனால் கோலம் போடக்கூடாது. வீட்டில் முன்னோர்களின் படங்களுக்கு பூக்கள் வைத்து, சந்தனம், குங்கும திலகமிடுங்கள். தீப, தூப ஆராதனை செய்யுங்கள்.

    விரதம் இருந்து முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து, அன்று வீட்டில் நீங்கள் சமைத்த உணவை முன்னோர்களுக்கு படைப்பதோடு, அந்த உணவை காகத்திற்கு வைத்து அதன் பின்னர் உணவருந்தவும். முன்னோர்களின் ஆசி பெறுவது, குலதெய்வத்தை வணங்குதல், தினமும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால், வீட்டில் இருக்கும் தரித்திர நிலை நீங்கும். திருமண தாமதம், ஏழ்மை விலகி உங்கள் அனைத்து முயற்சிக்கும் நல்ல வெற்றி ஏற்படும்.

    • ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர் கோவில்களில் பித்ரு பூஜை .
    • உப்பூர் விநாயகப் பெருமான் ரிஷப வாகனத்தில் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆவணி-28 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: அமாவாசை (முழுவதும்)

    நட்சத்திரம்: பூரம் (முழுவதும்)

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சர்வ அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர் கோவில்களில் பித்ரு பூஜை செய்ய நன்று. தேவக்கோட்டை, திண்டுக்கல், மிலட்டூர் கோவில்களில் விநாயகப் பெருமான் பவனி. உப்பூர் விநாயகப் பெருமான் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ணர் புல்லின்வாய் கிண்டல், பரமபதநாதனாய் காட்சி. திருச்செந்தூர் முருகப் பெருமான் கேடய சப்பரத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உற்சாகம்

    ரிஷபம்-போட்டி

    மிதுனம்-சாதனை

    கடகம்-லாபம்

    சிம்மம்-சாந்தம்

    கன்னி-நன்மை

    துலாம்- நட்பு

    விருச்சிகம்-பண்பு

    தனுசு- களிப்பு

    மகரம்-கவனம்

    கும்பம்-கடமை

    மீனம்-உதவி

    • சிபெருமானுக்குரிய விரதங்களில் ஒன்று சிவராத்திரி விரதம்.
    • மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி தினத்தில் வருவதை மகா சிவராத்திரி என்கிறோம்.

    சிபெருமானுக்குரிய விரதங்களில் ஒன்று சிவராத்திரி விரதம். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி தினத்தில் வருவதை மகா சிவராத்திரி என்கிறோம். மாசி மாதம் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி அன்று அமாவாசைக்கு முந்தைய நாள் அனுஷ்டிக்கப்படும் சிவராத்திரி தான் மகா சிவராத்திரி என்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    மகாசிவராத்திரியில் விரதம் இருப்போருக்கு நினைத்த காரியங்கள் கைகூடும். பொருளாதார முன்னேற்றம் அடைந்து சகல வளங்களும் வெகு விரைவில் கிட்டும். வேண்டிய வேண்டுதல்கள் எல்லாம் தடையின்றி நிறைவேறும். அனைத்து பாவங்களும் நீங்கி இறுதியில் சிவபெருமானின் திருவடியை அடைந்து மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    வருடத்திற்கு 12 சிவராத்திரிகள் வருகின்றன. இவற்றில் 6 சிவராத்திரிகள் தேய்பிறையிலும், 6 சிவ ராத்திரிகள் வளர்பிறையும் வருகின்றன. நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என சிவராத்திரி விரதம் ஐந்து வகைகளில் உள்ளதாகவும், மாத சிவராத்திரி விரதங்களை பற்றி மாதசிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாக சொல்லுகிறது.

    விரதம் கடைபிடிப்போர் முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

    தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் வரும் மாத சிவராத்திரிக்கு ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு மாத சிவராத்திரி வழிபாடும் ஒவ்வொரு தெய்வத்தால் வழிபடப்பட்டதாகும். அதன் முழு விபரம் வருமாறு:

    சித்திரை மாதம் - உமாதேவி

    வைகாசி மாதம் - சூரியபகவான்

    ஆனி மாதம் - ஈசன்

    ஆடி மாதம் - முருகன்

    ஆவணி மாதம் - சந்திரன்

    புரட்டாசி மாதம் - ஆதிசேஷன்

    ஐப்பசி மாதம் - இந்திரன்

    கார்த்திகை மாதம் - சரஸ்வதி

    மார்கழி மாதம் - லட்சுமி

    தை மாதம் - நந்தி

    மாசி மாதம் - தேவர்கள்

    பங்குனி மாதம் - குபேரன்

    மாத சிவராத்திரி நாளில், சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும், சிவ நாமங்களை சொல்லி ஜெபிப்பதும் மகத்தான பலன்களை தந்தருளும் என்பது ஐதீகம். மாத சிவராத்திரியில் சிவாலயத்துக்குச் சென்று சிவலிங்கத் திருமேனியையும் நந்திதேவரையும் வழிபட வேண்டும். சிவனாருக்கு வில்வம் சார்த்தி பிரார்த்தனை செய்தால் பிரச்சினைகள் எல்லாம் தீர்த்து வைப்பார் சிவபெருமான்.

    • மலையாண்டஅள்ளி தொம்மக்கல் முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம்.
    • சாமிக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம்.

    காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணம் ஒன்றியம் மலையாண்டஅள்ளி தொம்மக்கல் முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி தென்பெண்ணை ஆற்றில் இருந்து மேளதாளத்துடன் புனிதநீர் ஊர்வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனிதநீரை ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம் மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மலையாண்டஅள்ளி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம்.
    • 6 மணிநேரம் தரிசனம் நிறுத்தப்பட்டது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இதற்காக 6 மணிநேரம் தரிசனம் நிறுத்தப்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 18-ந்தேதி முதல் 26-ந் தேதி வரை பிரம்மோற்சவம் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதுகுறித்து தேவஸ்தான தலைவர் பூமண கருணாகர் ரெட்டி கூறியதாவது:-

    ஆண்டுக்கு நான்கு முறை ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். அதன்படி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

    காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவில் சுத்திகரிப்பு நிகழ்ச்சியை அர்ச்சகர்கள் செய்தனர். ஆனந்த நிலையம் முதல் தங்கவாசல் வரை, கோவிலுக்குள் உள்ள உபகோவில்கள், கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. அப்போது சுவாமியின் மூலவிரட்டு முழுவதும் துணியால் மூடப்பட்டிருந்தது.

    சுத்திகரிப்புக்கு பிறகு, நாமகோபு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலிக்கட்டா உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. அதையடுத்து, அர்ச்சகர்கள் சுவாமியின் மூலவிரட்டை மூடியிருந்த துணியை அகற்றி, சிறப்பு பூஜை மற்றும் பிரசாதம் வழங்கினர்.

    ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு காலை 5 மணி முதல் 11 மணிவரை 6 மணிநேரம் தரிசனம் நிறுத்தப்பட்டிருந்தது. பகல் 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருகிற 19-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா.
    • மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவில் முக்கியமானது.

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 19-ந்தேதி கோலாகலமாக கொண்டாட உள்ளது. இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில்களை பற்றி பார்க்கலாம்.

    மும்பை சித்தி விநாயகர்

    இந்தியாவின் மிகவும் பிரபலமான கணபதி கோவில்களில், மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவில் முக்கியமானது. இந்த ஆலயத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை காண்பதற்காக உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் குவிவார்கள். குழந்தை வரம் அருளும் விநாயகராக இவர் வணங்கப்படுகிறார். இந்த பழமையான கோவிலுக்கு ஏராளமான பிரபலங்கள் வந்து வழிபட்டுச் செல்வதைக் காண முடியும். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அமைந்துள்ள `சித்தி விநாயக் கணபதி மந்திர்' இரவு நேரத்தில் மிகவும் அழகாக காட்சியளிக்கும். அப்போது கோவில் வளாகம் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது.

    புனே விநாயகர்

    மும்பை சித்தி விநாயகர் கோவிலுக்குப் பிறகு, மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக புனேவில் உள்ள `ஸ்ரீமந்த் தக்துஷேத் ஹல்வாய் கணபதி' கோவில் போற்றப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்த கோவில், ஆலயத்தின் உள்ளார்ந்த வடிவமைப்புகள் மற்றும் தங்க சிலைக்கு பிரசித்திப் பெற்றது. பிளேக் நோயால் தன் மகனை இழந்த ஒரு தொழிலதிபர் இந்தக் கோவிலைக் கட்டியிருக்கிறார். கணேஷ் உற்சவத்தின் போது இந்த ஆலயம் வண்ண விளக்குகளாலும், மலர் அலங்காரங்களாலும் கண்ணைக் கவரும் வகையில் காட்சியளிக்கும்.

    மகாராஷ்டிரா கணபதி

    ரத்னகிரியில் உள்ள கணபதிபுலே கோவிலில், மேற்கு நோக்கி வீற்றிருந்து அருள்புரிகிறார் விநாயகப்பெருமான். இந்தக் கோவிலின் விநாயகர் சிலை யாராலும் வைக்கப்படவில்லை என்றும், சுயமாக உருவானது என்றும் தல வரலாறு சொல்கிறது. ஒருமுறை உள்ளூர் மாடு பிடிப்பவரின் பசு, பால் கொடுப்பதை நிறுத்திவிட்டு, பாறையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னுடைய பால் முழுவதையும் சுரந்தது. இந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் நடந்ததால், அந்த நபர் அங்கு சென்று பார்த்தபோது, அங்கே விநாயகரின் சுயம்பு வடிவம் இருப்பதைக் கண்டார். அன்று முதல் இங்கு வழிபாடு நடைபெறுவதாக தல வரலாறு கூறுகிறது. பிப்ரவரி மற்றும் நவம்பர் மாதங்களில் இத்தல விநாயகர் மீது, சூரிய ஒளி நேரடியாக விழுவதை கண்டு ரசிக்கலாம்.

    • தங்க மீனை கடலில் விட்டு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி.
    • அதிபத்த நாயனார் அதை கடலில் விட்டு இறைவனுக்கு அர்ப்பணம் செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை புதிய கடற்கரையில் அதிபத்த நாயனார் தங்கமீனை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நாகை நம்பியார் நகரில் இருந்தவர் அதிபத்த நாயனார். சிவபெருமான் மீது தீவிர அன்பு கொண்டிருந்த அதிபத்த நாயனார், தினந்தோறும் கடலுக்கு சென்று தான் பிடிக்கும் மீன்களில் பெரிய மீனையும் மற்றும் முதல் மீனையும் சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து கடலில் விட்டு விடுவார்.

    ஒரு நாள் அதிபத்த நாயனார் வலையில் ஒரே ஒரு மீன் மட்டுமே சிக்கியது. அப்போதும் அவர் மனம் தளராமல், பிடிபட்ட ஒரு மீனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் அவரது வலையில் ஒரே ஒரு மீன்மட்டுமே சிக்கியது. அப்போதும் அதிபத்தர் கிடைத்த ஒரே ஒரு மீனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணித்து வந்தார்.

    இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. அவரது பக்தியை சோதிக்க விரும்பிய சிவபெருமான் ஒரு நாள் அதிபத்த நாயனாரின் வலையில் தங்கத்தாலும், வைரத்தாலும் செய்யப்பட்ட அதிசய மீன்களை சிக்க செய்தார். வலையில் சிக்கிய விலை மதிப்பற்ற தங்கத்தாலும், வைரத்தாலும் செய்யப்பட்ட அதிசய மீன்களை அதிபத்த நாயனார் எந்தவித தயக்கமும் இன்றி சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார்.

    அவரது அன்பில் மகிழ்ந்த சிவபெருமான், பார்வதி சகிதமாக ரிஷப வாகனத்தில் அதிபத்தருக்கு காட்சியளித்தார் என்பது வரலாறு. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி நாகை நீலாயதாட்சியம்மன், காயாரோகண சாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    நீலாயதாட்சியம்மன் கோவிலில் இருந்து சாமி புறப்பட்டு கடற்கரைக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு கோவிலில் குடமுழுக்கு பணிகள் நடப்பதால் ஊர்வலம்நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை நம்பியார் நகர் புதியஒளி மாரியம்மன் கோவில் மற்றும் அதிபத்த நாயனார் வணங்கிய அமுதீசர் கோவில்களில் இருந்தும், ஆரிய நாட்டுத்தெரு பஞ்சாயத்தார்களும் சீர்வரிசைகளை ஊர்வலமாக புதிய கடற்கரை நோக்கி எடுத்து வந்தனர்.

    பின்னர் புதிய கடற்கரையில் சீர்வரிசை தட்டுகளை வைத்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன், செயல் அலுவலர்கள் தனலட்சுமி, பூமிநாதன், முருகன், சண்முகராஜன், ஆய்வாளர்கள் ராமதாஸ், சதீஸ்குமார் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் நாகை புதிய கடற்கரை நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.

    • சுப்பிரமணிய சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா.
    • தேரோட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    விழாவின் 7-ம் திருநாளன்று சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளினார். மாலையில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    8-ம் நாள் திருவிழாவில் காலையில் சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மா அம்சமாகவும், பிற்கபலில் பச்சை சாத்தி கோலத்தில் பெருமாள் அம்சமாகவும் எழுந்தருளினார். 9-ம் திருநாளான நேற்று மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமானும், அலைவாயுகந்த பெருமானும் தனித்தனி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு முதலில் விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரதவீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது.

    பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் புறப்பட்டு வெளிவீதி நான்கிலும் பவனி வந்து நிலையை வந்து சேர்ந்தது. அதைத்தொடர்ந்து வள்ளியம்மாள் எழுந்தருளிய தேர் வெளிவீதி நான்கிலும் பவனி வந்து நிலையை சேர்ந்தது.

    இதில் திருச்செந்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி வஷித்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கணேசன், செந்தில் முருகன், கோவில் கண்காணிப்பாளர்கள் ஆனந்தராஜ், செந்தில் வேல்முருகன், டாக்டர் பாலசுப்ரமணிய ஆதித்தன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தொடர்ந்து இரவு சுவாமி, அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவிலை அடைகிறார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • இளையான்குடி மாறநாயனர் குருபூஜை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆவணி-27 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தசி விடியற்காலை 5.59 மணி வரை பிறகு அமாவாசை.

    நட்சத்திரம்: மகம் விடியற்காலை 4.02 மணி வரை பிறகு பூரம்.

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று மாத சிவராத்திரி. சுப முகூர்த்த தினம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். உப்பூர் விநாயகப் பெருமான் யானை வாகனத்தில் பவனி. திருச்செந்தூர், பெருவயல் கோவில்களில் முருகப் பெருமான் ரதோற்சவம். இளையான்குடி மாறநாயனர் குருபூஜை. திண்டுக்கல், மிலட்டூர், திருவலஞ்சுழி கோவில்களில் விநாயகப் பெருமான் பவனி. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மேன்மை

    ரிஷபம்-விருத்தி

    மிதுனம்-ஆர்வம்

    கடகம்-களிப்பு

    சிம்மம்-உயர்வு

    கன்னி-மாற்றம்

    துலாம்- சிந்தனை

    விருச்சிகம்-பாராட்டு

    தனுசு- தனம்

    மகரம்-அமைதி

    கும்பம்-போட்டி

    மீனம்-பக்தி

    • மொத்தத்தில் கயிலாய மண்ணை காத்து நிற்பான்.
    • மண்காத்த பெருமாளை கயிலாயத்தில் காவலுக்கு வைத்துவிட்டு சென்றனர்.

    மண்காத்தபெருமாள் என்று அழைக்கப்படும் செங்கிடாக்காரன் சுவாமியின் வரலாறை பற்றி இன்று நாம் தெரிந்துகொள்ளலாமா?

    ஒருசமயம் சிவபெருமான், பார்வதிதேவியிடம் மறைபொருட்களை உணர்த்திக் கொண்டிருந்தார். அதைக்கண்ட முருகப்பெருமான், தந்தையும், தாயும் என்ன ரகசியம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்? நாமளும் அதை கேட்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு ஒரு வண்டுபோல் உருவம் எடுத்து தனது தாயின் கூந்தலுக்குள் ஒலிந்துகொண்டு கேட்டுக்கொண்டிருந்தார்.

    அகிலத்தையே காத்தருளக்கூடிய அகிலாண்டீஸ்வரிக்கு இது தெரிந்துவிட்டது. இருந்தாலும் தனது மகனின் விளையாட்டை ரசித்துக்கொண்டு இருந்தார். தடுக்கவே இல்லை. ஆனால் இறைவனாகிய சிவபெருமான் ஞானத்தால் அதை உணர்ந்துகொண்டார். உடனே கோபத்துடன் சிவபெருமான், பார்வதிதேவியை பார்த்து மலைமகளே என்ன இது? என்று கூறிக்கொண்டு வண்டுவடிவில் இருந்த முருகனை பார்த்து சிவபெருமான் வேலவா? பெற்றவர்களை மதிக்காமல் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்டதால் நீ கடலில் மீனாக பிறப்பாய் என்று சாபம் அளித்தார்.

    அதுமட்டுமில்லாமல் மிகுந்த கோபத்துடன் பார்வதிதேவியை பார்த்து உன்னுடைய மகன் தவறிழைத்தபோதும் அதை தடுக்காமல் ரசித்த மலைமகளே நீ மானிட பிறவி எடுத்து அதியரசனுக்கு மகளாக பிறப்பாய் என்று சாபமிட்டார்.

    இதைகேட்டதும் பார்வதிதேவி, சிவபெருமானை பார்த்து எங்களுக்கு சாபவிமோசனம் எப்போது? என்று கேட்டார். உடனே சிவபெருமான் நீ பருவ வயதை நிரம்பியதும் நான் உன்னை வந்து மணப்பேன். அப்போது மகர மீனாக இருக்கும் முருகனும் விமோசனம் பெறுவான் என்று சொன்னார்.

    சிவபெருமான் அளித்த சாபத்தின்படி பார்வதி தேவி மங்கைபதி பகுதியை ஆட்சிசெய்து வந்த அதியரசனின் மகளாக பிறந்தார். பார்வதி தேவி பருவ வயதை அடைந்ததும் அவரை மணமுடிக்க சிவபெருமான் பூலோகத்திற்கு சென்றார். பூலோகத்திற்கு செல்லும்போது சிவபெருமான் அந்த நேரத்தில் கயிலாயத்தில் உள்ள முனிவர்களை எல்லாம் அழைத்து நான் பார்வதிதேவியை மணம்முடித்து திரும்பும் வரை கயிலாயத்தை நீங்கள் அனைவரும் காக்க வேண்டும் என்று கூறினார்.

    ஆனால் அங்குள்ள சிவனடியார்கள் அனைவருக்கும் இறைவனாகிய சிவபெருமானின் திருமணத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை. இங்கு காவலில் இருந்தால் பார்க்க முடியாது. அதனால் தங்களுடைய இயலாமையை சிவபெருமானிடம் தெரிவித்தனர். சுவாமி, கயிலாய மலையில் யாராவது வந்து இங்கு இருக்கக்கூடிய செல்வத்தை திருட முயன்றால் அதை தடுப்பதற்கும், அவர்களோடு மோதுவதற்கும் எங்களுடைய உடலிலும், மனதிலும் பலமே இல்லை என்று கூறினார்கள் சிவனடியார்கள்.

    உடனே சிவபெருமான் என்னுடைய பெயரை சொல்லி யாகம் வளருங்கள். அதில் இருந்து ஒருவன் பிறப்பான். மானுட ரூபம் கொண்டிருப்பான். மாண்ட பிணங்களையும் திண்றிருப்பான். பூத செயல்களை கொண்டிருப்பான். நீங்கள் ஏவினால் அதை செய்து முடிப்பான். அழைத்தால் உடனே தாவி வந்து நிற்பான். மொத்தத்தில் கயிலாய மண்ணை காத்து நிற்பான் என்றார்.

    சிவபெருமான் கூறியதுபடி நந்தி, நாரதர், உருத்திரர், வாள்முனி, ஓமமுனி, சக்திமுனி, விசுவாச முனி, தக்கமுனி, வசிஷ்ட முனி எல்லாரும் கூடி கயிலாத்தில் வேள்வி வளர்த்தனர். அந்த வேள்வியில் தோன்றினார் செங்கிடாக்காரன் சுவாமி. அந்த செங்கிடாக்காரன் சுவாமியை மண்காத்த பெருமாள் என்று அழைத்தனர்.

    அந்த முனிவர்கள் எல்லோரும் மண்காத்த பெருமாளை கயிலாயத்தில் காவலுக்கு வைத்துவிட்டு சிவபெருமானி திருமணத்தை பார்ப்பதற்காக சென்றனர். சிவபெருமான் தன்னுடைய திருமணத்தை முடித்துவிட்டு கயிலாயம் வந்தார். கயிலாயத்தை காவல் காத்துக்கொண்டிருந்த செங்கிடாக்காரன் சுவாமியை பார்த்து உன்னுடைய கோரபசிக்கும், உயிர்பலித்து உண்ணும் உன்னுடைய செயலுக்கும் கயிலாயத்தில் உனக்கு இடம் இல்லை. ஆகவே பூலோகம் செல்ல வேண்டும் என்று உத்தரவு கொடுத்தார் சிவபெருமான்.

    உடனே செங்கிடாகாரன் சுவாமியும், எனக்கு ஆக்கும் வரமும், அழிக்கும் வரமும், என்னை நம்பி வணங்கும் அடியவர்களை காக்கும் வரமும் தர வேண்டும் என்று கேட்டார். உடனே சிவபெருமானும், அப்படியே ஆகட்டும். நீ கேட்டதை பெற்றாய் என்று சொல்லி பூலோகத்திற்கு அனுப்பி வைத்தார்.

    சிவபெருமானிடம் வரம்பெற்ற செங்கிடாகாரன் சுவாமி அகத்தியர் வாழ்ந்த சாஸ்தா காவலில் இருந்த பொதிகை மலைக்கு வந்தார். அங்கிருந்து சுடலைமாட சுவாமியின் காவலுக்குட்பட்ட காக்காய்ச்சி மலைக்கு வந்து மரசோலையில் வாசம் செய்தார்.

    காலங்கள் பல கடந்தன. ஒரு சமயம் லண்டன் நாட்டில் இருந்து மூவர் புதிதாக கப்பல் கட்ட எண்ணினர். அதற்காக இந்தியாவிற்கு வந்தனர். தூத்துக்குடியில் கப்பல் கட்டுவதில் திறமைவாய்ந்தவர்களை கண்டறிந்து அந்த பொறுப்பினை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

    பெரியதுரை, சின்னதுரை, பரங்கி துரை ஆகிய மூவருடன் கப்பலுக்கு மரம்வெட்ட காக்காய்ச்சி மலைக்கு வந்தனர். செங்கிடாகாரன் சுவாமி உறைந்திருக்கும் மரத்தையும் வெட்டிக்கொண்டு வந்தனர். உடனே கப்பல் கட்டப்பட்டு வெள்ளோட்டமாக கடலில் பயணம் செய்யத் தொடங்கினர்.

    மேற்குநோக்கி சென்றுவிட்டு மீண்டும் தூத்துக்குடிக்கு திரும்பினர். கப்பல் கேரளம், கருநாகப்பள்ளி, திருவனந்தபுரம் மற்றும் குளச்சல், பல்லம், மணக்குளம், கோவங்குளம் கடந்து முட்டபொதியை வந்தடைந்தது. முட்டைபொதி பகுதியில் கப்பல் வந்ததும், சூறாவளி காற்றுடன் ஒரு பேரலை வந்து கப்பல் கடலில் மூழ்கியது.

    உடனே செங்கிடாகாரன் சுவாமி பருந்து உருவத்தில் பறந்து சென்று வெண்கல ராஜன் கோட்டைக்கு வந்தார். வெண்கல ராஜன் கோட்டைக்கு வந்திறங்கிய செங்கிடாகாரன் சுவாமி, தான் வந்ததை அரசன் அறிய வேண்டும் என்று எண்ணி தன்னுடைய திருவிளையாடலை நடத்தினார்.

    அந்த ஊரில் நோய்நொடிகளை ஏற்படுத்தினார். மரங்கள் எல்லாம் தானே முறிந்துவிழும்படி செய்தார். கடல்நீர் ஊருக்குள் பெருக்கெடுத்துவர செய்தார். இதனால் பயந்துபோன மன்னன், கேரள நம்பூதிரிகளை வரவழைத்து சோளிபோட்டு பார்த்தார். சோளிபோட்டு பார்த்ததும் அங்கு வந்திருப்பது மண்காத்த பெருமாள் என்ற செங்கிடாகாரன் சுவாமி என்று கூறினார்கள் நம்பூதிரிகள்.

    உடனே அந்த மன்னன் செங்கிடாகாரன் சுவாமிக்கு நிலையம் கொடுத்து செங்கிடா பலிகொடுத்து சாந்தப்படுத்தினார். செங்கிடாகாரன் சுவாமியும் ஆங்காரம் தணிந்து சாந்தமாகி, அடிபணிந்தவர்களுக்கு அருள்புரிந்து வந்தார். காலங்கள் பல கடந்தன. அந்த பகுதியில் வாழ்ந்த வந்த மக்களுக்கு செங்கிடாகாரன் சுவாமி குலதெய்வமானார்.

    செங்கிடாகாரன் சுவாமி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கோவில்கொண்டுள்ளார். நாம் ஒவ்வொருவரும் செங்கிடாகாரன் சுவாமியை வழிபடுவோம். அவர் அருள் பெறுவோம்.

    ×