என் மலர்tooltip icon

    வழிபாடு

    • ஜெயந்தி உற்சவ விழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது.
    • வெண்ணை தாழி கண்ணன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    உடுமலை பெரியகடை வீதியில் ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத சீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஜெயந்தி உற்சவ விழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. விழாவின் 5- வது நாளான நேற்று வெண்ணை தாழி கண்ணன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார். இந்த நிகழ்வுக்காக கோவில் மண்டபம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதில் கண்ணன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    அதைத் தொடர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்பட்டது. இதில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு பெரியதிருமொழி, திருகுறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் உள்ளிட்ட பாடல்களை பாடி வெண்ணை தாழி அலங்காரத்தில் எழுந்தருளிய கண்ணனை சாமி தரிசனம் செய்தனர்.

    • பச்சை சாத்தி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருவிழாவின் 8-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளை நிறபட்டு அணிந்து, வெள்ளை நிற மலர்கள் சூடி பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி பிரம்மா அம்சமாக வீதிஉலா வந்து மேலக்கோவில் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.

    பின்னர் பந்தல் மண்டபத்தில் உள்ள பச்சை சாத்தி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. பகல் 12.05 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானை அம்பாளுடன் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி பெருமாள் அம்சமாக எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஆவணித் திருவிழாவின் 10-ம் நாளான நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. முதலில் விநாயகர் தேரும், பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை வந்து சேர்கிறது.

    தொடர்ந்து வள்ளியம்மாள் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை சேர்கிறது.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • வருண பகவானை மகிழ்விக்க மூன்று நாட்கள் மகா சாந்தி வருண யாகம்.
    • ருத்விக்குகள் வைகானச ஆகம சாஸ்திரப்படி நடத்தினர்.

    திருப்பதி:

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் அஷ்டோத்தர சத குண்டத்மக மகா சாந்தி வருண யாகம் நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மா ரெட்டி, அறங்காவலர் குழு தலைவர் பூமண.கருணாகர்ரெட்டி எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்று கோபூஜை செய்து, பசுக்களுக்கு வெல்லம், பச்சரிசி, பழம் ஆகியவற்றை வழங்கினர். அதன் பிறகு இருவரும் மகா பூர்ணாஹுதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    அப்போது அறங்காவலர் குழு தலைவர் நிருபர்களிடம் பேசுகையில், வருண பகவானை மகிழ்விக்க மூன்று நாட்கள் அஷ்டோத்தர சத குண்டத்மக மகா சாந்தி வருண யாகம் நடந்தது. இந்த யாகத்தை மூன்று மாநிலங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ருத்விக்குகள் வைகானச ஆகம சாஸ்திரப்படி நடத்தினர். இதன் மூலம் போதிய மழைப் பெய்து நாடும், மாநிலமும் செழிக்க வேண்டும், என்றார்.

    யாக நிகழ்ச்சியில் தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன், சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி, ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர்களில் ஒருவரான வேணுகோபால தீட்சிதலு, அனைத்துத் திட்ட அலுவலர் ராஜகோபால், இந்து தர்ம பிரசார பரிஷத் செயலாளர் சீனிவாசலு, உதவி அதிகாரி கோபிநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடைபெறும்.
    • பச்சை சாத்தி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    கோலாகலமாக நடந்து வரும் இந்த விழாவின் 8-ம் நாளான நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணியளவில் சுவாமி சண்முகர் வெள்ளை நிற பட்டு அணிந்து, வெண்ணிற மலர்கள் சூடி பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, பிரம்மா அம்சமாக வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பின்னர் மேலக்கோவில் சென்ற சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பந்தல் மண்டபத்தில் பச்சை சாத்தி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. மதியம் 12.05 மணியளவில் சுவாமி சண்முகர்- வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி பச்சை சாத்தி கோலத்தில் பெருமாள் அம்சமாக எழுந்தருளினார்.

    பின்னர் ௮ வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 10-ம் நாளான நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது. முதலில் விநாயகர் எழுந்தருளிய தேரும், பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய தேரும் 4 ரத வீதிகளில் பவனி வருகிறது. தொடர்ந்து வள்ளி அம்பாள் எழுந்தருளிய தேரானது ரத வீதிகளில் பவனி வந்து நிலையை சேர்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
    • 10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது.

    திருமங்கலம்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த தலா 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    நாளை மறுநாள் 14-ந் தேதி ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று (12-ந் தேதி) முதல் வருகிற 15-ந் தேதி வரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பிரதோஷ நாளான இன்று காலை சதுரகிரிக்கு செல்ல அதிகாலையிலேயே அடி வாரத்தில் ஏராளமானோர் திரண்டனர். காலை 7 மணிக்கு வனத்துறை அலுவலர்கள் பக்தர்களின் உடைமைகளை சோதனையிட்டு மலையேற அனுமதித்தனர்.

    பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

    10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது.

    மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதியில்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்கக்கூடாது.

    இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.

    அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேற பக்தர்களுக்கு தடை வைக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

    பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை செய்துள்ளது.

    • 14-ந்தேதி அமாவாசை.
    • பிள்ளையார்பட்டி விநாயகர் குதிரை வாகனத்தில் பவனி.

    12-ந்தேதி (செவ்வாய்)

    * பிரதோஷம்

    * திருச்செந்தூர் முருகப்பெருமான், காலை தங்க கயிலாச பர்வத வாகனத்திலும், இரவு வெள்ளி கமல வாகனத்திலும் பவனி.

    * உப்பூர் விநாயகப்பெருமான் மயில் வாகனத்தில் வீதி உலா.

    * மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி, ராமாவதார காட்சி தருதல்.

    * கீழ்நோக்கு நாள்.

    13-ந்தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்.

    * மாத சிவராத்திரி

    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் ரத உற்சவம்.

    * பிள்ளையார்பட்டி விநாயகர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு ரிஷப வாகனத்திலும் புறப்பாடு

    * கீழ்நோக்கு நாள்.

    14-ந்தேதி (வியாழன்)

    * அமாவாசை

    * திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி தெப்ப உற்சவம்.

    * பிள்ளையார்பட்டி விநாயகர் காலை வெள்ளி கேடய சப்பரத்தில் பவனி, மாலை கஜமுகன் சூரசம்ஹாரம்.

    * கீழ்நோக்கு நாள்.

    15-ந்தேதி (வெள்ளி)

    * மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி, காலை ராஜமன்னார் கோலத்தில் காட்சியருளல், மாலை சேஷ வாகனத்திலும், இரவு புஷ்பப் பல்லக்கிலும் கள்ளர் திருக்கோலக் காட்சி

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    16-ந்தேதி (சனி)

    * திருக்குறுங்குடி நம்பி சன்னிதியில் உறியடி உற்சவம்.

    * பிள்ளையார்பட்டி விநாயகர் குதிரை வாகனத்தில் பவனி.

    * உப்பூர் விநாயகர் திருக்கல்யாணம்

    * மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி ராஜாங்க சேவை.

    * மேல்நோக்கு நாள்.

    17-ந்தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாச பெருமாள் உற்சவம் ஆரம்பம்.

    * மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி மச்சாவதாரம்

    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மாலையில் தேர் பவனி

    * திருப்பதி ஏழுமலையான் உற்சவம் ஆரம்பம்.

    * சமநோக்கு நாள்.

    18-ந்தேதி (திங்கள்)

    * விநாயகர் சதுர்த்தி

    * திருவலஞ்சுழி சுவேத பெருமான் தீர்த்தவாரி.

    * தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், கிருஷ்ண அவதாரக்காட்சி

    * திருப்பதி ஏழுமலையான் பகலில் சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அம்ச வாகனத்திலும் பவனி.

    * சமநோக்கு நாள்.

    • உப்பூர் விநாயகப் பெருமான் மயில் வாகனத்தில் பவனி.
    • சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆவணி-26 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திரயோதசி விடியற்காலை 4.01 மணி வரை பிறகு சதுர்த்தசி.

    நட்சத்திரம்: ஆயில்யம் நள்ளிரவு 1.27 மணி வரை பிறகு மகம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை

    மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று பிரதோஷம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர், லால்குடி கோவில்களில் மாலை சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. குரங்கனி முத்துமாலையப்பன் புறப்பாடு. அறிபத்தநாயனார், புகழ்த்துணை நாயனார் குருபூஜை. பெருவயல் முருகப்பெருமான் பவனி. உப்பூர் விநாயகப் பெருமான் மயில் வாகனத்தில் பவனி. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்று ராசிபலன்

    மேஷம்-தன்னம்பிக்கை

    ரிஷபம்-பாசம்

    மிதுனம்-பரிசு

    கடகம்-லாபம்

    சிம்மம்-வரவு

    கன்னி-ஆதாயம்

    துலாம்- தெளிவு

    விருச்சிகம்-சலனம்

    தனுசு- வெற்றி

    மகரம்-செலவு

    கும்பம்-நிறைவு

    மீனம்-விருப்பம்

    • பிரம்மதேவன் அளித்த வரத்தின் பயனாக தானாவதிக்கு மகிஷாசுரன் என்ற மகன் பிறந்தான்.
    • பெண்களால் மட்டுமே எனக்கு மரணம் நேர வேண்டும் என்று வரம் கேட்டார்.

    ஒருசமயம் அரசர் குலத்தை சேர்ந்த தானாவதி தனக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்று சொல்லி பிரம்மதேவனை நோக்கி தவம் மேற்கொண்டார். அந்த கடும் தவத்தினை பார்த்த பிரம்மதேவர் தானாவதிக்கு முன் தோன்றி அவள் கேட்ட வரத்தினை அளித்தார்.

    பிரம்மதேவன் அளித்த வரத்தின் பயனாக தானாவதிக்கு மகிஷாசுரன் என்ற மகன் பிறந்தான். அனைத்து கலைகளையும், வேதங்களையும் கற்ற மகிஷாசுரன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். மகிஷாசுரனின் தவத்தை கண்டு அவன் முன் தோன்றிய சிவபெருமான் அவன் கேட்ட வரங்களை எல்லாம் அளித்தார்.

    மகிஷாசுரன் ஊர்வன, பறப்பன உள்ளிட்ட எந்த இனத்தாலும் எனக்கு மரணமே வரக்கூடாது. அதுமட்டுமில்லாமல் பெண் வயிற்றில் பிறக்காத பெண்களால் மட்டுமே எனக்கு மரணம் நேர வேண்டும் என்று வரம் கேட்டார். அதற்கு சிவபெருமானும் தந்தோம் என்று அருளினார்.

    சிவபெருமானிடம் வரத்தை வாங்கிய மகிஷாசுரன் இனி தனக்கு மரணம் நேர வாய்ப்பில்லை என்று ஆணவத்தில் மகேந்திரிகிரி பர்வதம் என்ற பகுதியை ஆட்சி செய்து வந்தான். சுயநலத்துடன் மகிஷாசுரன் பல கொடுமையான செயல்களை எல்லாம் செய்து வந்தான். தேவர்களை துன்புறுத்தினான். மகிஷாசுரனின் கொடுமைகளை தாங்கமுடியாத தேவர்கள் அனைவரும் இறைவனாகிய சிவபெருமானிடம் முறையிட்டனர்.

    இந்த சமயத்தில் கயிலாயத்தில் பார்வதி தேவி, விநாயகர், முருகன் இருக்கும்போது சிவபெருமான் ஒரு நாள் திறந்த கண்களுடன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். சிவபெருமானின் ஆழ்ந்த தியானத்தை கண்ட விநாயகர் தனது அன்னையான பார்வதிதேவியிடம் தந்தை ஏன் கண்களை திறந்தபடி தியானம் செய்கிறார். தியானம் என்றால் கண்களை மூடிக்கொண்டு தானே செய்வார்கள்.

    இதைக்கேட்ட பார்வதி தேவி, விநாயகரிடம் உனது தந்தையின் கண்ணொளியில் தான் அண்டசராசரங்கள் இயங்குகிறது. உன்னுடைய தந்தை கண்களை மூடினால் இந்த அண்டமும் இருண்டுபோகும் என்று கூறினாள். அப்போது குறுக்கிட்ட முருகப்பெருமான் தாயிடம் அப்படியானால் தந்தை ஒருமுறை கண்களை மூடி காட்ட சொல்லுங்கள் என்றார். உலகம் எப்படி இருட்டாகும் என்பதை நானும் பார்க்கிறேன் என்றார் முருகன்.

    இதை எப்படி தந்தையிடம் சொல்வது என்று சொல்கிறார் விநாயகர். உடனே பார்வதிதேவி அதை நீங்கள் அவரிடம் கேட்க வேண்டாம். நானே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு பார்வதிதேவி, சிவபெருமானின் கண்களை தனது கைகளால் மூடினார். உடனே இந்த அகில உலகமும் இருளில் மூழ்கியது. சிவபெருமான் சக்தியின் கைகளை விலக்கிக்கொண்டு கண்களை கோபத்துடன் திறந்தார். என்ன விளையாட்டு இது, என்று கோபத்துடன் கேட்டார் சிவபெருமான்.

    சிவபெருமானின் கோபத்தை கண்ட பார்வதிதேவி அப்படியே குனிந்து நின்றார். பிள்ளைகள் கேட்டதனால் தான் நான் இவ்வாறு செய்தேன். என்னை மன்னியுங்கள் என்று வேண்டினார் பார்வதிதேவி. சிவபெருமான் மிகுந்து கோபத்துடன் பார்வதிதேவியை பார்த்து நீ செய்த செயலுக்கு கண்டிப்பாக வருந்தியே ஆக வேண்டும். நீ இனி நாககன்னியின் வயிற்றில் அஷ்டகாளியாக பிறக்க வேண்டும் என்று சிவபெருமான், பார்வதிதேவிக்கு சாபம் கொடுத்துவிட்டார்.

    இதைகேட்டதும் பார்வதிதேவி, சிவபெருமானை பார்த்து இந்த சிறிய தவறுக்கு மானிடப்பிறப்பா? அதுவும் நாகத்தின் வழியாகவா... என்று கூறி மிகவும் வருத்தப்பட்டார். அதன்பிறகு அந்த இடத்தைவிட்டு எழுந்து நகரமுற்பட்டார் பார்வதிதேவி. உடனே சிவபெருமான் கடுமையான கோபம் கொண்டு நெற்றிக்கண்களை திறந்தார். அதிலிருந்து வெளியான தீப்பிழம்புகள் பார்வதிதேவியை எரித்து 8 பிண்டங்களாக்கியது.

    உடனே அந்த 8 பிண்டங்களையும் சிவபெருமான் தனது கையில் எடுத்து பாதாள உலகத்தில் நாககன்னி என்பவர் பிள்ளைவரம் வேண்டி சிவபெருமானை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தார். அவர் முன் தோன்றிய சிவபெருமான் தன்னிடம் இருந்த ௮ பிண்டங்களையும் சாப்பிடுமாறு நாகக்கன்னியிடம் கொடுத்தார். அதை சாப்பிட்ட நாகக்கன்னியின் வயிற்றில் அது 8 முட்டைகளாக உருமாறி வெளிவந்தது.

    உடனே அந்த 8 முட்டைகளையும் அடைகாத்து வந்தார். நான்காவது நாள் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று செவ்வாய்கிழமை ராகுகாலத்தில் 8 முட்டையில் இருந்து 8 பெண்குழந்தைகள் பிறந்தது. முதலாவது பெண் குழந்தை முத்துமாரி என்ற முத்தாரம்மன் என்று பக்தர்கள் பெருமையாக அழைப்பார்கள்.

    இரண்டாவதாக பிறந்தவர் தான் மாகாளி என்ற பத்ரகாளி. மூன்றாவதாக மூன்று முகங்களுடன் பிறந்த முப்பிடாதி. மூன்று தலைகள் இருந்ததால் இவரை முப்பிடறி என்று அழைக்கப்பட்டார். இதுவே காலப்போக்கில் மறுவி முப்பிடாதி என்று அழைக்கப்படார்.

    நான்காவதாக பிறந்தவர் தான் உலகளந்தாள் என்ற உலகம்மன். உலகநாயகி என்று அழைப்பார்கள். ஐந்தாவதாக பிறந்தவர் அரியநாச்சி என்ற அங்கயர்கன்னி. இவர் நாகாத்தம்மனாகவும், நாகக்கன்னி என்றும் அழைக்கப்படுகிறார். ஆறாவதாக பிறந்தவர் செண்பகவல்லி என்ற வடக்கு வாசல் செல்வி. இவர்களை செல்லியம்மன் என்று அழைக்கின்றனர். ஏழாவதாக பிறந்தவர் சந்தனமாரி. இவர் சடைமாரி, ஆகாசமாரி என்றும் அழைக்கின்றனர். கடைசியாக பிறந்தவர் காந்தாரி.

    இந்த பிள்ளைகள் 8 பேரையும் நாகக்கன்னி மிகுந்த அன்போடும், அரவணைப்புடனும் வளர்த்து வந்தார். வளர்ந்து வந்த பிள்ளைகள் கன்னியர் ஆனார்கள். வளர்ந்து வந்த பிள்ளைகள் அனைவரும் அவர்களுடைய அம்மா நாகக்கன்னியை பார்த்து அம்மா என்னுடைய முகமும், உங்களுடைய முகமும் வேறுபட்டு இருக்கிறதே? ஏன் அம்மா என்று கேட்டனர்.

    உடனே நாகக்கன்னி அந்த 8 பிள்ளைகளையும் பார்த்து எல்லாம் அந்த சிவபெருமானின் செயல் என்று கூறினார். உடனே அந்த பெண்களும் நம்மை ஏன் தாயை போல் நாகக்கன்னியாக படைக்காமல் மனிதகுல பெண்களாக படைத்தார் இந்த சிவபெருமான். இந்த நாககுலத்தில் மனிதபிறப்பு எடுத்து என்ன பயன்பெறப்போகிறோம். அதை அந்த சிவபெருமானிடமே கேட்போம் என்று அக்காள், தங்கை 8 பேரும் சிவலிங்கத்தை வைத்து பூஜித்து சிவபெருமானை நோக்கி கடுமையாக தவம் புரியத்தொடங்கினர்.

    அஷ்டகாளிகளின் தவத்தை பார்த்த சிவபெருமான் அவர்கள் முன்னால் தோன்றினார். அஷ்டகாளிகள் சிவபெருமானிடம் தங்களுடைய பிறப்பு குறித்து கேட்டனர். அதற்கு சிவபெருமான் மகேந்திரகிரி பர்வதத்தை ஆண்டுவரக்கூடிய மகிஷாசுரனை வதம் செய்வதற்காக தான் நீங்கள் படைக்கப்பட்டீர்கள் என்று கூறினார்.

    உடனே அந்த அஷ்டாகாளிகள் அனைவரும் சிவபெருமானிடம் நாங்கள் உங்களுடைய வேண்டுகோளை ஏற்று அந்த மகிஷாசுரனை வதம் செய்த பிறகு எங்கள் எட்டு பேரையும் நீங்கள் மணம்முடிக்க வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு சிவபெருமானும் ஒப்புக்கொண்டார்.

    அதன்பிறகு மகிஷாசுரனை அழிக்கக்கூடிய வகையில் அந்த 8 பேருக்கும் அனைத்து வரங்களையும் வழங்கினார் சிவபெருமான். சிவபெருமானின் ஆணைப்படி மகேந்திரகிரி பர்வதமலைக்கு வந்த அஷ்டகாளிகளுக்கும், மகிஷாசுரனுக்கும் கடுமையாக சண்டை நடந்தது. தனித்தனியாக நின்று போரிடுவதைவிட ஒன்றுசேர்ந்து நின்றால் தான் பலம் அதிகம் என்று அஷ்டகாளிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து சாமூண்டீஸ்வரியாக மாறி மகிஷாசுரனை வதம் செய்தனர்.

    மகிஷாசுரன் இறக்கும்போது சாமூண்டீஸ்வரியை பார்த்து தாயே என்னை மன்னித்துவிடுங்கள். வாழும் வரை மனிதகுலத்தில் ராஜாவாக இருந்தேன். இனி கானகத்தில் வாழும் உயிர்களுக்கு ராஜாவான சிங்கமாக மாறி தாயே உம்மை சுமக்கும் பாக்கியத்தை தந்தருள வேண்டும் என்று பணிவுடன் கேட்டார்.

    இதைகேட்டதும் ஆங்கார ரூபினியான சாமூண்டீஸ்வரி அதன்பிறகு சாந்த சொரூபினியாக மாறினார். மகிஷாசுரனை மன்னித்து சிங்கமாக மாற்றி தன்னுடைய வாகனமாக்கிக்கொண்டார். அன்றில் இருந்து அஷ்டகாளிகள் 8 பேரும் ஒன்று சேர்ந்து மகிஷாசுர மர்த்தினி என்ற நாமத்தில் அழைக்கப்பட்டார்.

    அதன்பிறகு ஒருநாள் அஷ்டகாளிகள் 8 பேரும் கயிலாயம் சென்றனர். கயிலாயம் விட்டு வந்த அஷ்டகாளியர் பொதிகைமலைக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து ஒவ்வொருவரும் பூலோகத்தில் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். விரும்பிய இடத்தில் அமர்ந்துகொண்டு தான் வந்ததை அப்பகுதி மக்களுக்கு உணர்த்தி கோவில் கொண்டு அப்பகுதி மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    • முத்தாரம்மன் கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்.
    • பக்தர்கள் வேடமணிந்து தர்மம் வாங்கி தங்களது வேண்டுதல்களை செலுத்துவார்கள்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும்.

    இங்கு நடைபெறும் தசரா திருவிழா தமிழகத்தில் முதலிடமும், இந்தியாவில் 2-வது இடமும் வகிக்கிறது. இந்த ஆண்டு தசரா திருவிழா அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 24-ந்தேதி மகிசா சூரசம்காரம் நடக்கிறது.

    இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வேடமணிந்து தர்மம் வாங்கி தங்களது வேண்டுதல்களை செலுத்துவார்கள். இதற்காக பக்தர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப 7 நாள், 11 நாள், 21 நாள், 31 மற்றும் 41 நாள் என கணக்கிட்டு விரதத்தை தொடங்கு வார்கள். முன்னதாக குலசேகரன்பட்டினம் கடற்கரைக்கு வந்து, படிகம், பாசி மற்றும் ருத்ராட்ச மாலைகளை தேர்வு செய்து அதை வாங்கி கடலில் கழுவி, குளித்து விட்டு, கோவிலுக்கு வந்து வணங்கி, சிலர் கோவிலில் பூஜை செய்து பூசாரி கையினால் அல்லது தன்னைவிட வயது கூடுதல் உள்ள பெரியவர்கள் கையினால் மாலையை கழுத்தில் அணிந்து விரதத்தை தொடங்கி வருகின்றனர்.

    இதற்காக குலசேகரன்பட்டினம் கடற்கரையில் ஏராளமான பாசிமாலை கடைகள் உருவாகி உள்ளன. பக்தர்களும் குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்துவிட்டு பின்பு கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

    திருவிழா ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலையத் துறையினரும், கோவில் நிர்வாகமும் செய்து வருகின்றனர்.

    • சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • பச்சை சாத்தி கோலத்தில் பெருமாள் அம்சமாக எழுந்தருளி வீதி உலா

    திருச்செந்தூர்:

    முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    7-ம் நாளான நேற்று மாலையில் சுவாமி சண்முகர் வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் செம்பட்டு அணிந்து, செம்மலர் சூடி சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் பின்புறமாக நடராஜர் அலங்காரத்தில் சிவன் அம்சமாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    8-ம் திருவிழாவான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மா அம்சமாக எழுந்தருளி வீதி உலா வந்து மேல் கோசிவ் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பச்சை சாத்தி கோலத்தில் பெருமாள் அம்சமாக பச்சைக் கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் வந்து சேர்ந்தார். அப்போது திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (புதன் கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கற்பகவிநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும்.
    • விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    காலை 10 மணிக்கு கொடி கோவிலை சுற்றி வந்தது. 11 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. முன்னதாக கொடிமரம் அருகே வெள்ளி மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பகவிநாயகரும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேசுவரரும் எழுந்தருளினர். கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    முதல் நாள் திருவிழாவான நேற்று கற்பகவிநாயகர் மூஷிக வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தார். 2-ம் நாள் திருவிழாவான இன்று(திங்கட்கிழமை) இரவு சிம்ம வாகனத்திலும், 12-ந்தேதி பூத வாகனத்திலும், 13-ந்தேதி கமல வாகனத்திலும், 14-ந்தேதி இரவு ரிஷப வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.வருகிற 15-ந்தேதி மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. 16-ந்தேதி மயில் வாகனத்திலும், 17-ந்தேதி குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதேபோல் 18-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. முன்னதாக அன்றைய தினம் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். ஆண்டிற்கு ஒரு நாள் மட்டுமே இவ்வாறு மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 19-ந்தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. அன்றைய தினம் பகலில் மூலவருக்கு மோதகம் படையல் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடும் நடக்கிறது. இத்துடன் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது.

    விழாவில் கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை செட்டியார், காரைக்குடி சாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
    • பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் பூத வாகனத்தில் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆவணி-25 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: துவாதசி பின்னிரவு 2.01 மணி வரை. பிறகு திரயோதசி.

    நட்சத்திரம்: பூசம் இரவு 10.56 மணி வரை. பிறகு ஆயில்யம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை.

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ணர் ஸ்ரீரங்கநாதன் திருக்கோலமாயக் காட்சி, மாலை வெண்ணெய்த்தாழி சேவை. பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் பூத வாகனத்தில் பவனி. செறுத்துணை நாயனார் குருபூஜை. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருமெய்யம் சத்தியமூர்த்தி புறப்பாடு. திருமயிலை கற்பகாம்பாள் சமதே கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமே மருந்தீசுவரர், பெசன்ட்நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பரிசு

    ரிஷபம்-நம்பிக்கை

    மிதுனம்-உதவி

    கடகம்-புகழ்

    சிம்மம்-நலம்

    கன்னி-தனம்

    துலாம்-கீர்த்தி

    விருச்சிகம்-யோகம்

    தனுசு- லாபம்

    மகரம்- வெற்றி

    கும்பம்-இன்பம்

    மீனம்-சலனம்

    ×