என் மலர்tooltip icon

    வழிபாடு

    • பசுவாக சாபம் பெற்ற அம்பிகை, சாபவிமோசனம் வேண்டி பல இடங்களில் அலைந்து திரிந்து ஈசனை வழிபட்டார்.
    • கோவிலில் ஐந்து நிலைகளை கொண்ட ராஜகோபுரம் அழகுடன் காட்சி அளிக்கிறது.

    மயிலாடுதுறை மாவட்டம் திருமணஞ்சேரி எனும் ஊரில் அமைந்துள்ளது, உத்வாகநாதர் திருக்கோவில். இத்தல இறைவனின் திருநாமம் உத்வாகநாதர், இறைவியின் திருநாமம் கோகிலாம்பாள். சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 25-வது தலமாகும்.

     

    கோவில் தோற்றம்

    தல வரலாறு

    ஒரு சமயம் சிவபெருமானும், பார்வதிதேவியும் கயிலாயத்தில் இருந்தபோது, பார்வதிதேவி சிவபெருமானை வணங்கிவிட்டு, ``தங்களை பூலோக முறைப்படி திருமணம் செய்துகொள்ள என் மனம் விரும்புகிறது. என் விருப்பத்தை தாங்கள் நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று வேண்டினார். இதற்கு பதிலளித்த சிவபெருமான், ``உன் விருப்பம் நிச்சயம் நிறைவேறும். அதற்கு சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும்" என்று கூறினார். நாட்கள் பல கடந்தன. தன் விருப்பம் எப்போது, எங்கு நிறைவேறும் என்று ஈசன் சொல்லாமல் இருந்ததால், தன் எண்ணம் நிறைவேற வெகுகாலம் ஆகும் என்ற எண்ணத்தில் பார்வதிதேவி ஈசனிடம் சற்று அலட்சியமாக நடக்க ஆரம்பித்தார். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், பார்வதிதேவியை பூலோகத்தில் பசுவாக பிறக்கும்படி சாபமிட்டார்.

    பசுவாக சாபம் பெற்ற அம்பிகை, சாபவிமோசனம் வேண்டி பல இடங்களில் அலைந்து திரிந்து ஈசனை வழிபட்டார். அவ்வாறு பசுவின் உருவத்தில் உலவி வந்த அம்பிகை, ஒருநாள் ஒரு இடத்தில் இருந்த சிவலிங்க திருமேனியின் மீது பாலை சொரிந்து அபிஷேகம் செய்தார். இதனால் மனம் இரங்கிய சிவபெருமான் பசுவுக்கு முக்தி அளித்தார்.

    அம்பிகைக்கு பசு சாபம் கொடுக்கப்பட்டது, தேரழுந்தூர். திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து பசுக்களை பராமரித்த இடம், கோமல். பசு உருவில் இருந்த அம்பிகையின் பாதக்குளம்புகள் பட்டு, ஈசனின் உடல் மீது தழும்புகள் உண்டான ஊர் திருக்குளம்பம். சிவபெருமான் பசுவுக்கு முக்தி அளித்தது, திருவாடுதுறை.

    திருந்துருத்தி என்னும் குத்தாலத்தில் பரத மகரிஷி பிரமாண்ட யாகவேள்வி நடத்தினார். அந்த யாகவேள்வியில் சிவபெருமானின் அருளால் அம்பிகை தோன்றினார். இதைக் கண்ட பரத மகரிஷி, ``வேள்வியில் தோன்றிய தெய்வீக பெண் யார்'' என்று அதிசயித்து நின்றார். அப்போது தோன்றிய சிவபெருமான், ''வேள்வியில் வந்தவர் உமாதேவியே. அவரை உமது பெண்ணாக ஏற்று, எமக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்'' எனக் கூறி மறைந்தார்.

    இதையடுத்து, திருமணத்திற்காக திருவேள்விக்குடியில் கங்கணதாரணமும், மங்கள ஸ்நானமும் செய்யப்பட்டது. குறுமுலைப்பாலையில் பாலிகை ஸ்தாபனம் செய்யப்பட்டது. பின்பு உமா தேவியை மணமகளாக அழைத்துக்கொண்டு சிவனை தேடி பரத மகரிஷி வர, இறைவன் மாப்பிள்ளை கோலத்தில் எதிர்கொண்டு காட்சி அளித்த இடமே, எதிர்கொள்பாடி. அதன்பின்னர், திருமணஞ்சேரியில் சிவபெருமான் உமாதேவியை பூலோக முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தை காண தேவர்கள், முனிவர்கள், நவக்கிரகங்கள் என அனைவரும் வந்தனர். இவ்வாறு சிவபெருமானும், பார்வதிதேவியும் கைகோர்த்தப்படி திருமணக் கோலத்தில் காட்சி தருவது இக்கோவிலின் தனிச் சிறப்பாகும்.

     

    அம்பிகையுடன் கல்யாணசுந்தரர்

    கோவில் அமைப்பு

    கோவிலில் ஐந்து நிலைகளை கொண்ட ராஜகோபுரம் அழகுடன் காட்சி அளிக்கிறது. ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி காணப்படுகிறது. கோவிலின் வலதுபுறம் விநாயகர் சன்னிதி உள்ளது. இடதுபுறத்தில் நடராஜர் அருள்பாலிக்கிறார். கருவறையில் இத்தல இறைவன், உத்வாகநாதர் என்ற திருநாமத்துடன் சுயம்புலிங்கமாக அழகுற காட்சி தருகிறார். இவர் 'அருள்வள்ளநாதர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

    கருவறையின் முன்மண்டபத்தில் இறைவி கோகிலாம்பாள் தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கி உள்ளார். இவர் மணக் கோலத்தில் மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். கருவறையின் இடதுபுறம் நிருத்த மண்டபத்தில் உற்சவமூர்த்தியான கல்யாணசுந்தரர், அம்பிகையுடன் கல்யாண கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

    கோவிலில் சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, ராகு பகவான், துர்க்கை, விஷ்ணு ஆகியோர் சன்னிதிகளும் உள்ளன. இங்கு நவக்கிரகங்கள் கிடையாது. இத்தலத்துக்கு கருஊமத்தை தவிர வன்னி, கொன்றை ஆகிய தலமரங்களும் உள்ளன.

    பிரார்த்தனை

    இக்கோவில் நித்திய கல்யாண தலமாகும். இத்தல இறைவனை நாடி வருபவர்களுக்கு, தங்கள் விருப்பம் போல வாழ்க்கை அமையும், திருமணத் தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்கிறார்கள். கோவிலுக்கு திருமண வரம் வேண்டியும், குழந்தைப் பாக்கியம் வேண்டியும் வரும் பக்தர்கள் கோவில் உள்ளே உள்ள தேவஸ்தானத்தைச் சேர்ந்த பூஜைப் பொருட்களை வாங்கி பூஜை செய்கிறார்கள். இத்தலம் ராகு தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.

    அமைவிடம்

    மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் திருமணஞ்சேரி திருத்தலம் அமைந்துள்ளது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு.
    • திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை-12 (வெள்ளிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : அஷ்டமி இரவு 7.16 மணி வரை. பிறகு நவமி.

    நட்சத்திரம் : சதயம் இரவு 10.45 மணி வரை பிறகு பூரட்டாதி.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை

    திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசல நாயகர் காலையில் ரிஷப வாகனம், இரவு பெரிய ரிஷப வாகனத்தில் பவனி. சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. வேலூர் கோட்டை துர்க்கையம்மன், கதிமங்கலம் ஸ்ரீவனதுர்க்கையம்மன், பட்டீஸ்வரம் ஸ்ரீதுர்க்கையம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன், சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-செலவு

    மிதுனம்-போட்டி

    கடகம்-வரவு

    சிம்மம்-வெற்றி

    கன்னி-களிப்பு

    துலாம்- கடமை

    விருச்சிகம்-அன்பு

    தனுசு- ஆதரவு

    மகரம்-நன்மை

    கும்பம்-பரிசு

    மீனம்-உதவி

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். தொழிலில் ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் இனி ஒத்துவருவர். கடன் சுமை குறையப் புதிய வழிபிறக்கும்.

    ரிஷபம்

    வளர்ச்சி கூடும் நாள். நிச்சயிக்கப்பட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பயணங்கள் பலன் தருவதாக அமையும்.

    மிதுனம்

    நினைத்தது நிறைவேறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

    கடகம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பிறருக்கு நன்மை செய்தாலும் அது தீமையாகத் தெரியும். எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படும்.

    சிம்மம்

    நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நண்பர்களால் கையிருப்பு கரையக்கூடிய வாய்ப்பு உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

    கன்னி

    துன்பங்கள் தூளாகும் நாள். நல்ல செய்திகள் உங்கள் இல்லம் தேடி வரும். திடீர் பயணங்களால் திசை திருப்பம் ஏற்படலாம். வரன்கள் முடிவாகும்.

    துலாம்

    உதவிகள் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும் நாள். பழுதான வீடுகளைப் பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டு.

    விருச்சிகம்

    புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும்.

    தனுசு

    யோகமான நாள். பழகிய நண்பர்களால் பணத்தேவைகள் பூர்த்தியாகும். உறவினர் பகை அகலும். முடங்கிக் கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

    மகரம்

    வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். மாற்று இனத்தவர்களின் உதவியால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும்.

    கும்பம்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணை புரிவர். உத்தியோகத்தில் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

    மீனம்

    நல்லவர்களின் சந்திப்பு கிடைத்து நலம் காணும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். திருமண முயற்சி வெற்றி தரும்.

    • கார்த்திகை கோபுரம் அருகே சொக்கப்பனை அமைக்கப்பட்டு கொளுத்தப்படும்.
    • கோவில் யானைகள் ஆண்டாள், லெஷ்மி தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தின.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வரும் 5-ந்தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவிலின் கார்த்திகை கோபுரம் அருகே சொக்கப்பனை அமைக்கப்பட்டு கொளுத்தப்படும். அதனை நம்பெருமாள் கதிர் அலங்காரத்தில் எழுந்தருளி கண்டருளுவார்.

    கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை பந்தல் அமைக்க முகூர்த்தக்கால் நடும் விழா கார்த்திகை கோபுரம் அருகே இன்று காலை 10.45 மணியளவில் மகர லக்னத்தில் நடைபெற்றது. அதுசமயம் சுமார் 20 அடி உயரம் உள்ள தென்னை மரக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை மற்றும் பூமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    அதன் பின்னர் முகூர்த்தக்காலை கோவில் ஊழியர்கள் நட்டனர். அப்போது கோவில் யானைகள் ஆண்டாள், லெஷ்மி தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தின.

    இந்நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள் மற்றும் கைங்கர்யபரார்கள் கலந்து கொண்டனர். இந்த பந்தல் காலை சுற்றி சுமார் 15 அடி அகலத்திற்கும் 20 அடி உயரத்திற்கும் சொக்கப்பனை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

    • சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை-11 (வியாழக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சப்தமி இரவு 8.03 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம் : அவிட்டம் இரவு 10.57 மணி வரை பிறகு சதயம்

    யோகம் : சித்த, மரணயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம், ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி

    இன்று சுபமுகூர்த்த தினம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் காலையில் சேஷ வாகனத்தில் பவனி, இரவு சுவாமி கற்பக விருட்சம் அம்பாள் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. பழனி ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. திருப்பரங்குனறம் ஸ்ரீ ஆண்டவர் அன்ன வாகனத்தில் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம் மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீசித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக் கடலைச் சாற்று வைபவம்.

    திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கும், தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கும் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மேன்மை

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-நட்பு

    கடகம்-வரவு

    சிம்மம்-இரக்கம்

    கன்னி-சாந்தம்

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-அசதி

    தனுசு- புகழ்

    மகரம்-பெருமை

    கும்பம்-விருத்தி

    மீனம்-கண்ணியம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். புதுமுயற்சிகளில் வெற்றி உண்டு. நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    ரிஷபம்

    சுப விரயங்கள் ஏற்படும் நாள். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோக முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

    மிதுனம்

    நிம்மதி கிடைக்க நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். மறதி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    கடகம்

    கவனிக்காது விட்ட உடல்நலத்தால் கவலை அதிகரிக்கும் நாள். தொழில் உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தொல்லைகள் உண்டு.

    சிம்மம்

    வருமானம் திருப்தி தரும் நாள். நண்பர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். மறதியால் விட்டுப்போன காரியங்களைத் துரிதமாக செய்வீர்கள்.

    கன்னி

    கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதார நிலை உயரும். வரன்கள் வாயில்தேடி வரும்.

    துலாம்

    வரவும் செலவும் சமமாகும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

    விருச்சிகம்

    கனவுகள் நனவாகும் நாள். காரிய வெற்றி ஏற்படும். பொதுவாழ்வில் புகழ் கூடும். இனத்தார் பகை மாறும். ஆரோக்கியம் சீராகும். வாகன யோகம் உண்டு.

    தனுசு

    திட்டமிட்ட காரியத்தைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் வேலையைப் பகிர்ந்து கொள்வர்.

    மகரம்

    வளர்ச்சி கூடும் நாள். உங்கள் நிர்வாக திறமைக்கு பாராட்டு கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். கட்டிடம் கட்டும் பணி தொடரும்.

    கும்பம்

    வழக்குகள் சாதகமாக முடியும் நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

    மீனம்

    நாசூக்காகப் பேசி நல்ல பெயர் எடுக்கும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும்.

    • அனைத்து சிறப்புரிமை தரிசனங்களும் டிசம்பர் 30-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.
    • வி.ஐ.பி. தரிசனத்திற்கான அனைத்து பரிந்துரை கடிதங்களும் ரத்து செய்யப்படுகின்றன.

    திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதம் 30-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனத்திற்கான விரிவான ஏற்பாடுகள் மற்றும் விரிவான வழிகாட்டுதல்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து, தேவஸ்தானம் பெரும்பாலான சிறப்பு சலுகைகளை ரத்து செய்துள்ளது. வைகுண்ட ஏகாதசி முதல் 3 நாட்களுக்கு ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மீதமுள்ள 7 நாட்கள் நேரடி தரிசனம் வழங்கப்படுகிறது.

    முதல் 3 நாட்களுக்கு 1+3 குடும்ப ஒதுக்கீட்டின் கீழ் டோக்கன்கள் ஒதுக்கப்படும், இதில் நான்கு உறுப்பினர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள்.

    பக்தர்கள் நவம்பர் 27-ந் தேதி காலை 10 மணி முதல் டிசம்பர் 1-ந் தேதி மாலை 5 மணி வரை தேவஸ்தான வலைத்தளம், தேவஸ்தான மொபைல் செயலி அல்லது அரசு வாட்ஸ்அப் பாட் (9552300009) வழியாக பதிவு செய்ய வேண்டும்.

    ஆன்லைன் டிக்கெட் தேர்வு முடிவுகள் டிசம்பர் 2-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கப்படும்.

    மீதமுள்ள நாட்களுக்கான தரிசன அட்டவணை மற்றும் டிக்கெட் விற்பனையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜனவரி 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சர்வ தரிசனத்திற்கு, சாதாரண பக்தர்கள் வைகுந்தம் வரிசை வளாகம்2 மூலம் டோக்கன்கள் இல்லாமல் நேரடியாக சர்வ தரிசனத்தைப் பெறலாம்.

    ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளுக்கு (ஜனவரி 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை), ஒரு நாளைக்கு 1,000 டிக்கெட்டுகள் டிசம்பர் 5-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

    ரூ.300 கட்டண தரிசனத்திற்கு ஒரு நாளைக்கு 15,000 டிக்கெட்டுகள் டிசம்பர் 5-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

    மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகள் உள்ள பெற்றோர், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான அனைத்து சிறப்புரிமை தரிசனங்களும் டிசம்பர் 30-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.

    சுய நெறிமுறை பிரமுகர்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படும். வி.ஐ.பி. தரிசனத்திற்கான அனைத்து பரிந்துரை கடிதங்களும் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி கோவிலில் நேற்று 72,677 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 24,732 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.26 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 12 மணி காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

    • கோவிலில், முருகப்பெருமானின் சன்னிதி வாசற்படிகள் கலை நயத்துடன் காணப்படுகின்றன.
    • மழை, வெயில், காற்று என அனைத்தையும் ஏற்கும் திருமேனியாக சுயம்பு ஐயப்பன் காட்சி தருகின்றார்.

    சுவாமி ஐயப்பனுக்கு நாடெங்கிலும் எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. ஆனால் சாஸ்தா எனும் சுவாமி ஐயப்பன், சுயம்புவாகத் தோன்றிய ஆலயத்தை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்நியர்களின் படையெடுப்பையும் தாக்குப்பிடித்த சுவாமி ஐயப்பன், இன்றும் அதே இடத்தில் எளிமையாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் வழங்கி குறைகளைத் தீர்த்து வருகின்றார். இவருக்கு துணையாக இடது பின்புறம் பெரிய ஆலயத்தில் முருகப்பெருமான் தம் கரங்களில் ஞானப்பழமும், தண்டமும் தாங்கி அருள் வழங்குகின்றார்.

    தொன்மைச் சிறப்பு

    மூவேந்தர்கள் காலத்தில் சேர மன்னர்களின் ஆட்சியிலும், பின்பு பல்லவர்கள் ஆட்சியிலும் பாலக்காடு பகுதி இருந்துள்ளது. பல்லவர்கள், சேர மன்னர்களுக்கு பிறகு வேறு சமூகத்தினர் சிலர் இப்பகுதியை ஆட்சி செய்தனர். இவர்கள் ஆண்ட பகுதி வள்ளுவ நாடு, கொல்லங்கோடு, பாலக்காடு என மூன்று பிரிவுகளாக இருந்தது. இதில் பாலக்காட்டை சேகரி வர்மா என்ற அரசன் ஆட்சி செய்தான். அதன் பின், இப்பகுதி கி.பி.1757-ல் கோழிக்கோடு அரசனான சாமூத்திரி, ஐதர் அலி, திப்பு சுல்தானை அடுத்து ஆங்கிலேயர் வசமானது.

    அந்நியர் ஆட்சியில் சிதைக்கப்பட்ட எண்ணற்ற ஆலயங்களில் ஒன்றாக முடப்பக்காடு ஆலயமும் இருந்தது. ஆனால் இந்த ஆலய வளாகத்தில் எளிய ஆலயமாக இருந்த சாஸ்தா சுயம்புத் திருமேனி ஆலயம் பாதிக்கப்படவில்லை. அதன்பிறகு இந்த ஆலய வளாகம் பல நூறு ஆண்டுகள் கவனிப்பாரற்றுக் கிடந்தது.

    இந்நிலையில் அப்பகுதியில் வாழ்ந்த அடியார் பெருமக்கள் இந்த ஆலயத்தின் உண்மை நிலையை அறிய, தேவப் பிரசன்னம் மற்றும் தாம்பூலப் பிரசன்னம் ஆகியவற்றை பார்த்தனர். அதில், இங்கு பழமையான இரண்டு ஆலயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதன்படி பெரிய ஆலயம் சுப்பிரமணியர் ஆலயம் என்றும், சிறிய ஆலயம் சாஸ்தாவின் சுயம்பு வடிவம் என்றும் தெரியவந்தது.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த இவ்வூர் மக்கள், 2017-ம் ஆண்டு ஆலயம் எழுப்பும் பணியில் ஈடுபட்டனர். ஆலயத் திருப்பணியில் கோயம்புத்தூரைச் சேர்ந்த அடியவர் ஒருவர் இந்த ஆலயத்தின் புனரமைப்பிற்கு பெரிதும் உதவினார். அதன் பயனால் இவ்வாலயம் இன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது. சேதம் அடைந்திருந்த சுப்பிரமணியர் சிலையும் அதே கலைநயத்தோடு வடிக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு வந்துள்ளது.

    கோவில் அமைப்பு

    இவ்வாலயம் பாரதப்புழா ஆற்றின் வடகரையில் மேடான பகுதியில் அமைந்துள்ளது. எளிய சுயம்பு சாஸ்தா ஆலயம், பெரிய வடிவிலான சுப்பிரமணியர் ஆலயம், வலது பின்புறம் நாகர்கள் சன்னிதி என அனைத்தும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. தென் கிழக்கில் மருத்துவ குணம் கொண்ட தீர்த்தக்கிணறும், சீரமைப்பை எதிர்நோக்கும் ஒளஷதத் திருக்குளமும் உள்ளன. இத்தலம் மேற்புறம் பிரம்மாண்ட ஆறு, கீழ் புறம் வயலும் மலைகளும் சூழ்ந்து பசுமையான சூழலில் அமைந்துள்ளது.

    இவ்வாலயத்தின் தொன்மைக்குச் சான்றுகளாக, இதன் கட்டிட அமைப்பும், சுயம்பு ஐயப்பனின் திருமேனியும் காட்சி அளிக்கின்றன. இந்த ஆலயம் 'வெட்டுக்கல்' எனப்படும் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள பல்வேறு பழங்கால ஆலயங்களில் இதே அமைப்பு காணப்படுகின்றது. இதற்கு மற்றொரு சான்றாக, இந்திய தொல்லியல் துறையின் நிர்வாகத்தில் உள்ள பட்டாம்பி நகரின் கைத்தளி மகாதேவர் ஆலய வளாகத்தில் உள்ள நரசிம்மர் மற்றும் அனுமன் சன்னிதிகள் உள்ளன.

    கோவிலில், முருகப்பெருமானின் சன்னிதி வாசற்படிகள் கலை நயத்துடன் காணப்படுகின்றன. ஒருபுறம் கைலாய வாசலும், மறுபுறம் வைகுண்ட வாசலும் உள்ளது. இவற்றில் சிங்கமும், யானையும் சிற்பங்களாக வடிக்கப்பட்டு உள்ளன. இதே வடிவம் கைத்தளி மகாதேவர் வளாகத்தில் நரசிம்மர் கருவறையில் காணப்படுகின்றது.

    முருகனின் சிலா வடிவம் மிகவும் கலைநயத்தோடு உள்ளது குறிப்பிடத்தக்கது. சுப்பிரமணியர் நின்ற கோலத்தில் வலது கையில் ஞானப்பழம் தாங்கியும், இடது கையை இடுப்பில் தாங்கியும் கூடவே தண்டத்தையும் தாங்கியபடி புன்னகை பூத்த முகத்துடன் அருள் காட்சி வழங்குகின்றார்.

     

    ஐயப்பன் சன்னிதி

    முருகன் ஆலயத்தின் வலது முன்புறத்தில் எளிய சன்னிதியாக சுயம்பு ஐயப்பன் சன்னிதி அமைந்துள்ளது. ஸ்ரீ கோவில் எனும் கருவறையில் உள்ள ஐயப்பன் திருமேனி, பழமையானது மற்றும் சுயம்பு என்பதை உறுதி செய்கின்றது. இவர் திருமேனியை சுற்றி கேரள பாணி கூரை அமைந்திருந்தாலும், இவரின் மேல் பகுதி மூடப்படாமல் வானம் பார்த்த பூமியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மழை, வெயில், காற்று என அனைத்தையும் ஏற்கும் திருமேனியாக சுயம்பு ஐயப்பன் காட்சி தருகின்றார். இவரின் திருமேனி லிங்க திருமேனி வடிவமாக அமைந்துள்ளது. இதே அமைப்பு கேதார்நாத் சிவபெருமானுக்கும், சிங்னாப்பூர் சனி பகவானுக்கும் அமைந்துள்ளது இங்கே நினைவுகூரத்தக்கது. அந்த வகையில் சுவாமி ஐயப்பனின் அபூர்வக்கோலம் இப்புண்ணிய பூமியில் அமைந்துள்ளது.

    இங்குள்ள பழமையான ஒரு கல் விளக்கு, அடியார் ஒருவரால் வழங்கப்பட்டதை உறுதி செய்யும் விதமாக விளக்கின் பாதத்தில் 'திருப்பாததாச கண்ணப்பட்டர்' என்ற மலையாள வரிகள் காணப்படுகின்றது. இக்கோவில், சுவாமி ஐயப்பன் கோவில்தான் என்பதை (16-ம் நூற்றாண்டு) இந்திய அரசின் சென்சஸ் இயக்ககத்தின் பாலக்காடு மாவட்ட கோவில்கள் வெளியீட்டில் குறிப்பிட்டுள்ளது. என்றாலும் கட்டிட அமைப்பு பல்லவர் காலத்தை உணர்த்துகின்றது.

    விழாக்கள்

    தைப்பூசத்தை மையமாக வைத்து பதினைந்து நாட்கள் பிரம்மோற்சவம், பூரம் விழா எளிமையாக நடத்தப்படுகின்றன. ஆலய பூஜைகளை நரிபட்ட மனா கேசவ பட்டத்திரி பரம்பரையினர் செய்து வருகின்றனர்.

    இங்குள்ள இறைவன் தம்மை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருளும் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றார். கேரள மாநிலத்தில் அமர்ந்த கோல ஐயப்பன் ஆலயங்கள் நிறைந்திருந்தாலும் சுயம்பு ஐயப்பன் இவர் ஒருவரே என்பது தனிச்சிறப்பு ஆகும்.

    தினமும் மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம். என்றாலும் சுயம்பு ஐயப்பனை எப்போதும் தரிசிக்க ஏதுவாக கருவறைக் கதவுகள் அமைந்துள்ளன. ஆலயப் பணியாளர் வீடும் ஆலயத்தின் அருகில் உள்ளது.

    அமைவிடம்

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி வட்டத்தில் முடப்பக்காடு திருத்தலம் அமைந்துள்ளது. பள்ளிப்புரம் - பட்டாம்பி நெடுஞ்சாலையில், பட்டாம்பியில் இருந்து கிழக்கே ஏழு கிலோமீட்டர் தொலைவில், தமிழ்நாட்டின் ஆனைமலையில் உருவாகி கேரளத்தின் இரண்டாவது பெரிய நதியாக விளங்கும் பாரதப்புழா ஆற்றின் தென்கரையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. பட்டாம்பி வழியே குருவாயூர் செல்லும் அன்பர்கள் அபூர்வ சுயம்பு ஐயப்பனையும் தரிசித்து அருள் பெறலாம்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள்.

    ரிஷபம்

    கலகலப்பான செய்திகள் வந்து சேரும்நாள். தொழில் முன்னேற்றம் கருதி ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். உத்தியோக முயற்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    மிதுனம்

    கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். கடமையில் தொய்வு ஏற்படும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    கடகம்

    முன்னேற்றம் கூடும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

    சிம்மம்

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். நீண்டநாளையப் பிரச்சனையொன்று நல்ல முடிவிற்கு வரும். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

    கன்னி

    வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும் நாள். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படலாம்.

    துலாம்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சொத்து பிரச்சனை அகலும். வியாபாரப் போட்டிகள் விலகும்.

    விருச்சிகம்

    யோகமான நாள். பிறருக்காகப் பொறுப்புகள் சொல்லி வாங்கி கொடுத்த தொகை வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.

    தனுசு

    விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும்.

    மகரம்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. பயணத்தால் தொல்லையுண்டு. எதிர்பாராத விரயம் உண்டு.

    கும்பம்

    வருமானம் திருப்தி தரும் நாள். சொத்துப் பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காது.

    மீனம்

    யோகமான நாள். செல்வாக்கு மேலோங்கும். காரிய வெற்றிக்கு நண்பர்கள் துணைபுரிவர். உறவினர் வழியில் ஒரு மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும்.

    • சஷ்டி விரதம். திருவோண விரதம்.
    • திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை-10 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சஷ்டி இரவு 10.27 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம் : திருவோணம் இரவு 10.42 மணி வரை பிறகு அவிட்டம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சஷ்டி, திருவோணம் விரதம், மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை

    இன்று சஷ்டி விரதம். திருவோண விரதம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் காலை பூத வாகனத்திலும் இரவு சுவாமி சிம்ம வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு. பழனி ஸ்ரீ ஆண்டவர் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம்.

    திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலையில் அபிஷேகம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பரிவு

    ரிஷபம்-நிறைவு

    மிதுனம்-மாற்றம்

    கடகம்-நற்சொல்

    சிம்மம்-புகழ்

    கன்னி-ஓய்வு

    துலாம்- யோகம்

    விருச்சிகம்-ஆதாயம்

    தனுசு- மகிழ்ச்சி

    மகரம்-வரவு

    கும்பம்-சிந்தனை

    மீனம்-கடமை

    • திருப்பதியில் தற்போது கடும் பனிப்பொழிவு தொடங்கி உள்ளதால் பக்தர்கள் குளிரில் நடுங்கி வருகின்றனர்.
    • திருப்பதியில் நேற்று 68,615 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். நேற்று காலை முதல் மேலும் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர். இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு தங்கி செல்லும் வைகுந்தம் அறைகள் அனைத்தும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.

    இதனால் கோவிலுக்கு வெளியே நீண்ட தூரம் தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்தனர். திருப்பதியில் தற்போது கடும் பனிப்பொழிவு தொடங்கி உள்ளதால் பக்தர்கள் குளிரில் நடுங்கி வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 68,615 பேர் தரிசனம் செய்தனர். 27,722 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.23 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • இன்று உடனடி முன்பதிவில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.
    • பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேர் மற்றும் உடனடி முன்பதிவு அடிப்படையில் 20 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டனர்.

    ஆனால் உடனடி முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் இருந்ததால் கடந்த வாரத்தில் சன்னிதானம், பம்பை மட்டுமின்றி மலைப்பாதையிலும் கூட்ட நெரிசல் எற்பட்டது. நெரிசலில் சிக்கி பெண் பக்தர் ஒருவரும் பலியானார்.

    இதையடுத்து பக்தர்கள் நெரிசலில் சிக்குவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) அடிப்படையில் தினமும் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது.

    மேலும் பம்பை உள்ளிட்ட 3 இடங்களில் செயல்பட்ட உடனடி முன்பதிவு மையங்கள் மூடப்பட்டன. தேவசம்போர்டின் இந்த அதிரடி நடவடிக்கையால் உடனடி முன்பதிவு மூலமாக சாமி தரிசனம் செய்ய வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்ட நெரிசலும் இல்லை.

    உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) எண்ணிக்கையை பக்தர்களின் வருகைக்கு தகுந்தாற்போல் அதிகரித்துக்கொள்ள தேவசம்போர்டுக்கு கேரள ஐகோர்ட்டு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் பக்தர்கள் வருகைக்கு தகுற்தாற்போல் "ஸ்பாட் புக்கிங்" மூலமாக அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சபரிமலையில் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்காக கேரள மாநில டி.ஜி.பி. ரவுடா சந்திரசேகர் சபரிமலைக்கு வந்தார். அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தது மட்டுமின்றி, அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் அவரது தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உடனடி முன்பதிவு மூலமாக அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை, பக்தர்கள் வருகைக்கு தகுந்தாற்போல் 7ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் இன்று உடனடி முன்பதிவில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. அது 5 ஆயிரமாகவே இருந்தது. ஆனால் ஆன்லைன் முன்பதிவு செய்யாத பக்தர்கள் இன்று அதிகளவில் சபரிமலைக்கு வந்தனர். இதனால் நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    பதினெட்டாம் படி ஏறி சாமி தரசனம் செய்வதற்காக நின்ற பக்தர்களின் வரிசை சரங்குத்தி வரை காணப்பட்டது. அங்கிருந்து பதினெட்டாம் படியை அடைய பக்தர்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர். பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ×