திருப்பதி கோவிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதியில் தற்போது கடும் பனிப்பொழிவு தொடங்கி உள்ளதால் பக்தர்கள் குளிரில் நடுங்கி வருகின்றனர்.திருப்பதியில் நேற்று 68,615 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோவிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
Published on

திருப்பதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். நேற்று காலை முதல் மேலும் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர். இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு தங்கி செல்லும் வைகுந்தம் அறைகள் அனைத்தும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.

இதனால் கோவிலுக்கு வெளியே நீண்ட தூரம் தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்தனர். திருப்பதியில் தற்போது கடும் பனிப்பொழிவு தொடங்கி உள்ளதால் பக்தர்கள் குளிரில் நடுங்கி வருகின்றனர்.

திருப்பதியில் நேற்று 68,615 பேர் தரிசனம் செய்தனர். 27,722 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.23 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com