என் மலர்
வழிபாடு
- ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 84-வது பிறந்தநாள் விழா.
- அதிகாலை சுயம்பு அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
சென்னை:
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 84-வது பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கும், சுயம்புவிற்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ரமேஷ் கலந்து கொண்டார்.
ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் செந்தில்குமார் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார். சித்தர் பீடம் வந்த ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பங்காரு அடிகளாரின் திரு வுருவப்ப டத்தினை வெள்ளி ரதத்தில் வைத்து சித்தர் பீடத்தில் வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்று மாலை கலச விளக்கு வேள்வி பூஜையை ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் தொடங்கி வைத்தார்.
நேற்று காலை ஆதிபராசக்தி அம்மனுக்கு நடைபெற்ற அபிஷேகத்தை ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் கோ.ப.அன்பழகன் துவக்கி வைத்தார். பின்னர் பங்காரு அடிகளாரின் திருவுருவ சிலையுடன் தங்கரதம் சித்தர் பீடத்தை வலம் வந்தது.
பங்காரு அடிகளாரின் பிறந்த நாளான இன்று அதிகாலை சுயம்பு அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் பங்காரு அடிகளாரின் திருவுருவப் பட மலர் அலங்கார ரத ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் பங்காரு அடிகளாரின் திருப்பாதுகைகளுக்கு பக்தர்கள் பொது பாத பூஜை செய்து தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தொழில் அதிபர் ஜெய் கணேஷ், உமாதேவி, ஆன்மீக இயக்க தலைமை செயல் அதிகாரி வழக்கறிஞர் அகத்தியன் ஆகியோர் அருட்பிரசாதம் வழங்கினார்கள்.
இன்று மாலை மக்கள் நலப்பணி விழா மற்றும் விழா மலர் வெளியிடும் நிகழ்ச்சி ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க கலை அரங்கில் நடைபெற உள்ளது.
- காளிகாம்பாள் ஆலயம் 3000 ஆண்டு பழமையானது.
- வரலாற்று சிறப்புடையதாகவும் திகழ்கிறது.
காளிகாம்பாள் ஆலயம் 3000 ஆண்டு பழமையானது. மட்டுமின்றி வரலாற்று சிறப்புடையதாகவும் திகழ்கிறது. ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் இத்தலத்தில் நீங்கள் செய்யும் எல்லா வேண்டுதல்களும் குறைவின்றி வெற்றி பெறும். தற்போதுள்ள ஆலயம் 1639-ம் ஆண்டு விஸ்வகர்மா குலத்தவரால் கட்டப்பட்டு, இன்றும் சீரும், சிறப்புமாக பரிபாலனம் செய்யப்பட்டு வருகிறது.
சிதம்பரத்தில் வழிபட்டால், திருவண்ணாமலையை நினைத்தால், காளையார் கோவிலில் காலடி எடுத்து வைத்தால், திருவாரூரில் பிறந்தால் மோட்சகம் கிடைக்கும் என்பார்கள். அது போல பாரிமுனை காளிகாம்பாள் தலத்தில் குங்குமம் பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வும், மோட்சமும் கிடைக்கும்.
காளிகாம்பாள் கோவிலுக்கு செல்லும் போது அவசரப்பட்டு வழிபாடுகளை செய்யாதீர்கள். ராஜகோபுரம், நடராஜ மண்டபம், காயத்ரி மண்டபம் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. நின்று நிதானமாக ரசித்து பார்த்து வரலாம்.
காளிகாம்பாள் மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக பெற்றிருப்பதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. காளிகாம்பாள் ஆலயத்தின் பரிவார தேவதை கடல் கன்னியாகும். காளிகாம்பாள் ஆலயம் கிழக்கு நோக்கி உள்ளது. அம்பாள் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறாள்.

ஆதிபராசக்தி தன்னை பல சக்திகளாக தோற்றுவித்த சித்தாடல் செய்து வருகிறாள். அந்த அபூர்வ சக்திகளுள் ஒருவளே அன்னை காளிகாம்பாள். காளிகாம்பாளின் அவதாரம் நீலியாய், சூலியாய், காளியாய் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம், தும்பட்டம், வீண் பெருமை, தன்நிலை உணராமை போன்றவற்றை காளிகாம்பாளை வழிபட, வழிபட நம் மனதில் இருந்து நீங்கச் செய்யலாம்.
அன்னை காளிகாம்பாளிடம் பாரதியார் போன்று உரிமையோடு பேசி மனதை பறி கொடுத்தால் நிச்சயம் அவள் பக்தர்களின் உள்ளத்தை பக்குவப்படுத்துவாள் என்பது நம்பிக்கை.
காளிகாம்பாள் அருள்புரியும் இத்தலத்தில் இந்திரன், குபேரன், விராட் புருஷனான ஸ்ரீ விஸ்வகர்மா ஆகியோர் போற்றி துதித்துள்ளனர்.
காளிகாம்பாள் அவதரித்த இடத்தை நம் முன்னோர்கள் "சொர்ணபுரி" என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்.
நாகலோக கன்னிகளும், தேவலோக கன்னிகளும் அன்னை காளிகாம்பாளை வழிபட்டு பூர்வ ஜென்ம புண்ணியங்களை அடைந்தனர்.
காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பன்றிமலை சுவாமிகள், காயத்ரி சுவாமிகள், தவத்திரு ராமதாசர் உள்பட பல மகான்கள், ஆன்மீகப் பெரியோர்கள் காளிகாம்பாளை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
பவுர்ணமி தோறும் இரவு 7 மணிக்கு அம்பாளுக்கும், ஸ்ரீ காயத்ரி தேவிக்கும் கூட்டு வழிபாடும், பூஜையும் நடைபெறும். இத்தலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5 மணிக்கும், ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கும் சிறுவர்களுக்கான நீதி போதனை மற்றம் ஆன்மீக வகுப்பு இலவசமாக நடைபெறும்.

காளிகாம்பாள் கோவிலில் 18-7-14 தொடங்கி 9 வெள்ளிக்கிழமைகள் ஆடித்திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தலத்தில் வெள்ளிக்கிழமை தோறும் கன்னி பூஜை, கோ பூஜை, திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.
இத்தலத்தில் நடைபெறும் சுவாசினி பூஜை சிறப்பு மிக்கது. இந்த பூஜை சுமங்கலிகளுக்கு விசேஷ அருள் தருவதாகும். இதற்காகவே சென்னையில் வேறு எங்கும் இல்லாதபடி இத்தலத்தில் "சுவாசினி சங்கம்" அமைக்கப்பட்டுள்ளது.
இத்தலத்தில் அமாவாசை தோறும் ஸ்ரீகாயத்ரி தேவிக்கும், விஸ்வ பிரம்மத்துக்கும் விஸ்வகர்ம வழிபாட்டுக் குழு சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. காளிகாம்பாள் மொத்தம் 12 அம்சங்களைக் கொண்டவள். அதில் ஒரு அம்சம், காஞ்சீபுரத்து காமாட்சி அம்மனாகும்.
இத்தலம் இரு பிரகாரங்கள் கொண்டது. உள் பிரகாரத்தில் அருணாசலேஸ்வரர், நவக்கிரகங்கள், வள்ளி-தெய்வானை சமேத முருகர், ஸ்ரீ வீரபகாமங்கர், அவர் சீடர் சித்தையா, ஸ்ரீ கமடேஸ்வரர், ஸ்ரீதுர்கா, ஸ்ரீ சண்டிமகேஸ்வரர், பைரவர், பிரம்மா, சூரிய-சந்திரர்கள் உள்ளன.
வெளிப்பிரகாரத்தில் சித்தி விநாயகர், கொடி மரம், வடகதிர்காம முருகன், ஸ்ரீசித்தி புத்தி விநாயகர், ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீதுர்கா, யாகசாலை, ஸ்ரீநடராசர், ஸ்ரீமகாமேரு, ஸ்ரீவீரபத்திர மகா காளியம்மன், ஸ்ரீ நாகேந்திரர், ஸ்ரீவிஸ்வ பிரம்மா சன்னதிகள் அமைந்துள்ளன.
திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் ஸ்ரீ காளிகாம்பாள் கருவறையில் உள்ள மூலவருக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து, அந்த மஞ்சளை பயன்படுத்தி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை பழம் தீபம் ஏற்றி வழிபடுவது கூடுதல் நன்மை தரும்.
இத்தலத்தில் மேற்கு நோக்கிய நிலையில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயரை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் தம்புச் செட்டித் தெருவில் உள்ள கிழக்கு கோபுர வாசல், "குண வாயில்" என்றும், அரண்மனைக்காரன் தெருவில் உள்ள மேற்கு கோபுர வாசல் "குட வாயில்" என்றும் அழைக்கப்படுகிறது.
சைவம், வைணவம், சாக்தம், கவுமாரம், காணபத்யம், சவுரம் ஆகிய 6 சமயங்களுக்கும் பொதுவானவளாக காளிகாம்பாள் இயங்குகிறாள்.
இத்தலம் சிவனும்-சக்தியும் அருள்பாலிக்கும் தலமாக கருதப்படுகிறது. இத்தலத்தின் உற்சவர் பெயர் பெரிய நாயகி. காளிகாம்பாள் தலத்தில் உள்ள ஒவ்வொரு சன்னதியும், பகுதியும் வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது.
இத்தலத்தின் வடமேற்கு பகுதியில் அகோர வீரபத்திர சுவாமி உள்ளார். பவுர்ணமி தினத்தன்று அவருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வழிபட்டால் பில்லி, சூனியம், ஏவல் போன்றவை விலகி விடும்.
"உள்ளம் உருகுதய்யா… முருகா…" என்று டி.எம்.சவுந்தராஜன் பாடிய பாடலை கேட்டிருப்பீர்கள். மிகவும் இனிமையான அந்த கந்தன் பாடலை இயற்றியவர் ஸ்ரீ ஆண்டவன் பிச்சி என்பவர் ஆவார். 1952-ம் ஆண்டு அவர் காளிகாம்பாள் கோவிலில் உள்ள வடசுதிர்காம முருகப்பெருமான் சன்னதி முன்பு அமர்ந்து இந்த பாடலை பாடினார். இத்தலத்தின் தல விருட்சமாக மாமாரம் உள்ளது.
இங்கு குங்கும லட்சார்ச்சனை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. காளிகாம்பாளை முறைப்படி தியானித்து வழிபடுபவர்கள் நிச்சயம் செல்வந்தர்கள் ஆகி விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
- அய்யா வைகுண்டர் 192-வது அவதார தின விழா.
- அய்யா வைகுண்டரை அவதார பதிக்கு அழைத்து வருதல் நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் அய்யா வைகுண்டர் 192-வது ஆண்டு அவதார தின விழா நேற்று தொடங்கியது.
வள்ளியூர் அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அய்யா பழம், பொருளாளர் கோபால் நாடார், துணை செயலாளர் ராஜேந்திரன் நாடார், இணை தலைவர் பால்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்று வரை 2 நாட்கள் விழா நடைபெற்றது. முன்னதாக செயலாளர் பொன்னுதுரை வரவேற்றார்.
விழாவின் முதல் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, காலை 6 மணிக்கு அன்னதர்மம், பகல் 12மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, மதியம் 1மணிக்கு அன்னதர்மம், இரவு 7 மணிக்கு பணிவிடை அய்யா புஷ்ப வாகன பவனி தொடர்ந்து அன்னதர்மம் நடந்தது.
தொடர்ந்து திரு ஏடு வாசிப்பு, இரவு அகில திரட்டு அம்மானை கருத்துரைகள்,18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அய்யா வைகுண்டர் அவதார மகிமை, துவையல் தவசு, அகில திருட்டில் வாழ்வியல் கருத்து ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டியும், இரவு சிவசந்திரன் வழங்கிய இன்னிசை கச்சேரியும் நடந்தது.

2-ம் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு பாடுதல், பள்ளி உணர்ந்தால், அபயம் பாடுதல், 6.28 மணிக்கு சூரிய உதயத்தில் கடலில் பதம் இட்டு சூரிய பிரகாச சுத்த அய்யா வைகுண்டரை அவதார பதிக்கு அழைத்து வருதல் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வள்ளியூர் அய்யாவழி அகிலதிருக்குடும்ப மக்கள்சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர், துணைத் தலைவர் அய்யா பழம், பொருளாளர் கோபால் நாடார், துணை செயலாளர் ராஜேந்திரன் நாடார், இணை தலைவர் பால்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அவதார தின விழா பணிவிடை,அன்ன தர்மம், இனிமம் வழங்குதல் நடந்தது. விழா ஏற்பாடுகளை அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபையினர் செய்து வருகின்றனர்.
- சிவபெருமான் சூரியன், சந்திரன் இருவருக்கும் தனி காலக்கணக்கை உருவாக்கினார்.
- சந்திரனின் பணிக்காலத்தில் சில மாற்றங்களைச் செய்தார் சிவபெருமான்.
சிவபெருமான் பூலோகத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான அடிப்படை சக்திகளை, பாகுபாடு இல்லாமல் வழங்க சூரியன், சந்திரன் இருவருக்கும் தனி காலக்கணக்கை உருவாக்கினார். அதன்படி சூரியனும், சந்திரனும் தங்கள் பணியை செய்து வந்தனர். சிறிது காலத்திற்குப் பின்பு சந்திரன் தனது பணியை சரியாகச் செய்யாமல் அவ்வப்போது ஏமாற்றத் தொடங்கினார். இதனால் பூலோகத்தில் இருக்கும் உயிரினங்கள், சந்திரனிடமிருந்து தங்களுக்குத் தேவையான சக்தி கிடைக்காமல் துன்பமடைந்தன.

இதை அறிந்த சிவபெருமான், சந்திரனை அழைத்து பணியை ஒழுங்காகச் செய்யும்படி அறிவுறுத்தினார். சந்திரனோ, `இறைவா! என்னுடைய தொடர் பணிக்கு இடையில், அவ்வப்போது சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. ஓய்வு இருந்தால் மட்டுமே தனது பணியை சிறப்பாகச் செய்ய முடியும்' என்றார். இறைவனும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
அதன்பிறகு சந்திரனின் பணிக்காலத்தில் சில மாற்றங்களைச் செய்தார் சிவபெருமான். சந்திரன் பணியின் இடையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ள அனுமதி வழங்கியதுடன், பணி நேரத்தில் ஏமாற்றாமல் இருக்க, சந்திரனின் பணியை பார்வையிடுவதற்காகவும் சிலரை நியமிக்கவும் முடிவு செய்தார். அதற்காக 16 பேரை தோற்றுவித்து, அவர்களுக்கான பணி நேரத்தைத் சமமாகப் பிரித்து புதிய காலக்கணக்கை உருவாக்கினார்.

அந்த கணக்கின்படி சந்திரனுக்கு ஒருநாள் முழுவதும் எந்தப் பணியும் இல்லாமல் முழு ஓய்வு கொடுக்கப்பட்டது. சந்திரனின் ஓய்வுக்கு யாரும் இடையூறு செய்யாமல் பார்த்துக் கொள்ள ஒருவரை நியமித்து அவருக்கு `மறைமதி' (அமாவாசை) என்று பெயரிட்டார்.
ஓய்வு நாளுக்குப் பின்னர் 14 நாட்கள், சந்திரனின் பணிகளை ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக அதிகரித்தார் ஈசன். அந்த 14 நாட்களும், சந்திரனின் பணி நேரத்தை கவனிக்கவும், அவரது ஓய்வு நேரத்தை இடையூறு செய்யாமல் பார்த்துக் கொள்ளவும் 14 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு பிரதமை, துதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி என்று பெயரிட்டார் சிவபெருமான்.
கடைசியாக சந்திரனுக்கு ஒரு நாள் முழுவதும் முழுநேரப் பணி அளித்து, அன்றைய தினம் அவருடைய முழுநாள் பணியையும் பார்த்துக் கொள்வதற்குத் தான் தோற்றுவித்தவர்களில் மீதம் இருந்த ஒருவரை நியமித்து, அவருக்குப் பூரணை (பவுர்ணமி) என்று பெயரிட்டார்.
சந்திரனின் முழுநாள் பணிக்குப் பின்பு, ஒவ்வொரு நாளும் அவருக்குச் சிறிது சிறிதாகப் பணி நேரத்தைப் பதினான்கு நாட்களுக்குக் குறைத்துக் கொண்டே வந்தார் சிவபெருமான். இந்த நாட்களுக்கு, முன் பகுதியில் சந்திரன் பணிநேரத்தைப் பெற்ற பதினான்கு பேருக்கும், அதே வரிசையில் சந்திரனின் பணிநேரத்தையே கொடுத்து பணி நேரத்தை சமன் செய்தார்.

பவுர்ணமி, இறைவன் தனக்கு மட்டும் ஒரு நாள் முழுவதும் பணி நேரத்தைக் கொடுத்து விட்டதாக நினைத்து வருத்தப்பட்டது. அமாவாசை, தனக்குச் சந்திரனைப் பார்வையிடும் பணியைக் கொடுக்காமல், அவரின் ஓய்வுக்கு இடையூறு வராமல் பார்த்துக் கொள்ளும் பணியைக் கொடுத்ததை நினைத்து வருந்தியது. மற்றவர்கள், தங்களுக்குப் பணிநேரம் சமமாக இருந்தாலும், அமாவாசை, பவுர்ணமிக்கு மட்டும் ஒருநாள் முழுப்பணியாகவும், தங்களுக்குப் பகுதிப்பணிகளாக இரு நாட்கள் பணியும் கொடுத்து விட்டதை நினைத்துக் கவலை அடைந்தன.
அவர்களின் கவலையை அறிந்த சிவபெருமான், `சந்திரனைப் பார்வையிடும் பணியைப் பெற்ற நீங்கள் அனைவரும், பூலோகத்தில் `திதி' என்னும் பெயரில் அழைக்கப்படுவீர்கள்' என்றார்.
சிவபெருமான் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது, அஷ்டமி, நவமி ஆகியோர் இறைவனின் பேச்சைகவனிக்காமல் பேசிக்கொண்டிருந்தனர். இதைக் கண்ட இறைவன், அவர்களிடம் தான் சொல்வதைக் கவனிக்கும்படி சொன்னார்.
பின்னர் தொடர்ந்து, `அமாவாசையைத் தொடர்ந்து வரும் பதினான்கு நாட்களும் உங்கள் வரிசைப் பெயரிலான திதியாகவும், அவை அனைத்தும் வளர்பிறைத் திதிகள் (சுக்லபட்சம்) என்றும் அழைக்கப்படும்.

இதுபோல் பவுர்ணமியைத் தொடர்ந்து வரும் பதினான்கு நாட்களும் உங்கள் பெயரில் தேய்பிறைத் திதிகள் (கிருஷ்ணபட்சம்) என்றும் அழைக்கப்படும். பூலோகத்தில் இந்த நாட்களில் செய்யப்படும் அனைத்து நற்செயல்களுக்கும் உங்கள் பெயர்களும் பயன்படுத்தப்படும். அதன் மூலம் தங்களுக்குப் பூலோகத்தில் மதிப்பு கிடைக்கும்' என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்போதும் ஈசனின் பேச்சைக் கவனிக்காமல் அஷ்டமி, நவமி இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். இதைக் கண்டு கோபமடைந்த சிவபெருமான், அவர்களைப் பார்த்து, 'நான் உங்கள் பணியைப் பற்றியும், பூலோகத்தில் உங்களுக்குக் கிடைக்கவிருக்கும் சிறப்பைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தேன். நீங்கள் அதைக் கவனிக்காமல் பேசிக் கொண்டிருந்தீர்கள். நான் உங்களை எச்சரித்தும், அதைகண்டு கொள்ளவில்லை. எனவே மக்கள் உங்கள் இருவரையும் விலக்கி வைப்பார்கள். அந்த நாட்களில் எந்த நல்ல காரியங்களையும் தொடங்கமாட்டார்கள்' என்று சாபமிட்டார். அஷ்டமியும், நவமியும் கவலை அடைந்து, ஈசனிடம் சாபத்தைத் வ்திரும்பப்பெற வேண்டினர். ஆனால் இறைவன் மறுத்து விட்டார்.

சாபவிமோசனம்
பூலோக மக்கள், அஷ்டமி, நவமி திதி நாட்களை எந்த நற்செயலுக்கும் பயன்படுத்தாமல் விலக்கியே வைத்தனர். பூலோகத்தில் தங்கள் இருவருக்கும் மதிப்பில்லாமல் போனதை நினைத்து இருவரும் கவலை அடைந்தனர்.
தங்களுக்கு ஏற்பட்ட சாபத்தில் இருந்து விடுபட எண்ணிய அவர்கள் இருவரும், தங்களது ஓய்வு நேரத்தில் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். அவர்களின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன், 'அஷ்டமி, நவமி திதிகளே...! நான் உங்களுக்கு கொடுத்த சாபத்தில் இருந்து விடுவிக்க முடியாது. நீங்கள் இருவரும் விஷ்ணுவை சந்தித்து உங்கள் குறைகளைக் கூறுங்கள், உங்களுக்கு வேறு ஒரு நல்ல பலன் கிடைக்கலாம்' என்று அருளினார்.
அதன்படி அஷ்டமி, நவமி திதிகள் விஷ்ணுவை வழிபட்டு வரத் தொடங்கினர். அவர்கள் முன்பாக தோன்றிய விஷ்ணு, `சிவபெருமான் கொடுத்த சாபத்தில் இருந்து உங்களை விடுவிக்க என்னாலும் முடியாது. அதே வேளையில் பூலோகத்தில் உங்களுக்கும் நல்ல மதிப்பு கிடைக்க என்னால் உதவ முடியும். அதற்கு தாங்கள் இருவரும் பல ஆயிரம் ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். உங்களால் முடியுமா?' என்றார்.
'இறைவா...!, பூலோகத்தில் எங்களுக்கு இருக்கும் அவப்பெயர் நீங்கி, நல்ல மதிப்பு கிடைத்தால் போதும். அதற்காக எத்தனை ஆயிரம் ஆண்டுகள் வேண்டுமானாலும் நாங்கள் காத்திருக்கத் தயார்' என்றனர்.
அதைக்கேட்ட விஷ்ணு, 'வரும் காலத்தில் பூலோகத்தில் நிகழவிருக்கும் என்னுடைய இரு அவதாரங்களுக்குப் பின்பு, உங்கள் இருவருக்கும் ஆண்டுக்கொருமுறை நல்ல மதிப்பு கிடைக்கும். அதுவரை பொறுமையுடன் காத்திருங்கள்' என்று சொல்லி மறைந்தார்.
சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு விஷ்ணு, சித்திரை மாதம், வளர்பிறை நவமி திதியில் ராமனாக அவதாரம் செய்தார். அந்த நவமியில் பிறந்ததால் அவர் பல துன்பங்களை அடைய நேர்ந்தது. என்றாலும் ராமன் பிறந்த திதி என்பதால் பின்னாளில் `ராம நவமி' என்ற பெயரில் நவமி திதிக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது.
ராம அவதாரத்திற்கு பிறகு பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து, ஆவணி மாதம், தேய்பிறையில் அஷ்டமி திதியில் விஷ்ணு கண்ணனாக அவதாரம் எடுத்தார். பிறந்த உடனேயே பெற்றோரைப் பிரிய நேர்ந்தாலும், அவர் மனித வாழ்க்கைக்கான அறிவுரைகளை வழங்கி கண்ணன் உயர்ந்து நின்றார். கண்ணனின் பிறப்பால் அஷ்டமி திதியும் நன்மதிப்பைப் பெற்றது.
சிவபெருமானால் கொடுக்கப்பட்ட சாபத்தில் இருந்து முழுமையாக விடுபட முடியாவிட்டாலும், விஷ்ணுவின் அவதாரங்களால் தங்களுக்குக் கிடைத்த தனிச்சிறப்பை நினைத்து அஷ்டமி, நவமி திதிகள் மகிழ்ச்சி அடைந்தன.
தங்களை விட மேலான நிலையில் இருப்பவர்கள் அறிவுரை வழங்கும்போது, அதனை காதுகொடுத்து கேட்க வேண்டும். அந்த அறிவுரைகளை அலட்சியம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் பெரும் துன்பமும், அவமதிப்பும் வந்து சேரும் என்பதையே அஷ்டமி, நவமி திதிகளின் சாப- விமோசனக் கதை நமக்கு எடுத்துரைக்கிறது.
- சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தின விழா.
- பக்தர்கள் "அய்யா சிவ சிவ.. அரகர அரகரா.."என்ற பக்தி கோஷத்தை எழுப்பினர்.
நாகர்கோவில்:
சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து நேற்று அய்யா வைகுண்டர் விஞ்சை பெற்ற திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் உள்ள பதியில் இருந்து வாகன பேரணி நாகர்கோவிலுக்கு புறப்பட்டது. இந்த பேரணியானது நேற்று இரவு நாகராஜா திடலை வந்தடைந்தது.
இதேபோல் திருவனந்த புரத்தில் இருந்து புறப்பட்ட வாகன பேரணியும் நேற்று இரவு நாகராஜா திடலை வந்தது. இதைத்தொடர்ந்து அங்கு மாசி மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு பூஜித குரு ராஜசேகர் தலைமை தாங்கினார். பூஜிதகுரு சுவாமி உள்பட பலர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து இன்று காலை அய்யா வைகுண்டரின் அவதார தின ஊர்வலம் நாகராஜா திடலில் இருந்து புறப்பட்டது. ஊர்வலத்திற்கு பூஜிதகுரு சாமி தலைமை தாங்கினார். அரவிந்த், ஆனந்த், அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தில் செண்டை மேளம் முழங்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அகிலத்திரட்டு ஏந்திய அய்யாவின் வாகனம் முன் சென்றது.
அதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்து சென்றார்கள். அப்போது காவி உடை அணிந்தும், கையில் காவிக்கொடிகளை ஏந்தியபடி பக்தர்கள் "அய்யா சிவ சிவ.. அரகர அரகரா.."என்ற பக்தி கோஷத்தை எழுப்பினர். மேலும் பல பக்தர்கள் தலையில் சந்தனக்குடம் சுமந்து சென்றனர்.

ஊர்வலத்தில் விஜய் வசந்த் எம்.பி. நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஊர்வலம் மணிமேடை சந்திப்பு வழியாக சவேரியார் கோவில் சந்திப்பு பகுதிக்கு வந்தது. அங்கு பிற மதத்தை சேர்ந்தவர்கள் ஊர்வலத்திற்கு வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங் காடு, வடக்கு தாமரை குளம் வழியாக முத்திரி கிணற் றங்கரையை சுற்றி வந்த ஊர்வலம் மதியம் தலைமை பதியை வந்தடைந்தது.

ஊர்வலத்தில் சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர். ஊர்வ லத்தில் குமரி மாவட் டத்தை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் மட்டும் இன்றி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், கேரளா வில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு மோர், தண்ணீர், பானகாரம் தர்மங்கள் வழங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
அவதார தினத்தை யொட்டி சாமிதோப்பு தலைமை பதிக்கு நேற்று இரவு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. சாமி தோப்பு ரதவீதிகள் முழுவதும் பக்தர்கள் தலை யாக காட்சியளித்தது. இன்று அதிகாலை முதலே பக்தர்கள் முத்திரி கிணற்றில் குளித்துவிட்டு குடும்பத்தோடு அய்யா வைகுண்டரை வழிபட்டனர். சாமிதோப்பு பதியில் தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து அய்யாவை தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு அன்ன தர்மமும் வழங்கப்பட்டது. அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலத்தை யொட்டி சாமிதோப்பிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சுந்தரவதனம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அய்யா வைகுண்டர் பதி வை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளையும், இரு சக்கர வாகனங்களும் மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் நுழைய தடை செய்யப்பட்டது.
இதையடுத்து ஆங்காங்கே போலீசார் பேரிகார்டுகளை அமைத்து வாகனங்களை திருப்பி விட்டனர். இதனால் சாலையோரங்களிலும் அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளிலும் கார்களையும், இருசக்கர வாகனங்களையும் பொது மக்கள் நிறுத்தி சென்று இருந்தனர்.
- வாயுத் தலமாக விளங்குவது காளஹஸ்தி.
- புண்ணிய க்ஷேத்திரம் என்று இவ்வூருக்கு மகிமைகள் நிறைய உண்டு.
பஞ்சபூதத் தளங்களில் வாயுத் தலமாக விளங்குவது காளஹஸ்தி. உத்தரவாகினியாகப் பொன்முகலி ஆறு பாயும் ஊர், ராகு, கேது ஆகிய சாயா கிரகங்கள் நல்ல கிரகங்களாக நன்மை வழங்கும் புண்ணிய க்ஷேத்திரம் என்று இவ்வூருக்கு மகிமைகள் நிறைய உண்டு.
சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் நடைபெறும். அதன் கொடியேற்றம் வெகுசிறப்பாக நடந்தது.
பக்த கண்ணப்பர் கோயிலில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து காளத்திநாதர் கோயில் முன் உள்ள தங்கக் கொடி மரத்தில் வேதங்கள் முழங்க, உற்சவர்கள் முன்னிலையில், சிவாச்சாரியார்கள் பிரம்மோற்சவ கொடியை ஏற்றினர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். காலை, வெள்ளி சப்பரத்தில் ஞானபூங்கோதை சமேதமாய் உற்சவர் காளத்திநாதர், விநாயகர், முருகர் ஆகியோரின் திருவீதி உலா நடந்தது. இன்றும் வாகன உலா நடைபெறும்.
- இன்று அய்யா வைகுண்டசாமி 192-வது அவதார தின விழா.
- சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யா வைகுண்டர்.
தாழக் கிடப்போரைத் தற்காப்பதே தர்மம் என்னும் கொள்கையைப் பரவலாக்கம் செய்தவர் அய்யா வைகுண்டர். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர். சுவாமிதோப்பில் சமத்துவ கிணறும் வெட்டினார்.
கன்னியாகுமரி மாவட்டம், சுவாமிதோப்பு பகுதியில் அய்யா வைகுண்டரின் தலைமை பதி உள்ளது. உன்னில் இறைவனைப் பார் என்னும் உயர்ந்த நோக்கத்தோடு இங்கு கண்ணாடியே தரிசனத்திற்கும் வைக்கப்பட்டு உள்ளது. அய்யா வைகுண்டரை பின்பற்றுபவர்கள் நெற்றியில் நீண்ட நாமமும், தலையில் தலைப்பாகையும் கட்டுவது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும், மாசி 20-ம் தேதி சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அவதார தினம் மார்ச் 3-ந் தேதி வருகிறது. அய்யா வழி மக்கள் தெய்வமாக போற்றி வழிபடும் அய்யா வைகுண்டரின் 192- வது அவதார தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை யொட்டி திருவனந்தபுரத்தில் இருந்தும் திருச்செந்தூரில் இருந்தும் வெவ்வேறு பேரணிகள் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்து அடைந்தது.
இன்று காலை நாகர்கோவிலில் இருந்து தலைமை பதியான சுவாமி தோப்பிற்கு பிரம்மாண்ட பேரணி துவங்கியது. சந்தன குடங்கள், முத்துக் குடைகள் ஏந்தியபடி பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் இதில் கலந்து கொண்டனர். மேளதாளங்கள் முழங்க சென்ற இந்த பேரணியில் சிறுமிகளின் கோலாட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அய்யா ஹர ஹர ஐயா சிவ சிவ என கோஷமிட்டபடி சென்றனர். பேரணியை பின் தொடர்ந்து நூற்றுக்கணக்கான அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் சென்றன.
இதேபோல் அய்யா வைகுண்டர் 192-வது அவதார தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் அவதார பதியில் அதிகாலை தாலாட்டு, பள்ளி உணர்தல், அபயம் பாடுதல் நடைபெற்றது. சூரிய உதயத்தில் கடல் பதமிட்டு அய்யா வைகுண்டரை அழைத்து வருதல், அய்யா வைகுண்டருக்கு பணிவிடை, அன்னதானம் நடைபெறுகிறது. இதையொட்டி கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
தனிமனிதன் நெடுங்காலம் இருக்க முடியாது ஆனால் மானுடம் நெடுங்காலம் இருக்கும். மானுடத்தின் மதிப்பீடுகளை தனிமனிதன்தான் வகுக்க வேண்டும். ஒவ்வொருவரும் அறம்சார்ந்து வாழ வேண்டும், பொய் பேசக்கூடாது. எளிமையாய் வாழு, காட்டுக்குப்போய் கடும் தவம் செய்ய வேண்டாம், வீட்டுக்குள் இருந்து உன் சொந்த பந்தங்களுடன் முறிவு ஏற்படாமல் புத்திரோடு பேசி இருந்தால் அதுதான் ஆன்மீகம் என்கிறது அய்யாவழி.
- திருவல்லிக்கேணி குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
- ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 20 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: அஷ்டமி நாளை விடியற்காலை 4.௦9 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம்: அனுஷம் காலை 11.50 மணி வரை பிறகு கேட்டை
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ராமேசுவரம் சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் பவனி. நெல்லை நெல்லையப்பருக்கும், அன்னை காந்திமதியம்மனுக்கும் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நட்பு
ரிஷபம்-உதவி
மிதுனம்-பதவி
கடகம்-லாபம்
சிம்மம்-வரவு
கன்னி-தேர்ச்சி
துலாம்- பாசம்
விருச்சிகம்-அசதி
தனுசு- முயற்சி
மகரம்-பரிவு
கும்பம்-செலவு
மீனம்-துணிவு
- காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் திருமஞ்சன சேவை.
- திருநாள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம். அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 19 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சப்தமி நாளை விடியற்காலை 4.32 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: விசாகம் காலை 11.14 மணி வரை பிறகு அனுஷம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருநாள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம். அலங்காரம். காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் திருமஞ்சன சேவை. ராமேசுவரம் சுவாமி, வெள்ளி கற்பகவிருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் புறப்பாடு. கோவை கோனியம்மன் தீர்த்தம், யாளி வாகனத்தில் பவனி, திருவாரூர் தியாகராஜர் வீதி உலா. ராமநாதபுரம் முத்தாலம்மன் பவனி. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நிறைவு
ரிஷபம்-தெளிவு
மிதுனம்-நேர்மை
கடகம்-ஆர்வம்
சிம்மம்-பரிவு
கன்னி-புகழ்
துலாம்- ஜெயம்
விருச்சிகம்-ஓய்வு
தனுசு- பக்தி
மகரம்-சலனம்
கும்பம்-உழைப்பு
மீனம்-இன்பம்
- உபவாசம் இருந்து பட்ச சிவராத்திரியில் சிவபெருமானை வழிபட வேண்டும்.
- சிவன் என்றால் மங்களம் என்று பொருள்.
சிவபெருமானுக்கே உரிய சிவராத்திரி 5 வகையாக கூறப்பட்டு இருக்கிறது.
முதலாவதாக நித்திய சிவராத்திரி:
நித்திய சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச, சுக்லபட்ச சதுர்த்தசிகளில் வரும். மாதம் இரண்டாக வரும் நித்திய சிவராத்திரியை தொடர்ந்து 24 முறையும் அனுசரிக்க வேண்டும்.
இரண்டாவதாக பட்ச சிவராத்திரி:
தை மாதம் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் 13 நாட்கள் ஒரு நேரம் மட்டும் உணவு உண்டு 14-ம் நாளான சதுர்த்தசியில் முழு நேர உபவாசம் இருந்து பட்ச சிவராத்திரியில் சிவபெருமானை வழிபட வேண்டும்.
மூன்றாவது மாத சிவராத்திரி:
மாத சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் வரும். சித்திரை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமியில், வைகாசி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில், ஆனி மாதம் சுக்லபட்ச சதுர்த்தியில், ஆடி மாதம் கிருஷ்ணபட்ச பஞ்சமியில், ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் புரட்டாசி மாதம் சுக்லபட்ச திரயோதசியில், ஐப்பசி மாதம் சுக்லபட்ச துவாதசியில், கார்த்திகை மாதம் சுக்லபட்ச சப்தமியில், மார்கழி மாதம் சுக்லபட்ச சதுர்த்தசியில், தை மாதம் சுக்லபட்ச திருதியையில், மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில், பங்குனி மாதம் சுக்லபட்ச திருதியையில் வருவது மாத சிவராத்திரி என்றழைக்கப்படும்.
நான்காவது யோக சிவராத்திரி:
திங்கட்கிழமை அன்று பகல், இரவு முழுவதும் அமாவாசையாக பொருந்தி வந்தால் அது யோக சிவராத்திரி.
ஐந்தாவது மகா சிவராத்திரி:
பெரும்பாலான சிவராத்திரிகளை கூர்ந்து கவனித்தால் அவை சதுர்த்தசி திதியில் வருவது தென்படும். ஏன் அப்படி? அமாவாசைக்கோ பெளர்ணமிக்கோ முன்பு பதினான்காம் நாளாக வருவது சதுர்த்தசி. அந்த நாள் சிவனுக்குரியது என்பது சாஸ்திரங்கள் கூறும் செய்தியாகும்.
ஒவ்வொரு தெய்வத்துக்கும் அவரவருக்கு ஏற்ற திதியை ஒதுக்கி வணங்கும் போது சிவனுக்கு ஒதுக்கப்பட்டது தான் சதுர்தசி. இந்த சதுர்தசி கிருஷ்ணபட்சமானால் மறுநாள் அமாவாசை அதே சுக்லபட்சமானால் மறுநாள் பெளர்ணமி. தொடக்கம் முடிவு இரண்டுமே அந்த சிவனால் தான் என்பதை உணர்த்தவே இந்த திதி சிவனுக்காக ஒதுக்கப்பட்டது. சிவன் என்றால் மங்களம் என்று பொருள். ராத்திரி என்றால் இரவு. எனவே மங்களகரமான இரவு என்று மகாசிவராத்திரியை சொல்லலாம்.
எல்லா வகையான சிவராத்திரிகளிலும் மேலானதும் வருஷம் ஒரு முறை மட்டுமே வருவதும் அனைத்து விதமான பாவங்களையும் நீக்கி நல்வாழ்வை தருவதும், எல்லா நலன்களையும் தரக்கூடியதுமான வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருமை பெற்றது தான் மகா சிவராத்திரி.
- மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான்.
- சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான் லிங்க வடிவில் திருவண்ணாமலையில் தோன்றினார்.
மகிமை மிக்க மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

மகிமை மிக்க இந்த மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. இந்த நாளில்தான் கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான் லிங்க வடிவில் திருவண்ணாமலையில் தோன்றினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்வு சொல்லப்படுகிறது.
விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஒரு தடவை தம்மில் யார் பெரியவர் என்ற சண்டை ஏற்பட்டது. அவர்களது சண்டையைத் தீர்த்து வைக்குமாறு தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். அதை ஏற்று சிவபெருமான் மிகப்பெரிய நெருப்புப் பிழம்பாக விஷ்ணு, பிரம்மா இருவர் முன்பும் தோன்றினார். அந்த நெருப்புப் பிழம்பு மண்ணுக்கும், விண்ணுக்கும் பரவி மிகப் பிரமாண்டமாக காட்சி அளித்தது.
அந்த நெருப்புப் பிழம்பு விஷ்ணு, பிரம்மா இருவரிடமும் `எனது அடிமுடியை யார் முதலில் தொட்டு வருகிறீர்களோ, அவரே இந்த உலகின் பெரியவர் ஆவார்' என்றது. உடனே விஷ்ணு வராக (பன்றி) உருவம் எடுத்து அந்த நெருப்புப் பிழம்பின் அடியை காண்பதற்காக பூமியை துளைத்துச் சென்றார்.
பிரம்மனோ அன்னப் பறவையாக மாறி, நெருப்புப் பிழம்பின் முடியை கண்டு வருகிறேன் என்று உயரே பறந்து சென்றார். பல ஆண்டுகள், யுகங்களாக முயன்றும் விஷ்ணு, பிரம்மா இருவராலும் அந்த நெருப்புப் பிழம்பின் அடி, முடியை காண இயலவில்லை. இது ஈசனின் செயலாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்த விஷ்ணு, தனது முயற்சியை கைவிட்டு திரும்பி வந்தார். அவரிடம் இருந்த ஆணவம் காணாமல் போய் விட்டது.
ஆனால் பிரம்மாவிடம் இருந்த அகந்தை மட்டும் நீங்கவில்லை. உயர பறக்க முடியாமல் சோர்வடைந்து திரும்பிக் கொண்டிருந்த பிரம்மா, ஒரு தாழம்பூவை பார்த்தார். அந்த தாழம்பூ ஈசனின் முடியில் இருந்து விழுந்து பல நூறு யுகங்களாக கீழே வந்து கொண்டிருப்பதை அறிந்தார்.
நெருப்புப் பிழம்பின் முடியை தான் கண்டதாக பொய் சொல்ல வேண்டும் என்று அந்த தாழம்பூவிடம் பிரம்மா கேட்டுக் கொண்டார். தாழம்பூவும் அதற்கு சம்மதித்தது. தரை இறங்கியதும் அந்த தாழம்பூ பொய் சாட்சி சொன்னது. அவ்வளவுதான்.... நெருப்புப் பிழம்பாக இருந்த சிவபெருமானுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அந்த நெருப்புப் பிழம்பில் இருந்து சிவபெருமான் வெடித்துக் கொண்டு லிங்க வடிவில் வெளியில் வந்தார்.
விஷ்ணுவுக்கும், தேவர்களுக்கும் கேட்ட வரங்களை எல்லாம் கொடுத்த சிவபெருமான், பொய் சொன்னதற்காக பிரம்மாவுக்கு, பூமியில் கோவில் இல்லை என்றும், தாழம்பூவை பூஜைக்கு தகுதியற்ற மலராவாய் என்றும் சாபமிட்டார்.
இந்த நிகழ்ச்சி நடந்தது திருவண்ணாமலையில் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலகில் திருவண்ணாமலையில் தான் முதன் முதலில் அக்னி தோன்றியது என்கிறார்கள். இந்த அக்னியில் இருந்துதான் சூரியன், சந்திரன் பிரகாசங்கள் மற்றும் தீப ஒளிகள் தோன்றின என்று புராணங்களில் எழுதப்பட்டுள்ளது.

இந்த அக்னியில் இருந்து வெளியில் வந்த சிவபெருமான் `லிங்கோத்பவர்' வடிவில் காட்சிக் கொடுத்தார். இதனால் திருவண்ணாமலையில் தான் முதன் முதலில் லிங்க வழிபாடு தோன்றியது என்பது உறுதியாகிறது. மாசி மாத சிவராத்திரி அன்று இந்த நிகழ்வு நடந்ததால், அது மகா சிவராத்திரி என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. ஆக, மகா சிவராத்திரி விழா தோன்றிய தலமும் திருவண்ணாமலையே.
திருவண்ணாமலையில் இருந்துதான் லிங்கோத்பவர் வழிபாடும், மகா சிவராத்திரி கொண்டாட்டமும் மற்ற தலங்களுக்குப் பரவியது. சிவபெருமானுக்குரிய முக்கிய 25 வடிவங்களில் முதலாவது அமைவது லிங்கோத்பவர் வடிவம்தான். லிங்கம் என்பது சிவ வடிவம். அந்த லிங்கத்தில் இருந்து தோன்றிய உருவம்தான் லிங்கோத்பவர். அதாவது லிங்கத்துக்கு தலை, கை, கால் முளைத்தால் கிடைக்கும் உருவம்தான் லிங்கோத்பவர்.
சிவபெருமான் முதலில் உருவம் இல்லாமல் அருவமாகத்தான் இருந்தார். ஆனால் உலக உயிர்கள் முன்பு தோன்ற நினைத்தபோது அருவுருவாகவும், பிறகு உருவமாகவும் தோன்றினார். அருவத்துக்கும், உருவத்துக்கும் இடையில் நின்றதே அருவுருவமாகும். இதுதான் திருவண்ணாமலையில் நெருப்புப் பிழம்பாக நின்ற லிங்கோத்பவர் உருவமாகும். எனவேதான் திருவண்ணாமலையில் லிங்கோத்பவர் வழிபாடு, மிக, மிக சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
திருவண்ணாமலை ஆலயத்தில் கருவறை கோஷ்டத்தில் மூலவருக்கு நேர் பின்புறத்தில் மேற்கு திசை நோக்கி லிங்கோத்பவர் இருப்பதை காணலாம். இந்த லிங்கோத்பவர், மும்மூர்த்திகளின் அருளையும் ஒரே திருவுருவில் வழங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம்.
பொதுவாக லிங்கோத்பவரை பார்க்கும் போதெல்லாம் அவருக்கு விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும். மலையில் இருட்டத்தொடங்கும் நேரத்தில் இவர் சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டால் நமது ஆணவம், அகந்தை எல்லாம் ஓடோடி விடும்.
மகாசிவராத்திரி நாளில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சிவாலயங்களில் மூன்றாம் ஜாம பூஜையை லிங்கோத்பவருக்குரிய பூஜையாக நடத்துகிறார்கள். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அருவுருவமாக லிங்கோத்பவர் அருள்பாவித்த காலமாக இதை சொல்கிறார்கள்.
ஆனால் திருவண்ணாமலை தலத்தில் மட்டும் மகா சிவராத்திரியின் இரண்டாம் ஜாம பூஜையை லிங்கோத்பவருக்குரிய பூஜையாக நடத்துகிறார்கள். லிங்கோத்பவர் முதன் முதலில் திருவண்ணாமலையில் தோன்றியவர் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் மற்ற தலங்களுக்கு முன்பாக இரண்டாம் ஜாமத்திலேயே திருவண்ணாமலையில் பூஜைகள் நடத்தப்படுவதாக ரமேஷ் குருக்கள் தெரிவித்தார்.
உலக உயிர்கள் `நான்', `எனது' என்பன போன்ற ஆணவம், அகந்தை கொள்ளாமல், தானும் இந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறு அணுவே என்பதை உணர்ந்து புரிந்து கொள்வதே லிங்கோத்பவர் வடிவத்தின் தத்துவமாக உள்ளது. இந்த வடிவை வழிபட்டால் உடல் நலமும், மோட்ச பிராப்தமும் கிடைக்கும். எனவேதான் இந்த வழிபாட்டை, `மோட்ச பிரதாயினி' என்று சொல்கிறார்கள்.
லிங்கோத்பவர் பூஜையின்போது மட்டும் சுவாமிக்கு நெய்பூசி, வெண்ணீர் அபிஷேகம் செய்து, பிறகு கம்பளி போர்த்தி தாழம்பூ சூட்டுவார்கள். இந்த ஒரு காலத்தில் மட்டுமே சிவனுக்கு தாழம்பூ அணிவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையில் மகா சிவராத்திரியன்று இந்த பூஜையை நேரில் பார்த்து தரிசித்தால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கெல்லாம் அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்யப்படும். பிறகு தங்கக்கவசம் அலங்காரம் செய்து வழிபாடுகள் நடைபெறும். மதியம் வரை லட்சார்ச்சனை நடைபெறும்.
அன்றிரவு 4 ஜாம பூஜைகள் நடத்துவார்கள். இரவு 7 மணிக்கு முதல் ஜாம பூஜை, 11 மணிக்கு இரண்டாம் ஜாம பூஜை நள்ளிரவு 1 மணிக்கு மூன்றாம் ஜாம பூஜை, அதிகாலை 4 மணிக்கு நான்காம் ஜாம பூஜை நடத்துவார்கள்.
இதில் இரவு 11 மணி முதல் 1 மணி வரையிலான இரண்டாம் ஜாம பூஜை லிங்கோத்பவருக்கான பூஜையாக நடைபெறும். அடி, முடி காண முடியாதபடி சிவபெருமான் நெருப்புப் பிழம்பாக நின்ற நேரம் அது. எனவே இந்த நேரத்தில் லிங்கோத்பவரை வழிபாடு செய்வதும், கிரிவலம் வருவதும் மிகுந்த புண்ணியத்தைத் தரும்.
மகாசிவராத்திரி தினத்தன்று திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்காக இரவு முழுவதும் பன்னிரு திருமுறை இசைக் கச்சேரி நடைபெறும். ராஜகோபுரம் அருகே 108 தவில், நாதஸ்வர வித்வான்களின் கச்சேரி நடக்கும்.
கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றி வைப்பார்கள். கடந்த சுமார் 25 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் லட்சதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. மகாசிவராத்திரி தினத்தன்று லட்ச தீபத்தை பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அது மட்டுமல்ல, கிரிவலம் வரும் பக்தர்கள், மகாசிவராத்திரி தினத்தில் மட்டும் வில்வ கூடையை ஏந்தியபடி கிரிவலம் செல்வது வித்தியாசமாக இருக்கும்.
நெருப்பு மலையாக இருக்கும் சிவபெருமானை குளிர்ச்சிப்படுத்த பக்தர்கள் கூடை, கூடையாக வில்வம் எடுத்துச் செல்கிறார்கள் என்பது ஐதீகமாகும். சிவராத்திரி கிரிவலம் காரியசித்தி தரும் என்பார்கள். சிவபெருமான் நெருப்பு மலையாக உருவெடுத்தது பற்றி பக்தர்களுக்கு ஒரு சந்தேகம் எழக்கூடும். கார்த்திகை தீபத்தன்றுதானே ஈசன் நெருப்பு உருவில் தோன்றினார் என்று நினைக்கலாம்.
உண்மையில் சிவபெருமான் திருவண்ணாமலையில் இரண்டு தடவை ஜோதி ரூபமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். மாசி மாதம் விஷ்ணு, பிரம்மாவின் ஆணவத்தையும், அகந்தையையும் விரட்ட நெருப்புப் பிழம்பாக வந்தார்.
கார்த்திகை மாதம் அம்பாளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தப்போது ஜோதிச்சுடராக வந்தார். முதல் ஜோதி தரிசனத்துக்கும் இரண்டாம் ஜோதி தரிசனத்துக்கும் வித்தியாசம் உள்ளதை பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாசியில் நெருப்புப் பிழம்பு, கார்த்திகையில் ஜோதி சுடர். சிவபெருமான் ஜோதி ரூபமாக வெளிப்பட்டதால்தான் திருவண்ணாமலை தலம், "அக்னி தலம்" என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

அண்ணாமலையார் சன்னதியின் அர்த்த மண்டபத்தில் சிறிது நேரம் நின்று பாருங்கள்... அனல் வீசுவதுபோல இருக்கும். வியர்த்துக்கொட்டும். திருவண்ணாமலை நெருப்புத்தலம் என்பதை உறுதிப்படுத்த இந்த உதாரணம் ஒன்றே போதும் என்கிறார் ரமேஷ்குருக்கள்.
சமீபத்தில் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் அணுவில் உள்ள எலக்ட்ரானுக்குள்ளும் லிங்கம் இருப்பதை கண்டுபிடித்தனர். எலக்ட்ரானுக்குள்ளும் பச்சை நிற வட்டமும, நடுவில் செந்நிறமான ஜோதி வடிவமும் இருப்பதைக் கண்டார்கள். இது திருவண்ணாமலையில் பச்சை பசேல் இயற்கை வளத்துக்கிடையே ஈசன் நெருப்புப் பிழம்பாக தோன்றியதை பிரதிபலிப்பதாக ஆன்மிகப் பெரியவர்கள் சொல்கிறார்கள்.
அந்த நெருப்பு மலைதான் பக்தர்கள் வழிபடுவதற்கு வசதியாக விஷ்ணு, பிரம்மா வேண்டுதலின்பேரில் சிறு லிங்கமாக மாறியது. அந்த லிங்கத்தை சுற்றியே தற்போதைய ஆலயம் உருவானது.
- கோவில் தரிசனம் கோடி புண்ணியம்.
- மகா சிவராத்திரி அன்று 4 கால வேளைகளில் வழிபட வேண்டிய ஆலயங்கள்.
கோவில் தரிசனம் கோடி புண்ணியம். வீட்டில் இருந்தே சிவராத்திரி அன்று சிவனை வழிபட்டாலும், சிவராத்திரி விழாக்களை நடத்தும் திருக்கோவில்களை தரிசிப்பது கூடுதல் பலனைத் தரும். மகா சிவராத்திரி அன்று 4 கால வேளைகளிலும் வழி படக்கூடிய 4 ஆலயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

தென்குடி திட்டை
பாவம் போக்கும் சிவராத்திரி அன்று கும்பகோணம்-தஞ்சாவூர் வழியில் உள்ள திட்டைத் திருக்கோவிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது. ஒரு யுக முடிவில் உயிரினங்கள் யாவும் அழிந்தன. உலகு நீரில் மூழ்கியபோது ஒரு திட்டையான இடத்தில் பரமசிவனும் பார்வதியும் வசிஷ்டேஸ்வரர், உலக நாயகியாகத் தோன்றி உலகைக் காத்தனர்.
அந்த மேட்டுப் பகுதியே திட்டைத் திருத்தலமாகும். இங்கே குரு பகவானுக்கு தனிச் சன்னிதி உள்ளது. இத்தல மூலவர் மீது எப்போதும் நீர் விழுந்து கொண்டிருக்கும். இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரி அன்று முதல் கால பூஜையில் வழிபாடு செய்யலாம். தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தென்குடி திட்டை.

தேவராயன் பேட்டை
ஒரு பிரளய காலத்தில், ஒரு அரக்கன் பிரம்மனிடமிருந்து படைப்புத் தொழில் புரிவதற்கான வேதங்களைத் திருடிச்சென்று கடலுக்கு அடியில் மறைத்து விட்டான். திருமால் மச்சாவதாரம் (மீன்) எடுத்து, வேதங்களை மீட்டார். ஆனால் அசுரனைக் கொன்ற தோஷத்தின் காரணமாக அவரால் சுய உருவை அடைய முடியவில்லை.
திருமால், தேவராயன் பேட்டையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு, தோஷம் நீங்கி, சுயஉருவம் பெற்றார். இங்குள்ள மச்சபுரீஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரியின் இரண்டாவது கால வேளை பூஜையில் வழிபடலாம். தென்குடி திட்டையில் இருந்து தேவராயன்பேட்டை சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

பாபநாசம்
ராவணன், கரன், மாரீசன் போன்ற அரக்கர்களை கொன்றதால், ராமபிரானுக்கு தோஷம் ஏற்பட்டது. ராமேஸ்வரத்தில் வழிபட்டாலும், முழுமையாக பாவம் நீங்கும் வகையில் பாபநாசம் ராமலிங்க சுவாமி கோவிலிலும் ராமபிரான் வழிபாடு செய்தார். இதற்காக அனுமனிடம் ஒரு சிவலிங்கம் கொண்டு வரச் சொன்னார். அனுமன் வர காலதாமதம் ஆனதால், சீதை ஆற்று மணலால் 107 சிவலிங்கம் செய்து, அவற்றிற்கு ராமன் பூஜை செய்து வழிபட்டார்.
பின்பு அனுமன் கொண்டு வந்த சிவலிங்கமும் அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டு, 108 சிவலிங்கங்களுக்கும் பூஜித்ததால், ராமரின் பாவம் முழுமையாக நீங்கியது. இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரியின் மூன்றாம் கால வேளை பூஜையில் பங்கேற்கலாம். தேவராயன்பேட்டையில் இருந்து பாபநாசம் திருத்தலம் சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

திருவைகாவூர்
வேடன் ஒருவன், காட்டில் மான் ஒன்றை வேட்டையாட முயன்றான். அந்த மான் தப்பி ஓடி, வில்வவனேஸ்வரர் கோவிலில் தஞ்சம் புகுந்தது. அங்கு தவத்தில் இருந்த முனிவர், மானுக்கு அபயம் அளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வேடன், முனிவரைத் தாக்க முயன்றான். முனிவர் சிவபெருமானை வணங்க, சிவன் ஒரு புலியை அனுப்பினார். புலி வேடனைத் துரத்தியது. புலிக்குப் பயந்து வில்வ மரத்தின் மீது ஏறினான். அன்றைய தினம் சிவராத்திரி.
புலி மரத்தின் அடியிலேயே இருந்ததால், தூங்காமல் இருக்க மரத்தில் இருந்து வில்வ இலையை பறித்து கீழே போட்டுக் கொண்டே இருந்தான். வேடன் வில்வ இலையை கீழே போட்ட இடத்தில் சிவலிங்கம் ஒன்று இருந்தது. இதனால் மகா சிவராத்திரி அன்று, 4 கால வேளையிலும் தூங்காமல் இருந்து சிவனை பூஜித்த பலன் அவனுக்கு கிடைத்தது. இந்த நிகழ்வு நடந்த திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி அன்று நான்காம் கால வேளை பூஜையில் பங்கேற்று வழிபடலாம். பாபநாசத்தில் இருந்து திருவைகாவூர் திருத்தலம் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.






