என் மலர்
வழிபாடு
- மாதந்தோறும் பூச நட்சத்திர நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம்.
- நேற்று இரவு 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.
வடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞானசபை உள்ளது, இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திர நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். தமிழ் வருடத்தின் முதல் மாதமான, சித்திரை மாத பூச நட்சத்திரம் நேற்று இரவு 7.45 மணிக்கு தொடங்கியது.
இதனை முன்னிட்டு நேற்று இரவு சத்திய ஞான சபையில், 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் திரளாக கலந்து கொண்ட பக்தர்கள், அருட்பெருஞ் சோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி என்ற வள்ளலாரின் மகா மந்திரத்தை உச்சரித்தவாறு ஜோதியை தரிசித்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான, சன்மார்க்க அன்பர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர், ஜோதி தரிசனத்தை தொடர்ந்து சபை வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, தொடர்ந்து வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் திரு மாளிகையில், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடும், மவுன தியானமும் நடைபெற்றது.
ஞானசபை உள்ள பொதுவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பது தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில், வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் ஜோதி தரிசனத்திற்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
- ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடை பெறுவது வழக்கம்.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
கடலூர்:
கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரி குடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடை பெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரமோற்சவம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சாமிக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
பின்னர் ஸ்ரீதேவி பூதேவி யுடன் லட்சுமி நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்கா ரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். பின்னர் வேத மந்திரம் முழங்க பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கும் சாமிக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் பல்லக்கில் சாமி வீதியுலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தினந்தோறும் இரவில் ஹம்ச வாகனம், சிம்ம வாக னம், அனுமந்த வாகனம், நாக வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெறுகிறது. 1-ந் தேதி இரவு கருட சேவை விமர்சையாக நடை பெற உள்ளது. பின்னர் விமானத்தில் வசந்த உற்சவம், இரவு யானை வாகனம், மங்களகிரி வாகனம், 21-ந்தேதி காலை வெண்ணைத் தாழி திருக்கோலத்துடன் வீதி உலா, இரவு குதிரை வாகனம் மற்றும் பரிவேட்டை நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகிழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலையில் லட்சுமி நரசிம்ம பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறும். இதனைத் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு வந்து தேரில் கம்பீரமாக எழுந்தருள்வார்.
பின்னர் அதிகாலை 4.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கி முக்கிய மாட வீதியில் சென்று வந்து நிலையை அடையும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "கோவிந்தா கோவிந்தா"என்ற பக்தி கோஷம் எழுப்புவார்கள். அன்று இரவு தீர்த்தவாரி அவரோகணம், 23-ந்தேதி மட்டையடி உற்சவம், இரவு இந்திர விமானத்தில் வீதிஉலா, 24-ந் தேதி புஷ்ப யாகம், 25-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
- 17-ந்தேதி ஆழ்வார்திருநகரியில் ஒன்பது கருட சேவை.
- 20-ந்தேதி பிரதோஷம்
14-ந் தேதி (செவ்வாய்)
* சமயபுரம் மாரியம்மன் பஞ்சபிரகார விழா.
* திருமோகூர் காளமேகப் பெருமாள் உற்சவம்.
* சிவகாசி விசுவநாதர் காலை பூச்சப்பரத்திலும், இரவு ரிஷப வாகனத்தி லும் பவனி.
* திருவாடானை ஆதிரத்தினேசுவரர் பல்லக்கில் வீதி உலா.
* மேல்நோக்கு நாள்.
15-ந் தேதி (புதன்)
* அரியக்குடி சீனிவாசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம்.
* நயினார்கோவில் நாகநாதர் காலை இந்திர விமானத்திலும், இரவு பூத வாகனத்தி லும் பவனி.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், காலை சந்திர பிரபை யிலும், இரவு சூரிய பிரபையிலும் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
16-ந் தேதி (வியாழன்)
* காரைக்குடி கொப்புடையம்மன் தெப்ப உற்சவம், இரவு புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு.
* காளையார்கோவில் அம்மன் தபசுக் காட்சி.
* திருமோகூர் காளமேகப் பெருமாள் அனுமன் வாகனத்தில் புறப்பாடு.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் தங்க திருப்புளி வாகனத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
17-ந் தேதி (வெள்ளி)
* ஆழ்வார்திருநகரியில் ஒன்பது கருட சேவை.
* பழனி பாலதண்டாயுத பாணி தங்க மயில் வாக னத்தில் பவனி.
* மதுரை கூடலழகர் காலை பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்தி லும் புறப்பாடு.
* திருப்பத்தூர் திருத்தணி நாதர் திருக்கல்யாணம்.
* அரியக்குடி சீனிவாசப்பெருமாள், வெள்ளி அனுமன் வாகனத்தில் வீதி உலா.
* கீழ்நோக்கு நாள், 18-ந் தேதி (சனி)
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் இரவு தங்க கருட வாக னத்தில் பவனி.
* நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் காலை பல்லக்கிலும், இரவு அன்ன வாகனத்திலும் புறப்பாடு.
* மதுரை அச்சம்பத்து பாலதண்டாயுதபாணி கோவிலில் பால்குடம் மற்றும் பூக்குழி விழா.
* மேல்நோக்கு நாள்.
19-ந் தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* காஞ்சி குமரக்கோட்டை முருகப்பெருமான் ரத உற்சவம்.
* திருப்புகழுர் அக்னீசுவரர் வெள்ளி விருட்சப சேவை.
* காட்டுபருவூர் ஆதிகேசவப்பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா.
* சமநோக்கு நாள்.
20-ந் தேதி (திங்கள்)
* பிரதோஷம்.
* அரியக்குடி சீனிவாசப் பெருமாள் திருக்கல்யா ணம்.
* திருமோகூர் காளமேகட் பெருமாள் வைர சப்பரத் தில் பவனி.
* நாங்குநேரி ராஜாக்கள் மங்கலம் பெருவேம்பு டையார் தர்ம சாஸ்தா வருசாபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
- முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
- காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் தேரோட்டம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு வைகாசி-1 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சஷ்டி காலை 6.21 மணிவரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: பூசம் மாலை 4.15 மணி வரை
பிறகு ஆயில்யம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். காளையார் கோவில் ஸ்ரீ சிவபெருமான் கற்பக விருட்ச வாகனத்தில் புறப்பாடு. சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் காலை பூச்சப்பரத்திலும், இரவு ரிஷப வாகனத்திலும் பவனி. வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் பொங்கல் விழா. காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் தேரோட்டம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம் கோவில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-பக்தி
மிதுனம்-ஓய்வு
கடகம்-பரிசு
சிம்மம்-வெற்றி
கன்னி-இன்பம்
துலாம்- தாமதம்
விருச்சிகம்-நிறைவு
தனுசு- ஆர்வம்
மகரம்-பயணம்
கும்பம்-ஆசை
மீனம்-உண்மை
- ராமானுஜருக்கு இவர் மீது எல்லையற்ற அன்பு உண்டு.
- ஸ்ரீரங்க ஆலய நிர்வாகத்தின் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு திறம்படச் செய்தார்.
ராமானுஜருக்கு எத்தனையோ சீடர்கள் இருந்தாலும், மிக முக்கியமான சீடர்களில் ஒருவர் தாசரதி என்று அழைக்கப்படும் முதலியாண்டான். இவர் ராமானுஜரின் மருமகன் ஆவார். கிபி 1027 -ம் ஆண்டு சித்திரை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் சென்னை அடுத்த பூந்தமல்லிக்கு அருகில் பச்சைவர்ணபுரம் (தற்போதைய நசரத்பேட்டை) எனும் ஊரில் அனந்தநாராயணதீட்சிதர் மற்றும் நாச்சியாரம்மாள் (ராமானுசரின் தங்கை) எனும் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
இவருக்கு "ராமானுசன் பொன்னடி" என்றும் "எதிராச பாதுகா" என்றும் "ராமானுஜர் திரிதண்டம்" என்றும் "ஆண்டான்" என்றும் பல பெயர்கள் உண்டு. ராமானுஜருக்கு இவர் மீது எல்லையற்ற அன்பு உண்டு.
ராமானுஜர் காஞ்சிபுரத்தில் இருந்து வைணவப் பணிகளுக்காக திருவரங்கம் சென்ற பொழுது முதலியாண்டான் கூரத்தாழ்வாரோடு இணைந்து சென்றார். அங்கே அவருக்கு எல்லா விதத்திலும் உதவி செய்தார். ராமானுஜரின் கட்டளைப்படி முதலியாண்டான், ஸ்ரீரங்க ஆலய நிர்வாகத்தின் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு திறம்படச் செய்தார்.
முதலியாண்டனின் குமாரராகிய கந்தாடை ஆண்டான் எம்பெருமானாரின் அனுமதிபெற்று, எம்பெருமானாரின் வடிவம் ஒன்றை உருவாக்கினார். எம்பெருமானாரும் இந்த விக்ரஹத்தை மிகவும் உகந்து கட்டி அணைத்து தம் பேரருளை அதில் பாய்ச்சினார்.
இந்த விக்ரஹம் "தாம் உகந்த திருமேனி" என்று பிரசித்தமாக அறியப்படுகிறது. தமிழ்மொழியின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் முதலியாண்டான். இப்படி பலவகையிலும் சிறப்பு மிக்க முதலியாண்டானின் அவதார நன்னாள் இன்று. வைணவ ஆலயங்களிலும் வைணவ அடியார்களின் இல்லங்களிலும் இந்த நட்சத்திரம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்.
- செட்டிநாட்டு பகுதிகளில் கோலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம்.
- எல்லா நாட்களிலும் வீட்டு வாசலில் கோலம் இடுவது மரபு.
லட்சுமி தேவி நம் இல்லத்தில் குடியேற வேண்டும் என்பதற்காக நாம் எத்தனையோ வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். அவற்றுள் ஒன்றுதான் பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றி கோலமிட்டு வழிபடுவதாகும்.
செட்டிநாட்டுப் பகுதிகளில் கோலத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். இப்பொழுது நகரங்களில் எல்லாம் கோலப் போட்டிகள் நடத்தி கோலம் இடும் கலையை வளர்த்து வருகிறார்கள். வெள்ளிக் கிழமை மட்டுமல்லாமல், எல்லா நாட்களிலும் வீட்டு வாசலில் கோலம் இடுவது மரபு.
கோலங்களில் பல வகைகள் உள்ளன. அவை மாக்கோலம், பூக்கோலம், ரங்கோலி, நடுவீட்டுக் கோலம், பின்னல் கோலம் என்றெல்லாம் இருக்கின்றன. அதிகாலையில் வீட்டு முகப்பில் சாணம் தெளித்து கோலம் போட்டால், லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கை. அவரவர் இல்லங்களில் அவரவர்களே கோலமிடுவது மிகவும் சிறப்பு.
முன்காலத்தில் தமிழர்கள் சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து, காலைக் கடன்களை முடித்து குளித்து, அதன்பிறகு வாசலில் நீர் தெளித்து கோலம் போடுவது வழக்கம். வாசல் தெளிக்கும் போது முன்பெல்லாம் சாணம் தெளிப்பார்கள்.
சாணம் ஒரு கிருமி நாசினி. செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ நாட்களில் மாவிலைத் தோரணங் களை வாசலின் நிலைப்படியில் கட்டுவார்கள். கிருமிகளை ஈர்க்கக்கூடிய ஆற்றலும் உண்டு.
காலையில் பெண்கள் குனிந்து கோலமிடுவதன் மூலம் உட ற்பயிற்சியோடு, நல்லதொரு கோலக்கலையும் வளர வழிவகுத்தனர். பண்டிகை தினங்களான புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், திருக்கார்த்திகை, கிருஷ்ண ஜெயந்தி போன்ற நாட்களில் வண்ணக் கோலம் இடுவதும் நம் வழக்கம்.
கிருஷ்ண ஜெயந்தியன்று நம் வீட்டிற் குள் கிருஷ்ணர் அடியெடுத்து வைப்பது போல சிறிய பாதங்களை வரைவார்கள். வீதியில் இருந்து பூஜை அறை வரை கிருஷ்ணன் பாதக் கோலம் வரையப்படும். நம்வீட்டில் நடக்கும் பூஜையை கண்ண பரமாத்மா வந்து ஏற்றுக் கொள்வதாக நம்பிக்கை.
மாதங்களிலேயே மார்கழி மாதத்தில்தான் கோலத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின் றோம். மற்ற மாதங்களில் மக்கள் கோலத்தை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. ஆனால் அலங்கோலமான வாழ்வை மாற்றுவது மாக்கோலமிட்டு செய்யப்படும் வழிபாடுதான் என்பதை அனுபவத்தில் தான் உணர முடியும்.

`கோலம்' என்றால் 'அழகு' என்று பொருள். வீட்டை அலங்கரித்தால் மகிழ்ச்சியும் குடியேறும். மனதை அழகு படுத்தினால் இறைவனும் குடியேறுவான். நமது வாழ்வில் சகல நாட்களும் சந்தோஷம் பெருக வேண்டுமானால், அன்றாடம் சமையலறையில் அடுப்பிற்கு கோலம் இட வேண்டும்.
துளசி மாடத்தின் முன்பும், வீட்டின் முன் வாசலிலிலும் கோலம் இட வேண்டும். அடுப்பில் கோலமிட்டு அன்னலட்சுமியை வரவேற்றால், அஷ்டலட்சுமிகளும் தாங்களாகவே வந்துசேர்வார்கள்.
இதயக் கமலம், ஐஸ்வரியக் கோலங்கள் இடும்பொழுது கண்டிப்பாக கால்களில் மிதிக்கக் கூடாது. பொதுவாக யாருமே கோலத்தை மிதிக்கவோ. அழிக்கவோ கூடாது. கோலத்தை நாம் மங்கலமாகக் கருதி கொண்டாட வேண்டும். கோலம் இடுவதில் அழகும் இருக்கிறது, புண்ணிய மும் சேர்கிறது.
கோலம் போடுவதற்கு பச்சரிசி மாவை உபயோகப்படுத்துவது நல்லது. அதாவது நாம் அரிசி மாக்கோலம் போடும் பொழுது, அந்த அரிசி மாவை எறும்புகள் மற்றும் ஊர்வன சாப்பிடுவதன் மூலம் அன்னதானம் செய்த பலன் நமக்கு கிடைத்து புண்ணியம் வந்து சேரும்.
எனவே லட்சுமி இல்லத்தில் குடியேற ஒவ்வொரு நாளும் அதிகாலையில் வீட்டு முகப்பில் அழகிய கோல மிட்டு வரவேற்போம். ஆரோக்கியமான வாழ்வும். செல்வச் செழிப்புமிக்க வாழ்வும் அமைய வழிவகுப்போம்.
- காயத்ரி மந்திரத்தை அர்ச்சகர்கள் 108 முறை ஓத புஷ்பயாகம் நடந்தது.
- காணிக்கையாளர்கள் 3 டன் மலர்களை காணிக்கையாக வழங்கினர்.
திருமலை:
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் புஷ்ப யாகம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை உற்சவர்களான சீதா, லட்சுமணர், கோதண்டராமருக்கு பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை கோவிலில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க, விஷ்ணு காயத்ரி மந்திரத்தை அர்ச்சகர்கள் 108 முறை ஓத புஷ்பயாகம் நடத்தப்பட்டது.
அதில் துளசி, சாமந்தி, கன்னேறு, மல்லிகை, கனகாம்பரம், ரோஜா, தாமரை, அல்லி, மொகலி ரெகுலு என 11 வகையான மலர்கள், 6 வகையான இலைகள் என மொத்தம் 3 டன் மலர்களால் உற்சவர்களான சீதா, லட்சுமணர், கோதண்டராமருக்கு புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடந்தது.
இந்தப் புஷ்ப யாகத்துக்காக ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த காணிக்கையாளர்கள் 3 டன் மலர்களை காணிக்கையாக வழங்கினர்.
புஷ்ப யாகம் முடிந்ததும் உற்சவர்களான சீதா, லட்சுமணர், கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
- ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி. சூரியனார் கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை.
- காரைக்குடி ஸ்ரீகொப்புடையம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, சித்திரை 29 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பஞ்சமி மறுநாள் விடியற்காலை 5.28 மணி வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம் : திருவாதிரை நண்பகல் 1.40 மணி வரை. பிறகு புனர்பூசம்.
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை
ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி. சூரியனார் கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. காரைக்குடி ஸ்ரீகொப்புடையம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம் - மகிழ்ச்சி
ரிஷபம் - ஆசைஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
மிதுனம் - பொறுமை
கடகம் - ஆர்வம்
சிம்மம் - வெற்றி
கன்னி - இரக்கம்
துலாம் - சுகம்
விருச்சிகம் - நற்செயல்
தனுசு - போட்டி
மகரம் - பொறுமை
கும்பம் - பெருமை
மீனம் - பொறுப்பு
- விழாவில் திரளான பக்தர்கள் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்து வழிபட்டு வருகின்றனர்.
- ஜாத்திரை திருவிழாவை முன்னிட்டு பெண்கள் பம்பை உடுக்கை முழங்க பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவாலங்காடு ஊராட்சியில் ஸ்ரீ மந்தவெளியம்மன் மற்றும் ஸ்ரீ கங்கையம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோவில் ஜாத்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்து வழிபட்டு வருகின்றனர்.
ஜாத்திரை திருவிழாவை முன்னிட்டு பெண்கள் பம்பை உடுக்கை முழங்க பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் நடத்தி தீபாராதனை செய்யப்பட்டது. இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- 18-ந்தேதி காலை சூர்ணா பிஷேகம், மாலையில் யானை வாகனத்திலும் நரசிம்ம பெருமாள் அருள்பாலிக்கிறார்.
- 20-ந்தேதி பல்லக்கு, குதிரை வாகனத்தில் எழுந்தருளல்,21-ந்தேதி தீர்த்தவாரி விமரிசையாக நடைபெற உள்ளது.
சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள நரசிம்ம பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பல்லவர் கால குடைவரை கோவிலான இங்கு நரசிம்ம பெருமாள் முக்கண்ணோடு அமர்ந்து அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் இந்த கோவிலில் வைகாசி பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான வைகாசி விழா வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. விழா தொடர்ந்து 27-ந்தேதி வரை 15 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு 14-ந்தேதி காலை சூரியபிரபை வாகனம், மாலை ஹம்ச வாகனத்தில் வீதி உலா வந்து நரசிம்மர் அருள்பாலிக்கிறார்.
15-ந்தேதி கருடசேவை விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மாலை ஹனுமந்த வாகனத்திலும், 16-ந் தேதி காலை சேஷவா கனத்திலும் எழுந்தருள்கிறார்.
பின்னர் ஏகாந்த சேவை, திருமஞ்சனமும், மாலையில் சந்திரபிரபை வாகன வீதி உலா நடக்கிறது. 17-ந்தேதி நாச்சியார் திருக்கோலமும், மாலை யாளி வாகனமும், 18-ந்தேதி காலை சூர்ணா பிஷேகம், மாலையில் யானை வாகனத்திலும் நரசிம்ம பெருமாள் அருள்பாலிக்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 19-ந்தேதி காலை நடக்கிறது. சிறப்பு அலங்காரம் மற்றும் வாண வேடிக்கையுடன் திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது. பின்னர் அன்று மாலை விசேஷ திருமஞ்சனம், தேர்முட்டி மண்டகப்படி, இரவு அனுமார் சன்னதி வரை பெருமாள் எழுந்தருளல் நடைபெறுகிறது.
20-ந்தேதி பல்லக்கு, குதிரை வாகனத்தில் எழுந்தருளல்,21-ந்தேதி தீர்த்தவாரி விமரிசையாக நடைபெற உள்ளது. 22-ந்தேதி காலை துவாத சாராதனம் திருமஞ்சனம், மாலையில் தங்க தோளுக்கினியான் உற்சவம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து வருகிற 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தொடர்ந்து மாலையில் விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- சித்திரை மாத பிரமோற்சவம் ஆதிகேசவ பெருமாளுக்கு கடந்த 23-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- கடந்த 29-ந்தேதி ஆதிகேசவ பெருமாள் திருத்தேர் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோவில் மற்றும் பாஷிய காரா சாமி (ராமானுஜர்) கோவில் உள்ளது. இங்கு சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த கோவிலில் ஆதிகேசவ பெருமாளுக்கு என்னென்ன உற்சவங்கள் நடைபெறுகிறதோ அதே போல் ராமானுஜருக்கும் நடைபெறுவது வழக்கம்.
சித்திரை மாத விழாவில் ஆதிகேசவ பெருமாளுக்கு 10 நாட்கள் உற்சவமும் ராமானுஜருக்கு அவதார விழா என்று 10 நாட்கள் உற்சவமும் தனித்தனியாக நடைபெறும். இந்நிலையில் சித்திரை மாத பிரமோற்சவம் ஆதிகேசவ பெருமாளுக்கு கடந்த 23-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாள் விழாவில் சிம்ம வாகனம், கருட சேவை, சேஷ வாகனம், ஹம்ச வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனத்தில் பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடந்த 29-ந்தேதி ஆதிகேசவ பெருமாள் திருத்தேர் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று காலை ராமானுஜர் 1007-வது அவதார உற்சவத்தில் முக்கிய விழாவான திருத்தேர் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீராமானுஜர் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பி சாமியை வழிபட்டபடி ஊர்வலமாக சென்றனர்.
- நூற்றுக்கணக்கான திருநங்கைகள் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் ஆடி வந்து அம்மனை வழிபட்டனர்.
- 54 தீச்சட்டிகள் சுமந்தும், 28 தீச்சட்டிகள் சுமந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியது மெய்சிலிர்க்க வைத்தது.
தேனி:
தேனி அருகில் உள்ள பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 7ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வதுடன் நேர்த்திக்கடன்கள் செலுத்தி வருகின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது நூற்றுக்கணக்கான திருநங்கைகள் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் ஆடி வந்து அம்மனை வழிபட்டனர்.
மேலும் 54 தீச்சட்டிகள் சுமந்தும், 28 தீச்சட்டிகள் சுமந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியது மெய்சிலிர்க்க வைத்தது. இது மட்டுமின்றி 21 அடி நீளமுள்ள அலகு குத்தி கோவிக்கு வந்து காணிக்கை செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர். இதனால் சித்திரை திருவிழா களைகட்டியது.






