என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி, ஏசு சபை குருவானார்.
    • புதுமை ஊற்றுதான் மாதாவின் அருமருந்து என்பதை கண்டு கொண்டார்.

    திருத்தலம்

    அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற அடைக்கல மாதா திருத்தலம் அமைந்துள்ளது. உடல் நலம், திருமண வரம், குழந்தை பேறு வேண்டுபவர்கள் அடைக்கல மாதாவை மனமுருகி வழிபட்டால் வேண்டுதல் நிறை வேறும் என்பது ஐதீகம்.

    தல வரலாறு

    தஞ்சையை ஆண்ட ஷாஜி என்பவர் 1682-ம் ஆண்டு முதல் 1711-ம் ஆண்டு வரை கத்தோலிக்க கிறிஸ்தவர்களை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். 'தஞ்சை நாட்டு நீரோ' என்று அழைக்கப்பட்ட அவர் ஜோசப் கர்வாலோ அடிகளாரை சிறைப்படுத்தி கொன்றார். பின்னர் அவரது தம்பி சரபோஜி 1711-ம் ஆண்டு அரியணை ஏறினார். அவராவது கிறிஸ்தவர்களுக்கு கருணை காட்டுவார் என்று எதிர்பார்த்த மக்கள் ஏமாந்து போயினர். கொடுமைகளின் கோரத்தை தாங்க முடியாத கிறிஸ்தவர்கள் தங்களது உயிரையும், உயிரினும் மேலான கத்தோலிக்க நம்பிக்கையையும் காத்து கொள்ளும் பொருட்டு கொள்ளிடம் ஆற்றை தாண்டி தப்பித்து வந்து நடுகாட்டில் குடியேறினர்.

    முதன் முதலில் புளியங்குடியில் இருந்து சில கிறிஸ்தவா்கள் ஏலாக்குறிச்சியில் குடியேறி கூரையால் வேயப்பட்ட தேவாலயத்தை நிறுவினர். முதல் மறை பரப்பு பணியாளராக ஏலாக் குறிச்சி வந்தவர் தஞ்சை சைமன் கர்வோலா அடிகளார். அவர் 1705-ம் ஆண்டு மதுரை மறை மாநிலத்தை விட்டு, திருவாங்கூர் சென்றதால் தந்தை மானுவேல் மச்சாடோ அடிகளார் ஏலாக்குறிச்சியில் பணியாற்றினார்.

    வீரமாமுனிவர்

    இதையடுத்து, இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி, ஏசு சபை குருவானார். 1710-ம் ஆண்டு கோவா துறைமுகம் வந்து இறங்கிய ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி 1716-ம் ஆண்டு ஏலாக்குறிச்சியில் 3-வது பங்கு தந்தையாக பணியாற்றினார். அந்த ஆண்டிலே ஏலாக்குறிச்சியில் அழகிய ஆலயம் ஒன்றை கட்டி எழுப்பினார். அதில் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலாவில் இருந்து கொண்டு வந்த மாதா சிலையை நிறுவினார். அந்த மாதாவுக்கு 'அடைக்கல மாதா' என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். பின்னர் அவர் ஏலாக்குறிச்சியில் தங்கியிருந்து பல இடங்களுக்கு சென்று மாதாவின் புகழை பறைசாற்றினார்.

    ஏசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு செய்தியை தமிழ் கூறும் நல்லுலகு அறிய வேண்டுமானால் ஏசுவின் மறை உண்மைகளை தமிழிலேயே கூற வேண்டும். தமிழனாகவே வாழ வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து தமிழ் கற்று, தமிழ் மீது காதல் கொண்டு தமிழ் இலக்கண இலக்கியங்களை நுணுக்கமாக ஆராய்ந்து தேம்பாவணி என்ற தேன் சொட்டும் காப்பியத்தை படைத்தார். ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி என்ற தன் இயற்பெயரை 'வீரமாமுனிவர்' என்று மாற்றிக் கொண்டார்.

    இவர் தனது இறுதி காலமான 1747-ம் ஆண்டு வரை 36 ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு நூல் என்று 36 தமிழ் நூல்களை இயற்றியுள்ளார். அதில் புனித வளவனாரை போற்றி இயற்றிய தேம்பாவணியும், ஏலாக்குறிச்சி அடைக்கல மாதாவை போற்றி எழுதிய திருக்காவலூர் கலம்பகமும் குறிப்பிடத்தக்கவை. அவரது சிலை திருத்தல வளாகத்தில் உள்ளது.

    தீராத நோயை தீர்த்த மாதா

    அப்போதைய காலக்கட்டத்தில் ஏலாக்குறிச்சியை உள்ளடக்கிய அரியலூர் பகுதியை ஆண்ட சிற்றரசன் அரங்கப்ப மழவராய நயினார் என்ற மன்னர் ராஜப்பிளவை என்னும் தீராத நோயினால் மரணத்தை எதிர்நோக்கி கொண்டிருந்தார். மருத்துவ முறைகள் அனைத்தும் பயனற்று போகவே, அவர் ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா திருத்தலத்தை நாடி வந்தார். அப்போது, வீரமாமுனிவர் மன்னரின் வேதனையை கண்டு மாதாவை நோக்கி மாதாவே நீயல்லால் மன்னரின் நோயை யார் தீர்ப்பார்? என வேண்டி பச்சிலையை தேடி சென்றார். அப்போது சுட்டெரிக்கும் வெயில் காலம் புல்லெல்லாம் பொசுங்கிப்போன கடுங்கோடை, வறண்டு போன பூமியில் இருந்து தண்ணீர் கொப்பளித்து (மாதா குளம்) வந்ததை கண்ட வீரமாமுனிவர் இது மாதாவின் புதுமை, புதுமையோ புதுமை என பூரித்து போனார்.

    புதுமை ஊற்றுதான் மாதாவின் அருமருந்து என்பதை கண்டு கொண்டார். சற்று தாமதியாமல் நீரோட சேற்றை அள்ளி மன்னரின் ராஜப்பிளவை கட்டியில் பூசினார். என்ன விந்தை அன்றே மன்னர் குணமடைந்தார். 7 ஆண்டுகளாக தூங்காத மன்னர் வலியின்றி தூங்கினார். குணமாக்க முடியாத நோயை அடைக்கல மாதா பாதம்பட்ட மண்ணே குணமாக்கியது. இதனால் நன்றி காணிக்கையாக ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா திருத்தலத்திற்கு அப்போதே மன்னர் அரங்கப்ப மழவராய நயினார் 175 ஏக்கர் நிலத்தை காணிக்கையாக வீரமாமுனிவரிடம் அளித்தார். மன்னர் அளித்த நில சாசனம் (கல்வெட்டு) இன்றும் ஏலாக்குறிச்சியில் மாதா புதுமைக்கு சாட்சியாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    53 அடி உயர வெண்கல மாதா சிலை

    1980-ம் ஆண்டு திருத் தலம் விரிவாக்கம் செய்யப்பட்டது. 2000-ம் ஆண்டு தமிழக அரசு ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா திருத்தலத்தை சுற்றுலா தலமாக அங்கீகரித்தது. திருத்தலத்தின் பின்புறம் உள்ள மாதா குளத்தில் ஜெப மாலை பூங்கா அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2022-ம் ஆண்டில் மாதா குளத்தில் ஆசியாவிலேயே மிக உயரமான 53 அடி உயரமுள்ள மாதாவின் வெண்கல சொரூபம் (சிலை) அமைக்கப்பட்டது. மத, இன வேறுபாடின்றி தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்தும் ஏலாக் குறிச்சி அடைக்கல மாதா திருத்தலத்தை தேடி வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

    திருத்தலத்தில் தினமும் காலை 6 மணி மற்றும் 11.30 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி மற்றும் 11.30 மணிக்கும் திருப்பலி நடைபெறும். மாதத்தின் முதல் சனிக்கிழமை காலை 11 மணிக்கு மாதா குளத்தை சுற்றி சிறிய தேர்ப்பவனி, மாதத்தின் 2-ம் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அருங்கொடை ஜெபமும், திருப்பலியும் நடைபெறும். ஈஸ்டர் பண்டிகைக்கு பின்வரும் 2-ம் சனிக்கிழமை திருத்தல ஆண்டு பெருவிழாவின் கொடியேற்றமும், 3-ம் சனிக் கிழமை அலங்கார தேர்ப்பவனியும் நடக்கிறது.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    நிதிநிலை உயர்ந்து நிம்மதி காணும் நாள். நினைத்தது நிறைவேறும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உழைப்பிற்கு அங்கீகாரம் உண்டு.

    ரிஷபம்

    எதிலும் கவனம் அதிகம் தேவைப்படும் நாள். வீணான குழப்பம் தோன்றும். மற்றவர்களுக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. உடல்நலனில் அக்கறை தேவை.

    மிதுனம்

    உற்சாகமாக பணிபுரியும் நாள். தடைப்பட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். உத்தியோகத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

    கடகம்

    யோகமான நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். தொலைபேசி வழித்தகவல் தூரதேச பயணத்திற்கு உறுதுணை புரியும். பயணம் பலன் தரும்.

    சிம்மம்

    அலைபேசி வழித்தகவலால் ஆனந்தம் அடையும் நாள். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

    கன்னி

    வம்பு, வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். பெரிய மனிதர்களின் ஆலோசனையால் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும்.

    துலாம்

    நட்புவட்டம் விரிவடையும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சனை அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

    விருச்சிகம்

    ஆதாயம் தரும் தகவலில் அக்கறை காட்டும் நாள். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் முக்கியப் பொறுப்புகளை மேலதிகாரிகள் வழங்குவர்.

    தனுசு

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். தொழில் வியாபாரத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை செய்வீர்கள். சொத்துகளால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    மகரம்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதியவர்கள் அறிமுகமாவர். வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். கணிசமான தொகை கைகளில் புரளும். திருமண முயற்சி கைகூடும்.

    கும்பம்

    புதிய பாதை புலப்படும் நாள். புகழ் கூடும். பேச்சாற்றலால் பிரபலங்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை மேலதிகாரிகள் கற்றுத் தருவர்.

    மீனம்

    சிக்கல்கள் விலகி சிறப்புகள் வந்து சேரும் நாள். மறதியால் விட்டுப்போன பணி உத்திகளை இன்று செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-21 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : துவாதசி பிற்பகல் 2.09 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம் : மூலம் நண்பகல் 1.43 மணி வரை பிறகு பூராடம்

    யோகம் : மரண, அமிர்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர் சிவன் கோவில்களில் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி

    இன்று பிரதோஷம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் பொங்கல் பெருவிழா. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் விருஷப சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ ரத்தின கிரீஸ்வரர் கோவில்களில் மாலைக்கு சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.

    மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீதிருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீஅபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-செலவு

    ரிஷபம்-ஆதரவு

    மிதுனம்-ஆதாயம்

    கடகம்-வரவு

    சிம்மம்-தாமதம்

    கன்னி-நன்மை

    துலாம்- சுகம்

    விருச்சிகம்-பெருமை

    தனுசு- நலம்

    மகரம்-கீர்த்தி

    கும்பம்-உழைப்பு

    மீனம்-உதவி

    • ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண திருப்பதி வெங்கடாசலபதி, தனது பரிவாரங்களுடன் திருவில்லிபுத்தூர் வந்து கொண்டிருந்தார்.
    • வழக்கில் இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் சக்தி இந்த பெருமாளுக்கு உண்டு என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலுக்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் மலை மீது இந்த கோவில் அமைந்துள்ளது.

    ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண திருப்பதி வெங்கடாசலபதி, தனது பரிவாரங்களுடன் திருவில்லிபுத்தூர் வந்து கொண்டிருந்தார். அப்போது இந்த தலத்தை கடந்தபோது நாரதர், ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாணம் முடிந்துவிட்டது என்று கூறினார். இதையடுத்து திருப்பதிக்கு திரும்ப முடிவு செய்தார், வெங்கடாசலபதி. எனினும் ஆண்டாள் அவரை தடுத்து, இத்தலத்தில் தங்கி தனக்கும், இங்குள்ள மக்களுக்கும் அருள்பாலிக்குமாறு வேண்டிக் கொண்டாள்.

    ஆண்டாளின் வேண்டுக்கோளை ஏற்று, இந்த மலையின் உச்சியிலேயே தங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார், வெங்கடாசலபதி.

    திருப்பதி கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து பெருமாளுக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை செலுத்துகின்றனர். ஆதலால் இந்த தலத்தை 'தென்திருப்பதி' எனவும் பக்தர்கள் அழைப்பர்.

    மலையின் மேல் உள்ள பெருமாள் சன்னிதியை அடைய 150-க்கும் மேற்பட்ட படிகளை ஏறி செல்ல வேண்டும். இங்குள்ள பெருமாள் ஒன்பதடி உயர திருமேனியுடன் அற்புதமாக காட்சி தருகிறார். திருப்பதியில் இருப்பது போன்றே நின்ற கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

    ஆலயத்தில் கருடாழ்வார், நரசிம்மர், கிருஷ்ணர் ஆகியோர் உள்பட பல்வேறு சன்னிதிகள் இங்குள்ளன. மலை அடிவாரத்தில் தாமரை மலர்கள் நிறைந்த 'கோனேரி தீர்த்தம்' உள்ளது. இந்த தீர்த்தத்தில் குளித்தால் சகல பாவங்களில் இருந்தும் விடுபடலாம் என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.

    வழக்கில் இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் சக்தி இந்த பெருமாளுக்கு உண்டு என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஆதலால் வழக்கில் ஏதேனும் செல்வத்தை இழக்கும் சூழ்நிலை வந்தால் பக்தர்கள் இந்த குன்றின் மேல் உள்ள பெருமாளை மனமுருக வேண்டுகின்றனர். அவர்களின் வேண்டுதல்களும் உடனே நிறைவேறி விடும். திருப்பதியை போல பக்தர்கள் நேர்த்திக்கடனாக முடி இறக்க இங்கு வருகின்றனர். இந்த கோவிலில் கோ தானம் செய்வது சிறப்பு.

    இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் விளையும் முதல் விளைப்பொருட்களான நெல், பருத்தி, மிளகாய் மற்றும் பயறு வகைகளை சீனிவாச பெருமாளுக்கு காணிக்கையாக செலுத்துவர். இந்த கோவிலில் உள்ள பெருமாளை வேண்டினால் சகல பாக்கியங்களையும் தந்து வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும் என பக்தர்கள் கூறுகின்றனர்.

    இந்த கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போல மாதந்தோறும் பவுர்ணமியன்று கருடசேவை நிகழ்ச்சி நடக்கும். சாதி, மதம் பேதமின்றி அனைவருக்கும் இந்த பெருமாள் குல தெய்வமாக விளங்குகிறார்.

    இந்த கோவில் நடை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து இருக்கும். 3 கால பூஜைகள் நடைபெறுகிறது.

    • பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
    • தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.

    சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள். தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.

    பாடல்:-

    பூண்தங்கு மார்பின் இலங்கைவேந்தன்

    பொன்நெடும் தோள்வரை யால்அடர்ந்து

    மாண்தங்கு நூல்மறை யோர்பரவ

    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

    சேண்தங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த

    சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்

    காண்தங்கு தோள்பெயர்த்து எல்லிஆடும்

    கணபதி ஈச்சரம் காமுறவே.

    - திருஞானசம்பந்தர்

    விளக்கம்:-

    அணிகலன்கள் பொருந்திய மார்பினை உடைய இலங்கை மன்னன் ராவணன், கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்டபோது, அந்த மலையினாலேயே தண்டனை அளித்த, பெருமை உடைய நான்மறையோர் வணங்க திருமருகல் திருத்தலத்தில் எழுந்தருளும் இறைவனே! உயர்ந்து நிற்கும் பெருமைமிக்க மலர்ச் சோலை சூழ்ந்த திருச்செங்காட்டங்குடியில் இரவில் அழகிய தோள்களை அசைத்து நடனம் ஆடுவதற்கு கணபதி ஈச்சரத்தை விரும்ப என்ன காரணமோ? சொல்வாயாக!

    • சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.
    • வடமதுரை சவுந்திர ராஜப் பெருமாள் சேஷ வாகனத்தில் புறப்பாடு.

    இந்த வார விசேஷங்கள்

    5-ந் தேதி (செவ்வாய்)

    * சர்வ ஏகாதசி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் ரத உற்சவம்.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ராஜாங்க சேவை.

    * வடமதுரை சவுந்திர ராஜப் பெருமாள் சேஷ வாகனத்தில் புறப்பாடு.

    * திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்.

    * சமநோக்கு நாள்.

    6-ந் தேதி (புதன்)

    * பிரதோஷம்.

     * சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் பொங்கல் விழா, இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் பவனி.

    * திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

    * கீழ்நோக்கு நாள்.

    7-ந் தேதி (வியாழன்)

    * ஆடித்தபசு.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு உற்சவம், மாலை ரிஷப வாகனத்தில் பவனி.

    * சுவாமிமலை முருகன் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    8-ந் தேதி (வெள்ளி)

    * வரலட்சுமி விரதம்.

    * மதுரை கள்ளழகர் ரத உற்சவம்.

    * சேலம் செவ்வாய் பேட்டை மாரியம்மன் ரத உற்சவம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * இருக்கன்குடி மாரியம்மன் விழா தொடக்கம்.

    * மேல்நோக்கு நாள்.

    9-ந் தேதி (சனி)

    * பவுர்ணமி.

    * மதுரை அழகர்கோவில் 18-ம் படி கருப்பண்ணசாமி சந்தனம் சாற்றுப்படி.

    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

    * மேல்நோக்கு நாள்.

    10-ந் தேதி (ஞாயிறு)

    * இருக்கன்குடி மாரியம்மன் திருவீதி உலா.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருத்தணி முருகனுக்கு பால் அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    11-ந் தேதி (திங்கள்)

    * வடமதுரை சவுந்திர ராஜப் பெருமாள் வசந்த உற்சவம்.

    * சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சப்தாவர்ணம்.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * மேல்நோக்கு நாள்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். நூதனப் பொருள் வாங்குவதற்காக விரயம் செய்வீர்கள். வியாபாரத்தில் உடன் இருப்பவர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம்.

    ரிஷபம்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். வழக்கமான பணிகளை மாற்றியமைப்பீர்கள். வரவை எதிர்பார்த்துச் செய்த காரியமொன்றில் திடீரெனச் செலவுகள் ஏற்படும்.

    மிதுனம்

    வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகும் நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு.

    கடகம்

    நேரில் சந்திக்கும் நண்பர்களால் நெஞ்சம் மகிழும் நாள். ஏற்ற இறக்க நிலை மாறும். எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகப் பிரச்சனை அகலும்.

    சிம்மம்

    தேக்க நிலை மாறித் தெளிவு பிறக்கும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பளிப்பர்.

    கன்னி

    யோகமான நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். தேக நலன்கருதி ஒரு சிறு தொகையைச் செலவிடுவீர்கள். திருமணப் பேச்சுகள் முடிவாகலாம். தொழில் வளர்ச்சி உண்டு.

    துலாம்

    செல்வாக்கு உயரும் நாள். சேமிக்கும் எண்ணம் செயல்படும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொழில் வளர்ச்சி கூடும். பெற்றோர் வழியில் இருந்த பிரச்சனைகள் தீரும்.

    விருச்சிகம்

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். வரவு எதிர்பார்த்தபடியே வந்து சேரும். தள்ளிப் போன காரியம் தானாக நடைபெறும்.

    தனுசு

    விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விரயத்திற்கேற்ற வரவு வந்து சேரும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். சகோதர ஒற்றுமை பலப்படும். உத்தியோக முயற்சி கைகூடும்.

    மகரம்

    பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். நண்பர்கள் நல்ல செய்திகளைக் கொண்டு வந்து சேர்ப்பர். பாதியில் நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடரவாய்ப்பு உண்டு.

    கும்பம்

    தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தொழில் ரீதியான அலைச்சலும் உண்டு. திட்டமிட்ட பயணத்தில் மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் நேற்றைய பிரச்சனை நீடிக்கும்.

    மீனம்

    நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். தூரதேசத்திலிருந்து அனுகூலச் செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள்.

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் ரதோற்சவம்.
    • திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-20 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : ஏகாதசி நண்பகல் 1.03 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம் : கேட்டை காலை 11.58 மணி வரை பிறகு மூலம்

    யோகம் : சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்

    இன்று சர்வ ஏகாதசி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் ரதோற்சவம். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் சக்தியழைப்பு விழா. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் காலையில் திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-யோகம்

    ரிஷபம்-பெருமை

    மிதுனம்-மேன்மை

    கடகம்-சாதனை

    சிம்மம்-உழைப்பு

    கன்னி-கடமை

    துலாம்- கவனம்

    விருச்சிகம்-நிம்மதி

    தனுசு- பணிவு

    மகரம்-பக்தி

    கும்பம்-வெற்றி

    மீனம்-நன்மை

    • பிறந்தது முதலே செல்வச் செழிப்பில் வளர்ந்தவர், திருவெண்காடார்.
    • ஈசன் சொன்னபடியே, குழந்தையை எடுத்துச் சென்று திருவெண்காடாரிடம் ஒப்படைத்தார் சிவசருமன்.

    கோடி கோடியாக பணம் சேர்த்து, மாடி மேல் மாடி கட்டினாலும், இறுதியில் காதற்ற ஊசி கூட உடன் வராது என்பதை உலகுக்கு உணர்த்தியவர், பட்டினத்தார். இவரைப் பற்றி நினைத்தாலே, இடுப்பு துணியோடு, கையில் கரும்பை பிடித்திருக்கும் சித்தர் பெருமானின் உருவம் தான் நம் மனக் கண்ணில் வந்துபோகும்.

    காவிப்பூம்பட்டினம் வணிகர்கள் நிறைந்த பகுதி. அங்கு வாழ்ந்த பெரும் வணிகரான சிவநேசர் மற்றும் ஞானகலை தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த தம்பதியர் திருவெண்காடு ஈசனின் மீது மிகுந்த பக்தி கொண்டவர்கள் என்பதால், தங்கள் பிள்ளைக்கு 'சுவேதனப் பெருமான்' என்று பெயரிட்டனர். பின்னர் 'திருவெண்காடார்' என்றும் அழைத்தனர்.

    பிறந்தது முதலே செல்வச் செழிப்பில் வளர்ந்தவர், திருவெண்காடார். உரிய பருவத்தில் சிவகலை என்ற பெண்ணை திருமணம் செய்தார். முன்னதாக அவரது சகோதரிக்கும் திருமணம் முடிந்திருந்தது. திருவெண்காடார் - சிவகலை தம்பதிக்கு குழந்தைப்பேறு இல்லை. அதனால் திருவிடைமருதூர் சென்று ஈசனை வழிபட்டு விரதம் இருந்து வந்தனர்.

    திருவிடைமருதூரில் சிவசருமன்- சுசீலை தம்பதியர் வறுமையில் இருந்து வந்தனர். சிவசருமன் கனவில் தோன்றிய ஈசன், தான் கோவில் நதிக்கரையில் மருத மரத்தின் அடியில் குழந்தையாக இருப்பதாகவும், அதை எடுத்துச் சென்று, காவிரிப்பூம்பட்டினத்தின் பெரு வணிகரான திருவெண்காடாரிடம் ஒப்படைக்கும்படியும் கூறினார். மேலும் அவர் தரும் பொருளைப் பெற்று வறுமையில் இருந்து விடுபடும்படியும் அருளினார்.

    ஈசன் சொன்னபடியே, குழந்தையை எடுத்துச் சென்று திருவெண்காடாரிடம் ஒப்படைத்தார் சிவசருமன். கைமாறாக அவர் கொடுத்த பொருளைப் பெற்றுக்கொண்டார். மருத மரத்தடியில் கிடைத்த குழந்தை என்பதால் அதற்கு 'மருதவாணன்' என்று பெயரிட்டு திருவெண்காடார் தம்பதியர் வளர்த்து வந்தனர்.

    மருதவாணன் வளர்ந்ததும், தன்னுடைய வணிகத் தொழிலை தன் மகனுக்கும் சொல்லிக் கொடுத்தார், திருவெண்காடார். ஒரு முறை கப்பல் மூலமாக வெளிநாடு சென்ற மருதவாணன் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தார் திருவெண்காடார். ஆனால் மருதவாணனுக்கு பதிலாக ஒரு சிறு ஓலையும், காது இல்லாத ஊசியும்தான் வந்தது. அவர் சென்ற கப்பலிலும் கூட எருவின் வரட்டியும், தவிடும்தான் நிரம்பி இருந்தது.

    இதைக் கண்டு கோபம் கொண்ட திருவெண்காடார், மகன் கொடுத்த ஓலையில் இருந்த வாசகத்தைப் படித்தார். அதில் ''காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே'' என்று எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்ததும் திருவெண்காடாருக்கு தூக்கிவாரிப்போட்டது. இதுநாள் வரை தன்னுடன் வராத செல்வத்தைத் தேடி அலைந்ததை நினைத்து வருந்தினார். உடனடியாக துறவியாக மாறிப்போனார். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால், அவரை அனைவரும் 'பட்டினத்தார்' என்று அழைத்தனர்.

    சொத்துக்களை துறந்து சிவாலயங்கள் தோறும் சென்று வந்தார், பட்டினத்தார். அப்படி சென்றபோதுதான் பத்திரகிரியார் என்னும் அரசனை தன்னுடைய சீடனாக ஏற்றுக்கொண்டார். ஆனால் பட்டினத்தாருக்கு முன்பாகவே, பத்திரகிரியாருக்கு முக்தியை அருளினார், சிவபெருமான். இதனால் தனக்கும் முக்தி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டினார், பட்டினத்தார். ஆனால் ஈசனோ, அவரது கையில் ஒரு கரும்பைக் கொடுத்து, ''இந்தக் கரும்பின் நுனி எந்த ஆலயத்தில் இனிப்பாக இருக்கிறதோ, அங்கு உனக்கு முக்தியைத் தருகிறேன்'' என்று கூறிவிட்டார்.

    இதையடுத்து கையில் கரும்போடு பல ஆலயங்கள் சுற்றி வந்த பட்டினத்தார், இறுதியில் சென்னையில் உள்ள திருவொற்றியூர் திருத்தலத்திற்கு வந்தபோது அவரது கையில் இருந்து கரும்பின் நுனிப்பகுதி இனிப்பு சுவையை கொடுத்தது. இதையடுத்து தன் அடியார்களிடம் தன்னை ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்து மூடிவிடும்படி பட்டினத்தார் உத்தரவிட்டார். அவர்களும் அப்படியே செய்தனர். உள்ளே சென்ற பட்டினத்தார், சிவலிங்கமாக மாறியிருந்தார். ஈசன் அவருக்கு முக்தியை அருளினார்.

    முக்தி அடைந்த பட்டினத்தாரின் திருக் கோவில், திருவொற்றியூரில் வங்கக்கடலை நோக்கியபடி அமைந்துள்ளது. கோபுரங்கள் எதுவும் இன்றி தனிக்கோவிலாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பட்டினத்தார், சிவலிங்கமாக அருள்பாலித்து வருகிறார். இந்த லிங்கத்திற்கு, அவரது குரு பூஜை தினத்தில் எண்ணெய், கரும்புச்சாறு, அரிசி மாவு, கதம்பப் பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்குள்ள பட்டினத்தாரை வழிபடுவதன் மூலம் மகானின் அருளைப் பெறலாம்.

    • ராமேசுவரம் ஸ்ரீ சுவாமி அம்பாள் தங்கக் கேடய சப்பரத்தில் புறப்பாடு.
    • திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-19 (திங்கட்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : தசமி காலை 11.33 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம் : அனுஷம் காலை 9.50 மணி வரை பிறகு கேட்டை

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர் சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம்

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ராமேசுவரம் ஸ்ரீ சுவாமி அம்பாள் தங்கக் கேடய சப்பரத்தில் புறப்பாடு. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் வெள்ளி விமானத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்குத் திருமஞ்சன சேவை. மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் காலையில் சட்டத் தேரிலும், இரவு புஷ்பக விமானத்திலும் பவனி. கலிய நாயனார், கோட்புலி நாயனார் குரு பூஜை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

    கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதருக்கு திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நிறைவு

    ரிஷபம்-ஆனந்தம்

    மிதுனம்-முயற்சி

    கடகம்-மகிழ்ச்சி

    சிம்மம்-ஓய்வு

    கன்னி-ஆர்வம்

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-சிந்தனை

    தனுசு- அமைதி

    மகரம்-வரவு

    கும்பம்-சாதனை

    மீனம்-உண்மை

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    ஏமாற்றங்கள் அகல எதிலும் விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. குடும்பத்தினர்கள் உங்கள் மீது குறை கூறுவர்.

    ரிஷபம்

    மனக்கசப்பு மாறி மகிழ்ச்சி கூடும் நாள். வாக்கு சாதுர்யத்தால் வளம் காண்பீர்கள். அலுவலகப் பணிகளில் அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    மிதுனம்

    உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமாகப் புதியவர்கள் உங்களைத் தேடி வரலாம்.

    கடகம்

    யோகமான நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.

    சிம்மம்

    உடன் இருப்பவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். வரன்கள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைககள் கிடைக்கும். வேலைப்பளு கூடும்.

    கன்னி

    அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷச் செய்தி வந்து சேரும். இடமாற்றம், இலாகா மாற்றம் வருவதற்கான அறிகுறி தோன்றும்.

    துலாம்

    ரோஷத்தோடு விலகியவர்கள் பாசத்தோடு வந்திணையும் நாள். புதிய ஒப்பந்தங்களை யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

    விருச்சிகம்

    நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். சகோதர வழியில் சுபச் செய்தியொன்று வந்து சேரலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    தனுசு

    தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும் நாள். புதிய வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். தொழில் தொடர்பாக செல்வந்தர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு உண்டு.

    மகரம்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். வீடு வாங்கும் முயற்சி கைகூடும். மனதளவில் நினைத்த காரியமொன்றை செயல்படுத்த முன்வருவீர்கள். வழக்குகள் சாதகமாகும்.

    கும்பம்

    வருமானம் இரு மடங்காகும் நாள். வாகனம் வாங்குவதில் ஆர்வம் கூடும். மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    மீனம்

    முன்னேற்றம் கூடும் நாள். உதிரி வருமானங்கள் உண்டு. பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் கேட்ட சலுகைகளைத் தருவர்.

    • வார ராசிபலன்
    • 4 ராசிபலன்களுக்கான வார ராசிபலன்.

    தனுசு

    திருமணத்தடை அகலும் வாரம். ராசிக்கு குரு சுக்கிரன் செவ்வாய் சனி பார்வை. அர்த்தாஷ்டம சனியால் திருமணம் தடைபடாது. கோச்சாரம் சாதகமாக உள்ளது. அதிகப்படியான திருமணம் நிச்சயமாகும். பிறருக்கு நன்மை மனப்பான்மை உண்டாகும். மனதிற்கு நிம்மதியும் தன் நம்பிக்கையும் தரும் நிகழ்வுகள் நடக்கும். தைரியம் மிகுதியாக இருக்கும்.

    ஞாபக சக்தி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள், நண்பர்களின் உதவி பக்க பலமாக இருக்கும். தொழில் கடன்கள் குறையத் துவங்கும். நீண்டநாளாக நிறைவேற்ற முடியாமல் தடைபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி படிக்க நல் வாய்ப்பு உண்டாகும்.

    புத்திர பிராப்த்தம் ஏற்படும். சிலர் விருப்ப ஓய்வு பெறலாம். குடும்ப சூழல் காரணமாக ஆரோக்கியம் காரணமாக கல்வியில் ஏற்பட்ட தடைகள் பாதிப்புகள் அகலும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். தேவையற்ற வம்பு, வழக்குகளை தவிர்க்கவும். எல்லோரையும் அனுசரித்து செல்ல வேண்டும். வரலட்சுமி நோன்பு நாளில் மஞ்சள் அபிஷேகம் செய்து மகாலட்சுமியை வழிபடவும்.

    மகரம்

    முத்தாய்பான முன்னேற்றம் உண்டாகும் வாரம். ராசிக்கு சூரியன் புதன் பார்வை உள்ளதால் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான பாதை தென்படும். ஆன்ம பலம் பெருகும். மனதில் திடமான சிந்தனைகள் தோன்றும். புகழ், அந்தஸ்து, கவுரவம், பொன், பொருள், செல்வம், செல்வாக்கு என எல்லாவிதமான சாதகமான பலன்களும் நடக்கும். வேற்று இனத்தவரின் ஆதரவு கிடைக்கும்.

    பண வரவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள் தொழிலில் சாதனை படைப்பார்கள். சிலர் தொழிலை ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு மாற்றலாம். அரசாங்க வேலைக்கு அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். வீடு, வாகன யோகம் சிறப்பாக அமையும்.

    சிலர் எழுதிய உயில், ஆவணங்களில் திருத்தம் செய்வார்கள். கடன் தொகையை சமாளிக்க தேவையான பொருள் உதவி கிடைக்கும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மாணவர்களுக்கு புத்திக் கூர்மை கூடும். அரசியல்வாதிகளுக்கு பொது இடத்தில் புகழ் கிடைக்கும். வரலட்சுமி நோன்பு நாட்களில் அஷ்ட லட்சுமிகளை வழிபடவும்.

    கும்பம்

    ஏற்ற இறக்கம் நிறைந்த வாரம். ராசியில் ராகு 7-ல் கேது 8-ல் செவ்வாய் நிற்பதால் பெண்களுக்கு கோட்சார ரீதியான திருமணத் தடை நீடிக்கும். கற்ற கல்வியால் வெற்றி புகழ் மதிப்பு, மரியாதை கிடைக்கும். தாய், தந்தையின் அன்பும், ஆதரவும் பெருகும். பிரிந்து சென்ற பிள்ளைகள் மீண்டும் வந்து இணைவார்கள். அரசுப் பணியாளர்களுக்கு எதிர் பார்த்தபடி பதவி கிடைக்கும்.

    அரசாங்க காரியங்களில் இலாபமும் அனுகூலமும் ஏற்படும். சிலர் தொழில் நிமித்தமாக குறுகிய காலம் குடும்பத்தை பிரிந்து வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம். கூலித் தொழிலாளிகளின் நிலமை சீராகும். ஆடி மாதம் என்பதால் சாலையோர பொருள்களின் விற்பனை சூடுபிடிக்கும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும்.

    உயர்ந்த ரக வாகன வசதி அமையும். பெண்கள் பிறந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள். சிலர் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசையில், அதிக கடன் வாங்கி சமயத்தில் சிரமப்படுவார்கள். எதிரிகள் தொல்லை குறையும். சிலருக்கு தேவையற்ற பயணங்கள் உண்டாகும். வரலட்சுமி விரத நாளில் சந்தன அபிஷேகம் செய்து மஹாலக்ஷ்மியை வழிபடவும்.

    மீனம்

    சுப விசேஷங்கள் கைகூடும் வாரம். ராசி அதிபதி குருபகவான் அஷ்டமாதிபதி சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இது விபரீத ராஜயோக அமைப்பாகும். சிலருக்கு மனைவி மூலம் அதிர்ஷ்ட பணம், சொத்து கிடைக்கும் அல்லது வட்டி வருமானம், பினாமி சொத்து யோகம், அரசியல் யோகம் உண்டு. வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீடு கட்டி குடியேறலாம்.

    சிலர் வாகனத்தை மாற்றலாம். குடும்ப உறவுகளிடம் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குடும்ப உறவுகளிடம் பழைய கதை பேசி வம்பை வளர்க்காமல் இருந்தால் மன நிம்மதி நிலைக்கும். திருமண தடை அகலும். குழந்தை பேறு உண்டாகும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் நிலவிய ஏற்ற இறக்கங்கள் சமன்படும்.

    ஆன்லைன் வர்த்தகர்களின் வாழ்வாதாரம் உயரும். சுய ஜாதக பரிசீலனை செய்த பிறகு புதிய தொழில் சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு இரவும், பகலும் படித்த படிப்பு கை கொடுக்கும். உடல் அசதி, சளி இருமல் போன்ற சிறுசிறு அசவுகரியம் இருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன் அதிகமாகும். வரலட்சுமி விரத நாளில் கலச பூஜை செய்து மகாலட்சுமியை வழிபடவும்.

    ×