என் மலர்tooltip icon

    நவராத்திரி ஸ்பெஷல்

    நவராத்திரி 4-ம் நாள்... செல்வ செழிப்பை அருளும் மகாலட்சுமி!
    X

    நவராத்திரி 4-ம் நாள்... செல்வ செழிப்பை அருளும் மகாலட்சுமி!

    • மகாலட்சுமியை வழிபட மஞ்சள் கலந்த பச்சரிசியில் படிக்கட்டு கோலம் போட வேண்டும்.
    • மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் சூரிய தோஷம் நிவர்த்தியாகும்.

    நவராத்திரி நான்காம் நாளன்று அன்னை பராசக்தி, மகாலட்சுமியாக வழிபாடு செய்யப்படுகிறாள். மகாலட்சுமி தாமரை மலரில் வீற்றிருப்பவள். திருமாலின் சக்தியாக விளங்கக்கூடியவள். சகலவிதமான நன்மைகளையும் அளிக்கக்கூடியவள் மகாலட்சுமி.

    மகாலட்சுமியை வழிபட மஞ்சள் கலந்த பச்சரிசியில் படிக்கட்டு கோலம் போட வேண்டும். நெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு 16 தீபங்கள் ஏற்ற வேண்டும். கதம்ப சாதம் நிவேதனம் செய்ய வேண்டும். ஜாதிமல்லி பூக்கள் மற்றும் கதிர்பச்சை இலை கொண்டு பூஜிக்க வேண்டும்.

    "சங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம் இசைத்தோம்

    மகா தேசிகரின் ஸ்ரீஸ்துதியும் யாவரும் படித்தோம்

    மனமிகுந்த சாமந்தி சூடி மகிழ்ந்தோம்

    வில்வ மாலை தந்து அம்மா உன்பாதம் பணிந்தோம்"

    என பாடி துதித்தால் வரம் தருவாள்.

    மகாலட்சுமி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் சூரியன். எனவே மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் சூரிய தோஷம் நிவர்த்தியாகும். பணம் பெருகும் வாய்ப்புகள் உண்டாகி, செல்வ வளம் கூடும். நீண்ட நாட்களாக இருக்கும் கடன் சுமைகள் தீர்ந்து, நிம்மதியான வாழ்க்கை அமையும். குடும்ப ஒற்றுமை, நல்ல எதிர்காலம், வாழ்வில் செழுமையும், ஆரோக்கியமும் கிடைக்கும். தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் பெருகி, நன்மைகள் உண்டாகும்.

    Next Story
    ×